அண்ணாமலை : திரை விமர்சனம்
1992ல்ல வந்த படம்...அது வரைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்த ரஜினியை சூப்பர் பவர் ரஜினியாக உயர்த்திய படம் அது தான் என்றால் அது மிகையாகாது... படத்தின் கதையில் பெரிய புதுமை இல்லை தான்... ஏன் வழக்கமான மசாலா படம் தான்... ஆனாலும் அந்தப் படமே இது நாள் வரையில் எனக்கு மிகவும் பிடித்த ரஜினி படமாக அமைந்துப் போனது...
இப்போ அது என்னப் படம்ன்னு கிட்டத்தட்ட எல்லாரும் யுகிச்சு இருப்பீங்களே... அண்ணாமலையே தான் அது...இசையில் தேவா ஒரு பெரிய ரவுண்டு வர துவக்கம் அமைத்துக் கொடுத்தப் படம்...பின்னாளில் தமிழ் திரையுலகையே கலக்கிய பாட்ஷா கூட்டணியின் ஆரம்ப அட்டகாசமும் இந்தப் படம் தான்...இன்று வரை தலைவரையும் ரசிகர்க்ளையும் அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வைக்கும் படலமும் இந்தப் படத்தில் தான் துவங்கியது என நினைக்கிறேன்...
கவிதாலயாவால் துவக்கப் பட்டு ....இயக்குனர் மாற்றப் பட்டு ஏன் அண்ணாமலைக்கு அரோகரா என ஆருடம் சொல்லப்பட்டு அதை எல்லாம் உடைத்து சக்கைப் போடு போட்ட படம் அண்ணாமலை.
அன்று ஒரு பள்ளி மாணவனாய் பார்த்து ரசித்து... பின்னாளில் உலக சினிமா என வளர்ந்து.. இன்று முப்பதில் அடியெடுத்து வைத்தப் பின்னும் அதே ரசனை மாறாமல் என்னால் அண்ணாமலையைப் பார்க்க முடிகிறது
படத்தில் என்றும் மறக்க முடியாத காட்சிகளாய் நான் ரசிப்பவை...
படத்தில் தலைவரின் அறிமுக காட்சி..கைகளைத் தலைக்குப் பின் தூக்கி கட்டிக்கொண்டு கால்களால் லேசாக தாளம் போட்ட படி.. பறந்து வரும் தப்பட்டையை ஸ்டைலாகப் பிடித்து அப்படியே ஸ்லோ மோஷன்ல்ல தலையை சிலுப்பியப் படி தூக்கி லேசான புன்னகை அப்படியே விரிய...கண்ணைச் சுருக்கி குறும்பாய் திரையைப் பார்த்து ... வந்தேன்டா பால்காரன்...அப்படின்னு ஆரம்பிப்பார் பாருங்க பாட்டை... இப்போ பாத்தாலும் தானா விசிலடிக்கச் சொல்லுது மனசு... ஸ்டைல்ன்னா அது ஸ்டைல்....
அப்பாவியா நண்பனிடம் நட்பு பாராட்டும் அந்தக் காட்சிகள்...ஒரு அப்பிராணி பால்காரனாகவே தலைவர் வாழ்ந்திருப்பார்...அந்த நடிப்பு எல்லாம் தலைவருக்கு மட்டுமே செட் ஆகும்ய்யா... நண்பன் தன் குடும்பத்திற்கு எல்லாம் பரிசு கொடுக்க.. தனக்கு என்னடா கொண்டு வந்து இருக்கே...அப்படின்னு கேப்பாரு பாருங்க...யதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு பதார்த்தம் நிறைந்த விருந்து...
ஜனகராஜூம் தலைவரும் வரும் ஆரம்பக் காட்சிகளின் நகைச்சுவை நடைமுறை வாழ்க்கையின் பிரதிபலிப்பு... மெல்லிய நகைச்சுவை இன்றும் ரசிக்கலாம்....தலைவரின் பாம்பு சென்டிமெண்ட் செமத்தியாக ஓர்க் அவுட் படங்களின் அண்ணாமலையும் ஒன்று.. சின்னஞ்சிறுசுகள் விழுந்து விழுந்து சிரித்த இடம் அது.. பாம்பு காமெடி சிறுசுகளுக்குன்னா... கடவுளே கடவுளே காமெடி இளசுகளுக்கு..
நண்பனால் ஏமாற்றப் பட்டு வீடு இழந்து மழையில் தவிக்கும் காட்சி... நடிப்புக்கு என்று பேசப்படும் நடிகர்களுக்கே சவால் விடும் காட்சிகள்..படத்தின் ஹைலைட் காட்சி என்றால் தலைவர் படியேறி சவால் விடும் காட்சி தான்.. சும்மா ஒரு சிங்கம் சிலிப்பிகிட்டு வந்து வசனம் பேசினா... எப்படி இருக்குமோ அப்படி ஒரு கம்பீரம்... கெத்துன்னா..அது கெத்து... தமிழ் சினிமா மட்டும் இல்ல... இந்திய சினிமாவுல்ல எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு அழுத்தமான சவால் சீன் நான் பார்த்தது இல்ல... ட்ராலி வச்சு சுத்தி சுத்தி எடுத்துருப்பார் சுரேஸ் கிருஷ்ணா... பின்னாடி மழை இடி மின்னல்ன்னு ஒரு எக்ஸ்ட்ரா எபெக்ட் வேற...
வர்த்தக சங்கத் தேர்தல் காட்சியில் வசனமே இல்லாமல்.. வெறும் புகையாய் பகையைத் தலைவர் ஊதித் தள்ளும் காட்சி...வாவ்.. இது தான்டா சூப்பர் ஸ்டார்ன்னு சவுண்ட் விட வைக்கும் காட்சி.. அந்த எஸ்கலேட்டரில் தலைவர் ஏறுவதும்.. சரத்பாபு..ராதாரவி இறங்குவதும்... கதையின் மொத்தத் தொகுப்பை அந்த ஏற்ற இறக்கத்துக்குள் பிளாஷ் செய்வதும் இயக்குனரின் டச்சஸ்... ஏறி மேல நின்று ஒத்த சொடுக்கு போட்டு... மலடா... அண்ணாமலைடா.... அந்த வாய்ஸ் மாடுலேஷன்... SUPERSTAR AT HIS BEST
பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஹிட்டு.... அறிமுக பாடல்களின் ஆர்ப்பாட்ட ட்ரெண்ட் சென்டர் வந்தேன்டா பால்காரன் பாட்டு தான்னு நான் நினைக்கிறேன்..பாடல் வரிகள் பாடங்கள்..
கொண்டையில் தாழம் பூ.. நெஞ்சிலே வாழப்பூ.... படம் வந்தக் காலத்தில் சக்கப் போடு போட்ட பாட்டு... தலைவரின் ஸ்டைலில் தியேட்ட்ர்கள் எல்லாம் சும்மா ஆட்டம் கண்டுச்சுல்ல..
அண்ணாமலை அண்ணாமலை... டூயட் பாட்டை எழுந்து போகவிடாமல் ரசிக்க வைச்சாங்க...ரெக்கக் கட்டிப் பற்க்குதுய்யா அண்ணாமலை சைக்கிள் பாடல்கள் மெலிதான மெலடி...தாளம் போட்டு தலையாட்டவும் வைத்தன..
ஒரு வெண்புறா பாடல்... யேசுதாஸில் குரலா... தலைவரின் நடிப்பா என மாறி மாறி கவனம் ஈர்த்த பாடல்...
எனக்குப் பிடிச்சது அல்டிமேட் பாட்டு..
வெற்றி நிச்சயம்... என்றும் என் மொபைலில் நிரந்தர இடம் பிடித்த பாடல்.. தன்னம்பிக்கை தரும் வரிகள்... திரையில் தன்னம்பிக்கைக்கு உச்சக் கட்ட எடுத்துக்காட்டாம் சூப்பர் ஸ்டார் அந்த பாடல் அரிகளை உச்சரிப்பது எவ்வளவு பொருத்தம்...
சரத் பாபு, குஷ்பு, ராதா ரவி, நிழல்கள் ரவி, மனோரமா, வைஷ்ணவி போன்ற பலரும் படத்தில் நடித்து இருந்தனர்.. ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் உச்ச நட்ச்சத்திரம் ஒண்ணு தானேப்பா....அதுல்ல என்ன சந்தேகம்.. அது வீரத்தில் மன்னனே.... வெற்றியில் கண்ணணே.. என்றுமே ராஜா நீ ரஜினி....அண்ணாமலை மொத்தத்தில் பார்க்க பார்க்க மறுபடியும் ரீப்பிட்டே.
- தேவ்
Annamalai : Movie Review
There are Rajinikanth films, there are blockbuster Rajinikanth films, and then there is Annamalai.
For many fans, Baasha may be the definitive Superstar movie. For others, it could be Padayappa. But for me, Annamalai remains the complete Rajini package – a film that perfectly balances friendship, betrayal, emotions, comedy, action, style, and the indomitable spirit that defines every Rajinikanth classic.
Released in 1992 and directed by Suresh Krissna, Annamalai marked the beginning of one of Tamil cinema's most successful actor-director partnerships. Even after more than three decades, the film remains fresh, entertaining, and endlessly rewatchable.
The story revolves around Annamalai, a humble milkman whose friendship with wealthy businessman Ashok faces a tragic downfall due to ego, greed, and manipulation. What follows is one of the most satisfying rise-to-success journeys ever seen in Tamil cinema.
What makes Annamalai special is not merely the story, but the way it is presented. Suresh Krissna transforms every major moment into a celebration. Whether it is Annamalai challenging Ashok, his rise in the hotel industry, or his triumphant entry as the new Hotel Owners' Association President, every scene is designed to evoke applause from the audience.
The legendary association hall sequence remains one of the finest mass moments in Rajini's career. The doors open, Rajini walks in with his trademark swagger, pipe in hand, and commands the screen without uttering a word. The confidence, style, and screen presence on display remind us why he became the Superstar.
At the same time, Annamalai never forgets to entertain. The first half is filled with delightful comedy, especially the interactions between Rajini and Khushbu. Her mistaken assumptions about Annamalai's identity create several hilarious situations, while the famous snake sequence still generates laughter today. Rajini's impeccable comic timing shines throughout the film.
Another strength of the film is its emotional core. Unlike many commercial entertainers that rely heavily on melodrama, Annamalai presents relationships with sincerity. The bond between Annamalai and his mother is touching without being overly sentimental. Similarly, his relationship with his daughter feels natural and relatable, particularly when he advises her against making life-changing decisions at a young age.
The film also contains subtle political undertones that became a trademark of Rajini films during the 1990s. Rather than dominating the narrative, these moments are woven naturally into the screenplay, adding an extra layer of excitement for fans who followed the political climate of that era.
Action sequences are another highlight. Rajini performs many of his own stunts, and the film cleverly avoids excessive violence. The confrontation at the Minister's residence and the inventive climax showcase both style and substance, proving that action can be thrilling without becoming repetitive.
Musically, Deva delivers one of the most memorable albums of the decade. The title song Annamalai Annamalai is pure fan service, presenting Rajini through Khushbu's imaginative lens. Kondaiyil Thaazham Poo remains energetic and fun, while Vetri Nichayam perfectly captures Annamalai's journey from adversity to success. Even today, these songs instantly transport fans back to the golden era of Rajini cinema.
Rajinikanth's performance is the heart and soul of the film. He effortlessly switches between comedy, romance, sentiment, and heroism. His portrayal of Annamalai feels genuine and relatable, making audiences celebrate every victory and feel every setback. Khushbu provides excellent support and shares wonderful chemistry with him. Sarath Babu is effective as the conflicted friend-turned-rival, while Radha Ravi delivers a memorable performance as the manipulative businessman.
More than anything else, Annamalai embodies the values that Rajini fans cherish most – friendship, self-respect, perseverance, gratitude, and the belief that hard work can overcome any obstacle.
Every Superstar fan has a personal favourite. Some choose Baasha, others swear by Padayappa. For me, Annamalai stands above them all because it captures everything that makes Rajinikanth special. It is emotional without being melodramatic, entertaining without being excessive, and powerful without losing its heart.
More than thirty years later, the magic remains intact. Annamalai is not just a movie; it is a celebration of the Superstar phenomenon and one of the finest commercial entertainers in Tamil cinema history.
The Indian Express : Annamalai
கல்கி : அண்ணாமலை
(12.07.1992 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)