Garjanai (1981)
கர்ஜனை 1981 ல் C.V. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி திரைப்படமாகும். ரஜினிகாந்த் மற்றும் மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் முதன் முத்தலில் மலையாளத்தில் ஜெயன் நடிப்பில் தயாரிக்கப்பட்டது. ஆனால் ''கோலிலக்கம்'' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவர் மரணமடைந்தார். அதன் பிறகு இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் மீண்டும் படமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ரஜினியின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்த காரணத்தால் மலையாளத்திலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. ''ஹம் நஹி ஜீ கங்கே'' என்ற தலைப்பில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டது.
கதை
Dr. விஜய் ஒரு நேர்மையான மருத்துவர். மித்ரா மற்றும் பரசுராம் தலைமையிலான கொடூரமான கும்பல் பொதுவான உணவு பொருட்களில் ஆபத்தான மற்றும் மரணத்தை தரக்கூடிய விஷ பொருள்களாக மாற்றி அதை கொண்டு மக்களிடம் சேர்த்து பின்னர் மருத்துவர்களை வழங்குவதன் மூலம் லாபத்தை பார்ப்பவர்கள் அவர்கள். கீதா விஜயின் காதலி. ரேக்கா அவரது சகோதரி.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - Dr. விஜய்
மாதவி - கீதா
ஜெய் சங்கர் - பரசுராம்
M.N. நம்பியார் - Dr. மித்ரா
மேஜர் சுந்தர் ராஜன் - D.C.P
கீதா - ரேக்கா
தேங்காய் ஸ்ரீனிவாசன் - சிவலிங்கம்
V.K. ராமசாமி - சுந்தரம்
பூர்ணம் விஸ்வநாதன் - பேராசிரியர் ஜெயதேவ்
சுகுமாரி - விஜய் மற்றும் கீதாவின் அம்மா
பேபி அஞ்சு - ஆஷா
ஜெயா மாலினி - சிறப்பு தோற்றம்
மோகன் பாபு - சிறப்பு தோற்றம்
தயாரிப்பு
''கர்ஜன'' என்னும் மலையாளப் படத்தின் தமிழ் பதிப்பே ''கார்ஜனை'' ஆகும். மேலும் கன்னடத்தில் ''கர்ஜானே'' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. மூன்று பாதிப்புகளும் ஒரே நாளில் படமாக்கப்பட்டது.
GARJANAI - KALKI REVIEW
(30.08.1981 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|