Ranga (1982)
A long time ago, Billa and Ranga were a pair (in) famous criminals in TamilNadu. With Rajinikanth having tasted success as Billa (just the name though. The movie was a remake of the Amitabh Bachan starrer Don and not related to the criminal), Ranga was a natural choice as the name for another movie. But Ranga failed to emulate the success of the earlier movie. And with good reason. Though is starts with an interesting premise, it turns into a battle of wits, that is not particularly interesting, between Rajni and 'Karate' Mani.
Ranganathan (Rajinikanth) is a man who is dejected about not finding a job. He runs into Raju ('Karate' Mani), a career thief. While Ranga advises Raju to give up his life of crime, Raju talks to Ranga about giving up his ideals and joining him. Both their advices work as Raju reforms while Ranga embarks upon a new career as a thief. Their lives intersect again when Ranga is hired to kidnap the son of a rich man (ARS), who Raju swears to protect. What Ranga doesn't know is that the kid's mother( K.R.Vijaya) is none other than his sister, from whom he had been separated as a kid.
Ranga starts off with an interesting premise. The idea of Rajnikanth and Mani accepting each others' advice and turning their lives upside down, though in directly opposite ways, is intriguing. But the opportunities offered by this exchange of ideals are not exploited. Instead, the movie turns into a childish game of wits between the two. The behavior of both Rajni and Mani after they meet in the kid's house doesn't make a lot of sense. Rajni moves into the house to turn the affections of the family members away from Mani while Mani keeps mum about Rajni's real intentions, even when he knows the kid is in danger. Neither decision is realistic and serves to take all semblance of seriousness away from the movie.
Of course we realise in a little while, the logic behind Rajni's decision. It turns the movie into a comedy by introducing a variety of situations where Rajini gains the confidence of the family at the expense of Mani. This segment drags on for quite some time though only a few of the situations (like Mani being caught with drinks) are clever. With Rajni being K.R.Vijaya's longlost brother, there is no dearth of sentiments either once the truth is revealed. While the reactions of Rajnikanth and K.R.Vijaya to this revelation are natural, ARS' behavior is difficult to digest.
Radhika is a completely superfluous character who is on hand purely to take care of the romantic interest and the need to insert duets. She is a club owner and when she attempts to dupe Rajni by posing as her homely, traditional sister, it dupes us into thinking that this romantic track too might hold some interest. But the issues are cleared a little too soon, in a completely uninteresting manner and she moves out of sight, reappearing only to dream up a duet.
Rajnikanth shows signs of his comic talent during his taunting of Mani after one-upping him. But Mani is rather rigid and displays no voice modulation either. Shankar Ganesh come up with some dappanguthu tunes like Purushandhaan... and Pattukottai Ammalu... for the duets. But Toothpaste Irukku... is quite catchy(in a childish kind of way!) and was quite popular in those days.
ரங்கா திரைப்படம்
ரங்கா 1982 ல் வெளியான தமிழ் அதிரடி திரைப்படமாகும். ரஜினிகாந்த், ராதிகா மற்றும் K.R. விஐயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை R. தியாகராஜன் இயக்கியுள்ளார். இது ரஜினிகாந்தின் 75 வது திரைப்படமாகும். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது. மேலும் வசூலில் பெரும் வெற்றியை கண்டது. மேலும் இத்திரைப்படம் ஒரு வழிபாட்டு படமாக மாறியது.
கதை
ரங்கா என்கின்ற ரங்கநாதன் சிறுவயதில் தனது சகோதரியான லக்ஷ்மியை இழந்துவிடுவார். பின்னர் அவர் படித்த பட்டபடிப்புக்கு ஏற்ற வேலையை தேடி நகரத்திற்கு செல்வார். அங்கு திருடனாக இருக்கும் ராஜூவை சந்திக்கின்றார். ராஜூவை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நல்ல மனிதனாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார். அதே சமயத்தில் ராஜுவும் தனது திருட்டு தொழிலுக்கு வரும் படி ரங்காவை அழைக்கிறார். இருவரும் தனித்தனி வழிகளில் செல்கின்றனர். ஒருவருக்கொருவர் கூறிய ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு மறுகிறாரகள். ராஜு தனது திருட்டு தொழிலை விட்டுவிட்டு திருந்துகிறான். அதே சமயத்தில் ரங்கா திருட்டு தொழிலுக்கு செல்கிறான். லட்சுமி இப்பொது ஒரு செல்வந்தரை திருமணம் செய்துகொண்டு சுரேஷ் என்ற ஒரு மகனுடன் வாழந்து வருவாள். உள்ளூர் குண்டர்களிடமிருந்து சுரேஷை ராஜு காப்பாற்றுவான். அதனால் லட்சுமி தனது குழந்தைக்கு ராஜூவை பாதுகாவலனாக சேர்த்துக் கொள்ள முடிவு செய்வாள். உள்ளூர் கும்பலின் தலைவனான ரவி என்பவரிடமிருந்து பணத்தை வசூலிக்க கங்கா நிறுவனத்திடமிருந்து ஒரு ஒப்பந்தத்தை போட்டிருப்பான் ரங்கா. இருப்பினும் ரங்காவை தனது கும்பலில் சேர அழைக்கிறான் ரவி. ஆனால் தான் எந்த கும்பலுக்கும் வேலை செய்யவில்லை என்று கூறி மறுக்கிறான். அதனால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ரவி சொல்வதை கேட்டு அவர்களுடன் இணைகிறான் ரங்கா ரங்காவிற்கு கொடுக்கப்படும் முதல் வேலையே சுரேஷை கடத்துவது தான். அதனால் அவர்களது பெற்றோர்களிடமிருந்து பணத்தை கேட்டு மிரட்டலாம் என்கிறான். பின்னர் ராஜுவால் காப்பற்றப்பட்ட சுரேஷை ரங்கா கடத்த முயற்சிக்கிறான். ரங்கா மாறுவேடத்தில் வந்து சுரேஷை கடத்த முயன்றதால் அது ரங்கா என்பது ராஜுவுக்கு தெரியாது. ஆனால் ரங்காவிற்கு அது ராஜு என்பது தெரிகிறது. அதனால் ராஜூவை சந்திக்க ரங்கா வருகிறான். அதனால் மகிழ்ச்சி அடைந்த ராஜு தான் இங்கு சுரேஷுக்கு பாது காவலர் பணி செய்வதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறுகிறான். லட்சுமியையும் ரங்காவிற்கு அறிமுகப்படுத்துகிறான் ராஜு. தனது சகோதரன் என்பது தெரியாமல் சுரேஷுக்கு மற்றுமொரு பாதுகாவலராக பணி அமர்த்துகிறாள் லட்சுமி. சுரேஷை கடத்த முயன்றது அவன் தான் என்ற உண்மையை ராஜுவிடம் ஒப்புக்கொள்கிறான் ரங்கா. அதனால் தனது குற்றத்தை விட்டுவிட்டு லக்ஷிமிக்கு உண்மையாக இருக்கும் படி கூறுகிறான் ராஜு. ஆனால் சுரேஷை கடத்தி செல்வதில் ரங்கா உறுதியாக இருப்பான். லட்சுமி ரங்காவின் சகோதரி என்ற உண்மையை ரவி சொல்லிவிடுவான். அதனால் ரவியின் ஆட்கள் ரங்காவை பிடித்துவிடுவார்கள். ஆனால் ராஜு அவர்களை துரத்தி சென்று ரங்காவை காப்பாற்றுவான். பின்னர் ரவி சிறையில் அடைக்கப்படுவான். ரங்கா தனது சகோதரியுடன் மீண்டும் இணைகிறான். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகின்றனர்.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - ரங்கநாதன் என்கின்ற ''அவசர அடி''ரங்கா
ராதிகா - கங்கா
K.R. விஜயா - லட்சுமி
''கராத்தே'' மணி - ராஜு
ரவீந்திரன் - ரவி
சில்க் சுமிதா - ரவியின் காதலி
தேங்காய் சீனிவாசன்
அசோகன்
A.R. ஸ்ரீனிவாசன்
மாஸ்டர் சுரேஷ் - சுரேஷ்
தயாரிப்பு
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் C. தண்டாயுதபாணி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். தேவர் பிலிம்ஸின் கதை பிரிவால் இத்திரைப்படத்தின் கதை வழங்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்தின் வசனங்களை தூயவன் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் K.R. விஜயா நடித்துள்ள கதாபாத்திரம் முதலில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. அவரும் இக்கதாபாத்திரத்தின் மேல் மிகவும் விருப்பம் கொண்டு அதில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அப்போதய தமிழக முதல்வராக இருந்த M.G. ராமச்சந்திரனின் தலையீட்டால் அவர் படத்தில் நடிக்கவில்லை. மேலும் M.G.R இக்கதாபாத்திரத்திற்கு K.R. விஜயாவை பரிந்துரைத்தார்.
வெளியீடு
இத்திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் முதிர்ந்தோர் பார்க்கக்கூடிய காட்சிகள் இருப்பதால் இந்திய தணிக்கை வாரியம் இத்திரைப்படத்திற்கு ''A'' சான்றிதழ் வழங்கியது. மேலும் இத்திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கலே கிடைத்தது. வசூலில் பெரும் வெற்றியை இத்திரைப்படம் கண்டது. ரஜினிக்கு இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. மேலும் மக்கள் அவரது தனித்துவமான நடிப்பை பாராட்டினார்கள். அமிதாப்பச்சனின் ''டான்'' திரைப்படத்தின் மறுஆக்கமான ''பில்லா'' வெற்றிக்கு பிறகு இது ரஜினியின் இரண்டாவது மிகப்பெரிய வெற்றி திரைப்படமாகும். இப்போது ரங்கா என்ற பெயர் ஒரு போக்காக மாறி கெட்டவர்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்துதப் படுகிறது. ''கேடி பில்லா கில்லாடி ரங்கா'' என்ற படமும் ரங்கா திரைப்படத்தையே குறிக்கிறது. மேலும் இத்திரைப்படம் வணிக ரீதியான வெற்றியை பெற்று தந்தது.
RANGA - KALKI REVIEW
(02.05.1982 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|