Manithan (1987)
மனிதன் 1987ல் S.P. முத்துராமன் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி திரைப்படமாகும். ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், செந்தில், டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் விமர்சகளிடமிருந்து மிதமான விமர்சங்களையே பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிக பெரிய வெற்றியை தேடித் தந்தது. ''பிரபஞ்சனம்'' என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் ''நாயகன்'' திரைப்படத்துடன் போட்டியை எதிர்கொண்டது. இத்திரைப்படம் பாலா அபிராமி திரையரங்கில் 175 நாட்கள் ஓடியது.
கதை
ஒரு அமாவாசை நாள் அன்று ராஜா பிறப்பார். அதனால் அவரை ஒரு திருடன் என்று ராஜாவின் ஆசிரியர் அழைப்பார். இதனால் கோபம் கொண்ட ராஜா தனது ஆசிரியரை ஒரு எடைக்கல்லை எடுத்து அடித்துவிடுவார் . அதனால் ராஜா சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவார். அங்கு வளரும் ராஜாவை சுற்றியே கதை செல்கின்றது. ராஜா ஒரு மூடநம்பிக்கை கொண்ட அப்பாவிற்கு மகனாக பிறப்பார். அமாவாசை அன்று பிறப்பவர் ஒரு திருடனாக மாறுவார் என்பது ராஜாஅப்பாவின் நம்பிக்கை. சிறையிலிருந்து விடுதலையாகும் ராஜா மக்கள் நல அமைப்பில் சேர்ந்து ஏழை மக்களுக்கு சரியான நேரத்தில் உதவுகிறார். அவரது நல்ல செயல்களால் அவர் எதிரிகளை சம்பாதிக்கிறார். அவரது எதிரிகளை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் மற்றும் அவர் மீதான பொய்யான கூற்றுகளை எப்படி சமாளித்து அவரை சுற்றியுள்ள மூடநம்பிக்கைகள் பொய் என்பதை நிரூபிக்கிறார் என்பது தான் மீதிக்கதை.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - ராஜா
ரூபினி - ரூபா
ரகுவரன் - குமாரவேலு
ஸ்ரீவித்யா - லட்சுமி, ராஜாவின் சகோதரி
ஜெய் கணேஷ் - ஸ்ரீதர், லக்ஷ்மியின் கணவர்
மாதுரி - இந்திரா
வினு சக்கரவர்த்தி - ரத்னவேலு, ரூபாவின் அப்பா
சோ ராமசாமி - பொன்னம்பலம், ரகுவரனுடன் வேலை செய்பவர்
செந்தில் - அறிவு
G. சீனிவாசன் - சின்னய்யா, இந்திராவின் தாத்தா
டெல்லி கணேஷ் - மாரிமுத்து, ராஜாவின் அப்பா
வெளியீடு
டிசம்பர் 12 அன்று 2012 ல் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு முரட்டுக் காளை, போக்கிரி ராஜா, பாயும் புலி போன்ற ரஜினியின் பிர படங்களுடன் இத்திரைப்படமும் ஆல்பர்ட் திரையரங்கில் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம் ''நாயகன்'' திரைப்படத்துடன் போட்டியை எதிர்கொண்ட போதிலும் 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழாவைக் கண்டது. அது மட்டுமல்ல, நாயகன் திரைப்பட வசூலை மனிதன் திரைப்படம் தாண்டியது.
மரபுரிமை
இத்திரைப்படதின் தலைப்பு I. அஹ்மத் இயக்கிய மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த 2016 ஆம் ஆண்டு திரைப்படத்திற்கு உத்வேகம் அளித்தது.
MANITHAN - KALKI REVIEW
(06.12.1987 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|