Naan Adimai Illai (1986)
One of the most enduring themes in tamil movies a while back used to be romance between a rich man and a poor woman (or the other way around), that was opposed by the parents. Naan Adimai Illai is another unremarkable entry in this category. The only noticeable aspect of the movie is its cast. Starring alongside Rajinikanth is Sridevi, who had already found success in Hindi movies and was fast on her way to becoming the numero uno in Bollywood. As it turned out, this ended up being her last movie in Tamil but sadly, it is a less-than-stellar swan song for the talented actress.
Priya (Sridevi) is the daughter of Rajasekhar (Girish Karnad), a rich industrialist. She falls in love with Vijay(Rajnikanth), a photographer, after he rescues her from some rowdies. Going against her parents, she runs away with Vijay and they get married. The differences in their status and the attitude of Priya's parents leads to some friction between the couple and finally, a small fight blows out of proportion and ends up with Priya returning to her parents' house. There she gives birth to a son and is all ready to mend fences with Vijay. But her father's machinations prevent this. He lulls Priya into believing that her child was still-born while Vijay raises the kid.
Like Alaipayuthey, Naan Adimai Illai too doesn't stop with the lovers overcoming all opposition to unite and proceeds to focus on their life after they marry too. Unlike Manirathnam's movie, the romance here is a small portion of the film and the little that there is, is handled unimaginatively and in a rushed fashion. Both Rajni rescuing Sridevi from the rowdies and Sridevi falling for him are cinematic and we never connect with them as lovers. Its not only in the romance department that the director seems wishy-washy. Rajni's meetings with Girish Karnad too lack fire with the writing seeming a little tame.
As always, the director overdoes things by presenting the standard caricature of a ladies club-frequenting woman as Sridevi's mother. On the other hand, Girish Karnad's character earns respect during these portions (like the talk he has with Sridevi during breakfast). But strangely, the roles are reversed as the movie proceeds. The mother's attitude towards Rajnikanth and Sridevi seems more natural while Girish Karnad's actions become increasingly illogical and unbelievable. It is debatable if any man, however money-obsessed he may be, will act the way Girish Karnad does, towards his own grandson.
The arrival of the couple's son definitely improves the movie. The kid's questions about his mom are not overdone and he too doesn't overact and turn irritating. The climax too is executed well inspite of the foregone conclusion. The reactions of Rajni and Sridevi as they spontaneously display happiness at each other's arrival and then pull themselves back after a moment is very natural.
I have no idea why the director chose to have Vijayakumar's character since it does nothing to the story. While it is obvious that Sridevi will not fall for him, making him a man who has just been released from jail is also unnecessary. And to make things worse, everyone, including Girish Karnad, believes that he has just returned from a foreign land. As was the case with Vinu Chakravarthy in Mappillai, his dialect and behavior make it clear where he is from and just makes the people believing his story seem like fools. The character takes another beating when he tries to kill an infant.
Rajni seems distinctly uncomfortable in the predominantly romantic role and not much chemistry is evident between him and Sridevi. He has applied a whole lot of makeup that gives his face an unnatural color. Sridevi looks nice and performs well. Considering Girish Karnad's similar role as the strict father in Kaadhal Mannan, one could say that his debut here typecast him. Vijay Anand has some good tunes of which Oru Jeevan Dhaan... is the best. But he turns out to be S.A.Rajkumar's guru in using different versions of the same tune in every possible situation.
நான் அடிமை இல்லை - ஆனந்த விகடன் விமர்சனம்
ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பணக்காரி ஸ்ரீதேவியை , பிரஸ் போட்டோகிராபர் ரஜினி காப்பாற்றுமிடத்தில் கதை ( ஆ ) ரம்பம் !
முதல் சந்திப்பிலேயே காதல் மொட்டுவிட , இரண்டாவது சந்திப்பில் கல்யாணப் பேச்சு !
ஸ்ரீதேவியின் கோடீஸ்வர தந்தை கிரீஷ் கர்னாட் ( இது பாத்திரப் பெயர் அல்ல ; ஏற்பவரின் பெயர்தான் ! கன்னடத்திலிருந்து வடக்குக்கு இடம் பெயர்ந்த இந்தப் பிரபலஸ்தர் , தமிழில் அப்பாவாக அறிமுகம் ! ) அந்தஸ்தின் அடிப்படையில் ரஜினியை நிராகரித்து , கம்பி எண்ணிவிட்டு வரும் விஜய்குமாரைக் கடல் கடந்து திரும்பியவர் என்று நம்பி , மகளை அவரிடமே ஒப்படைக்கத் தீர்மானம் செய்ய . . . ' வாழ்ந்தால் ரஜினியின் மனைவியாகத்தான் வாழ்வேன் . . . இல்லாவிட்டால் தற்கொலைதான் . . . ' என்று ஸ்ரீதேவி வழக்கமான சினிமா டயலாக் பேசிவிட்டு , கட்டிய சேலையுடன் வீட்டை விட்டு வெளிநடப்பு !
மகள் கஷ்டப்பட்டாலும் அது தன்னுடைய கௌரவத்தையே பாதிக்கும் என்பதால் , மருமகனுக்கு கிரீஷ் கர்னாட் மறைமுகமாக உதவ நினைப்பதும் , அந்த உதவியை ஸ்ரீதேவி ஏற்க விரும்புவதும் , அதை நிராகரித்து ரஜினி சொந்தக் காலில் நிற்க முயற்சிப்பதும் , அதனால் கணவன் மனைவிக்குள் விரிசல் ஏற்பட்டு ' டூ ' விட்டு விலகிச் செல்வதும் - ' அட , திரைக்கதை வித்தியாசப்படும் போலிருக்கிறதே . . . ' என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது !
ஆனால் , மகளின் குடும்பச் சண்டையைச் சாதகமாகக் கொண்டு செயல்படும் கிரீஷ்கர்னாடின் நடவடிக்கைகள் சரியான தத்துப்பித்து ரகம் ! மகள் விவாகரத்து செய்யப் போவதாய் மருமகனிடமும் , இதே பழியை மருமகன் மீது போட்டு மகளிடமும் டூப் விடுவாராம் ! மகளுக்குக் குழந்தை பிறக்கும்போது அது இறந்து பிறந்ததாய்ப் பொய் சொல்லி , குழந்தையை அநாதை இல்லத்தில் விட்டுவிடுவாராம் . கடைசியில் அந்தக் குழந்தை மூலமாகவே கணவன் மனைவி ஒன்று சேரும்போது அசடு வழிவாராம் ! என்னதான் ரீல்விடுவது என்றாலும் கடுகளவாவது யதார்த்தம் வேண்டாமோ ? !
நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ரீதேவி ! முதல் அரை மணி நேரத்துக்கு இவருடைய நடை , உடை பாவனையில் நிறையவே இந்தி பாதிப்பு ! இவர் புடவைக்கு மாறியதும்தான் தமிழ்ப் படம் என்ற நினைப்பே வருகிறது !
காதலர்களாகவும் , பின்னால் தம்பதியாகவும் ரஜினி இல்லத்திலிருந்து எடுத்துவந்த தன் குழந்தையை வழக்கம் போல் குடித்துக் கொண்டே வளர்க்கிறார் !
ஆரம்பத்தில் , தங்கள் காதலின் நினைவாக ஊட்டி மரம் ஒன்றில் ஸ்ரீதேவி இதயத்தைச் செதுக்கி வைப்பது பின்னால் நன்றாகவே உதவியிருக்கிறது ! குழந்தை இறந்து விட்டதாக நம்பி ஸ்ரீதேவி சித்தப்பிரமை பிடித்துப் போவதும் , டாக்டர் அட்வைஸ் கொடுக்க சிகிச்சைக்காக அவரை இந்த நினைவுச் சின்னத்தைத் தேடி அழைத்து வருவதும் , வந்த இடத்தில் ' ஒரு ஜீவன்தான் ' பாடலைப் பாடும் குழந்தையைச் சந்திப்பதும் - படத்தின் முடிவுப் பகுதியில் அந்தச் சில நிமிடங்களை உருக்கமாகவும் உருப்படியாகவும் பயன்படுத்தியிருக்கிறார் டைரக்டர் துவாரகீஷ் !
கோபப்படும்போதும் , கிரிமினல் மூளையுடன் செயல்படும்போதும் , பின்னால் தன் செய்கைக்காக வருந்தும்போதும் - இப்படி எல்லா ' போது ' களிலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷனுடன் , ஒரே மாதிரியான ஆமை வேகத்தில் கிரீஷ்கர்னாட் நடமாடுவது ஸாரி . . . . . சரிப்படவில்லை ! போதாத குறைக்கு அவர் உருவத்துக்குச் சம்பந்தப்படாமல் ஓர் இரவல் குரல் வேறு !
ஸ்ரீதேவியின் கொஞ்சல்கள் படம் பார்க்க வரும் புதுமணத் தம்பதிகளுக்கு நல்ல டிப்ஸ் ! படுக்கையில் தூங்கி வழியும் ரஜினியைக் கன்னத்தில் கடித்து எழுப்பி , ' கிஸ் பண்ணா தூங்குவீங்க . . . கடிச்சாத்தான் எழுந்துப்பீங்க . . . ' என்று ஸ்ரீதேவி சிணுங்குவது ஸோ ஸ்வீட் !
புராணப் படங்களில் வரும் கிருஷ்ணர் மாதிரி , ரஜினியின் முகத்தில் ஏகமாய் நீலச் சாயம் ! ' நடிப்பில் பிரமாதப்படுத்தி விட்டார் ரஜினி ' என்று சொல்ல , படத்தில் அவருக்குப் பிரமாத ஸ்கோப் இல்லை ! வழக்கம் போல் காதலித்து , வழக்கம் சண்டை போல் போட்டு , அநாதை .
விகடன் விமரிசனக் குழு
விகடன் மதிப்பெண் : 41
(23.03.1986 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து . . .)
NAAN ADIMAI ILLAI - KALKI REVIEW
(23.03.1986 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|