Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது (பாகம் 8)

ரஜினி திடீரென்று ஒரு முடிவெடுத்தார். சாமியாராகப் போய்விட வேண்டுமென்று. அளவுக்கதிகமான பணம். அதைவிட அதிகமான புகழ், மனைவி மக்கள் எல்லாம் இருந்தும், ஏதோ ஒன்று இல்லாதது போன்ற வெறுமை. மனதில் நிம்மதியில்லை. அதனால் அவரது மனம் ஆன்மீகத்தில் லயித்துப் போய்விட்டது.

'அவர்கள்' படத்திற்காக ரஜினி சுஜாதாவைக் கட்டித் தழுவுவது போல் ஒரு காட்சி படமாக வேண்டும். புகழ் பெற்ற நடிகையான சுஜாதாவை நெருங்குவதற்கு ரஜினிக்குக் கூச்சமாக இருந்தது. அவரைப் போய் எப்படிக் கட்டித் தழுவுவது என்று உள்ளுக்குள் பயந்தார். ஆனால் பயத்தை வெளிக்காட்டாமல் நடிக்கத் தயாரானார். கேமரா ஓடத்துவங்க, ரஜினி பட்டும் படாமலும் சுஜாதாவை கட்டித் தழுவினார். மூன்று டேக் எடுத்தும் பாலசந்தருக்கு திருப்தி ஏற்படவில்லை. காட்சி எதிர்பார்த்தபடி வரவில்லையே என்ற கோபத்தில் பாலச்சந்தர் ரஜினியிடம், "நீ சரியில்லை. பேசாமல் வீட்டுக்குப் போ" என்று படப்பிடிப்பை ரத்து செய்து விட்டுப் போய்விட்டார்.

இந்தச் சம்பவத்தினால் ரஜினி இடிந்து போய் விட்டார். தனது நடிப்புலக வாழ்வுக்கு வழி வகுத்த பாலச்சந்தர் எதிர்பார்த்த அளவு தன்னால் நடிக்க முடியவில்லையே என்று அன்று இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தார். இனி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட வேண்டியிருக்குமோ என்ற சிந்தனை எழுந்ததால் விரக்தியடைந்து போனார்.

மறுநாள் கவலை தோய்ந்த முகத்துடன் பாலச்சந்தரை ரஜினி பார்க்கச் சென்றபோது அவரது அசோசியேட் டைரக்டர், "நேற்று ஏம்ப்பா அப்படி நடிச்சே?" டைரக்டர் உன் மேல் நல்ல நம்பிக்கை வச்சிருந்தாரே!" என்று கேட்டார். அதற்கு ரஜினி, "சுஜாதா ஒரு பெரிய நடிகை. அவரைத் தொடுவதற்கே எனக்கு சங்கடமாக இருக்கும்போது எப்படிக் கட்டித் தழுவி நடிக்க முடியும்!" என்று கண் கலங்கியபடியே சொன்னார்.

இதைக் கேட்டு சிரித்த அந்த அசோசியேட் டைரக்டர், "இது தானா விஷயம்? இதைப் படப்பிடிப்பு நேரத்திலேயே சொல்லி இருக்கலாமே. சரி, டைரக்டரை எப்படியாவது சமாதானப்படுத்திப் பார்க்கிறேன். அவர் ஒருவரை ஒரு முறை வேண்டாம் என்று சொல்லி விட்டாரென்றால் மறுபடி அவரை நடிக்க வைக்க மாட்டார். உன் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்" என்று ஆறுதலாகப் பேசிய பின்பு ரஜினிக்கு தெம்பு வந்தது.

நான்கைந்து நாட்களுக்குப் பின் பாலச்சந்தரைப் பலரும் சமாதானம் செய்து அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டபோது ரஜினி சரியாகச் செய்து முடித்தார்.

'அவர்கள்' படத்தில் தனக்கு ஏற்பட்ட அந்தச் சங்கட நிலை தான் 'தப்புத் தாளங்கள்' படப்பிடிப்பில் அந்தப் புதுமுக நடிகருக்கும் ஏற்படவிருப்பதைப் புரிந்து கொண்ட ரஜினி, அவரைத் தனியே அழைத்துச் சென்று சிநேக பாவத்துடன் பேசி தைரியப்படுத்திக் கொண்டிருக்கையில், பாலச்சந்தர் வேறு காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருந்தார். அவை முடிந்த பின் ரஜினியை அந்த புது நடிகர் உதைப்பதான காட்சி ஓரே 'டேக்'கில் படமாக்கப்பட்டது.

குருநாதரிடம் மரியாதை, பயம்

'மூன்று முடிச்சு' படத்திற்காக ரஜினிக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களைச் சொல்ல வேண்டும். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது பாலச்சந்தர் ஒருநாள் ரஜினியிடம், "உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?" என்று கேட்டார். பெங்களூரில் கண்டக்டராக இருந்தவருக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்டும் அவசியம் ஏற்படவில்லை. அதனாலேயே கார் ஓட்டக் கற்றுக் கொள்ளாமலே இருந்து விட்டார். ஆனால் தனக்கு டிரைவிங் தெரியாது என்று சொன்னால் 'மூன்று முடிச்சு' படத்தில் தனக்கு தரப்பட்ட வாய்ப்பு பாதியோடு கழன்று போய்விடுமோ என்ற பயத்தில் தெரியும் என்று கூறிவிட்டார்.

ரஜினி கார் ஓட்டுவது போல் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது. கேமராவைக் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நிறுத்திவிட்டு, "காரை ஓட்டிக்கிட்டு கேமராவைப் பார்த்து நேராக வா" என்றார் பாலச்சந்தர், ரஜினிக்கோ கை, காலெல்லாம் உதறல். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காருக்கு அருகில் சென்ற ரஜினி, காரின் டிரைவரிடம் 'கிளட்ச் எது?' 'பிரேக் எது?' என்று கேட்டபோது, அந்தக் குளிரிலும் டிரைவருக்கு வியர்த்துப் போனது. காரை ஸ்டார்ட் செய்த ரஜினி தனக்கேயுரிய வேகத்துடன் ஓட்ட, புயல் வேகத்தில் பறந்த கார் வேகமாகச் சென்று ஒரு பாறையில் மோதி நின்றது. இன்னும் சிறிது மேலே போயிருந்தால் 150 அடி பள்ளத்திற்கு காரோடு ரஜினி இரையாகியிருப்பார்.

Balachanderபாறையில் மோதிய வேகத்தில் ரஜினி மயங்கிப் போனார். பாலச்சந்தர் அவரது சட்டையைக் கழற்றி விட்டார். இன்னும் நான்கு பேர்கள் அவருக்கு விசிறிக் கொண்டிருந்தார்கள். மயக்கம் தௌ¤ந்த ரஜினியிடம் பாலச்சந்தர் "டிரைவிங் தெரியாதுன்னா முதல்லேயே சொல்லியிருக்கலாமே...." என்று அன்பாகக் கடிந்து கொண்டார்.

இதே படத்திற்காக பாலச்சந்தர் ஒருநாள் ரஜினியிடம் "நீச்சலாவது உனக்கு தெரியுமா?" என்று கேட்டார். தெரியாது என்பதைச் சொல்வதற்கு ரஜினிக்குப் பயம். அதனால் 'தெரியும்' என்றார். சந்தேகத்தினால் பாலச்சந்தர் மீண்டும் நிஜமாகவே தெரியுமா?' என்று கேட்டார். 'நிஜமா தெரியும் சார்' என்றார் ரஜினி.

ஏரியில் விழுந்துவிட்ட குழந்தையொன்றை ரஜனி காப்பாற்றுவது போல் காட்சி. டைரக்டர், கேமரா எல்லாம் தயார். டைரக்டர் 'ஆக்ஷன்' என்று குரல் கொடுத்ததும் ரஜினி ஏரியில் குதிக்க வேண்டும்.

பாலச்சந்தர் 'ஆக்ஷன்' என்றார். ரஜினி குதிக்கவில்லை. இரண்டாம் முறை ஆக்ஷன் என்றார். அப்போதும் குதிக்கவில்லை. பாலச்சந்தர் உஷ்ணம் ஏறி 'ஆக்ஷன்' என்றார் மூன்றாம் முறையாக. ரஜினி உயிரை வெறுத்து ஏரியில் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பது அடுத்த சில நொடிகளில் தெரிந்து போனது. ரஜினி வழக்கம் போல் காப்பாற்றப்பட, பாலச்சந்தருக்கும் வழக்கம் போல் கோபத்தில் 'பேக் அப்' (படப்பிடிப்பு குழுவினர் கிளம்பலாம என்று அர்த்தம்) என்றார்.

"இன்று இந்த அளவுக்கு நான் இருக்கிறேனென்றால் அதற்கு காரணம் என் குருநாதர் டைரக்டர் பாலச்சந்தர் தான். அவர் மட்டும் எனக்கு நடிப்பதற்கு சான்ஸ் கொடுக்காமலிருந்தால் நான் இருக்கும் இடமே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்.''

"இந்த உலகிலேயே என்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர் அவர் ஒருவர்தான். அவர்மீது எனக்கு அளவுக்கு அதிகமான பக்தி. அத்தோடு பயமும் வேறு. அதை நான் எப்படி சொல்வதென்றே புரியவில்லை.''

உலகிலேயே நான் பயப்படுவது என் மனசாட்சிக்கும், பாலச்சந்தருக்கும்தான். ஏனென்றால் மனசாட்சி என்னைப் புரிந்து கொண்டிருக்கிறது. பாலச்சந்தர் சாரோ என் மனசாட்சியைப் புரிந்து கொண்டவர்.

"என்னை நடிகனாக்கினார். மனிதனாக ஆக்கினார் என்பதற்காக அல்ல; என்னவென்றே தெரியவில்லை. அதை எப்படி சொல்வதென்றும் புரியவில்லை. அவர் ஒருவரிடம்தான் இந்த ரஜினிகாந்த் முழுமையாக அடங்கிப் போய்விடுகிறேன். அவர் கிழித்த கோட்டை நான் தாண்டுவதில்லை" என்று பாலச்சந்தர் பற்றி ரஜினி கூறியிருக்கிறார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்

அந்த சமயத்தில் ரஜினி திடீரென்று ஒரு முடிவெடுத்தார். சாமியாராகப் போய்விட வேண்டுமென்று. அளவுக்கதிகமான பணம். அதைவிட அதிகமான புகழ், மனைவி மக்கள் எல்லாம் இருந்தும், ஏதோ ஒன்று இல்லாதது போன்ற வெறுமை. மனதில் நிம்மதியில்லை. அதனால் அவரது மனம் ஆன்மீகத்தில் லயித்துப் போய்விட்டது. எல்லாவற்றையும் துறந்து சாமியாராவது என்று முடிவெடுத்தார்.

அப்போது ரஜினி பாலச்சந்தரின் கவிதாலயாவுக்கும் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிசுக்கும் கால்ஷீட் கொடுத்திருந்தார். அதற்காக அட்வான்சும் வாங்கியிருந்தார். அதைத் திரும்பக் கொடுத்து விட வேண்டுமென்று முதலில் பாலச்சந்தரிடம் சென்றார்.

"சார், நான் சாமியாரா போகப் போறேன். நடிச்சதெல்லாம் போதும். இனிமேல் நடிக்க மாட்டேன். இந்தாங்க நீங்க எனக்குக் கொடுத்த அட்வான்ஸ்" என்று சொல்லி பணத்தை நீட்டினார்.

பணத்தை வாங்கிக் கொள்ளாத பாலச்சந்தர் ரஜினியை ஏற இறங்கப் பார்த்தார். "சாமியாரா போகணும். அவ்வளவுதானே. சரி போ" என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.

"நான் சாமியாரா போகறதுக்கு சரின்னு சொல்லிட்டீங்க. இந்தப் பணத்தைப் பிடிங்க நான் போறேன்" என்றார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த பாலச்சந்தர், "உன்னைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும். இப்போ உன் மனசிலே சாமியாரா போகணும்னு தோணிருக்கு. அதை யார் தடுத்தாலும் நீ கேட்கப் போறதில்லை. அதனாலே அதை நான் தடுக்கப் போறதுமில்லே. ஆனாலும் பணத்தைத் திருப்பித் தர வேண்டாம். அதை நீயே வச்சிக்க. உன் இஷ்டப்படியே போ. என்னைக்காவது ஒருநாள் திரும்பவும் நடிக்கணும்னு நிச்சயமாக உனக்குத் தோணும். அப்போ நீ திரும்பி வா" என்று கூறிவிட்டார்.

அதற்கு மேல் தன் குருநாதரிடம் பேச முடியாத ரஜினி, பணத்தோடு திரும்பி விட்டார். தன் மனம் போன போக்கில் எங்கெல்லாமோ சென்றார். மனைவி, மக்கள், பணம், பற்று, பாசம் அத்தனையையும் துறந்தவராய் எவ்வித ஆசையுமின்றி தனிமையை நாடினார். அதில் அவருக்கு மனம் லேசானது.

இரண்டு மாதங்கள் அப்படியே கழிந்தது. ரஜினிக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற விருப்பம் வந்தது. நேராக பாலச்சந்தரிடம் சென்று தயக்கமின்றி, "நான் நடிக்கிறேன்" என்றார்.

அமைதியாக ரஜினியைப் பார்த்த பாலச்சந்தர் "சாமியார்த்தனம் போயிருச்சா?" என்று கேட்டவர், மீண்டும் மௌனமாகிவிட்டார். பின்னர், "நீ இப்போ நடிக்க வேண்டாம். பேசாமல் போ. இன்னும் கொஞ்சம் பார். அதக்குப் பின்னாலேயும் நடிக்கணுங்கற நினைப்பு வந்தா வா" என்று கூறி அனுப்பி விட்டார்.

மீண்டும் சிறிது நாள் மனம் போன போக்கில் அலைந்தார். அதன்பின் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த இடைக்காலத்தில்தான் ரஜினியின் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடந்து விட்டன. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ரஜினி அதற்காக தன் போயஸ் கார்டன் வீட்டையே தானமாகக கொடுக்க முடிவெடுத்தார். மனைவி, மக்களை விட்டு சட்ட ரீதியாக விலகத் துடித்தார். ஆனால் ரசிகர்களின் எழுச்சி கண்டு தன் எண்ணங்களை மாற்றிக் கொண்டுவிட்டார்.

பெண்கள் விஷயத்தில் ரஜினி எப்படி?

பெண்கள் என்றாலே இளம் வயதில் என்றில்லை, எந்த வயதிலும் ஆண்களுக்கு ஓர் தனி உற்சாகம் பிறக்கும். அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள். அதனால் ரஜினிக்கும் பெண்கள் மீது ஈர்ப்புண்டானதில் வியப்புக்குரிய விஷயம் அல்ல.

இயல்பாகவே கறுப்பு நிறமுடையவர்கள் என்றாலே அதை ஒரு தகுதிக் குறைவாகவே கருதுபவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். ஆப்ரிக்காவிலுள்ள நிறவெறி இன்றைக்கும் ஒரு நடைமுறை உதாரணம். ஆனால் அதையெல்லாம் பொய்ப்பித்துவிட்டார் ரஜினிகாந்த். எந்த சிவந்த நிறம் எம்.ஜி.ஆரின் கூடுதல் தகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டு 60 வயதுக்கு மேலும் அவரை அழகுடையவராகக் காட்டி வந்ததோ, அதற்கு நேரெதிரான ரஜினியின் கறுப்பு நிறம் தமிழ்நாட்டில் தகுதிக் குறைவை மாற்றியமைத்து, தமிழக சினிமா ரசிகர்கள் நெஞ்சில் முதலிடத்தில் அல்லவா இருக்கிறார்! இதை ஒரு நிறப் புரட்சி என்றும் கூடச் சொல்லலாம்.

மணவாழ்க்கையில் ரஜினி.....
வரும் இதழில்

Previous Page

Previous

 

Next Page

 

Next

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information