Panju Arunachalam (Writer)
ரஜினியின் திரையுலக
முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சு அருணாசலம்
அப்போது ஒரு பேட்டியில் கூறியதாவது:-
"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல்
நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு.
அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா
சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!'' என்பார்.
தயாரிப்பாளர், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன்
உடலை வருத்திக்கொண்டார்.
ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.
அவரைப்போல் பரபரப்பான - சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது
அபூர்வம்.''
இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
|