Valli (1993)
வள்ளி 1993 ஆம் ஆண்டு கே.நாத்ராஜ் இயக்கிய தமிழ் நாடகப் படம் ஆகும். ரஜினிகாந்த் இப்படத்தை எழுதி தயாரித்தார். இதில் ஹரிராஜ் மற்றும் பிரியா ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகைச்சுவையாளராக வடிவேலும், புதுமுகம் சஞ்சய் முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் விஜயா என டப்பிங் செய்யப்பட்டது. இப்படத்திற்கு ரஜினிகாந்த் திரைக்கதை, வசனங்களை எழுதி விருந்தினர் வேடத்தில் தோன்றினார். ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
கதை
வள்ளி என்ற பெண் மெட்ராஸில் 15 ஆண்டுகள் படித்துவிட்டு தனது கிராமத்திற்குத் திரும்புகிறார் .அவரது தாய் மாமா ஹரிராஜ் மீண்டும்வள்ளி கிராமத்திற்கு வந்ததைக் கொண்டாடுகிறார். குழந்தை பருவத்திலிருந்தே அவர் வள்ளியைக் காதலித்து வந்தார், ஆனால் வள்ளி நகரத்திற்கு படிக்கச் சென்ற பிறகு அவள் மாறி விடுவதால் அவள் அவனை காதலிக்கவில்லை. வேட்டைக்காக தனது நண்பர்களுடன் கிராமத்திற்கு வரும் சேகர் என்ற நகர பையனை அவள் காதலிக்கிறாள். வள்ளியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்த சேகர் வள்ளியுடன் உடலுறவு கொண்டு, அவளை ஏமாற்றுகிறான். அவன் நகரத்திற்கு தப்பி செல்கிறான். அப்போது அவன் மாநில முதல்வரின் ஒரே மகன் என்பது தெரியவந்துள்ளது. பின்னர், நிறைய எதிர்ப்புக்களுக்குப் பிறகு, வள்ளியின் தாய் மாமாவால் சேகர் மீண்டும் கொண்டு வரப்படுகிறார். ஆனால் வள்ளி சேகரை திருமணம் செய்வதற்கு பதிலாக, தன்னை ஏமாற்றியதற்காக அவனைக் கொலை செய்கிறாள். அதனால் அவள் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறாள். கடைசியாக அவள் வீடு திரும்பும்போது, அவளுக்காக திருமண மண்டபம் ஆடம்பரமாகவும், தனது தாய் மாமாவும் திருமணத்திற்கு வேடிக்கையாக தயாராக இருப்பதைக் காண்கிறாள். அவளது திருமணத்தை வீரைய வள்ளியப்பன் மற்றும் சிவன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். அவளுக்கு முழு மனதுடன் அவர்கள் உதவி செய்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறாள்.
நடிகர்கள்
வள்ளியப்பன் வீரையா - ரஜினிகாந்த்
வள்ளி - பிரியா ராமன்
ஆர்.திலீப்
சிவன் - வடிவேலு
வள்ளியின் உறவினர் - ஹரிராஜ்
சேகர் - சஞ்சய்
அலெக்ஸ்
பிரதீப் சக்தி
தயாரிப்பு
முன்னதாக அன்புள்ள ரஜினிகாந்தை இயக்கிய ரஜினிகாந்தின் பல்கலைக்கழக நண்பர் கே.நட்ராஜ்யை, அண்ணாமலையில் உதவி இயக்குநராக பங்கேற்க ரஜினி அவரை அணுகினார், அதை நட்ராஜ் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பின்னர் ரஜினி தனது நண்பர்களை அணுகி அவர்களுக்காக ஒரு படம் தயாரிக்க விரும்புவதாக அறிவித்தார். "வள்ளி" படத்தின் ஸ்கிரிப்டை ரஜினியே எழுதினார். படத்தை உருவாகும் போது முதலில் நினைவுக்கு வந்தது க்ளைமாக்ஸ் என்று ரஜினி வெளிப்படுத்தினார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஒருவர் தன்னை பலாத்காரம் செய்தவரையே திருமணம் செய்து கொள்ளும்படி தூண்டப்படும் தமிழ் படங்களின் வழக்கதிற்கு மாறாக, தனது வாழ்க்கையை அழித்தவனை அந்தப் பெண் கொல்ல வேண்டும் என்று அவர் கற்பனை செய்தார். மேலும் அவர் 7 நாட்களில் திரைக்கதையை எழுதி முடித்ததை வெளிப்படுத்தினார். இதில் பிரியராமன் கதாநாயகியாக அறிமுகமானார், ஹரிராஜ் மற்றும் சஞ்சய் ஆகியோரும் இந்த படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர். ரஜினி படத்தில் தோன்ற ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அவரது நண்பர்களின் வற்புறுத்தலால், அவர் சிறிய பாத்திரத்தை செய்ய ஏற்றுக்கொண்டார். அவர் ஐந்து நாட்களுக்குள் தனது பகுதிகளை முடித்தார்.
படப்பிடிப்பு ஏப்ரல் 1993 இல் தொடங்கி அந்த ஆண்டு ஜூன், ஜூலையில் முடிந்தது. இந்த படம் மந்திரவாதி அலெக்ஸை நடிகராக அறிமுகப்படுத்தியது. படப்பிடிப்பு சாலக்குடி, பொள்ளாச்சி மற்றும் நெற்குன்றத்தில் நடைபெற்றது. சாமி மற்றும் சிங்கத்தின் இயக்குனர் ஹரி இந்த படத்தில் உதவியாளர்களில் ஒருவராக இருந்தார்.
வரவேற்பு
இந்த கதையில் 16 வயதினிலின் நிழல்கள் உள்ளன, ஆனால் அழகாக உருவாக்கப்பட்ட அதன் திரைக்கதையில் ஒரு புத்துணர்ச்சி உள்ளது, என இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது.
Valli Movie Review by The Indian Express
|