Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Rajathi Raja (1989)

Rajadhi Raja is the quintessial Rajni film. Light-hearted, clean, non-violent and yet entertaining, it is packed with all the elements - good clean comedy, great songs, fights and light sentiments - that people have come to expect from a Rajni movie. It was Rajni's 125th film and at the time it was released, the term 'Rajni movie' was already a bonafide genre and the release of a Rajni movie was an event. But it was also a simpler time when the hype didn't threaten to overwhelm the movie itself and the expectations about the movie were not impossibly high. Those expectations it met fully, becoming a big hit.

Raja(Rajnikanth) has just returned from the US and finds his father dead, apparently from a fall after drinking too much. Suspecting his dad's second wife(Y.Vijaya) and her brother(Radharavi) of murdering his dad, Raja asks his friend Sethu(Janakaraj) to impersonate Raja while he himself enters the household as a worker. But the villains, who uncover the truth, kill Sethu also and place the blame on Raja. Raja goes on the run and runs into Chinnarasu(Rajnikanth), who resembles him. Chinnarasu is looking for some money to wed his uncle's daughter(Nadhiya) and Raja requests him to take his place in jail while he unmasks the villains.

Rajadhi Raja is a film where everything, barring Rajni and Ilaiyaraja's music, has aged or was silly to begin with. Its story is simplistic (an age-old revenge tale solved by the simple act of recording the villains' confessions), its screenplay is amateurish and completely devoid of logic(the movie's climax has Rajni crashing into the hanging room in a jail!), the villains are caricatures(comedians one moment, bad guys the next) and technical aspects are shoddy(in the climactic car chase, you can not only see the stuntman but you can actually see him wearing a helmet in the car that is supposedly being driven by a helmet-less Rajni!). But inspite of all this, if the movie works great as a full-length entertainer, it is only because of Rajni. Rajadhi Raja is truly a one-man show and its entertainment value and blockbuster status simply reinforce Rajni's screen presence, charisma and unequaled ability to single-handedly carry a movie on his shoulders.

Ever since Thambikku Endha Ooru, the movie that gave him the template for his roles that he has followed to this day and perfected to an art, Rajni has incorporated both action and comedy into his character. Every film(barring a rare entry like Baasha) has seen him clown around either with or without a comedian in one scene, before delivering punch lines and pummelling the villains in the next. Rajadhi Raja splits up the two parts of his comedy/action persona into two separate characters. So we have Raja, to deal with the villains and Chinnarasu, to make us laugh. This gives us more of Rajni and helps avoid the compartmentalized feeling that dogs those other characters - and movies - where Rajni plays both action hero and comedian.

The film is intended as a showcase for Rajni and little more. The story is real simple and there are no surprises or shocks. Since we - and Rajni - know who the villains are, there is no real suspense or tension either. The characters of the magician and 'Vaalpaarai' Varadhan are simply more chances for Rajni to play dress-up.

In recent times, the role of Chinnarasu is probably the closest Rajni has come to a full-fledged comedy role and his performance showcases his flair for comedy. The innocence and naievete of the character are endearing and he has us in splits whenever he is onscreen. The scene where he requests a landowner for a job and the one where he has to handle both Radha and Nadiya when they come to see him in jail are a couple of the standouts. If Chinnarasu is there to make us laugh, Raja is there to make us clap and cheer. It is the more traditional Rajni role with fights and whistle-eliciting lines like the classic Oru mottai.... Needless to say, he carries it off with elan. Radha, in some particularly weird dresses in the song sequences, and Nadiya, in her last role as heroine before her marriage, are along for the ride. Radha has pretty much nothing to do other than saying a few lines that serve as lead-ins to songs while Nadiya shows some fire when confronting her dad or Anandraj. Radharavi mixes villainy and comedy in his usual style.

The film was Ilaiyaraja's home production and he delivers a stellar soundtrack with all hits and no misses. Malayaala Karaiyoram... is a soft, melodious number that takes the place of the now-familiar introduction numbers. Meenamma Meenamma... and Vaa Vaa... are soft numbers also. Mama Un PoNNa Kodu... is a fun number with some spirited steps from Rajni while Enkitta Modhaadhe... could well be an anthem for Rajni fans considering how well it sings his praises.

Rajadhi Raja is a film that shows us that Rajni is truly Tamil cinema's rajadhi raja!

 

ராஜாதி ராஜா (1989)

ரஜினிகாந்தின் 125-வது படமாக வெளிவந்த "ராஜாதிராஜா'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இது, "பாவலர் கிரியேஷன்ஸ்'' தயாரிப்பு. இதற்கான கதையை எழுதி, படத்தை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். திரைக்கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார்.

இரட்டை வேடம்

இந்தப் படத்தில், ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார்.

ஒரு ரஜினிக்கு ஜோடி நதியா. இன்னொரு ரஜினிக்கு ராதா.

மற்றும் விஜயகுமார், ராதாரவி, ஒய்.விஜயா ஆகியோர் நடித்திருந்தனர்.

ராஜா கோடீஸ்வரன். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறான். ஊரில் இருக்கும் ராஜாவின் அப்பா விஜயகுமார், மகனுக்குத் தெரியாமல் `சின்னவீடு' ஒன்றை `செட்டப்' செய்து கொள்கிறார். சின்னவீடு ஒய்.விஜயாவும் அவளது தம்பி ராதாரவியும் பணக்காரரின் சொத்துக்கு குறி வைத்து காத்திருக்கிறார்கள்.

சின்னவீட்டின் போலி அன்பை தெரிந்து கொண்ட பணக்காரர், அவளையும், அவளது தம்பியையும் வீட்டை விட்டுத் துரத்தியடிக்கிறார். ஆனால் அவர்களோ இரவில் பணக்காரர் போதையில் இருக்கிற சமயம், அவரை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து விடுகிறார்கள்.

அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து ராஜா வருகிறான். சென்னை விமான நிலையத்தில் இறங்கியதுமே தன் நண்பர்கள் மூலம் அப்பாவின் மரணம் பற்றி அறிந்து கொள்கிறான். அப்பாவின் சின்னவீட்டை அவன் பார்த்ததில்லை. சின்னவீட்டுக்கும் அவனைத் தெரியாது. இதனால் உண்மையை அறிய, சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தனது நண்பன் ஜனகராஜை தனது பெயரில் தங்கள் பங்களாவுக்கு அனுப்பி வைக்கிறான். ஜனகராஜின் கார் டிரைவராக ராஜாவும் அந்த பங்களாவுக்குள் அடியெடுத்து வைக்கிறான்.

சில நாட்களிலேயே சொத்துக்காக தனது அப்பா கொல்லப்பட்ட உண்மையை கண்டுபிடிக்கிறான். சின்னவீடு ஒய்.விஜயாவையும், அவள் தம்பி ராதாரவியையும் போலீஸ் வளையத்துக்குள் சிக்க வைக்க திட்டம் தீட்டுகிறான்.

இந்த நேரத்தில் `பணக்காரர் வாரிசு ஜனகராஜ் இல்லை. டிரைவர்தான் வாரிசு' என்பதை ராதாரவி கண்டுபிடித்து, ஜனகராஜை கொலை செய்கிறார். அந்தப் பழியை ராஜா மீது போட்டு விடுகிறார்.

ராஜாவுக்கு கோர்ட்டு தூக்குத் தண்டனை விதிக்கிறது. ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜா, உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் எண்ணத்தில் ஜெயிலில் இருந்து தப்புகிறான்.

மற்றொரு ரஜினி

அப்போதுதான், தன்னை அப்படியே அச்சில் வார்த்தது போலிருக்கும் சின்னராசுவை காண்கிறான். ராஜாவைப் பார்த்து சின்னராசுவும் அதிர்ந்து போகிறான். ராஜா தனது இக்கட்டான சூழலை சின்னராசுவிடம் விவரித்து, "என்னைப் போல உள்ள நீ, எனக்காக 15 நாள் ஜெயிலில் இருந்தால் அதற்குள் நான் உண்மைக் குற்றவாளிகளை தகுந்த ஆதாரத்துடன் போலீசில் ஒப்படைத்து விடுவேன். இந்த முயற்சி 15 நாட்களில் முடியாவிட்டால் கூட, ஜெயிலுக்கு வந்து எனக்கான தண்டனையை ஏற்றுக்கொள்வேன்'' என்கிறான்.

சின்னராசுவுக்கும் ஒரு நெருக்கடி இருந்தது. கிராமத்து மாமா பெண் மீது உயிரையே வைத்திருந்தான். மாமா மகளுக்கும் அவன் மீது காதல். மாமா பணம் படைத்தவர். சின்னராசுவிடமோ அவர் அளவுக்கு அந்தஸ்து இல்லை. என்றாலும் மாமா மகள் தந்த தைரியத்தில் மாமாவிடம் பெண் கேட்கச் செல்கிறான். அவரோ தனக்கு சரிநிகர் அந்தஸ்து இல்லாதவன் என்று கூறி அவமானப்படுத்தி விடுகிறார். முடிவாக, ஒரு மாதத்திற்குள் 50 ஆயிரம் பணத்தைக் கொண்டு வந்தால் பெண் தருகிறேன் என்று `கெடு' வைக்கிறார்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் ராஜாவை சந்தித்த சின்னராசு, தனது நெருக்கடியை ராஜாவிடம் சொல்கிறான். தனக்கு மட்டும் உதவினால் பணமும் தந்து, திருமணமும் செய்து வைக்கிறேன் என்று ராஜா வாக்குறுதி கொடுக்கிறான். அதை நம்பி சின்னராசு ஜெயிலுக்கு போகிறான்.

ராஜா துப்பறிந்து எதிரிகளை கண்டு பிடிக்க தாமதமாகிறது. சின்னராசுவுக்கோ ஜெயிலில் ஒவ்வொரு நாளும் பயம். ராஜாவை தூக்கில் போடப்போகும் நாளும் வருகிறது. தான் ராஜா இல்லை என்று சொல்ல முடியாத நிலையில், சின்னராசு தூக்கு மேடையை சந்திக்கிறான்.

ஆனால், கடைசி நிமிடத்தில் ராஜா கோர்ட்டில் குற்றவாளிகளை ஒப்படைத்து, தனக்காக தூக்கில் தொங்கவிருந்த சின்னராசுவை காப்பாற்றுகிறான்.

காமெடி காட்சிகள்

ராஜாவாக வரும் ரஜினிக்கு ராதா ஜோடி. சின்னராசுவாக வரும் ரஜினிக்கு நதியா ஜோடி.

இரண்டு ஜோடிகளின் கலகல காமெடி, படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. குறிப்பாக சின்னராசு, மாமா மகள் நதியாவிடம் தன்னை வீரனாக காட்டிக்கொள்ள `சிலம்பம்' கற்றுக்கொள்ளும் காட்சிகள் கூட, நகைச்சுவைப் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்ததை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

இளையராஜா

இந்தப் படத்துக்கு இளையராஜா பிரமாதமாக இசை அமைத்திருந்தார். எல்லாப் பாடல்களும் இனிமையாய் ஒலித்தன.

குறிப்பாக கவிஞர் பொன்னடியான் எழுதிய "எங்கிட்டே மோதாதே, நான் ராஜாதி ராஜனடா'' என்ற பாடலும், பிறைசூடன் எழுதிய "மீனம்மா மீனம்மா'' என்ற பாடலும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

இந்தப்படம் சென்னையில் 150 நாட்கள் ஓடியது. மதுரையில் 181 நாட்கள் ஓடியது.

சென்னையில், தொடர்ந்து 100 நாட்கள் "ஹவுஸ்புல்'' காட்சிகளாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1,22,000 கேசட்டுகள்

இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகள், அந்தக் காலகட்டத்தில் விற்பனையில் சாதனை படைத்தன.

லட்சத்தையும் தாண்டி ஒரு லட்சத்து 22 ஆயிரம் கேசட்டுகள் விற்பனையாயின. படத்தின் வெற்றி விழாவுக்கு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி "பிளாட்டினம் டிஸ்க்''கை வெளியிட்டார்.

 

ராஜாதி ராஜா – விகடன் விமர்சனம்

மினி! – படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடம். ஹாஸ்யம், ரௌத்ரம், காமம், குரோதம் எல்லாம் கலந்து, ரஜினிக்கென்றே மசாலா தூவி வைக்கப்பட்டிருக்கும் ரெடிமேட் ஃபார்முலா படம். சரி எதிர்காலத்தில் ரஜினிக்கு எப்படித் தீனி போடவேண்டும் என்று டைரக்டர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

மாக்ஸி! – ‘அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கறேன்” என்று பல்லைக் கடித்தபடி உறுமுகிறார் பட்டணத்து ரஜினி. அதே மாதிரி, ”எப்படியாவது 50,000 ரூபாயை என் மாமன் மூஞ்சியில கடாசிட்டு லட்சுமி(நதியா)யைக் கட்டிக்கறேன்” என்று கிளம்புகிறார் பட்டிக்காட்டு ரஜினி. செய்யாத கொலைக்காகப் பட்டணத்து ரஜினிக்கு மரண தண்டனை வழங்கப்பட, அவர் ஜெயிலுக்குப் போய் அங்கிருந்து தப்பி ஓடும்போது, வழியில் இன்னொரு ரஜினியைப் பார்க்கிறார். ”எனக்குப் பதில் பதினைந்து நாள் நீ உள்ளே இரு. நான் நிரபராதினு நிரூபிச்சுட்டு உன்னை விடுதலை பண்றேன். உன் கல்யாணத்துக்குப் பணமும் தர்றேன்” என்று சொல்ல, பட்டிக்காட்டார் தலையாட்டி விட்டு, ‘உள்ளே’ போகிறார். தலையில் கறுப்புத் துணி மாட்டி, கழுத்தில், சுருக்கை இறுக்குகிற பரபரப்பான சமயத்தில், முன்னவர் ஆதாரங்களோடு பாய்ந்து வந்து இவரை மீட்கிறார்.

சட்டம் தெரிந்தவர்கள் படத்தைப் பார்த்தால், புழுவாக நெளிந்து போவார்கள். அத்தனை குளறுபடி! ஆனால், அண்ணன்(!) ரஜினி பண்ணுகிற அட்டகாசத்தில் குளறுபடியெல்லாம் பஞ்சாய்ப் பறந்துவிடுகிறது என்பது வேறு விஷயம்!

இடப்பக்கக் கடை வாயைக் கடித்தபடி வசனம் பேசிக்கொண்டு படம் முழுக்கச் சண்டை போடுகிறார் சூப்பர் ஸ்டார்! கையால் அடிக்கிறாரா, காலால் உதைக்கிறாரா, எதிராளிக்கு அடி கண்ணில் விழுந்ததா, வயிற்றில் இறங்கியதா என்று ஊகிப்பதற்குள் சண்டையே முடிந்து போகிறது. சும்மா சொல்லக் கூடாது… தமிழ் சினிமாக்களில் ஸ்டன்ட் ரொம்பவும்தான் முன்னேறி வருகிறது!

மேக்கப்காரர் வித்தியாசமே காட்டவில்லையென்றாலும், இரண்டு காரெக்டர்களுக்கும் நடிப்பில் செமத்தியான வித்தியாசம் காட்டிவிடுகிறார் ரஜினி.

கோடீஸ்வரர் வேஷம் போட்டாலும், ரிக்ஷாக்காரர் ஜனகராஜால் மசால் வடை, சைனா டீயை மறக்கமுடியவில்லை. ராதாரவியிடம் அடிக்கடி உளறி அப்புறம் சமாளிக்கிறார். அநியாயத்துக்கும் வயிற்றில் கத்தி வாங்கிக்கொண்டு, தவளை மாதிரி காலைப் பரப்பிக்கொண்டு அவர் செத்துப்போவதிலும் பரிதாபம் இருக்கிறது.

முழுக்க முழுக்க ஹீரோ படம் என்பதால், ராதா, நதியா இரண்டு பேருமே டெபாஸிட் இழக்கிறார்கள்! சொந்தப் படம் என்பதால் பார்த்துப் பார்த்து அடித்திருக்கிறார் இளையராஜா. ஆனால், டியூன்களில் பழைய வாசனை கொஞ்சம் அதிகம்தான்!

- விகடன் விமர்சனக் குழு

விகடன்  மதிப்பெண் : 43



RAJATHI RAJA - KALKI REVIEW

(26.03.1989 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information