Rajini Story
Rajini Story Titles
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
Part 7
Part 8
Part 9
Part 10
Part 11
Part 12
Part 13
Part 14
Part 15
Part 16
Part 17
Part 18
Part 18A
Part 19
Part 20
Part 21
Part 22
Part 23
Part 24
Part 25
Part 26
Part 27
Part 28
Part 29
Part 30
Part 31
Part 32
Part 33
Part 34
Part 35
Part 36
Part 37
Part 38
Part 39
Part 40
Part 41
Part 42
Part 43
Part 44
Part 45
Part 46
Part 47
Part 48
Part 49
Part 50
Part 51
Part 52
Part 53
Part 54
Part 55
Part 56
Part 57
Part 58

  Join UsSubscription

 Subscribe in a reader

Rajini Story - Part 30

ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ்

ரஜினி ஒரு போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்டார். ரஜினி சூழ்நிலையைச் சீரியஸாக நினைக்காமல் "சார் நான் சும்மா வந்தேன்" என்று சொல்லிப் பார்த்தார். போலீஸ்காரர் கேட்பதாக இல்லை. கறுத்த நிறத்திலும் லுங்கியிலும் ரஜினியின் தோற்றத்தைப் பார்த்து அவர் கலவரம் செய்ய வந்தவன் என்று லத்தியால் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

என்னிடம் (சதீஷ்) முகப்பவுடர், ஹேர் ஆயில் இத்யாதிகள் உட்பட எல்லா வசதிகளும் உண்டு. இதில் பவுடர் டப்பா காலியானால் அதைத் துளையிட்டு உண்டியலாக்கி விடுவேன். அதில் சில்லறைக் காசுகளைப் போட்டு வைப்பேன். மற்றவர்களும், சில சமயம் ரஜினியும் போடுவார். அது நிறைந்து நாங்கள் பார்த்ததேயில்லை. காரணம் ரஜினி சிகரெட்டுக்காக அதில் கை வைத்து விடுவார்.

ரஜினிதான் எடுத்திருப்பார் என்று தெரிந்தும், நான் வேண்டுமென்றே, "எவண்டா எடுத்தது?" என்று திட்டுவேன். ரஜினி ஓடி வந்து "நான்தாண்டா எடுத்தேன். திட்டாதேடா. நான் உண்டியல்ல காசு போட்டுடறேன்" என்பார். "நீ காசு எடுக்கவும் வேணாம். போடவும் வேணாம்" என்று பதிலுக்கு சத்தம் போடுவேன்.

அருண் ஹோட்டலில் குடியேறியது முதல், நான் காலையில் பால் வாங்கி காய்ச்சி சாப்பிடுவேன். இதற்காக ஸ்டவ் ஒன்றும் வாங்கி வைத்திருந்தேன். என்னுடன் அசோக்கும், ரவியும் கூட்டு சேர விரும்பியபோது பால் பாத்திரங்களைக் கழுவ வேண்டும் என்ற நிபந்தனை விதித்தேன். முதலில் தயங்கினாலும் ஒப்புக் கொண்டார்கள். பால் பாத்திரங்களை முறை வைத்துக் கழுவினோம்.

ரஜினியும் பின்னர் சேர விரும்பினார். ஆனால் அவருக்குப் பாத்திரங்களைக் கழுவுவது என்றாலே எரிச்சல். அதனால் சேரவில்லை. ஒருநாள் ரஜினி அறையிலேயே இருந்துவிட்டார். நாங்கள் மூவரும் காய்ச்சிய பாலைச் சாப்பிடாமல் அவரசமாக கல்லூரிக்குப் போய் விட்டோம். திரும்பி வந்து பார்த்தால் காய்ச்சிய பால் ஒரு சொட்டு கூட இல்லை.

ரஜினியிடம் கேட்டதற்கு, "நானே குடிச்சிட்டேன்" என்றார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தோம். அன்று ரஜினி வேறு எதுவும் சாப்பிடாமல் பாலை மட்டுமே குடித்ததின் பலன் பாத்ரூமுக்கு அடிக்கடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு போய் வந்தார். பால் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் திடீரென அதிக அளவு பால் அருந்தினால் பேதிதான் பலன்.

ரஜினி ஒரு நாள் இரவு திடீரென்று தனக்கு அன்று பிறந்தநாள் என்றார். "பிறந்த நாளைப் பற்றி சொல்ற நேரமாடா இது?" என்று சத்தம் போட்டோம்.

எப்படிக் கொண்டாடுவது என்பது பற்றி யோசித்தபோது ரஜினி 'சாராயம் குடிக்கலாம்' என்றார். ரஜினியின் விருப்பத்திற்காக சரி என்றோம். அசோக்கிற்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும் ஒப்புக்கு தானும் வருவதாகச் சொன்னார்.

அருண் ஹோட்டலுக்கு வழக்கமாக வரும் டாக்ஸி ஒன்று கண்ணில்பட்டது. டாக்ஸிகாரரிடம் "சாராயம் எங்கே கிடைக்கும்?" என்று கேட்டதற்கு தானே அழைத்துச் செல்வதாகக் கூறினார். டாக்ஸிக்கு பணம் எவ்வளவு ஆகும் என்று கேட்டதற்கு, ஐந்து ரூபாய்க்குள் வருமென்றார். சரி பரவாயில்லை என்று டாக்ஸியில் ஏறினோம்.

அப்போது மது விலக்கு அமலில் இருந்தது. அதனால் டாக்ஸிக்காரர் சொன்ன இடத்தில் சாராயம் இல்லையென்று திரும்பினார். இதுபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டாக்ஸிக்காரர் ஒவ்வொரு சந்தாக நிறுத்தி விட்டு சாராயம் கிடைக்கிறதா என்று அலசிவிட்டு வந்தார்.

நீண்ட தொலைவு சென்று ஓரிடத்தில் சாராயம் வாங்கி ஹோட்டலுக்குத் திரும்பினால் டாக்ஸி மீட்டர் 25 ரூபாய்க்கு மேல் காட்டியது. அவ்வளவு பணம் எடுத்து வரவில்லை. பயத்துடன் அறைக்கு ஓடி ஒரு வழியாகத் தேற்றி டாக்ஸிக்காரரை அனுப்பிய பின்புதான் நிம்மதியாக இருந்தது.

சரியென்று சாராயத்தை அனைவரும் குடிக்கத் தொடங்கினோம். அசோக் ஒப்புக்கு குடிக்கிறேன் என்று குடித்தார். எங்களுக்கு அது முதல் அனுபவம். அதனால் ஏதோ தலை சுற்றுவது போல் இருந்தது. ஆனால் ரஜினிக்கு சாராயம் தண்ணீர் பட்ட பாடு என்பதால் ஒரே வேகத்தில் குடித்து முடித்தார்.

பிறகு, "டேய் ஏமாந்துட்டோம்டா. ஒரிஜினல் சரக்கு இல்லே இது. கிக்கே இல்லேடா" என்றார். அப்போதுதான் சாராயம் குடித்து போதை ஏறியதாக நினைத்தது வெறும் பிரமை என்ற உணர்வு வந்தது எங்களுக்கு.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கிய பின் அமைந்தகரையில் ஒரு நாள் பேசினார். அதுதான் அவருக்கு அங்கு முதல் பொதுக்கூட்டம். இரவு சாப்பிட்டு முடிந்தபின் நால்வரும் கூட்டத்திற்குப் போக நினைத்தோம். எல்லோரும் லுங்கிகளில் புறப்பட்டோம்.

கட்சி துவங்கியபின் எம்.ஜி.ஆருக்கு முதல் கூட்டம் என்பதால் ஏராளமாக மக்கள் திரண்டிருந்தார்கள். நாங்கள் கடைசியாக நின்ற இடத்திலிருந்து எம்.ஜி.ஆர். நீண்ட தொலைவில் இருந்தார். அவர் பேசத் தொடங்கியதும் திடீரென்று கூட்டத்திற்குள் கற்கள் விழ ஆரம்பித்தது. கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு ஆளுக்கொரு திசையில் ஓட ஆரம்பித்தனர்.

கலவரம் போல சூழ்நிலை இருந்ததால் போலீஸ் லத்தி சார்ஜ் செய்ய ஆரம்பித்தது. நாங்களும் ஓட ஆரம்பித்தோம். ஆனால் ரஜினி ஒரு போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்டார். ரஜினி சூழ்நிலையைச் சீரியஸாக நினைக்காமல் "சார் நான் சும்மா வந்தேன்" என்று சொல்லிப் பார்த்தார். போலீஸ்காரர் கேட்பதாக இல்லை. கறுத்த நிறத்திலும் லுங்கியிலும் ரஜினியின் தோற்றத்தைப் பார்த்து அவர் கலவரம் செய்ய வந்தவன் என்று லத்தியால் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தார்.

அடுத்த நிமிடமே ரஜினி ஓட்டலுக்கு வந்து சேர்ந்தார். "முதுகில் ஒரே வலியா இருக்குடா" என்று ரஜினி முனகிய போது, நாங்கள் சட்டையைக் கழற்றச் சொல்லிப் பார்த்தால் கறுத்த முதுகையும் தாண்டி இரத்தக் கோடாகத் தெரிந்தது. கலங்கிப் போய்விட்டோம்.

ரஜினிக்கு முதலுதவி சிகிச்சை செய்து ஆறுதல் கூறி தூங்க வைத்த பின்பே எங்களுக்கும் ஆறுதலாக இருந்தது. அதை இப்போதும் சொல்லிப் பார்த்துச் சிரிப்போம்.

எனக்குச் சிகரெட்டிலிருந்து மது, லாகிரி வஸ்துகளில் என்னென்ன இருக்கிறதோ, அத்தனையும் ருசி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம். ஒருநாள் நண்பர் ஒருவர் மாத்திரைகளைக் கொடுத்து "சாப்பிட்டுப் பார். நல்லா கிக் வரும்" என்றார்.

நான் மற்றவர்களுக்கும் கொடுத்தேன். அசோக் மறுத்துவிட்டார். அதனால் மூவரும் மாத்திரைகளை விழுங்கிய நேரத்திலேயே தலை சுற்ற ஆரம்பித்தது. வகுப்புகளுக்குப் போன போது எதிலும் கவனம் செலுத்த முடியாது என்ற நிலையில் யாருமில்லாத வேறு அறைகளில் தலை சாய்த்து விட்டோம். மாலையில் ஒரு வழியாக எழுந்து பார்த்தால் ரஜினியைக் காணோம். எங்கே போனார் என்று தேடினால் பியூன் வீரையா அழைத்துக் கொண்டு வந்தார்.

ரஜினி வசதியாக ஒரு இடம் பார்த்து தூங்கியிருக்கிறார். அன்று வெள்ளிக் கிழமை வேறு. கல்லூரிக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். வகுப்பறைகளை மூடிக்கொண்டு வந்த வீரையா, எதிர்பாரதவிதமாக ரஜினி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு எழுப்பி அழைத்துவந்தார்.

''இன்னிக்கு வீரையா எழுப்பாமல் கதவை மூடிக்கொண்டிருந்தால் சனி, ஞாயிறு ரெண்டு நாளும் இங்கேயே பட்டினி கிடந்திருப்பேன். திங்கட் கிழமைதான் நாம் சந்திச்சிருப்போம்" என்றார் ரஜினி. போதை மாத்திரைக்கு அன்றோடு முழுக்குப் போட்டோம்.

அருண் ஹோட்டலில் காபரே நடனம் நடப்பது வழக்கம். மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தால் கீழ்த்தளத்திற்குக் காபரே அழகிகள் போவது தெரியும். அவர்களை வேடிக்கையாகப் பார்ப்போம்.

காபரே நடனத்தையும் பார்த்தால் என்ன என்று நினைத்தவர்கள், காபரே ஹாலில் உள்ள நிர்வாகி ஒருவரை பழக்கம் பிடித்துக் கொண்டோம்.

அங்கு குறிப்பிட்ட கட்டணம் கொடுத்தால் உணவும் தரப்படும். எங்களால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று குறைந்த கட்டணம் தர ஒப்புதல் பெற்றோம். கையில் பணம் அதிகமாக இருந்தால் காபரே ஹாலுக்குள் நுழைந்து விடுவோம்.

ரஜினிக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை. பெண்களை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார். காபரே அழகிகள் சீரியஸாக நடனம் ஆடும்போது சிகரெட் புகைத்தபடி ஒப்புக்குப் பார்ப்பது போல் பார்ப்பார். இது போல் விஷயங்களில் அவர் பாணியே தனி.

"பொம்பளைங்களைப் பார்த்து ஏண்டா இப்படிப் பல்லைக் காட்டறீங்க?" என்று எங்களைக் கேலி செய்வார்.

அசோக் அடிக்கடி ரஜினியிடம் "நான் ஹீரோவானா நீதாண்டா வில்லன்" என்பார்.

"சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் வில்லனாத்தாண்டா நடிப்பேன்" என்பார் ரஜினி.

"என்ன இருந்தாலும் ஹீரோ ஹீரோதான். வில்லன் வில்லன்தான்" என்று அசோக் சொல்லும் போது "நீ எத்தனை நாளைக்கு ஹீரோவா நடிப்பே? இளமை இருக்கிற வரையில்தானே. ஆனா நான் வயசானா கூட வில்லனா நடிக்க முடியும்" என்று பதிலுக்கு கூற, இருவரும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்வார்கள்.

எங்களில் அசோக் முதலில் ஹீரோவாக வந்தாலும் ரஜினி எட்ட முடியாத அளவில் பல மடங்கு உயர்ந்துவிட்டார்.

எங்களைப் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அப்போது அரட்டை அடிக்க ஏற்ற இடமாக இருந்தது டிரைவ்-இன்-உட்லாண்ட்ஸ். அங்கு போனால் ஓரே மேஜையைச் சுற்றி பல நாற்காலிகளைப் போட்டுக் கொள்வோம். இது ஹோட்டலைச் சேர்ந்தவர்களுக்கு முதலில் எரிச்சலைத் தந்தாலும் எங்களைக் கண்டும் காணாமல் இருந்துவிடுவார்கள்.

ஒரு நாள் டிரைவ்-இன் வெளியே உள்ள மரத்து நிழலில் நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது ரஜினி படுகோபமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

என்னவென்று விசாரித்தால், "பின்ன என்னங்கடா, என்னைப் போய் நடிச்சுக் காட்டச் சொல்றாங்க" என்றார்.

பாம்குரோவ் ஓட்டலில் ஒரு பிரபல இயக்குநரும், கதாசிரியர்-தயாரிப்பாளரும் தங்களது படமொன்றிற்கு நடிகர்களைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். ரஜினி அப்போது 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த நேரம். அதனால் அவரையும் வரச்சொல்லியிருந்தார்கள். ரஜினியிடம் நடித்துக் காட்டச் சொல்லியிருந்தார்கள். ரஜினிக்கு கோபம் வந்தாலும் பொறுமையாக நடித்துக் காட்டினாராம். "சரி நீங்கள் போகலாம். உங்களுக்கு சொல்லி அனுப்புகிறோம்" என்று அனுப்பி விட்டார்களாம்.

அதைக் குறிப்பிட்ட ரஜினி, "பாலச்சந்தர் சார் படத்தில் நடிக்கிறேன்னு தெரிஞ்சும், நடிக்கச் சொல்லி கேட்டாங்கன்னா.... அவரையே இழிவுப்படுத்துற மாதிரியில்லே....." என்று கோபம் அடங்காமலேயே குறிப்பிட்டார் ரஜினி. பின்னர் அந்த இயக்குநரின், தயாரிப்பாளரின் பல படங்களில் ரஜினி நடித்திருக்கிறார்.

இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள்

அடுத்த இதழில்

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information