Mohanlal
மலையாளத்
திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் சமீபத்தில்
கொச்சியில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.
சற்றே யோசித்துப் பார்த்தால் ஒரு ரஜினி ரசிகரின் மனநிலையை
அவர் பிரதிபலித்திருப்பது புரியும்.
பேட்டி விவரம்:
ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி
தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கெஸ்ட் ரோல்
என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க
மாட்டார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள்
என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை ஓரிரு காட்சிகளில்
மட்டும் பார்ப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.
என்னைப் போன்ற நடிகர்களுக்கு எந்த ரோலும் ஒரு பொருட்டே
அல்ல. நான் திடீரென்று கெஸ்ட் ரோல் பண்ணுவேன், நாயகனாகவும்
வருவேன். இரண்டு மூன்று கதாநாயகன்களில் ஒருவராககக்கூட வந்து
போவேன். மம்முட்டியும் கூட அப்படித்தான். கத பறயும்போல்
வெற்றி பெற அதுவும் ஒரு காரணம். இதெல்லாம் கேரளாவில் சகஜம்.
ஆனால், ரஜினி அப்படி நடிப்பதை கேரள மக்கள் கூட விரும்ப
மாட்டார்கள். அவர்களுக்கு ரஜினியை முழுமையாக ரசிக்க
வேண்டும். மூன்று மணிநேரமும் ரஜினி இருக்க வேண்டும்,
என்றார் மோகன்லால்.
நன்றி: மலையாள மனோரமா
Actor Mohanlal's interview
to Malayala Manorama's portion is this. If we can
internalise, it is clear that he has reflected the
Rajini fans inner feelings.
Superstars like Rajinikanth and Kamal are beyond
success or failures. Guest roles are not good for them.
Their fans will not like that Rajinikanth, Kamalhasan
like actors have crossed the boundary of ordinary
actors.Fansare not happy to see them in one or two
scenes only.
Actors like me any role is OK. Suddenly ,I would act in
a Guest role, ora hero or even one among the two ot
three heros, Mammoty is also like that. Kathaparayumpol
(original of Kuselan) succeded becvause of that.This is
common in Kerala.
If Rajini acts like that in a guest role, even Kerala
public will not like. For them they need to enjoy Rajini
fully. All 3 hours, Rajini should be there, said
Mohanlal.
|