Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியைப் பற்றி திரைப்பட கல்லூரி நண்பர்கள் (பாகம் 29)

பணப் பற்றாக்குறை வரும்போது கல்லூரி முதல்வர் ராஜாராமிடம் அனுமதி பெற்று ஒரு மாதம் விடுமுறை பெற்று ரஜினி பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை செய்து மொத்தமாகப் பணம் திரட்டி வருவார்.

'வள்ளி' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்வரை ரஜினி அதில் நடிப்பதாக இல்லை. ஆனால் அவர் அதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று எல்லாரும் ஒரே கருத்தில் சொன்னதைக் கேட்ட பின்பே நடிக்க முடிவு செய்தார்.

'வள்ளி'யில் ரஜினி நடித்த வேடத்தில் முதலில் நான்தான் (ராஜ்மதன்) நடிப்பதாக இருந்தது. அதற்காக உடைகளுக்கு அளவெடுக்கப்பட்டு, தைக்கப்பட்டுத் தயாராகவும் இருந்தன. ரஜினி அதே வேடத்தை ஏற்பதாக முடிவு செய்யப்பட்டபின் என்னிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அதற்குப் பதிலாக பின் பகுதியில் வரும் ஏழை பள்ளி ஆசிரியர் வேடத்தைக் கொடுத்தார். படத்தில் கதையின்படி கெடுக்கப்பட்ட ப்ரியாராமனுக்காக அவரது காதலனைத் தேடி சென்னை வருவார்கள், அவர்களைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு நான் உதவுவேன். முதலமைச்சருக்கு (அசோக்) நண்பன் என்ற வகையில் அவரது உதவியையும் நாடுவேன்.

'வள்ளி' படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தார் ரஜினி. அதனால் படத்திற்கு கிடைக்கும் லாபத்தை நண்பர்கள் அனைவரும் பங்கிட்டுத் தரலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் படத்தில் பங்கேற்ற அத்தனை பேர்களுக்கும் நல்ல சம்பளம் கொடுத்தார். எங்களது திரை வாழ்வில் நாங்கள் அதிகம் பெற்ற சம்பளம் அதுதான்.

நாங்கள் தனியாக இருக்கும் போது 'வாடா, போடா' என்று பேசிக் கொள்வோம். ரஜினியின் அருகில் யாரும் இருந்தால் 'டா' மறைந்து அவரை 'என்னப்பா, இல்லப்பா' என்று அழைப்பேன். பக்கத்தில் யாரும் இருந்து ரஜினிக்கு மரியாதைத் தர நினைத்து 'வாங்க, போங்க' என்று நான் சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவரைத் தமாஷ¨க்காக 'சார்' என்றால் கூட கோபப்படுவார்.

ரஜினி அமெரிக்கா செல்வதற்கு முன் போய்ப் பார்த்து பேசி வந்தேன். 'அரசியல் கட்சிகள் தனது பெயரை, படத்தைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது' என்று தான் அப்போது அறிக்கை விட்டது பற்றி 'அது சரியா?' என்று என்னிடம் அபிப்ராயம் கேட்டார். 'ரொம்ப சரி' என்றேன்.

"ரஜினி நேரடி அரசியலுக்கு வராமலே தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் காண உதவியாக இருந்தார் என்பதெல்லாம் என் போன்ற நண்பர்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது" என்றார் ராஜ்மதன்.

பெங்களூரில் இருந்து சென்னைத் திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற வந்த மாணவர்களில் ரஜினியுடன் ரவீந்திரநாத் (சந்தன வீரப்பனை பற்றி கன்னடத்தில் படம் இயக்கியவர்), அசோக் ஆகியோருடன் சதீஷ¨ம் ஒருவர். மற்ற மூவர் கன்னட பிரிவில் சேர்ந்தார்கள் என்றால், சதீஷ் தமிழ் பிரிவில் சேர்ந்தார். இவர் தமிழனென்றாலும் பிறந்தது வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்.

சதீஷ், மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழுவில் நடித்தார். 'கல்தூண்' படத்தில் சிவாஜியின் (வாய் பேச இயலாத) மகனாக நடித்தார். 'ஹிட்லர் உமாநாத்' படத்தில் சிவாஜியின் மருமகனாக நடித்தவர்.

சதீஷ், ரஜினியுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை இங்கு விவரிக்கிறார்.

நாங்கள் திரைப்படக் கல்லூரியில் அறிமுகமாகிய முதல் நாளில் ரஜினி யாரிடமும் ஒட்டாமல் சற்று ஒதுங்கியே இருந்தார். அதற்கு காரணம் அவரது பெர்சனாலிட்டி, கன்னங்கரேலென்று தொந்தியும், தொப்பையுமாய் இருந்ததால் அவரைப் பற்றி அவருக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆனால் நடிப்பு விஷயத்தில் மட்டும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார்.

சென்னை வந்த சில தினங்களில் ரவீந்திரநாத், அசோக்குடன் அமைந்தகரை அருண் ஹோட்டலில் இடம் பிடித்தோம்.

இருந்தாலும் அறை வாடகையில் இன்னொருவரைப் பங்கு சேர்ந்தால் நல்லது என்று நினைத்த போது ரஜினி வந்து சேர்ந்தார்.

சாதாரணமாக எங்கள் அறையில் இரண்டு படுக்கைகள்தான் இருந்தது. நாங்கள் இருந்தது மூன்றாவது மாடியில். இரண்டாவது மாடியில் தினசரி வாடகைக்கு அறைகள் இருந்தன.

மூன்றாவது மாடியில் ஏதாவது அறை காலியாகிறதா என்று பார்த்துக் கொள்வோம். காலியானால் அங்கிருக்கும் படுக்கையில் ஒன்றை எடுத்து வந்துவிடுவோம். எங்கள் அறைக்கு நண்பர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அதனாலேயே படுக்கைகள் எண்ணிக்கையைத் தாராளமாக்கிக் கொள்வோம்.

ஓட்டல் முதலாளி வரும்போது எங்களில் மூவரைத் தவிர, ரஜினியும், மற்றவர்களும் ஒளிந்து கொள்வார்கள். ரஜினியைப் போல் சட்டென்று கோபம் கொள்பவரை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இப்போதைய ரஜினி அதற்கு தலைகீழாக பரம சாது! கோபம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். ஆனால் அன்றைக்கு கோபம் அவரது மூக்கின் நுனியில் இருந்தது. தும்மல் எவ்வளவு வேகமாக வருமோ, அவ்வளவு வேகமாக அவருக்கு கோபமும் வரும்.

ரவீந்திர நாத்துக்கும் ரஜினிக்கும் தான் அடிக்கடி சண்டை வரும். மாடுகளைப் போல் தலையோடு தலை முட்டுவார்கள். நானும் அசோக்கும் குறுக்கே புகுந்து விலக்குவதற்குள் திணறிப் போய்விடுவோம். சற்று நேரத்தில் ரஜினியும், ரவியும் குலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஏன் விலக்கினோம் என்று கூட எங்களுக்கு எண்ணம் வந்துவிடும்.

ஒரு சமயம் என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார் ரஜினி. அவர் கறுப்பாக இருந்ததால் அதைச் சொல்லி அவரை அடிக்கடி கேலி செய்வேன். ரஜினி ஒரு நாள், "டேய் கேலி பண்ணாதேடா. எனக்கு கோபம் வந்தால் சும்மா இருக்க மாட்டேன். உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்" என்று மிரட்டினார்.

"உன் மிரட்டலெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாது" என்றேன்.

"டேய் நான் பத்துப் பேர் வந்தாலும் ஒருத்தனாகவே சமாளிப்பேன். என்கிட்ட விளையாடாதே" என்றார் மீண்டும். இதைப் பொருட்படுத்தாமல் மறுநாள் பஸ்ஸில் திரைப்படக் கல்லூரிக்குச் செல்லும் போது ரஜினியை கேலி செய்து கொண்டே வந்தேன்.

ஜெமினி பஸ் நிறுத்தம் அருகே இறங்கும் போதும் கேலி தொடர்ந்தது. அவ்வளவுதான் ரஜினி சட்டென்று என் சட்டையைப் பிடித்துக் கொண்டு "உன் மனசிலே என்னடா நினைச்சுட்டிருக்கே?" என்றார். எனக்கு கொஞ்சம் கஷ்டமாகி விட்டது.

"ஏண்டா விளையாட்டுக்குப் பேசினா கூட கோபப்படுறே?" என்று முறைப்பாகவே பேசிய பின் சட்டையை விட்டு விட்டு "இருந்தாலும் நீ ரொம்ப ஓவரா கேலி பண்றே?" என்று இறங்கி வந்தவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றோம்.

அருண் ஓட்டல் அருகிலிருந்து மேத்தா நகர் வழியாக ஜெமினி வரை செல்ல அப்போது பஸ் கட்டணம் 25 காசுகள். அமைந்தகரை, சேத்துப்பட்டு வழியாக செல்வதென்றால் 30 காசுகள்.

நாங்கள் ஐந்து பைசாவை மீதப்படுத்த நினைத்து மேத்தா நகர் வழி செல்லும் பஸ்ஸில் ஏறி விடுவோம். சில சமயம் எங்கள் பஸ் நுங்கம்பாக்கம் ரயில்வே கேட்டில் நின்றுவிடும். அப்போது தரைப்பாலம் இல்லை. மீண்டும் கேட் திறக்க 35, 40 நிமிடங்கள் ஆகும். அதனால் திரைப்படக் கல்லூரிக்கு தாமதமாகச் சென்று நால்வரும் அசடு வழிய நிற்போம்.

எனக்கு மாதந்தோறும் பணம் வீட்டிலிருந்து வந்ததென்றாலும் அளவுடன்தான் செலவு செய்ய முடியும். மற்றவர்களுக்கும் அப்படியே. ஆனால் ரஜினிக்கு அப்படியல்ல.

பணப் பற்றாக்குறை வரும்போது கல்லூரி முதல்வர் ராஜாராமிடம் அனுமதி பெற்று ஒரு மாதம் விடுமுறை பெற்று ரஜினி பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை செய்து மொத்தமாகப் பணம் திரட்டி வருவார். கல்லூரி முதல்வர் ராஜாராமும் ரஜினியின் நிலையறிந்து பண விஷயத்தில் கெடுபிடி செய்யாமல் அன்புடன் பல வழிகளிலும் உதவியிருக்கிறார்.

அப்போது ரஜினியிடம் எனக்குப் பிடிக்காத ஒன்று அவரது சிகரெட் பழக்கம். எனக்கு ஊரிலிருந்து பணம் வந்தால் செய்யும் முதல் வேலை, அருண் ஹோட்டலில் ஒரு மாத சாப்பாடு கூப்பன்களை வாங்கி விடுவதுதான். சாப்பிடும் விஷயத்தில் நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்ததே இல்லை. ஆனால் ரஜினியோ அது பற்றிக் கவலைப்படுவதே இல்லை. எப்போது பார்த்தாலும் புகைத்துக் கொண்டே இருப்பார்.

நான் ரஜினியிடம், "பணம் கிடைக்கிற போது சாப்பாடு கூப்பன்களை வாங்கி வைத்துக் கொண்டால் உனக்குத்தானே நல்லது. சிகரெட்டுக்குப் போய் இப்படி செலவு செய்கிறாயே" என்று கண்டித்துக் கேட்டால் "சாப்பாடு இல்லாட்டி போனாலும் பரவாயில்லை. சிகரெட் இல்லாமல் என்னால் இருக்க முடியாது" என்று சொல்லி விடுவார்."

சில சமயம் சிகரெட்டுக்கும் வழி இல்லாமல் போகின்றபோது பீடியில் இறங்கிவிடுவார். அதுவும் கிடைக்காத நிலையில் பிலிம் சேம்பர் கல்லூரியில் இருந்த பியூன் வீரையா ரஜினிக்கு உதவுவார். அவர் அவ்வப்போது ரஜினிக்கு பீடி கொடுத்து உதவுவார்.

நாங்கள் பிற்பகல் சாப்பாட்டுக்கு பல இடங்களுக்கு செல்வோம். 'ஆயிரம் விளக்கு கபே'யில் அப்போது சாப்பாடு 1.50 ரூபாய். இதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றும் செய்தோம்.

உட்லண்ட்ஸில் அப்போது எடுப்பு சாப்பாடு 5.50 ரூபாய். அது தயிர் உட்பட திருப்திகரமாக இருக்கும். வெளியில் சென்று அலைவானேன் என்று வீரையனிடம் 6.00 ரூபாய் (50 காசு அவருக்கு) கொடுத்து சாப்பாடு வாங்கி வரச் செய்தோம். முதலில் நானும், ரவியும் மட்டுமே கூட்டு சேர்ந்தோம். அசோக் தயங்கினாலும் அப்புறம் சேர்ந்துக் கொண்டார்.

ரஜினியும் சேர்ந்தால் நல்லது என்று அழைத்தால் என்னால் முடியாது என்று சேம்பர் வளாகத்தில் உள்ள கேண்டீனில் தோசை, டிபன் அயிட்டங்களைச் சாப்பிட்டு சமாளித்தார். ரஜினி சேர்ந்திருந்தால் அசோக் ஒதுங்கியிருப்பார். எங்களில் யாராவது ஒருவர் வர முடியாத போது ரஜினி பங்குக்கு வந்தவிடுவார் டிபன் அயிட்டங்களுடன்.

ரஜினியின் சிகரெட் பழக்கம் எங்களுக்கு வேறு தொல்லைகளும் ஏற்படுத்தியது. டாய்லெட் பக்கம் போக முடியவில்லை. ரஜினி அதிகாலையில் எழுந்துவிடுவார். அதனால் ரஜினியை தாமதமாக எழுந்திருக்கச் சொன்னோம். 8.00 மணிக்கு எழுந்து அவசரம் அவசரமாக தயாராவார்.

இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்கிறார் சதீஷ்...

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information