Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது! (பாகம் 56)

ரஜினி ரிஸ்க் எடுத்து நடித்த படங்களின் அனுபவங்களைப் பற்றி எஸ்.பி.முத்துராமன் தொடர்கிறார்:

முரட்டுக்காளை: எனக்கும், ரஜினிக்கும் ஏவி.எம்.மின் முதல் படம். ரஜினி இதில் முழுக்க பட்டிக்காட்டானாக வருவார். மாட்டுச் சண்டை, ரேக்ளா ரேஸ், ரயில் சண்டை என்று நிறைய ரிஸ்க்கான அயிட்டங்கள். எல்லாவற்றிலும் ரஜினி ரிஸ்க் எடுத்து செய்தார்.

ரயில் சண்டைக் காட்சி தென்காசி அருகில் புனலூர் பக்கம் படமாக்கப்பட்டது. ரயில் பாதையில் நிறைய பாலங்கள் உண்டு. ஓரிடத்தில் ரஜினி நின்று கொண்டே ரயில் மீது சண்டை போட்டபடி வருவார். பாலம் வரும் இடத்தில் குனிந்து கொள்ளும்படி முன்பே சொல்லியிருந்தோம். நாங்கள் கேமராவுடன் மறுபுறத்தில் இருக்கிறோம். ஆனால் ரஜினியும், ஸ்டண்ட் நடிகரும் குனியவில்லை. நாங்கள் கத்துகிறோம் ''குனி ரஜினி'' என்று. அது அவர்களுக்கு கேட்டதாகத் தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்தோம். ஆனால் ஒரு நொடி இடைவெளியில் பாலத்தில் தலை தட்டவேண்டியதுதான் பாக்கி. இருவரும் சட்டென்று குனிந்து தப்பித்தார்கள். அன்றைக்கு ரஜினியின் வேகம்தான், அவரைக் காப்பாற்றியது.

கழுகு: எல்லா வசதிகளும் கொண்ட பெரிய பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து படப்பிடிப்பிற்கு பயன்படுத்தினோம். ரஜினிக்கு படத்தில் நிறைய ஆக்ஷன் உண்டு. பஸ்ஸை தானே ஓட்டியபடியே சண்டைக் காட்சியொன்றில் நடித்தார். குற்றாலம் அருகில் மலைப்பகுதிகளில் ஏறிஏறி ஒய்.ஜி. மகேந்திரன் ஒரு கட்டத்தில் என்னால் முடியாது என்று ஓடியே போய் விட்டார்.

கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் நிறைய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. ஈட்டிகள் ரஜினியை நோக்கி நேராக வந்து பாயும். ரஜினி தன் வேகத்தினால் அவற்றிலிருந்து விலகுவார்.

நெற்றிக்கண்: கவிதாலயம் பேனரில் துவங்கிய முதல் படம் இது. ''ரஜினியை வச்சு நான் தயாரிக்க, நீங்க டைரக்டர். ரஜினியின் நடிப்புத் திறமையைக் காட்டக் கூடிய கதை இது...' என்று பாலசந்தர் தானே எழுதித் தந்தார்.

ரஜினிக்கு இதில் இரட்டை வேடம். இரண்டு ரஜினியும் சந்திக்கும் காட்சிகளெல்லாம் - இரண்டு ரஜினியும் இருப்பது போலவே எண்பது சதம் படமாக்கினோம். பொதுவாக இரட்டை வேடம் என்றால் குளோசப் தவிர, வசன காட்சிகளில் பெரும்பாலும் டூப் இருக்கும். ஆனால் ரஜினியின் இரட்டை வேடத்திற்கு அந்த படத்தில் அதிகம் டூப் இல்லை.

இரண்டு வேடத்திற்கும் குரலில், தோரணையில் என்று நிறைய வித்தியாசம் இருக்கும்படி தானே பார்த்துக் கொண்டார் ரஜினி. டப்பிங்கிலும் அந்த வித்தியாசம் வேண்டுமென்று முதல் நாள் தந்தை வேடத்திற்கும், மறுநாள் மகன் வேடத்திற்கும் குரல் கொடுத்தார்.

ராணுவ வீரன்: இதில் ரஜினிக்கு எதிரான வேடம் சிரஞ்சீவிக்கு. நக்ஸலைட்டாக வரும் சிரஞ்சீவி ரஜினியைவிட வேகமான கேரக்டர். அதை ரஜினி ரசிகர்கள் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்ததால், கதையில் நக்ஸலைட் பற்றிய விஷயங்களைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. நிறைய காம்பரமைஸ் செய்து கொண்டோம். அதனால் குழப்பம்.

சத்யா மூவிஸின் எல்லா அம்சங்களையும் கொண்ட படம் இது. ஆர்.எம்.வீரப்பன் எங்கெங்கு கூட்டம் பேசப் போவாரோ, அதையெல்லாம் மனதில் கொண்டு அங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தச் செய்வார். தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.

ஒரு பாடல் காட்சிக்காக மூன்று தளங்களில் செட் போட்டு படமாக்கினோம். ஏராளமாக செலவு செய்து எடுக்கப்பட்டது 'ராணுவ வீரன்!'

போக்கிரி ராஜா: ரஜினிக்கு மீண்டும் இரட்டை வேடம். ஒன்று ரௌடி, மற்றது சாது. ரௌடி வேடத்தில் தூள் பறத்துவார். முத்துராமன் கடைசியாக நடித்த படம்.

புதுக்கவிதை: முழு காதல் கவிதை. மூணாறு அருகில் இருபது நாள் படப்பிடிப்பு. அதிகாலை சூரியோதயத்திற்கு முன் படப்பிடிப்பு நடத்த வேண்டி 4 மணிக்கே எழுந்து லொகேஷனுக்குச் செல்வோம். கடும்பனி பெய்த நேரம். அந்த சூழ்நிலையிலும் 5 மணிக்கே தயாராக வருவார் ரஜினி.

எங்கேயோ கேட்ட குரல்: எங்களது பயணத்தில் இது ஒரு சரித்திரம். சென்டிமெண்ட் ஹீரோவா, குணசித்திர பாத்திரப்படைப்பிற்கு ரஜினி படைத்த சரித்திரம்.

மனப் போராட்ட காட்சியில் ரஜினிக்கு எந்த அளவு முக பாவம் வரும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். படம் மட்டுமின்றி படம் பார்க்கும் ரசிகர்களும் உணர்ச்சி மயமாக இருந்தார்கள். ரஜினிக்கு இதுபோல் மீண்டும் ஒரு படம் வராதா என்று இன்றைக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்தப் படம் அகில இந்திய அளவில் விருது பெறும் என்று எதிர்பார்த்து ஏமாந்தோம். ரஜினிக்கும் ஏமாற்றம்.

பாயும் புலி: முழுக்க முழுக்க ரஜினியின் ஆக்ஷன் உள்ள படம். ஆயிரம் அடிக்கு ஒரு ஸ்டண்ட். எல்லா வகையான சண்டைக் காட்சிகளும் இதில் இடம் பெற்றது. இரண்டாம் ஓட்டத்திலும் நன்கு வசூலாகிறது.

சாதிக்கப் போகிறவரின் பல பக்கங்கள்....

-தொடரும

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information