Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Padikathavan (1985)

Padikkadavan is a 1985 Tamil film, starring Nadigar Thilagam Sivaji Ganesan, Superstar Rajinikanth and Ambika. It is directed by Rajasekhar. The film was produced by noted Kannada actor Ravichandran along with his father Veerasami. It is a remake of the Hindi film Khud-Daar starring Amitabh Bachchan and Sanjeev Kumar. 

The story is about a man who strives hard to make his younger brother study. The two brothers are the step-brothers of Sivaji Ganesan. The younger brother of Rajinikanth after distressing from Rajinikanth finally joins with him. All three of them finally join together after certain conviction regarding a death. The film was a huge blockbuster and had a run for more than 250 days. This film is considered as one of the biggest hits for Rajinikanth during the 1980s.

 

Plot

Rajasekhar (Sivaji Ganesan) is the loving elder stepbrother of Rajendran (Rajinikanth) and Ramu (Vijay Babu). After his marriage, his wife (Vadivukkarasi) sends his brothers out when he goes to Madras. Rajendran, the older of the two, toils and becomes a taxi driver to educate and bring up his brother. As a taxi driver, he does whats right such as stopping drug dealers. His brother, who he believes to be innocent and well educated man, strays and gets mixed up with some wrong-doers. He marries a girl Manju (Ramya Krishnan) from a rich family. The girl's uncle (Jaishankar), is a smuggler who sells drugs using his older brother's lorries. Jaishankar later kills his brother and puts the blame on Rajendran. Rajasekhar, the presiding judge, realizes that Rajendran is his long-lost brother. He then proceeds to have a heart attack but then researches all night and returns as a lawyer to save him.

 

படிக்காதவன் (1985) விமர்சனம் 1

நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினி, அம்பிகா, ஜெய்சங்கர், ஜனகராஜ், விஜய்பாபு, தேங்காய் சீனிவாசன்
கௌரவத் தோற்றம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ஒளிப்பதிவு: ரங்கா
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: கே.ராஜசேகர்
தயாரிப்பு: என்.வீராசாமி, வி.ரவிச்சந்திரன் (ஈஸ்வரி புரொடக்ஷன்ஸ்)

சிகர்கள் அல்லாத பொதுமக்களை, குறிப்பாக பெண்களை அதிகம் கவர்ந்த ரஜினி படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் படிக்காதவனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும். திரைக்கதையும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஹிட்தான்.

கதைப் பற்றி கூற புதிதாக எதுவுமில்லை அனைவரும் அறிந்ததுதான். படிக்காத அண்ணன், தன் தம்பி மீது வைத்து இருக்கும் பாசத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை.

இந்த படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருந்தது, இதுவும் படத்திற்கு ஒரு மரியாதையை கொடுத்திருந்தது, ரஜினி படம் என்றாலும் நடிகர் திலகம் அவர்களுக்கு எந்த ஒரு மரியாதை குறைவும் வந்து விடக்கூடாத அளவிற்கு அருமையாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

பொதுவாகவே ரஜினிக்கு கஷ்டப்பட்டு முன்னேறும் கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி இதில் அதற்க்கு கொஞ்சமும் குறை வைக்காமல் அசத்தியிருப்பார். வாடைகைக்கார் ஓட்டும் நபராக வரும் ரஜினி, அதன் மூலம் வரும் வருமானத்தில் தன் தம்பியை படிக்க வைப்பார், ஆனால் அவரின் தம்பியோ சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் அண்ணனின் உண்மையான அன்பை புரிந்து கொள்ளமாட்டார்.

ரஜினிக்கு ஜோடியாக அம்பிகா,இவருக்கு நடிக்க பெரிதாக எதுவும் வாய்ப்பில்லை, கர்ப்பிணி போல நடித்து சாராயம் கடத்துவார், அதை ரஜினி உண்மை என்று நம்பி விடுவார், அடுத்த நாள் பார்த்தால் அம்பிகா சாதாரணமாக இருப்பார்! என்னங்க குழந்தை பிறந்து விட்டதா! என்றால் ம்ம் ஸ்கூலுக்கு போய் விட்டது என்று ரஜினியை அதிர வைப்பார். அதை பற்றி தன் வளர்ப்பு தந்தை நாகேஷிடம் விளக்கம் கேட்பது காமெடியாக இருக்கும், தற்போது இவை லாஜிக் இல்லாத காமெடியாக தெரிந்தாலும் அப்போது அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

படிக்காதவன் படத்தில் பாடல்களை பற்றி குறிப்பிடாமல் இருக்கவே முடியாது,அந்த அளவிற்கு பாடல்கள் சூப்பர் ஹிட். அதில் வரும் "ஊரை தெரிந்துகிட்டேன்" பாடல் இன்றும் அனைவராலும் விரும்பபடுவதே அதற்க்கு சாட்சி. இன்றும் ஏதாவது யாராவது பிரச்சனை என்றால் கிண்டலுக்காவது இந்த பாடலை பாடுவார்கள். இந்த பாடலின் வெற்றியால் "சம்சாரம் அது மின்சாரம்" படத்திலும் இந்த பாடலை மாற்றி விசு அவர்கள் எடுத்து இருப்பார்.

அடுத்து "ராஜாவுக்கு ராஜாதாண்டா" பாடல், இந்த பாடலை எடுத்த விதம் அப்போது ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. பெரிய கட்டிடங்களில், கடல் மீது எல்லாம் ரஜினியின் கார் போவது போல எடுக்கப்பட்டு இருக்கும். தற்போது இதை பார்த்தால் சிரிப்பாக இருந்தாலும் அப்போது தொழில்நுட்பம் குறைந்த நாட்களில் இது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது.

"சோடி கிளி எங்கே" என்ற டூயட் பாடலின் வெற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை, இன்றும் பண்பலை வானொலிகளில் அதிகம் கேட்கலாம். நடிகர் திலகம் அவர்கள் காட்சியில் வரும் "ஒரு கூட்டு கிளியாக" பாடல் பாசத்தை அடிப்படையாக வைத்து வரும் பாடல், மனதை இளக வைக்கும் பாடல். "சொல்லி அடிப்பேனடி" என்ற பாடல் ரசிகர்களுக்கான பாடல்.

சென்டிமெண்ட் ராஜா = ரஜினி

பெண்களை தன் நடிப்பால் ரஜினி எளிதாக கவர்ந்து விடுவார், ரஜினி தன் தம்பியின் தவறை தட்டி கேட்கும் போது அவர் ஆங்கிலத்தில் பேசி தான் படித்தவன் என்பதை காட்டி பேசியதால் "yes..  yes" என்று அதற்க்கு கண்ணீர் மல்க பதில் கூறும் போதும், கோபத்தில் வீட்டிற்கு வந்து தன் ஆசையாக பராமரிக்கும் லக்ஷ்மி என்ற காரை கோபத்தில் அடித்து நொறுக்கும் போதும், பின் தன் தவறை உணர்ந்து அழும் போதும் பலரின் கண்களை குளமாக்கி விடுவார். இதை எழுதும் போது கூட எனக்கு அந்த காட்சி மனதை அழுத்துகிறது. அந்த அளவு என்னை இளக வைத்த காட்சி அது. ரஜினி தன் காரை நொறுக்கும் போது அவரது ஆத்திரத்திற்கு மற்றும் அவரது ஏமாற்றத்திற்கு மதிப்பு கொடுத்து அவர் காரை நொறுக்குவதை தடுக்காமல் கண்ணீர் மல்க பார்க்கும் நாகேஷ் அவர்களின் நடிப்பையும் இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும்.

நகைச்சுவை ராஜா = ரஜினி

ரஜினியின் நகைச்சுவை பலம் என்ன என்பதை நான் கூறினால் என்னை அடிக்க வந்து விடுவீர்கள், காமெடி நடிகர்களுக்கே சவால்விடும் வகையில் பின்னி பெடலெடுப்பார். ரஜினி தன் தம்பியை பார்க்க கல்லூரிக்கு போவதாக கூறியவுடன், நல்ல உடையுடன் செல்ல அவரது தங்கை அறிவுறுத்தியதும் அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் என்று வெள்ளை பேன்ட் சிகப்பு கோட்டில், ஷூ போட்டு நடக்க (தெரியாமல்) முடியாமல் நடந்து சென்று தன் தம்பி பற்றி விசாரித்து, பின் பதில் கூறிய பெண்ணின் தோள் மீதே கை போட்டு கொண்டே சென்று தன்னை கூட்டி செல்லுமாறு கூறுவது குறும்பாக இருக்கும்.

நாடகம் நடக்கும் இடத்தில் சேரில் உட்காரும் போது அவர் செய்யும் ரகளைக்கு சிரிகாதவர்களே இருக்க முடியாது. அதுவும் ஆங்கிலோ இந்திய பெண் அருகில் உட்கார்ந்து கொண்டு, அவர் செய்யும் ரவுசுக்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த பெண் "when the program will start (எப்பொழுது நிகழ்ச்சி துவங்கும்)" என்று கேட்டதும் அதற்க்கு ரஜினி அந்த பெண் என்ன கேட்கிறார் என்று புரியாமல் "yes yes yes" என்று கூறுவதும், தன் தம்பியை மேடையில் பார்த்து விசிலடித்து என் தம்பி ராமு என்று கத்த அதற்க்கு அந்த பெண் கடுப்பாகி "stupid" என்று திட்ட ரஜினி அதுவும் புரியாமல் “yes yes yes” என்று கூற தியேட்டர் வெடி சிரிப்பால் அதிரும். திரும்பவும் எதோ ரஜினியிடம் ஆங்கிலத்தில் அந்த பெண் பேச எத்தனிக்க..பொறுமை இழந்த ரஜினி No englsih only tamil சும்மா "கச்சா முச்சான்னுட்டு" (ரஜினி ஸ்டைல் ல் படிக்கவும்) என்று டென்ஷன் ஆவது அதகளம்.. இதை ஆங்கிலம் சரியாக தெரியாதவர்கள் தங்களுக்கு ஆதரவான காட்சியாக நினைத்து ரொம்ப ரசித்து சிரிப்பார்கள், தற்போதும் (அப்போது ஹி ஹி நான் கூட). தற்போது கூட நண்பர்களுக்குள் பேசும் போதும் ஏதாவது தெரியவில்லை என்றால் "yes yes yes" என்று கூறுவது சகஜம். யாராவது ஆங்கிலம் பேச தெரியவில்லை என்றால் தலைவர் பாணியை தான் பின்பற்றியதாக கூறுவார்கள், எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது.

பணிவு = ரஜினி

ரஜினியின் பணிவு படத்தில் இயல்பாக வெளிப்படும் அது சம்பந்தப்பட்ட காட்சிகளில் [அது அவருடனே இருப்பதால்] நடிகர் திலகம் அவர்கள் ரஜினியை வழியில் பார்த்து தன் காரில் செல்ல அழைக்க அதை அன்புடன் மறுத்து, அவரை செல்ல கூறி காரின் கதவை திறந்து விடுவதிலாகட்டும், தன் தம்பியின் திருமணத்திற்கு வரும் அவரை வரவேற்கும் முறையாகட்டும், அவர் அருகில் நிற்க கூச்சப்பட்டு கை கட்டி மரியாதை கருதி தள்ளி நிற்பதில் ஆகட்டும், தலைவா! இந்த விசயத்தில் உங்களை அடித்து கொள்ள இன்னொருவர் கிடையாது. அதில் அவரின் முகத்தை கவனித்தவர்களுக்கு தெரியும் அவரின் முகம் எப்படி பணிவை காட்டுகிறது என்று.

இது நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்திற்கு கொடுத்த மரியாதையா அல்லது நடிப்பின் ஜாம்பாவானாக இருக்கும் அந்த அற்புத கலைஞனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையா என்று எனக்கு இன்று வரை குழப்பம் (இதே பணிவை படையப்பாவிலும் காணலாம்)

11-11-1985 தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம், 210 நாட்கள் ஓடியது.

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வருவது தான் தலைவர் ஸ்டைல்..அதற்க்கு அவருடைய படத்தின் விமர்சனமும் விதி விலக்கல்ல :-)

பின்குறிப்பு: ரஜினி ரசிகனாக எழுதி இருந்தாலும் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை என்று நம்புகிறேன்.

அன்புடன்
கிரி



படிக்காதவன் (1985) விமர்சனம் 2

திரைப்படம் என்பது காண்பவரை ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்க வேண்டும் அப்போது தான் அந்த முழு வெற்றி அடைகிறது.

 

படங்களால் அடையாளம் பெறும் கலைஞர்களும் உண்டு, கலைஞர்களால் அடையாளம் பெறும் படங்களும் உண்டு. ரஜினி படங்களுக்கு தன்னால் இயன்ற அடையாளங்களை தருபவர்.

சாமானியர்களின் வேடங்களில் தோன்றியே சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்தவர் ரஜினி.

படிக்காதவன் ஒரு காரோட்டியின் கதை. படத்தில் ரஜினிக்கு டாக்ஸி ஓட்டுநர் வேடம். அவரது உலகமே அவரது குடும்பம் மற்றும் டாக்ஸி மட்டுமே. அதுவும் அந்த டாக்ஸி கிட்டத்தட்ட அவர் காதலி மாதிரி. அதை லக்ஷ்மி என அன்பொழுக அழைக்கும் அந்த அழகு இருக்கிறேதே, அதைக் கண்டு தமிழகத்தின் பல டாக்ஸி ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெயரிட்டு அழைக்கலாயினர் என்பது வியக்கத்தக்க வரலாறு.

படம் வெளியான ஆண்டு – 1985

தயாரிப்பு – N.வீராசாமி, V. ரவிசந்திரன்

கதை – காதர் கான்

இயக்கம் – ராஜசேகர்

இசை – இளையராஜா

நடனம் – புலியூர் சரோஜா

சண்டை – ஜூடோ ரத்னம்

எடிட்டிங் – விட்டல் – மோகன்

ஒளிப்பதிவு – வ.ரங்கா, ஸ்ரீகாந்த்

கதைச் சுருக்கம்

மூன்று சகோதரர்களின் அந்நியோன்னத்தோடு படம் துவங்குகிறது. இரு தாரங்களின் மூத்த தாரத்தின் மகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அடுத்த தார பிள்ளைகளாக ரஜினிகாந்த் மற்றும் விஜயபாபு.

அண்ணன் சிவாஜிக்கு திருமணம் நடக்கிறது, புது மனைவி சூழ்ச்சியால் தம்பிகள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிரிந்த தம்பிகள் வளர்ந்து நிற்கின்றனர்.

ஆதரவற்ற நிலையில் இருக்கும் சகோதரர்களுக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று நிழல் கொடுக்கிறது. அந்த முஸ்லீம் குடும்ப பெரியவர் வேடத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார். அந்த குடும்பத்தை ராஜா (ரஜினி) தன் குடும்பமாக எண்ணி பாசம் காட்டி மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்த குடும்பமும் ராஜா மீது அன்பை பொழிகிறார்கள்.

ராஜா காரோட்டி தன் தம்பியை கஷ்டங்களுக்கு இடையில் படிக்க வைக்கிறான். தம்பி ராமு கல்லூரியில் ஆடம்பர வாழ்க்கையை விரும்பி வாழ்ந்து வருகிறான்.

தம்பியின் ஆடம்பர மோகம் அறியாத அப்பாவி அண்ணன் ராஜா தம்பிக்காக தன்னையே மெழுகாக உருக்கி வாழ்ந்து வருகிறான்.

சிறு வயதில் பிரிந்த தன் அண்ணன் ராஜசேகரை ராஜா சந்திக்கிறான். அண்ணனோ பிரபல வக்கீல், விரைவில் நீதிபதி என்ற உயர் ஸ்தானத்திற்கு போக இருக்கிறார். அண்ணனை சந்தித்து தன்னை வெளிப்படுத்த நினைக்கும் ராஜாவை அவன் அண்ணி கடுமையாக பேசி கேவலப்படுத்தி திருப்பி அனுப்புகிறாள்.

தன்னை படிக்க வைத்து பெரிய மனிதனாக நினைத்த அண்ணன் முன் ஒரு சாதரணமான டாக்ஸி டிரைவராக போய் நிற்க தயங்கி தன் அடையாளத்தை மறைத்து விடுகிறான்.

தன் தம்பி படித்து உயர்ந்து தன் அவமானங்களை துடைப்பான் என்று ராஜா நம்புகிறான். அவன் நம்பிக்கை பொய்யாய் போகிறது.

ராஜா உழைப்பை நம்பி வாழ்கிறான், அவன் தம்பியோ வசதிக்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியில் இறங்குகிறான்.

தம்பி ஆசைப்பட்ட பணக்கார காதலியை அவன் கைப்பிடிக்க தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்கிறான் ராஜா.

திருமணம் முடிந்து வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கு செல்லும் ராமு தன் மாமனாரின் சொத்துக்கு ஆசைப்பட்டு தவறான நபர்களோடு கரம் கோர்க்கிறான்.

ஒரு கட்டத்தில் அண்ணனின் அன்பை உணராத ராமு ராஜாவை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துகிறான். அண்ணனை விட்டு விலகியும் செல்கிறான்.

தம்பியை பிரிந்த ராஜா வாடுகிறான், தவிக்கிறான். ராஜா தொடர் அவமானங்கள் மூலம் வாழ்க்கையின் பாடம் உணர்கிறான்.

இந்த நிலையில் ராஜா வஞ்சகர்களின் சூழ்ச்சியால் ஒரு கொலை பழியில் மாட்டுகிறான்.

அந்த கொலைப்பழியில் இருந்து ராஜா தப்பினானா? தம்பியைத் தீயவர்களின் கூடாரத்தில் இருந்து ராஜா மீட்கிறானா, தன் அண்ணன் ராஜசேகரோடு மீண்டும் இணைகிறானா என்பது சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்.

படத்தின் நாயகி அம்பிகா, மேரி என்ற மிகவும் ருசிகரமான ஒரு பாத்திரம் அவருக்கு.

படத்தில் சோடிக்கிளி எங்கே என்று பாட்டு உண்டு.. அதில் ரஜினி அவரைப் பார்த்து ஒரு வரி பாடுவார்.. அது அம்பிகாவின் பாத்திரத்தை அருமையாக விளக்கி விடும்.

அந்த வரி இது தான்.. ” ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன்.. கன்னிப்பொண்ணை கை பிடிச்சேன் “

ராஜா, மேரியை முதலில் சந்திக்கும் போது அவள் கர்ப்பிணி தோற்றத்தில் இருக்கிறாள். பின் அவளது தோற்றத்துக்கான காரணத்தை இயக்குநர் சுவாரஸ்யமாக முடிச்சு அவிழ்க்கிறார்.

ரஜினி அம்பிகாவின் ஆரம்ப காட்சிகள் மொத்தமும் நகைச்சுவை சாரல். அம்பிகா இறுக்கமாகவும், ரஜினி அப்பாவியாகவும் வரும் இடங்கள் அருமை. ரசனைக்குரியவை. ரஜினியின் முக பாவங்கள் குழந்தை முதல் குமரிகள் தாண்டி பெரியவர்கள் என அனைத்து தரப்பையும் கவர்கிறது.

பின் அது அதிரடி காட்சிகளுக்கு நீளுகிறது. அம்பிகாவுக்கு லேசான வில்லத்தனம் செய்யும் வாய்ப்பும் அதை அடித்து தூள் செய்து தன் ஆக்ரோஷ முகம் காட்டும் வாய்ப்பு ரஜினிக்கும் அமைகிறது. சண்டை காட்சிகளில் வேகம் மட்டும் இன்றி ரஜினி பிராண்ட் கலகலப்பும் சேர்ந்து பார்வையாளர்களுக்கு ஒரு புது குதூகல அனுபவம் கிடைக்கிறது.

அதே நேரம், அம்பிகாவுக்கு வாழ்க்கை பாடம் நடத்தி ரஜினி தன் சூப்பர் ஸ்டார் முத்திரையை திரையிலும், படம் பார்க்கும் ஜனங்களின் மனத்திலும் அழுத்தமாக பதிய செய்கிறார்.

நட்சத்திரங்கள்

அம்பிகாவின் பாத்திரம் ஆணவ தொனியில் இருந்து இறங்கி ராஜாவின் மீது காதல் கொண்டு, அவன் மீது கரிசனம் கொண்டு அவனுக்கு ஆதரவாக தோள் கொடுக்கும் தோழியாக உருவெடுக்கிறது. அம்பிகா அந்த மொத்த உணர்வுகளையும் திரையில் மிகவும் அழகாக கொண்டு வந்து இருக்கிறார். அவரது திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு இதில் ஒரு வித்தியாசமான வில்லன் வேடம். ஆர்ப்பாட்டம் இன்றி நாசூக்காய் நயவஞ்சகம் புரியும் நடிப்பில் ஜொலிக்கிறார்.

நாகேஷ் ரஜினியோடு இணைந்து நடித்த வெகு சில படங்களில் படிக்காதவன் மிக முக்கியமான படம். நாகேஷ் பொதுவாக ரஜினிக்கு கருத்து பகிரும் ஆத்மார்த்தமான வேடங்களையே ஏற்று வந்து இருக்கிறார்.

குறிப்பாக புள்ளத்தாச்சி பேச்சு பற்றி வரும் ரஜினி நாகேஷ் காட்சி இருக்கே வெடிச்சிரிப்புக்கு உத்திரவாதம். ரஜினியின் முகபாவமும் நாகேஷின் யதார்த்த பேச்சும் அந்த காட்சிக்கு பெரும் பலம்.

தேங்காய் சீனிவாசன், இவர் ஒரு எம்ஜிஆர் ரசிகர், ஆனால் ரஜினியின் பெரும்பான்மையான 80கள் படங்களில் இவருக்கு என்று நிச்சயம் ஒரு வாய்ப்பு இருக்கும். இந்த படத்திலும் இருக்கிறது. கொஞ்சம் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை வேடம். ராமநாதன் என்று பெயர். சிவாஜிக்கும் இவருக்குமான வழக்காடு மன்ற காட்சி உரையாடல்கள் சிரிப்பு மற்றும் சிறப்பு.

தமிழ் திரையில் காலத்தை தாண்டி நிற்கும் நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் நிறைய உண்டு. அந்த வரிசையில் படிக்காதவனில் ஜனகராஜ் பேசிய “என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா” செம்ம பிரபலம். தசம ஆண்டுகள் தாண்டியும் இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஜனகராஜ் என்றதும் நினைவில் கொள்ளும் ஒரு வசனமாக மாறிவிட்டது இந்த வசனம். வசனம் என்னவோ ஒரே வரி தான், ஆனால் அதை திரையில் ஜனகராஜ் சொன்ன விதம் வசனத்திற்கு ஒரு சாகாவரம் கொடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கபாலி என்ற K.பாலி வேடத்தில் கொஞ்சமே வந்தாலும் நிறைவான பங்களிப்பு.

ரம்யா கிருஷ்ணன், சிறிய வேடம், வந்து போகிறார். பின்னாளின் நீலாம்பரி, இந்த படத்தில் அவ்வளவு அமைதி, அழகு.

ரம்யா கிருஷ்ணன் தந்தை வேடத்தில் பூர்ணம் விஸ்வநாதன். வடிவுக்கரசி, சிவாஜியின் மனைவி வேடம், சில காட்சிகளில் வருகிறார்.கதைக்கு திருப்பம் தருகிறார்.

ரஜினியின் தங்கை வேடத்தில் பேபி இந்திரா. அந்த காலத்து குழந்தை நட்சித்திரம். 80களின் புகழ் பெற்ற தங்கை நடிகை. பாயும் புலியிலும் ரஜினிக்கு தங்கையாக வருவார். இதில் கல்லூரி விழாவுக்கு செல்ல ரஜினிக்கு இவர் கொடுக்கும் காஸ்டியூம் ஐடியா அட்டகாசம்.

முக்கிய நடிகர்கள் எல்லாரையும் சொல்லியாச்சு, இப்போ சொல்ல வேண்டியது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, கொஞ்சம் நீண்ட கவுரவ வேடம் அவருக்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெகு எளிமையாக எடுத்து செய்திருக்கிறார்.

பாசமிகு அண்ணனாகவும், தொழிலில் நேர்மை குறையாத மனிதனாகவும், வழக்காடு மன்றத்தில் திறமையாக வாதிடும் வக்கீலாகவும், பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளிகளில் அவர் நடிப்பு சற்றே மிகையானதாக விமர்சனம் எழுவதுண்டு. படத்தில் வரும் இறுதி காட்சி ரஜினிக்கு ரொம்பவும் ஸ்பெஷல், நெற்றியில் ரஜினிக்கு சிவாஜி முத்தமிடும் காட்சி, இது ரஜினிக்கு பிடித்தமான படங்களில் ஒன்று.

இசை

படத்தில் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி சிட்டி என எல்லா இடங்களிலும் மாஸ் ஹிட். இளையராஜாவின் ஜனரஞ்சகமான இசை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

ஒருகூட்டு கிளியாக – அன்பின் தத்துவ பாட்டு

ராஜாவுக்கு ராஜா நான் தான் – சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொள்கை பாட்டு.

சோடி கிளி எங்கே – காதல் களிக்கும் பாட்டு.

ஊரை தெரிஞ்சுகிட்டேன் – வாழ்க்கை சொல்லும் அனுபவ பாட்டு

சொல்லி அடிப்பேனடி – குத்தாட்டம் போடும் ஒரு உற்சாக பாட்டு

படிக்காதவன் என்று சொன்னால், இளையராஜா ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த பின்னணி இசை நினைவுக்கு வரும். இந்தக் காலத்திலும் Whatsapp ஸ்டேட்டஸாக இந்த பின்னணி இசை பலருக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சிக்கு ஏற்ற இசை படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் அழகாக்குகின்றது.

ரஜினி படங்கள் எப்போதும் சண்டை பிரியர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுக்க தவறியதே இல்லை. படிக்காதவனும் அதில் சளைக்கவில்லை.

இந்தப் படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் நகைச்சுவையும் இரண்டற கலந்து இருப்பது பார்வையாளர்களைப் பரவச படுத்துகிறது.

கோபக்கார இளைஞன் வேடத்தில் 80களைத் துவக்கிய ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை அடக்கி ஆண்டு கலகலப்பான மனிதனாக திரையில் வலம் வர துவங்கினார்.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோருக்குமான நாயகனாக தன்னை மாற்றி கொண்டார் ரஜினி.

ரஜினி படமா, ஒரு கதை இருக்கும், நல்ல பாட்டு இருக்கும், நல்ல பாட்டு இருக்கும், ஆட்டம் கொண்டாட்டம் நிச்சயம் இருக்கும், கருத்து இருக்கும், நகைச்சுவை நிறைந்து இருக்கும் என்ற தொடர் நம்பிகையை விதைத்த படங்களில் “படிக்காதவனுக்கு” முக்கிய இடம் உண்டு.

அப்பாவி அண்ணன் ஆக உருகுவதில் ஆகட்டும், குறிப்பாக தம்பி கல்லூரிக்கு சென்று திரும்பும் அந்த பேருந்து நிலையக் காட்சி, நடந்து கொண்டே பணத்தை எடுத்து கொடுத்தவாறு தன் அன்பையும் கரிசனையும் பொழிந்த படி படபடப்பாக பேருந்து ஏறும் போது மொத்த இதயங்களையும் அள்ளி விடுகிறார்.

தம்பியின் நாடகம் பார்க்க செல்லும் காட்சியில் ரஜினியின் பூட்ஸ் போட்ட நடையும், ஆங்கில பேச்சும் அதகளம்.

நடுத்தர வாழ்க்கை வாழும் மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழும் தருணம் அது. ரஜினி ஒரு சாமானியன் சட்டென வேறு உலகத்திற்குள் தள்ளப்படும் போது படும் நம் கண் முன் கொண்டு வந்து விடுவார்.

மனிதன் மனிதன் மீது நேசம் கொள்ளுவது இயல்பு. ஆனால் ஒரு பொருள் மீது கொள்ளும் ஆழமான நேசம் பற்றி படங்கள் பெரிதாக தமிழில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த பதிவின் துவக்கத்தில் நான் குறிப்பிட்டது போல் படிக்காதவன் படம் பேரை சொல்லும் போது ரஜினி நமக்கு எந்த அளவுக்கு நினைவுக்கு வருமோ அதே அளவு ரஜினி ஓட்டிய அந்த டாக்ஸி லக்ஷ்மியும் நம் நினைவுகளை நிறைக்கும். அந்த டாக்ஸி படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாகவே பயணிக்கும்.

ரஜினிக்கும் டாக்ஸிக்கும் நடக்கும் சம்பாஷணைகள் பெரிதும் ரசிக்கும் படி இருக்கும்.

லக்ஷ்மி start..என்ற வசனத்தை எண்பதுகளில் சினிமா பார்த்தவர்கள் பல தரம் தங்கள் வாகனங்களைப் பார்த்து சொல்லி இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

படிக்காதவனில் ரஜினிக்கு கிட்டத்தட்ட படம் முழுக்க காக்கி சட்டை தான் உடை.பாடல்களில் மட்டும் கொஞ்சம் மாற்றம். அதிலும் இரு பாடல்கள் நெடுகிலும் காக்கி உடையே. அது ஒரு ஆச்சரியமான விஷயம். பெரிதான ஓப்பனை இன்றி இயல்பான தோற்றத்தில் வலம் வருகிறார். கதை மீதான ஆழமான நம்பிக்கை தன் நடிப்பாற்றல் மீதான பிடிப்பு, இவைகளே இந்த படத்தை பொறுத்த வரை ரஜினியின் மூலதனம்.

வெகு யதார்த்தமான நடிப்பு, துவக்கம் முதல் முடிவு வரை கதைக்கு தேவையான விஷயங்களைத் தன் நடிப்பில் பொருத்தி சிறப்பாக கொடுத்திருப்பார் ரஜினி.

படம் நெடுக நேரும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் ஒரு சேர உள்ளுக்குள் புதைத்து விட்டு வெள்ளந்தி சிரிப்பும் புன்னகையுமாக சுற்றி வரும் ரஜினி, உடைந்து சிதறும் இடம் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் பாடலில் தான், அந்த தருணத்தில் நம் மனங்களை கனமாக்கி கண்களை குளமாக்குகிறார் ரஜினி என்னும் மாபெரும் நடிகன்.

அந்த பாட்டை பொறுத்த வரை, ராஜாவின் இசையா? வைரமுத்துவின் வரிகளா? சூப்பர் ஸ்டாரின் நடிப்பா? போட்டியில் வெல்வது ரஜினியே.. ரஜினியின் நடிப்பே.

ராஜசேகர் ரஜினிக்கான ஒரு இயக்குநர். இந்த படத்திலும் அதை நிரூபித்து இருப்பார்

படிக்காதவன் ரஜினி சினிமாக்களை பொறுத்த வரை ஒரு வெகுஜன சினிமா ரசிகனுக்கு பெரும் விருந்து.

அழுத்தமான குடும்ப கதை, உறவுகளின் உன்னதத்தை எடுத்துரைக்கும் திரைக்கதை, ரஜினியின் பிரத்யேக பொழுது போக்கு அம்சங்கள், நல்ல இசை, ரசிக்க வைத்த சண்டை காட்சிகள் என படிக்காதவன் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் கோபுரம் ஏற்றி வைத்த இன்னொரு படிக்கட்டு.

இசைஞானி இளையராஜா இசையில் படிக்காதவன் படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

- தேவ்

 

 

படிக்காதவன் - விகடன் விமர்சனம்

வடக்கேயிருந்து இறக்குமதியாகி யிருக்கும் கதை. இதில், பாசம் மிக்க மூத்த அண்ணனாக கௌரவ வேடத்தில் சிவாஜி. இவருக்கு இரண்டு சின்னத் தம்பிகள். அவர்களைக் கண்டாலே மிஸஸ் வடிவுக் கரசி சிவாஜி கணேசனுக்கு ஏகமாய் வெறுப்பு! வக்கீல் பரீட்சை எழுதப் பட்டணம் போன சிவாஜி திரும்பி வந்தபோது தம்பிகளைக் காணோம்! அண்ணியுடன் ஏற்பட்ட லடாய் காரணமாக, சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள்.

திசை மாறிப்போன சிறுவர்களுக்கு முஸ்லிம் பெரியவர் நாகேஷ் அடைக்கலம் தருகிறார். இருவரையும் தன் குழந்தைகளாக ஏற்று, குடும்பத்துடன் இணைத்துக்கொள்கிறார்.

காலச்சக்கரம் படுவேகமாகச் சுழல, சிறுவர்கள் வளர்ந்து வாலிபர்களாகி... அதில் ஒருவர் டாக்ஸி டிரைவர் ரஜினி! நியாயத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்படும் முரட்டு இளைஞர். சின்னத்தம்பி படித்துப்பட்டதாரி ஆகவேண்டும் என்ற லட்சிய வெறிகொண்டவர். ஆனால், சி.த. காதல், கல்யாணம் என்று வேறு மார்க்கங்களில் பிஸி!

இனி, சோதனை ஆரம்பம்...

சகவாச தோஷம், தம்பியை ஒரு கள்ளக்கடத்தல் கும்பலோடு சேர்த்துவிட, ஒரு கட்டத்தில் அவர் சார்பாகப் போன ரஜினி மீது கொலைப் பழி! விவகாரம் கோர்ட்டுக்குப் போக, அங்கு நீதிபதியாக சிவாஜி! பரஸ்பரம் அடையாளம் புரிந்துபோக, நீதிபதி சிவாஜி, டிஃபென்ஸ் லாயராக மாறி, தம்பிகளைக் காப்பாற்றுமிடத்தில் 'வணக்கம்'!

மாமூல் மசாலாக் கதைதான் என்றாலும், அமைதியாக சிவாஜியும், ஆக்ரோஷமாக ரஜினியும் கைகொடுக்க, தரமான பொழுதுபோக்குப் படத் தைக் கொடுத்த பெருமை டைரக்டர் ராஜ சேகருக்கு!

படத்தில் முழுக்க முழுக்க ரஜினியின் ஆதிக்கம் தான்! தம்பி பங்கேற்கும் ஒரு நாடகத்துக்குப் பார்வையாளராகப் போகும் ரஜினி, அப்பாவித் தனத்தோடு அரங்கத்தில் செய்யும் சேட்டைகள் அட்டகாசம்!

தான் ஓட்டும் டாக்ஸிக்கு 'லட்சுமி' என்று பெயரிட்டு, செல்லமாக அதோடு சண்டை போடுமிடம்... தம்பியைப் 'பிள்ளை' கேட்டு வரும் பூர்ணம், அவர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கவேண்டுமென்று கண்டிஷன் போட, அங்கு உடைந்து போகுமிடம்... இதனால் தனது எதிர் காலமே பாழாகிவிட்டது போல் தம்பி கூச்சல் போட, உடனே பூர்ணம் வீட்டுக்கு விரைந்தோடி மன்னிப்புக் கேட்குமிடம்...

இப்படிப் பல இடங்களை 'பட்டா' எழுதி வாங்கிக்கொண்டு, படத்தில் 'தனிக்குடித்தனம்' நடத்துகிறார் ரஜினி.

படத்துக்குக் கதாநாயகி வேண்டும் என்ற சம்பிரதாயத்துக்காக அம்பிகா. படு 'வீக்'கான வில்லன் வேடம் ஜெய்சங்கருக்கு!

ஜேசுதாஸ் இந்தப் படத் திலும் தொடர்ந்து கொடி கட்டிப் பறக்கிறார். 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்... உலகம் புரிஞ்சுக்கிட்டேன்...' பாடல், அவர் குரலில் ஓஹோ!

படத்தில் கடைசி வசனம்... ரஜினியைப் பார்த்து சிவாஜி பேசுகிறார்... ''படிக்காதவனா இருந்தாலும் நீ ஒரு மேதை!''

பழைய 'படிக்காத மேதை' (சிவாஜி) தன்னு டைய வாரிசாகப் 'புதிய படிக்காத மேதை' ரஜினி யைப் உருவாக்குவது போல் அமைந்துள்ள இந்த வசனம் யாரைத் திருப்திப்படுத்த? ரஜினியையா அல்லது அவருடைய ரசிகர்களையா? எதுவாக இருந்தாலும் அந்த வசனம் படு செயற்கை!

- விகடன் விமர்சனக் குழு



PADIKATHAVAN - KALKI REVIEW

(08.12.1985 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . .  .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information