Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினி கேட்ட ஓவியம் (பாகம் 44)

''நீ திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் உன்னை கைபிடிக்கப் போகும் பெண்ணை நல்லபடியாக வாழ வைக்க முடியும் என்ற உத்தரவாதம் உன்னால் தர முடியுமா என்று யோசனை செய்து கொள்'' என்றேன்.

திருமதி. ரெஜினா வின்சென்ட் அயல்நாடு போவதால் சில முன்னேற்பாடுகளை ரஜினிக்கு செய்து கொடுத்து விட்டு சென்றார். அதைப் பற்றி கூறுகையில்-

1979-மே மாதம் நான் (ரெஜினா வின்சென்ட்) வீட்டில் இல்லாவிட்டாலும், ரஜினி எப்போதும் போல் அங்கு தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்து கொடுத்தேன். ரஜினிக்கு சமையல் செய்து கொடுக்க மீரானை துணைக்கிருக்கச் செய்தேன்.

ஆனால் நான் அயல்நாடு போவதை ரஜினியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ''நீங்க இல்லாமல் இந்த வீட்டில் எப்படியம்மா நான் இருக்கிறது? போனா வருவீங்களாம்மா?'' என்று சிறு குழந்தையைப் போல் திரும்பத் திரும்பக் கேட்டான். அவனை சமாதானம் செய்வது பெரும்பாடாகி விட்டது.

அயல் நாட்டிலிருந்து ஜூன் மாதம் திரும்பியபோது ரஜினி முற்றிலும் குணமாகி இருந்தான். ஏதோ புதிய மனிதனைப் பார்ப்பது போலிருந்தது. வாழ்க்கையில் நான் மிக மிக மகிழ்ச்சியடைந்த சந்தர்ப்பங்களில் அதுவும் ஒன்று. கடவுளுக்கு நான் நன்றி சொன்னேன் ஆனந்தக் கண்ணீரோடு.

ரஜினி உடல்நலம், மனநலம் தேறி சகஜ நிலைக்கு மாறியதைக் கண்டு என்னைப் போல் மகிழ்ச்சி அடைந்தவள் யாரும் இருக்க முடியாது.

ரஜினியிடம் வாழ்க்கையை ஒழுங்குப்படுத்திக் கொள்ளும்படி பல யோசனைகளைக் கூறினேன். பணத்தைச் சரியான முறையில் சேமித்துத் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்றேன். அதையெல்லாம் கேட்ட ரஜினி, தான் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட விரும்புவதாகக் கூறினான்.

''நீ திருமணம் செய்து கொண்டால் உன் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் உன்னை கைபிடிக்கப் போகும் பெண்ணை நல்லபடியாக வாழ வைக்க முடியும் என்ற உத்தரவாதம் உன்னால் தர முடியுமா என்று யோசனை செய்து கொள்'' என்றேன்.

ரஜினி அதை ஏற்றுக் கொண்டான். அடுத்தடுத்து அவனது தன்னம்பிக்கையும் மன உறுதியும் வீழ்ச்சிகள் வராமல் பார்த்துக் கொண்டன.

ரஜினி தன் இருப்பிடத்திற்கு போனாலும் என்னைத் தேடி வராமல் இருப்பதில்லை. குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புதுவருடம் ஆகிய தினங்களில் தவறாமல் என்னிடம் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வான்.

நான் வரைந்த ஓவியங்கள் வீடு முழுவதும் இருக்கும். அப்படி வரைந்த ஒரு ஓவியம் இயேசுவின் திருவுருவம். தீபாவளியன்று வீட்டிற்கு வந்த ரஜினி அதைப் போல் படமொன்று தருமாறு கேட்டான்.

அதற்குமுன் ரஜினி பலமுறை இயேசுவின் படத்தைக் கேட்டபோது நான் தர சம்மதிக்கவில்லை. நான் ஒரு மதம். ரஜினி வேறு மதம். நாம் படம் தந்தாலும் ரஜினி அதை எடுத்துக் கொண்டு போய் அலட்சியப்படுத்தி விடமாட்டான் என்பது என்ன நிச்சயம் என்று நினைத்து மறுத்துவிட்டேன்.

ஆனால் இந்த முறை தீபாவளியன்று கேட்டபோது எனக்கு மனம் கேட்கவில்லை. ரஜினி கேட்ட ஓவியத்தின் போட்டோ பிரதியைக் கொடுத்தபோது அதை கவனமாக ஒரிஜினலோடு ஒப்பிட்டுப் பார்த்தவன், ''இந்த நிமிடத்திலிருந்து என் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்னு நினைக்கிறேன்'' என்றான்.

அவனது வாழ்வில் மாற்றங்கள் பெரிதாகவே நிகழ்ந்திருக்கிறது. ஆனால் நேரில் என்னை அம்மா என்றும், மற்றவர்களிடம் மம்மி என்றும் என்னைப் பற்றிக் கூறுவதில் எந்த மாற்றமும் இல்லை.

முன்னெல்லாம் ரஜினி என்னை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்த்தாலும் காலில் விழுந்து விடுவான். வெளியிடங்களிலும் அப்படி நடந்து கொண்டபோது நான் கோபித்துக் கொண்டேன். ஒரு சமயம் விஜயா மருத்துவமனையில் ரஜினி என்னைப் பார்த்ததும் காலில் விழ வந்தான். அப்போது டாக்டர் செரியனும் அருகில் இருந்தார். நான் கூடாது என்று ரஜினிக்கு கண் ஜாடை காட்டியதும் நின்றுவிட்டான்.

ரஜினி நடித்த ஆங்கிலப் படம்

அடுத்த இதழில்

Previous Page

Previous

 

Next Page

 

Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information