தன்னுடைய திரையுலக அனுபவங்களை மற்றும் முக்கிய நபர்களை பற்றி தன்னுடைய அபிப்பிராயத்தை பகிர்ந்துகொண்டார். இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து பில்லா, விடுதலை உள்ளிட்ட படங்காய் தயாரித்தவர். இன்றைய நடிகர்களின் பந்தாக்களை எல்லாம் பார்த்தவர் சூப்பர் ஸ்டாரை பற்றி சொல்லாமல் இருக்கமுடியுமா?
சூப்பர் ஸ்டார் பற்றி திரு.பாலாஜி கூறியதாவது:
“ரஜினியை பத்தி சொல்லனும்னா ரொம்ப நல்ல மனிதர் - பழசை - கடந்து வந்த பாட்ஹையை- மறக்காதவர். எளிமையானவர். நான் கிட்ட தட்ட நாற்பது படங்களுக்கு மேல் எடுத்திருக்கிறேன். ரஜினியை வெச்சு பில்லா தயாரிச்சேன். படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே சொன்னேன். நீ தான்யா இனிமே சூப்பர் ஸ்டார் என்று. அதே போல ஆச்சு. சிலர், அவர் இந்த படத்துல இருந்து சூப்பர் ஸ்டார் ஆனாரு, அந்த படத்துல இருந்து சூப்பர் ஸ்டார் ஆனாருன்னு சொல்றாங்க. ஆனா நான் நிச்சயம் சொல்வேன், பில்லாவுக்கப்புறம் தான் ரஜினி சூப்பர் ஸ்டாரா ஆனாரு. இந்த படம் தான் அவரை சூப்பர் ஸ்டாரை உறுதிபடுத்திச்சு.”
“இன்னிக்கு இருக்குற யங்ஸ்டர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்குற டார்ச்சர் இருக்கே (முகத்தை சுளிக்கிறார்) டூ….மச்…. ரொம்ப அடாவடி பண்றாங்க. என் பையன் இப்போ என் கம்பெனி சார்பா படங்கள் தயாரிக்கிறான். ஷூட்டிங்குக்கு நாலஞ்சு கேரவன் டெய்லி வாடகைக்கு எடுக்குறான். கேட்டா, ஹீரோவுக்கு ஒன்னு, ஹீரோயினுக்கு ஒன்னு, காமெடியனுக்கு ஒண்ணுன்னு சொல்றான். ஷூட்டிங் முடிவுல பார்த்தா கேரவனுக்கு மட்டுமே படத்தோட பட்ஜெட்ல ஒரு கணிசமான பகுதி செலவாகியிருக்கும். ஆனா ரஜினி அன்னிலயிருந்து இன்னிவரைக்கும் இது போன்ற விஷயங்களில் தயாரிப்பாளருக்கு செலவு வெச்சதில்லே. ஷூட்டிங் ஸ்பாட்ல தன்னோட சீன் இல்லாதப்போ அவர் பாட்டுக்கு ஒரு ஓரத்துல உட்காந்து ஏதாவது புக் படிச்சுட்டு இருப்பாரு. கேரவன் அது இதுன்னு எதையுமே அவர் டிமேண்ட் பண்ணதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். A wonderful artiste indeed” என்று முடித்துக்கொண்டார்.
நன்றி பாலாஜி அவர்களே…. சூப்பர் ஸ்டாரை பற்றி பகிர்ந்துகொண்டதற்கு.