Pollathavan (1990)
Polladhavan is a 1980 Tamil movie Indian action thriller film produced by S. Ravi, and directed by Muktha Srinivasan who also wrote the screenplay. A remake of the 1976 Kannada film Premada Kanike, it stars Superstar Rajinikanth, Lakshmi and Sripriya. The film revolves around a wealthy merchant who murders a would-be rapist, then keeps his daughter's nanny, who was both the intended victim and a witness, captive in his house.
The film was shot mainly in Bangalore, with additional shooting taking place in Chennai, Shimla and Kashmir. It was released on 6 November 1980, Diwali, and became a commercial success.
Plot
Seetha, a young woman, is travelling via train with her nephew Raju to an estate to attend her job interview as a nanny to the estate merchant Manohar's daughter. Her co-passenger tries to rape her but suddenly he is shot dead. Seetha sees the murderer and clearly remembers his face and reports the murder to Moorthy, a police inspector. Then she is appointed for the nanny position and she and Manohar's daughter Shoba grow fond of each other.
Manohar, who is extremely fond of his daughter returns from his journey. Seetha meets him, only to realise that he is the murderer she saw on the train. Manohar threatens Seetha not to tell anyone and makes sure to prevent her from leaving his estate as she is keen on reporting him to the police.
Seetha tries many times to escape but is always caught. She does not even tell the police when she meets them as Manohar threatens to kill Raju if she did. Later, Seetha somehow sees beneath the rough, mean Manohar and grows fond of him but is confused why such a nice man is acting so arrogantly.
In flashbacks, Manohar and Kumudha fell in love and married, shortly thereafter their daughter Shoba was born. Kumudha's uncle Chandru, who was eager to marry Kumudha but who was sent to jail by Manohar as he tried to kill both Manohar and Kumudha was released from jail as his term had finished. When Manohar was out of house, Chandru raped Kumudha; due to this she commits suicide and Manohar wants to die with her but she makes him vow that he will get revenge on Chandru for separating them and to take care of Shoba well. Manohar also reveals that the man he killed on the train was Chandru.
Seetha now understands his acts and vows not to tell anyone. Moorthy's colleague is curious about Seetha; she said that she remembered the face and was eager to find the murderer, but now she had told him she has forgotten the face, hence he suspects Seetha to be the murderer, and Moorthy agrees with his belief. On Shoba's birthday, Manohar is to announce that he is to hand over all his wealth to Seetha and surrender to the police, but before this the police arrive and try to arrest Seetha. Manohar saves her by confessing to the murder, leading to his arrest.
A few years later, Manohar is released from jail and reunites with Seetha and Shoba.
Production
Polladhavan was directed by Muktha Srinivasan (who also wrote the screenplay) and produced by S. Ravi under the banner Vidhya Movies.[3] It was remade from the 1976 Kannada film Premada Kanike, written by Salim–Javed.[1][3] The film was made in CinemaScope.[4] Cinematography was handled by M. Karnan,[5] and editing by V. P. Krishna.[3] Srinivasan cast Delhi Ganesh after seeing his performance in a play titled Thuppariyum Saambu.[6] Shooting for the film took place primarily at Bangalore,[7] with additional shooting taking place in Chennai, Shimla and Kashmir.[5]
Release and reception
Pollavadhavan was released on 6 November 1980, Diwali. Tribune positively reviewed the film during its release in Sri Lanka in 1982. Despite facing competition from other Diwali releases such as Varumayin Niram Sivappu and Nizhalgal, the film was a commercial success, and cemented Rajinikanth's "hold over the box office". Rajinikanth also managed to carve out a niche for himself in vendetta roles such as that in Polladhavan. Rajinikanth's bearded appearance with sunglasses was later used in Baashha (1995).
பொல்லாதவன் 1980 திரைப்படம்
பொல்லாதவன் 1980-இல் வெளியான தமிழ் இந்திய அதிரடித் திரைப்படம். இப்படத்தை எஸ்.ரவி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியவர் முக்தா ஸ்ரீனிவாசன். இப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி மற்றும் ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் 1976-இல் வெளியான கன்னட திரைப்படமான பிரேமதா கணிக்கே படத்தின் மறுஉருவாக்கம் ஆகும்.
பொல்லாதவனில், ரஜினிகாந்த் ஒரு பணக்கார வணிகர். அவர் லட்சுமியை கற்பழிக்க வந்தவனை கொன்று, பின் அவளை தன் மகளை பார்த்து கொள்ளும் பணிப்பெண்ணாக நியமிக்கிறார். லட்சுமி இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராகவும், சாட்சியாகவும் இருப்பதால் தனது வீட்டிலேயே சிறை வைக்கிறார். இப்படம் முக்கியமாக பெங்களூரில் படமாக்கப்பட்டது. கூடுதல் படப்பிடிப்பு சென்னை, சிம்லா மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இப்படம் தீபாவளியன்று 6 நவம்பர் 1980 அன்று வெளியிடப்பட்டது மற்றும் வணிக ரீதியான வெற்றி பெற்றது.
கதை
சீதா என்ற இளம்பெண், தன் மருமகன் ராஜுவுடன் ஒரு எஸ்டேட் வேலைக்கு நேர்காணலுக்கு ரயிலில் பயணம் செய்கிறாள். அந்த எஸ்டேட்டின் வணிகர் மனோகரின் பெண் குழந்தையை பார்த்து கொள்ளும் பணிப்பெண் வேலைக்காக செல்கிறாள். அவளது சகப்பயணி ஒருவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். ஆனால் அவன் திடிரென்று சுட்டு கொல்லப்படுகிறான். சீதா கொலைகாரனை பார்த்து, அவனது முகத்தை தெளிவாக நினைவில் வைத்து கொண்டு, கொலையை போலீஸ் அதிகாரியான மூர்த்திக்கு தெரிவிக்கிறாள். பின்னர் அவள் அந்த எஸ்டேட்டில் அந்த குழந்தையை பார்த்து கொள்ளும் ஆயாவாக நியமிக்கப்படுகிறாள். சீதாவும், மனோகரின் மகள் ஷோபாவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகுகின்றனர்.
தன் மகள் மீது மிகுந்த அன்பு கொண்ட மனோகர், தனது பயணத்தை முடித்து விட்டு திரும்ப வருகிறான். சீதா மனோகரை சந்திக்கிறாள். தான் ரயிலில் பார்த்த கொலைகாரன் தான் மனோகர் என்பதை அறிகிறாள். மனோகர் சீதாவை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவளை மிரட்டுகிறான், மேலும் அவனை பற்றி காவல் துறையிடம் புகார் செய்ய தயாராக இருந்ததால் மனோகர் அவளை எஸ்டேட்டடை விட்டு வெளியே செல்லாமல் தடுக்கிறான்.
சீதா பலமுறை அவ்விடத்தை விட்டு தப்பிக்க முயன்றாலும், மனோகர் அவளை தன் பிடியில் வைத்திருந்தான். சீதா போலீஸிடம் உண்மையை சொல்லிவிட்டால், தான் ராஜூவை கொன்று விடுவேன் என்று மனோகர் அவளை மிரட்டியதால், அவள் போலீஸிடம் எதையும் சொல்லவில்லை. பின்னர், சீதா கரடுமுரடான மனோகரை விரும்ப ஆரம்பிக்கிறாள். ஆனால், அதே சமயம் இவ்வளவு நல்ல மனிதன் ஏன் இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்கிறான் என குழப்பம் அடைகிறாள்.
பிளாஷ்பேக்கில், மனோகரும் குமுதாவும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஷோபா என்ற பெண் குழந்தை பிறந்தது. குமுதாவின் மாமா சந்துரு, குமுதாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அது நடக்காததால் அவன் மனோகரையும் குமுதாவையும் கொலை செய்ய முயற்சிக்கிறான். அதனால், மனோகரால் அவன் சிறைக்கு அனுப்பப்படுகிறான். அவனது தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறான். மனோகர் வீட்டை விட்டு வெளியே சென்ற சமயம், சந்திரன் குமுதாவை பாலியல் பலாத்காரம் செய்கிறான். இதனால், குமுதா தற்கொலை செய்து கொள்கிறாள். மனோகரும் அவளுடன் சேர்ந்து இறக்க விரும்புகிறான். ஆனால் குமுதா மனோகரிடம், தங்களை பிரித்த சந்துருவை பழிவாங்குவதற்காகவும், தங்கள் மகள் ஷோபாவை நன்றாக பார்த்துக்கொள்ளவும் வேண்டும் என்று அவனிடம் சத்தியம் வாங்குகிறாள். ரயிலில் கொலை செய்யப்பட்டவன் சந்துரு என்பதையும் மனோகர் வெளிப்படுத்துகிறார்.
சீதா, மனோகரின் செயல்களை புரிந்து கொண்டு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று அவனிடம் சபதம் செய்கிறாள். மூர்த்தியுடன் வேலை செய்பவன், இக்கொலை வழக்கில் ஆர்வம் காட்டுகிறான். சீதா கொலையாளி முகத்தை நினைவில் வைத்திருப்பதாகவும், அவனை கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினாள். ஆனால் இப்பொழுது அவன் முகத்தை மறந்து விட்டதாக கூறினாள். எனவே சீதாவை கொலைகாரன் என்று சந்தேகிக்கிறான். அதனை மூர்த்தியும் ஒப்புக்கொள்கிறான். ஷோபாவின் பிறந்த நாளில், தனது சொத்துக்களை சீதாவிடம் ஒப்படைத்து விட்டு தான் சரணடைய போவதாக அறிவிக்கிறான். ஆனால், அதற்கு முன் போலீசார் சீதாவை கைது செய்ய முயற்சிக்கின்றனர். மனோகர் கொலையை ஒப்புக் கொள்வதின் மூலம் அவளை காப்பாற்றுகிறான். இறுதியில் அவன் கைது செய்யப்படுகிறான்.
நடிகர்கள்
மனோகர் -ரஜினிகாந்த்
சீதா -லட்சுமி
குமுதா -ஸ்ரீப்ரியா
மனோகரின் மேனேஜர் -சுருளி ராஜன்
சந்துரு -சிவச்சந்திரன்
மூர்த்தி -டெல்லி கணேஷ்
காவல் ஆய்வாளர் -வி.கோபாலகிருஷ்ணன்
ராமையா -செந்தாமரை
குமுதாவின் சகோதரர் -கே.நட்ராஜ்
தயாரிப்பு
பொல்லாதவன் படத்தை முக்தா ஸ்ரீநிவாசன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். வித்யா மூவிஸின் கீழ் இப்படத்தை எஸ்.ரவி தயாரித்துள்ளார். இப்படம் 1976-ஆம் ஆண்டு சலீம்-ஜாவேத் எழுதிய கன்னட திரைப்படமான பிரேமாடா கனிகே படத்தின் மறுஉருவாக்கம் ஆகும். இந்த படம் சினிமாஸ்கோப்பில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.கர்ணன் மற்றும் படத்தொகுப்பாளர் வி.பி.கிருஷ்ணா. துப்பரியும் சாம்பு என்ற நாடகத்தில் டெல்லி கணேஷ் நடிப்பை பார்த்த ஸ்ரீனிவாசன் இப்படத்தில் அவரை நடிக்க வைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முதன்மையாக பெங்களூரில் நடைபெற்றது. கூடுதல் படப்பிடிப்பு சென்னை, சிம்லா மற்றும் காஷ்மீரில் நடைபெற்றது.
வெளியீடு மற்றும் வரவேற்பு
பொல்லாதவன் 6 நவம்பர் 1980-இல் தீபாவளியன்று வெளியானது. 1980 இல் இலங்கையில் வெளியான போது ட்ரிப்யூன் இப்படத்தை சாதகமாக மதிப்பாய்வு செய்தது. பிற தீபாவளி வெளியீட்டு படங்களான வறுமையின் நிறம் சிகப்பு மற்றும் நிழல்கள் ஆகிவற்றோடு போட்டியை எதிர் கொண்ட போதிலும் இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மற்றும் பாக்ஸ் ஆபீஸில் ரஜினிகாந்துக்கு ஒரு முக்கிய இடத்தை பிடித்து தந்தது. ரஜினிகாந்துக்கு பொல்லாதவன் போன்ற வென்டெட்டா (பழிதீர்க்கும்) வேடங்கள் அவருக்கென ஒரு முக்கிய இடத்தை உருவாக்கி தந்தது. ரஜினிகாந்தின் தாடி தோற்றம் பின்னர் சன்கிளாஸுடன் பின்னர் பாட்ஷாவில் (1995) பயன்படுத்தப்பட்டது.
பொல்லாதவன் ஆனந்த விகடன்
POLLADHAVAN KALKI REVIEW
(07.12.1980 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|