Siva (1989)
சிவா 1989 ல் அமீர்ஜான் இயக்கியத்தில் வெளியான தமிழ் மொழி அதிரடி நாடக திரைப்படமாகும். ரஜினிகாந்த், ரகுவரன், சௌகார் ஜானகி மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1977 ல் வெளியான ''கஹூன் பேசினா'' என்ற திரைப்படத்தின் மறுஆக்கமாகும். 1977 ல் வெளியான ''புலி சிவா'' என்ற தெலுங்கு திரைப்படத்தில் N.T. ராமா ராவ்வுடன் ரஜினிகாந்தும் இணைந்து நடித்தார். ஆனால் ரகுவரன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தார். ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் இருவரும் நன்றாக நடித்த போதிலும் இத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இத்திரைப்படம் தெலுங்கில் ''புலி சிவா'' என்ற தலைப்பில் டப்பிங் செய்யப்பட்டது.
கதை
சிவா மற்றும் ஜான் இருவரும் குழந்தை பருவத்து நண்பர்களாக படம் துவங்குகிறது இருவரும் அவர்களது அப்பாக்களும் நல்ல நண்பர்கள். அவர்கள் இருவரும் வேறு மதத்தை சார்ந்தவராக இருந்தபோதிலும் நல்ல நண்பர்களாக பழகிவருவார்கள். சிவா ஒரு ஹிந்து மதத்தையும் ஜான் கிருஸ்துவ மதத்தையும் சார்ந்தவன். ஒரு வில்லன் அந்த இரு குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுகிறான். ஆனால் சிவா, ஜான் மற்றும் ஜானின் அம்மா ஆகியோர் தப்பிக்கின்றனர். சிவா மற்றும் ஜானின் அம்மா உயிரோடு இருப்பது ஜானுக்கு தெரியாது. அது போல் அவர்களுக்கும் ஜான் உயிரோடு இருப்பது தெரியாது. 20 வருடங்கள் கழித்து சிவா பார்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். ஜான் ஒரு அடியாளாக வேலை செய்து கொண்டு நல்ல செயல்களை மட்டுமே செய்வான். அதே சமயத்தில் ஒரு வில்லனால் சிவாவை கொலை செய்ய அனுப்பப்டுகிறான் ஜான். இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது இருவருக்கும் காயம் ஏற்படுகிறது அப்போது அவர்கள் இருவரும் குழந்தை பருவ நண்பர்கள் என்பது தெரிய வருகிறது. இறுதியில் இருவரும் ஒன்றிணைந்து தங்கள் குடும்பத்தை கொலை செய்த கெட்டவனுடன் சண்டையிடுகின்றனர்.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - சிவா (புலி)
ரகுவரன் - ஜான்
ஷோபனா - பார்வதி
சௌகார் ஜானகி
ராதா ரவி
வினு சக்ரவர்த்தி
ஜனகராஜ்
சார்லி
மாதுரி
டிஸ்கோ சாந்தி
டெல்லி கணேஷ்
ஞானசேகர்
தியாகு
இளவரசன்
பூர்ணம் விசுவநாதன்
விஜய குமார் (விருந்தினர் தோற்றம்)
SIVA - KALKI REVIEW
(28.05.1989 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|