Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Veera (1994)

Veera is a 1994 Indian Tamil-language romantic comedy movie directed by Suresh Suresh Krishna and written by Panchu Arunachalam. It is a remake of the Telugu film Allari Mogudu (1992) and stars Rajinikanth, Meena and Roja with Janagaraj, Senthil, Vadivukkarasi, J. Livingston, Mahesh Anand, Vinu Chakravarthy, Ajay Rathnam, and Charuhasan in supporting roles. The film is about a man who marries twice because of circumstances beyond his control and is forced to live a double life to cover his tracks.

Suresh Krishna initially refused to remake Allari Mogudu because he disliked it but agreed after Rajinikanth told him their next film after Annaamalai (1992) should be different to avoid comparisons. The screenplay of Veera was written to be substantially different from the original; it was tailored to Rajinikanth's style and had logic added to the scenario. Arunachalam, who made script changes, received sole screenwriting credit. The film was produced by Arunachalam's wife Meena, photographed by P. S. Prakash and edited by Ganesh–Kumar.

Veera was released on 14 April 1994 during the Puthandu holiday. The film received mixed reviews from critics and audiences were disappointed because they expected a film like Annaamalai. Ticket sales improved within a few weeks of its release and Veera became a commercial success, running for over 100 days in theatres.

Plot

The film follows a nonlinear narrative. The events are told in chronological order.

Muthuveerappan (Muthu), an idler from Karamadai, falls in love with Devayani (Devi), the daughter of Carnatic musician Krishnamurthy Shastri. To lure her, Muthu pretends to learn music from Shastri. One day, Devi overhears Muthu discussing his plans to seduce her with his friends and confronts him. Chastened, Muthu concentrates on his music and later wins over Devi. They marry in secret but before they can make this official, Rathnavelu, son of the village landlord, tries to rape Devi. Muthu saves her by subduing Rathnavelu. Enraged, the landlord insults Muthu's mother, reminds her about a loan owed to him by Muthu's late father and threatens to evict her if the loan is not paid within a week. Muthu goes to Madras to earn money.

In Madras, Muthu tries to enter a music competition to win the prize money. He meets tabla player Ravikanth, who gives him the stage name Veera. Both make repeated attempts to enter the competition but are unsuccessful. Muthu saves the competition promoter's owner Viswanathan's daughter Roopa from Harichandran, a gangster. With Roopa's help, Muthu is able to perform at the competition with Ravikanth, and wins the prize money. Muthu returns to Karamadai and repays the loan, clearing his mother's debt. He learns Devi's house had been destroyed by a flood; the bodies of Devi and her father were not found. With Devi presumed dead, Muthu's mother tells him to return to Madras so that he can start afresh.

After Muthu and his mother arrive in Madras, he gets a full-time job in the music industry as Veera. Roopa, having fallen in love with Muthu, wants to marry him. Muthu initially refuses because he misses Devi but his mother persuades him to marry her. After her marriage, Roopa goes to the United States after her father suffers a heart attack and has surgery there. One day, at his recording studio, Muthu finds Devi alive and well. She survived the flood but was left with amnesia; her memory was restored when she heard Muthu singing on the radio so she went to Madras in search for him. Muthu decides not to tell Devi about his marriage to Roopa.

After Roopa and Viswanathan return, Muthu tries to tell Roopa about Devi but decides not to after she tells him about how her friend, at Roopa's suggestion, murdered her lover for infidelity. Devi and Muthu go to a temple to formally marry on Devi's demands, and Ravikanth is tasked with preventing Roopa from going there but fails. Roopa arrives at the temple; Ravikanth helps Muthu to hide his marriage to Devi from Roopa and vice versa. When Roopa sees her husband leaving with Devi, Ravikanth lies that Muthu and Veera are different men. As a result, Muthu is forced to live a double life as Devi's husband Muthu and as Roopa's husband Veera.

Muthu uses an altered photograph showing two of him, giving credence to his double life. Harichandran learns about this fraud, commits a murder and frames Muthu as Veera's killer. After Muthu reveals the truth about his double life to his wives, they fight over him and refuse to share him. The wives are kidnapped by Harichandran's men. Muthu subdues Harichandran, who is arrested. Muthu's wives reconcile with him but not with each other. Muthu's mother persuades him to leave Madras and return to Karamadai. When he, his mother and Ravikanth enter Muthu's house, they find Devi, Roopa and Viswanathan already there. Devi and Roopa take a bag each from Muthu then flounce off in opposite directions.

Production Development

After Rajinikanth saw the Telugu film Allari Mogudu (1992) with director Suresh Suresh Krishna and producer-screenwriter Panchu Arunachalam, he expressed his desire to remake it in Tamil as their next collaboration. Krishna objected to this idea as he did not like the film and found it unsuitable for him. Rajinikanth said he wanted to make a "two-wife" comedy, but Krishna noticed Allari Mogudu lacks the values associated with typical Rajinikanth films and felt fans would not accept his character being bigamous. Rajinikanth said changes could be made to suit the local milieu. Krishna wanted to begin work on Baashha but Rajinikanth said if their next film was similar to their action film Annaamalai (1992), "we will get caught. Bring the hopes down, bring the level down and then take it up again." Suresh Krishna agreed but avoided making a shot-for-shot remake of Allari Mogudu.

Superstar Rajinikanth and Krishna went to the Taj Banjara hotel in Hyderabad to discuss the plot. They prepared a fresh outline in ten days; Krishna tailored the story to Rajinikanth's style and added logic to the scenario. He submitted the final draft to Arunachalam, who liked it and suggested plot changes. According to Krishna, the remake has more "emotional profundity" than the Telugu original, and it was established that the protagonist Muthuveerappan (Muthu) is a pious person who married twice due to circumstances beyond his control. He differentiated Muthu from the original's protagonist, saying although circumstances drive him to another woman (Roopa), Muthu's feelings for his first wife Devi are sincere, he has not forgotten her, and is forced by his mother into marrying Roopa.

The symbolism in a scene in which Muthu removes a thread tied by Devi from his wrist to suggest their bond has ended was Arunachalam's idea. Whereas in Allari Mogudu the second wife's desire for the protagonist is sexual, that aspect in Veera was made secondary. According to Krishna, "we polished the screenplay over and over again till it gathered sheen. Eventually, but for the basic plot, Veera emerged as a near-new product. "Veera was produced by Arunachalam's wife Meena under their banner P. A. Art Productions. Arunachalam received sole credit for the screenplay while P. Satyanand, the writer of Allari Mogudu, received credit for the original story. Cinematography was handled by P. S. Prakash, editing by the duo Ganesh–Kumar, and art direction was done by Magie.[10] The action choreography was handled by Raju and dance sequences were choreographed by Raghuram. Meena was chosen to play Devi, reprising her role from Allari Mogudu, while Roja was cast as Roopa, reprising the role originally played by Ramya Krishnan. Bollywood actor Mahesh Anand portrayed the antagonist Harichandran in his first Tamil film.

Filming

Veera was formally launched with a puja at the Lord Ganapathi temple within AVM Studios,[19] although principal photography began at Rajahmundry. A four-day filming schedule with 40 background dancers was planned for the song "Maadethile Kanni" at Talakona. After the first day's filming, Suresh Krishna was unhappy because the location did not provide him with the expected quality. The crew returned to Madras and filmed the song at Raghavendra Kalyana Mandapam and at a house at AVM Studios. The song "Konji Konji" was filmed at Narada Gana Sabha, Madras. Because the song that depicts Muthu performing on stage "didn't lend itself to anything vibrant", Suresh Krishna intercut it with scenes in which Roopa visualises Muthu in various outfits and begins to find him attractive. According to Suresh Krishna, this was a chance to show Muthu in a variety of costumes because he is only shown wearing a simple white shirt and black trousers until the song begins, and would not change his clothing and appearance until much later in the film. Suresh Krishna decided to "let the audience get a glimpse of how [Muthu] would look later on in the film" through this song.

The song "Malai Kovil Vaasalil" was filmed at the MRF Racing Track in Thiruperumbudur. As it depicts Devi having formed Muthu's name (முத்து) by arranging thousands of lamps, 20,000 lamps were made to glow simultaneously. Suresh Krishna decided to use chimney lamps that stopped the wind from extinguishing the lights. The song had to be filmed from above to emphasise the glowing lamps while Devi "should appear as a mere spot in the middle of gigantic lamps", so Prakash went to a tower that stood about 200 feet (61 m) away from the actual spot so the camera could zoom in and out for best results. Suresh Krishna described it as "one of the most strenuous and painstakingly shot sequences" in his career. Rajinikanth and Anand did not rehearse the fight sequence in which Muthu and Harichandran jump towards each other then fall to the ground with their hands interlocked; they watched the stuntmen perform and followed their instructions. Rajinkanth performed all of his stunts without using a stunt double.

Magie's assistant Mani designed the film's large, multicoloured kolam that was 100 ft × 200 ft (30 m × 61 m); a rope was attached to a pulley, one side of which was attached to Mani's waist. He was made to hang horizontally from it, with his face and hands turned towards the floor; completing the task took him two days and two nights. A scene in which Muthu and Ravikanth attempt to fool Roopa at a temple was filmed at Hyderabad's Birla Mandir, which does not generally permit filming. Most of Rajinikanth's acting was improvised on set. For the scene in which Muthu trips on his dhoti while changing into formal clothing, there were no retakes. While filming a scene in which Ravikanth talks to Chandran while Muthu silently witnesses, Rajinikanth could not control his laughter at Senthil's dialogue delivery and covered his mouth with a towel. In the post-production phase, Meena's voice was dubbed by K. R. Anuradha and the introductory "Super Star" graphic title card from Annaamalai was re-used. The length of the final film is 4,406.34 metres (14,456.5 ft).

Themes

Writer S. Rajanayagam compared Veera to another Rajinikanth film Panakkaran (1990) because both of them stress that "true wealth consists of good parents, wife, children and friends". Though the film is a remake of Allari Mogudu, many writers have compared Veera with Rettai Vaal Kuruvi (1987) and Micki & Maude (1984), both of which also have bigamy as their themes. According to writer Archanaa Sekar, in Tamil films women married to the same man show "an unusual display of sisterhood" and "female solidarity", citing Veera as an example because the two female leads are initially friends (despite being unaware that they are married to the same man), and once a conflict arises amongst them, "the friendship helps smooth things over, and the film ends with the two choosing to co-exist with the man".

Soundtrack

The soundtrack of Veera was composed by Ilaiyaraaja, who also wrote lyrics along with Panchu Arunachalam and Vaali. The soundtrack album was released on the label Pyramid Music. During the filming schedule at Rajahmundry, Ilaiyaraaja had composed a duet and sent it to Suresh Krishna, who liked the song but felt it did not suit the situation. Rajinikanth and other crew members expressed similar views. On returning to Madras, Suresh Krishna told Ilaiyaraaja the duet's tune did not suit the situation; Ilaiyaraaja was angry with Suresh Krishna but a few hours later, he replaced the duet with other tunes.

Many of the songs are set in Carnatic ragas such as "Konji Konji" in Dharmavati, "Malai Kovil Vaasalil" in Asaveri, "Pattu Poo Poo" in Chalanata, and "Thirumagal" in Lalitha. "Maadethile Kanni" is set in the Hindustani raga, Brindabani Sarang. Two versions of "Konji Konji" were recorded; one was sung by S. P. Balasubrahmanyam and the other by K. S. Chithra.

Release

Veera was released on 14 April 1994 during the Puthandu holiday. The film opened in competition with Indhu, Honest Raj, Sakthivel and Seeman, which were released the same week.

Critical reception

Veera received mixed critical reviews; audiences and fans of Rajinikanth were disappointed because they expected a film like Annaamalai and were discontent with the title character's lack of heroism. Malini Mannath of The Indian Express wrote; "Veera starts promisingly enough", praising Rajinikanth's comedy timing in the first half, but said the manner in which Muthu learns of Devi's presumed death is "not very convincingly told". She said, "The script takes a nosedive" with the return of Devi, "never to recover". Mannath added Rajinikanth's comedy in the second half feels forced and that "At this stage of his career [Rajinikanth] could have taken more meaningful roles" but concluded by praising the songs. K. Vijiyin of New Straits Times praised the film's action sequences, the performances of the female leads and the music by Ilaiyaraaja but said Harichandran has "little to do with the main story" and was included "just to satisfy Rajni's action-oriented fans". Vijiyin concluded the review by saying, "Veera has a bit of everything to satisfy all sections of the audience to provide a superb evening's entertainment". A writer for the magazine Manushi said, "The director has displayed much ingenuity in bringing the first supposedly dead 'wife' back to life, bringing the two wives together, etc. The final scenes were shoddy, ill-conceived and in bad taste."

Box office

During the first few weeks of its release, Veera had a mediocre response at the box office because of comparisons with Annaamalai but after a few weeks, audiences increased and the film completed a 100-day run in theatres. Suresh Krishna attributed the film's success to its comedy and Rajinikanth's popularity after Annaamalai, which had "soared to unimaginable heights" while other commentators attributed its success to its music. According to journalist Sudhir Srinivasan, Veera is the first Tamil film to collect ₹1 crore (equivalent to ₹5.3 crore or US$740,000 in 2019) in the NSC (North Arcot, South Arcot and Chengalpattu) areas; historian G. Dhananjayan said it collected that much "in Chengalpettu alone".

Legacy

Veera has been dubbed in Hindi and released under several titles, despite Allari Mogudu having been remade in Hindi as Saajan Chale Sasural (1996). Rajinikanth's English line "How is it?" (pronounced "Owwizzit?") became immensely popular, as did the response "Super" (pronounced "Soopar"). Producer Elred Kumar obtained permission to reuse the film's title; his production Veera was released in 2018.

 

 

வீரா திரைப்படம்

இப்படத்தில், முத்துவீரப்பன் என்ற கிராமத்து இளைஞனாக ரஜினி நடித்தார். நன்றாகப் பாடும் ஆற்றல் கொண்ட ரஜினி, பெரிய பாடகராக வேண்டும் என்று விரும்புகிறார்.

இந்த பாடகர் கனவுடன் திரிந்தவர் கண்ணில், "கவிதை''யாக தென்படுகிறார், மீனா. பார்வைப் பரிமாற்றங்கள் `காதல் மொழி'யில் போய் முடிய, காதலித்த வேகத்தில் திருமணமும் நடந்து முடிந்து விடுகிறது.

வெள்ளத்தில் மீனா

இப்போது பட்டணத்துக்குப்போய் தனது பாடகர் கனவை நிறைவேற்ற விரும்புகிறார். திடீரென ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் மனைவி மீனா ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறார். அவர் இறந்து போனதாகவே, ஊரும் உறவும் முடிவு செய்கிறது. ஆனால் இறக்கவில்லை.

சோகத்தோடு சென்னை வரும் ரஜினிக்கு, ரோஜா மூலம், இசைத்தட்டிலும் கேசட்டிலும் பாடும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்தக் குரல் ரசிகர்களுக்கு பிடித்துப்போக, இசை உலகில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார்.

மீண்டும் திருமணம்

தனது முன்னேற்றத்துக்கு காரணமான ரோஜாவுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்கிறார். அப்போதுதான் தன்னை ரோஜா காதலிக்கிறார் என்பது புரிகிறது. மீனாவை இழந்த சோகத்தில் அவர், ரோஜாவை மணக்க விரும்பவில்லை. என்றாலும், தாயாரின் விருப்பத்தை தட்ட முடியாமல் 2-ம் திருமணம் செய்து கொள்கிறார்.

இந்த நேரத்தில் ரஜினியை சந்திக்க சென்னை வருகிறார், மீனா.

இறந்து விட்டதாக கருதிய மீனா உயிரோடு வந்ததைப் பார்த்து ரஜினி அதிர்ச்சியடைகிறார். மீனா இறந்துவிட்டதாக கருதி, வேறொரு பெண்ணை மணந்து கொண்டதை சொல்ல முடியாமல் தவிக்கிறார். அவசரம் அவசரமாக தனி வீடு பார்த்து மீனாவை தங்க வைக்கிறார்.

ரஜினி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற விஷயம் ரோஜாவுக்கும் அதுவரை தெரியாது.

இரண்டு மனைவியரிடமும் நடிக்க வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படுகிறது. மீனாவுக்கோ, ரோஜாவுக்கோ தனது நடவடிக்கையில் ஏதாவது சந்தேகம் தோன்றினால் கூட, அதை சமாளிக்க பெரும்பாடுபடுகிறார்.

இந்த சமயத்தில் ரோஜாவால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட மகேஷ், விடுதலையாகி வருகிறான். அவனுக்கு முத்துவின் `தேவியர் இருவர்' நிலை தெரிந்து விடுகிறது. அதை வைத்துக்கொண்டு முத்துவை `பிளாக் மெயில்' செய்ய நினைக்கும் வில்லன் அதில் வெற்றி பெறாததால் ரோஜா, மீனா இருவரையும் கடத்திச் செல்கிறான்.

வில்லனை பின்னியெடுக்கும் ரஜினி, ரோஜா, மீனா இருவரையும் மீட்கிறார். அப்போது அவர் ஏற்கனவே மீனாவை மணந்தவர் என்பது ரோஜாவுக்கு தெரியவருகிறது. அதே நேரம் தன் காதல் கணவர் இப்போது இன்னொரு பெண்ணுக்கும் கணவர் என்பது மீனாவுக்கும் தெரிந்து போகிறது.

நட்புடன் இருந்த மீனாவும், ரோஜாவும், கணவர் யாருக்கு என்பதில் மோதிக்கொள்கிறார்கள். இதனால் மீண்டும் கிராமத்துக்குத் திரும்புகிறார். அங்கே, மீனாவும், ரோஜாவும் தன்னை வரவேற்கக் காத்திருப்பதைக் கண்டு மகிழ்கிறார். சுபமாக கதை முடிகிறது.

நகைச்சுவை விருந்து

படம் முழுக்க ரஜினியின் நகைச்சுவை சரவெடிகள், ரசிகர்களை கலகலப்பாக வைத்திருந்தன. ரஜினியும், செந்திலும் சேர்ந்து பாட்டு கம்பெனியில் சான்ஸ் கேட்கும் காட்சிக்கு ரசிகர்கள் குலுங்கிச் சிரித்தார்கள்.

மீனாவிடமும், ரோஜாவிடமும் மாட்டிக்கொண்டு `முழிக்கும்' காட்சிகளில் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்தார், ரஜினி.

படத்தின் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று இளையராஜாவின் இசை. "கொஞ்சி கொஞ்சி அலைகளாட'', "மலைக்கோவில் வாசலிலே'', "மாடத்திலே கன்னி மாடத்திலே'', "யக்கா யக்கா பெட்டிக்கடை யக்கா யக்கா'', "வாடி வெத்தல பாக்கு வாங்கித்தரேன் போட்டுக்க'' என அத்தனை பாடல்களிலும் `ராஜா'வின் இசைக்கொடி உயரப் பறந்தது. படத்தின் ஆடியோ கேசட் விற்பனையில் சாதனை படைத்தது.

ரஜினியின் `டேஸ்ட்' அறிந்து படத்தை இயக்கியிருந்தார், டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா.

152 நாட்கள் ஓடி வெற்றி விழாக் கொண்டாடிய படம் "வீரா.''

 

 

வீரா - ரசிகனின் விமர்சனம்

திரைக்கு வந்து 26 வருடங்கள் ஆன ஒரு படத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். 

1994ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்தப் படம் வீரா. 

தயாரிப்பு : பி ஏ ஆர்ட் புரொடக்ஷன்ஸ் 

இசை : இளையராஜா 

இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா 

ரஜினிகாந்த் அவர்களின் திரைவாழ்க்கையில் காமெடி படங்களுக்கு சிறப்பான இடம் எப்போதும் உண்டு. 

தில்லு முல்லுக்குப் பின் வந்த ரஜினி படங்களில் காமெடிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த படம் வீரா என்று சொல்லலாம். 

அண்ணாமலை என்று ஒரு வெகு பரபரப்பான படம் கொடுத்த கூட்டணி ரஜினி - சுரேஷ்கிருஷ்ணா, இவர்களிடம் இருந்து தீக்கனலாய் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தென்றலாய் வந்த படம் தான் வீரா. 

தமிழ் நாட்டைப் பொறுத்த வரை நட்சித்திர நடிகர்கள், இரண்டு மனைவியர் கதைகளில் நடிப்பது லேசான காரியம் அல்ல.  இரண்டு நாயகியரோடு நடிப்பது வேறு இரு நாயகியரும் கதையில் ஒரு சேர மனைவிகளாக கொண்டு நடிப்பது வேறு. 

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம் என்று வரிக்கப்பட்ட காலக்கட்டம் அல்லவா. 

இதற்கு முன் ரஜினி எங்கேயோ கேட்ட குரல் படத்தில் இரு தாரம் கொண்டவராக நடித்து இருந்தாலும் அது முற்றிலும் வேறு களம். 

வீரா எடுத்துக்கொண்டது  கொஞ்சம் கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு களம் தான். நாடு போற்றும்  நாயகனை வைத்து இரு தாரப் படம் எடுக்கும் போது, அதுவும் ஏராளமான தாய்க்குல ரசிகைகளைக் கொண்டிருக்கும் ஒருவரின் பிம்பம் சேதாரம் இன்றி எடுப்பது பெரும் பொறுப்பு. 

சுரேஷ் கிருஷ்ணாவை நம்பி இந்தப் படத்தை ரஜினி கொடுத்திருக்கிறார். 

1994 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இருக்கும் ஆல்பர்ட் திரையரங்கத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன். 

கதைக்கு வருவோம், பட்டணத்துக்கு  ஆர்மோனிய பெட்டியோடு வந்து சேரும் பாட்டுக்கார நாயகன் அங்கு ஒரு கூட்டுக்காரனை சந்திக்கிறான். 

இருவரும் சேர்ந்து பல முயற்சிகளுக்குப் பின் ஒரு பாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.  போட்டியில் பரிசாக ஒரு லட்சம் பெறுகிறார்கள். 

போட்டி நடத்தும் நிறுவன முதலாளி வீராவுக்கு மேலும் பாட வாய்ப்புகள் தர முன்வந்தும் வீரா அதை எல்லாம் மறுத்து விட்டு தன் சொந்த ஊருக்கே திரும்ப முடிவு செய்கிறான். 

ஊருக்கு திரும்பும் நிலையில் தான் யார்?  தான் எதற்காக பட்டணம் வந்தேன் என்ற கதையை பட்டணத்தில் கிடைத்த தன் புதிய நண்பனிடம் சொல்கிறான். 

முத்து வீரப்பன் ஒரு சின்னக் கிராமத்துவாசி. அந்த ஊரில் எந்த பொறுப்பும் இன்றி நண்பர்களோடு சுற்றி திரிந்து ஆனந்த வாழ்வு வாழ்கிறான். நித்தம் சேட்டை தான். 

அப்போது அவன் வாழ்க்கையில் இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. 

முதல் சம்பவம் பார்ப்போம். 

கார்த்திகை தீபம் அன்று அவன் ஊருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் சாஸ்திரிகள் ஒருத்தர் வருகிறார். அவருடன் அவர் அழகிய மகள் தெய்வயானையும் வருகிறாள். 

அவளைக் கணடதும் முத்து காதலில் விழுகிறான். எப்படியாவது அவளைத் தன் உரிமையாக்கிக் கொள்ள விரும்புகிறான். 

அதன் பொருட்டு பாடும் திறமை கொண்ட முத்து, சாஸ்திரிகளிடம் இசை பயிலும் சாக்கில் அவர்கள் வீட்டுக்குள் நுழைய திட்டம் போட்டு அதில் சில பல தில்லுமுல்லுகள் செய்து வெற்றியும் அடைகிறான். 

சாஸ்திரியிடம் சங்கீதம் கற்கிறான், ஆனால் தன் தேவியிடம் நெருங்க வழி இன்றி தவிக்கிறான். 

அவளை அடைய சேட்டை கலந்த ஒரு திட்டம் போடுகிறான், அதை தெய்வயானை கேட்டு விடுகிறாள், முத்து மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை உடைந்துப் போகிறது. 

முத்துவுக்கும் தெய்வயானைக்கும் நடக்கும் அந்த உரையாடல் விளையாட்டுத் தனமாக இருக்கும் முத்துவை யதார்த்த வாழ்க்கைக்கு இழுத்து வருகிறது. 

தேவிக்கு வாக்கு கொடுக்கிறான், சங்கீதம் மட்டும் தீவிரமாக படிக்கிறான். அவளைத் திரும்பியும் பார்க்காமல் இருக்கிறான். வைராக்கியமாக படித்து சாஸ்திரிகளிடமும் பாராட்டு பெறுகிறான். 

விடை பெறும் நேரத்தில் தேவயானி 
யிடம் தன் காதலை அழுத்தமாக சொல்லுகிறான், தான் முன்பு காதல் சொல்ல வந்த முறையில் குறை இருந்தாலும் தன் காதலில் எந்த பழுதும் இல்லை, தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அவளோடு தான் என்று சொல்லி செல்கிறான். தேவியின் மனமும் முத்துவிடம் காதலில் சாய்கிறது. 

இப்போது சம்பவம் இரண்டைப் பார்ப்போம் 
அந்த ஊர் பண்ணையாரிடம் முத்துவின் தாயார் கடன் வாங்கி இருக்கிறார்.பண்ணையார் மகனுக்கும் முத்துவுக்கும் தேவி விஷயத்தில் ஒரு மோதலும் இருக்கிறது. 

பண்ணையார் முத்துவின் தாயை கடனைத் திருப்பிக் கேட்டு கன்னத்தில் அடித்து விடுகிறார். 

தாயின் மீது பாசம் கொண்ட முத்து வெகுண்டு எழுகிறான். அவன் தாய் அவனைத் தடுத்து அவன் ஆவேசத்தை தடுத்து, உன் கோபத்தை பண்ணையார் கடன் அடைப்பதில் காட்டுமாறு சொல்கிறாள்.  முத்துவும் புரிந்துக் கொள்கிறான், பட்டணம் வருகிறான்.

பட்டணத்தில் நடந்ததை தான் ஆரம்பத்தில் பார்த்தோமே. பட்டணம் வந்து முத்து வீரப்பன் வீரா ஆகிறான் 

பாட்டு போட்டியில் கலந்து கொள்ள பல வழிகளில் முயற்சி செய்யும் போது ஒரு ரவுடியின் பகை, ஒரு போலீஸ்காரின் அன்பு, பாட்டு கேசட் நிறுவனர் மகளின் ஆசைப் பார்வை எல்லாமே வீராவுக்கு கிடைக்கிறது. 

அது அப்படியே இருக்கட்டும். 

மீண்டும் ஊருக்கு வரும் வீரா பண்ணையாரின் கணக்கைத் தீர்க்கிறான்.  அடுத்து தன் காதலி தேவியைத் தேடி ஓடுகிறான். அங்கு அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்து நிற்கிறது. 

வீரா ஒரு சூப்பர் ஸ்டார் நகைச்சுவை சித்திரம், இது படத்தின் அறிமுக காட்சியிலே நமக்கு அழகாக பதிய வைக்கப்படுகிறது. 

டைட்டில் ஓடும் காட்சியில் பாடல்களின் பின்னணி மட்டும் ஒலிக்க ஒரு பேருந்தில்  ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் ஆகிறார். பேருந்து விட்டு இறங்கும் ரஜினியின் முகம் திரையை ஆக்ரமிக்கும் போது இசை நின்று விடுகிறது.  அங்கும் இங்கும் பார்க்கும் ரஜினி பின் சரியா திரையைப் பார்த்து அட இங்கே இருக்கீங்களா என்ற தோரணையில் ஒரு சல்யூட் வைப்பார், அது ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார் வைக்கும் முத்திரை சல்யூட். 

சுரேஷ் கிருஷ்ணா ரஜினி அறிமுகக் காட்சிகளில் தனி முத்திரைகள் பதித்த இயக்குனர் என்பதில் ஐயமில்லை 

கதைக்கு மீண்டும் வருவோம் 

தன் காதலி தேவியை இழக்கும் வீரா, தாயின் வற்புறுத்தலால் மீண்டும் சென்னை வந்து பாட்டு வாய்ப்புகளை ஏற்று கொள்கிறார். 

பாட்டு கேசட் நிறுவன முதலாளியின் மகள் ரூபாவை திருமணமும் செய்து கொள்கிறார். இதற்கு பிறகு சந்தர்ப்ப வசமாய் தேவியும் வீராவின் வாழ்க்கையில் திரும்பி வருகிறார். 

இது ஒரு உணர்ச்சி பூர்வமான கதைக்கான களமாக இருந்தாலும் இயக்குனர் வெகு சாமர்த்தியமாக படத்தை நகைச்சுவை பாதையில் ஜோராக நகர்த்துகின்றனர். 

முத்து வீரப்பன் கதை என்ன ஆகிறது? 

இரு மனைவிகளையும் அவன் எப்படி சமாளித்தான் என்பது எல்லாம் படத்தின் இரண்டாம் பாதியில் இயக்குனர் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்.

வீரா படத்தில் ரஜினியின் நண்பர் வேடத்தில் செந்தில். மிகவும் கனமான பாத்திரம், ரஜினியோடு படம் முழுக்க வருகிறார், ரஜினியோடு சேர்ந்து சிரிக்க வைக்கிறார். 

அது என்ன முத்து வீரப்பன், முன்னாடியும் கட் பின்னாடியும் கட், நடுவில் இருக்கும் வீரா போதும், அது தான் சூப்பர் ஹிட் என்று இவர் பேசும் வசனம் விசில் அடிக்க வைக்கிறது. 

கடவுள் படங்களை வைத்து இவர் கொடுக்கும் ஐடியா சொதப்பும் இடமும்,  பெருமாள் கோயில் காட்சியும் தொடர் சிரிப்பைக் கொட்டும் காட்சிகள் 

கிராமத்தில் ரஜினிக்கு நண்பர்களாக கொஞ்ச நேரம் வருகிறார்கள் ஒய் ஜி மகேந்திரன்,  விவேக், இவர்கள் கூட்டணியில் ரஜினி செய்யும் How is it?  முத்திரை வசனக் காட்சிகள் வெகு பிரபலம். 

ரஜினி தாய் வேடத்தில் நடிகை வடிவுக்கரசி. பாந்தமான நடிப்பில் நிற்கிறார். 

வினுசக்ரவர்த்தி கிராமத்து பண்ணையாராக வந்து முறுக்கு மீசையில் மிரட்டுகிறார்.கிட்டத்தட்ட அண்ணாமலை கெட்டப்பிலே வருகிறார். 

அஜய் ரத்னம் பண்ணையார் மகனாக வருகிறார். ரஜினியோடு நாயகிக்காக மோதுகிறாr. அடி வாங்கி விட்டு நகர்கிறார். 

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ரஜினிக்கு பாட்டு வாத்தியார் வேடம் ஏற்று வருகிறார்.கொஞ்சம் தளபதியில் வரும் இவரது வேடத்தை நினைவு படுத்துகிறது. 

படம் நகரத்துக்கு வரும் போது அங்கு நாம் இன்னொரு நட்சத்திரப் பட்டாளத்தை சந்திக்கிறோம். 

இசைத் தட்டு நிறுவன முதலாளியாக நடிகர் ஜனகராஜ், நாயகியின் தந்தை மற்றும் ரஜினிக்கு மாமனார் வேடம். சிரிக்க வைக்கிறார்.  குறிப்பாக துணிக்கடை காட்சியும் ரஜினி விருந்துக்கு வரும் காட்சியும் இவர் சிக்ஸர் அடிக்கும் இடங்கள். 

லிவிங்ஸ்டன் படத்தில் இருக்கிறார், இவருக்கு நிறுவன மேலாளர் வேடம், அளவான வில்லத்தனம் செய்து விட்டு போகிறார். கதையை முடித்து வைக்க ஒரு பாத்திரம் இவருடையது. 

மகேஷ் ஆனந்த் என்று ஒரு அறிமுக வில்லனும் படத்தில் உண்டு. ரஜினியோடு இவருக்கு இரண்டு அதிரடி சண்டைக்காட்சிகள் உண்டு. ரஜினியும் இவரும் டூப் போடாமல் சண்டைப் போட்டு இருப்பார்கள். 

படத்தில் இரண்டு நாயகிகள் தமிழ் மற்றும் தெலுங்கு தேசங்களை அன்றைய தேதியில் ஆண்டு வந்த இரண்டு நட்சத்திரங்கள் தான் அவர்கள். 

ஒன்று மீனா, இன்னொன்று ரோஜா. 

மீனா அமைதியான அழகு, ரோஜா கொஞ்சம் ஆரவாரமான அழகு, இரண்டையும் ஆளும் ஆண்மையின் உயரம் ரஜினி. 

படத்தில் இசை பெரும் பங்கு வகிக்கிறது. 

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட - வெகு காலம் வரை தமிழ்நாட்டு இன்னிசை மேடைகளை அலங்கரித்த பாடல்களில் ஒன்று 

மலைக்கோயில் வாசலிலே சூப்பர் ஸ்டார் படப் பாடல்களில் மிகுந்த அழகுணர்ச்சியோடு எடுக்கப்பட்ட பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம் 

இன்று வரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களில் இதுவும் ஒன்று. 

ரஜினியின் சேட்டையைக் காட்டவே படத்தில் இரண்டு  பாடல்கள் உண்டு. 

அடி பந்தலில் தொங்குகிற காய்க்கு எல்லாம்.. 

அடி ஆத்துல என் அன்னக்கிளி... 

இந்த இரண்டு பாடல்களிலும் ரஜினியின் துள்ளல் எள்ளல் எல்லாம் கரை புரண்டு ஓடும். 

முந்தி முந்தி.. பாட்டு கொஞ்சமே என்றாலும் நிறைவாக வந்து போகும் 

வாடி வெத்தலப் பாக்கு  பாட்டு நகரத்து குத்து, ரோஜாவின் கவர்ச்சி விருந்து. 

மாடத்திலே கன்னி மாடத்தில் ரஜினியின் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு பாட்டு. மீனாவின் கொஞ்சல் அழகு கெஞ்ச வைக்கும் பாட்டு அது. 

வீரா படத்தில் ஒளிப்பதிவாளர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. முதல் காட்சி மலைக்கோவில் பாட்டில் வரும் முத்து என்று விளக்குகளால் பெயர் எழுதப் பட்ட  இடம் திரையில் நம் கண்களை நிறைத்து விடும். அதில் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர் பணி நம்மை கைத்தட்ட வைக்கும். 

இன்னொரு காட்சி மீனாவை ரஜினி மீண்டும் அந்த அரங்கத்தில் சந்திக்கும் காட்சி, ஒவ்வொரு விளக்காக ரஜினி போட்டு பின் மெல்லிய வெளிச்சத்தில் மீனா தெரியும் காட்சியும் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கும் இடம். 

வீரா படம் கண்ணுக்கு குளுமையான ராஜமுந்திரியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த கிராமத்து ஆற்றோர காட்சிகள் அவ்வளவு அழகு. 

வீரா படத்தில் ரோஜா,  ரஜினியின் முகத்தைக் கோலமாக வரையும் காட்சி படத்தின் கலைக் குழுவுக்கு சலாம் போட வைக்கும் ஒரு இடம். இது இப்படத்தின் ஒரு சிறப்பம்சம் என்றும் சொல்லலாம்.  

ரஜினி - மீனா காதல் ஒரு ரசனையான கவிதை.ரஜினியின் குறும்பும் மீனாவின் எழிலும் போட்டி போட்டு ரசிகர்களை மகிழ வைக்கிறது. ரஜினி -மீனா ஜோடிப் பொருத்தம் ரசிக்க வைக்கிறது. 

ரஜினி - ரோஜா காதல் ஒரு தலையாக ஆரம்பித்து பின்னர் திருமணத்தில் சேர்க்கிறது. அதில் ஒரு சின்ன பொறுப்பு சார்ந்த ரஜினி தெரிகிறார். ரோஜா ஏக்கம் கொண்ட காதலியாகவும் அன்பான மனைவியாகவும் வருகிறார். 

ரஜினியைப் பொறுத்த வரை பல்வேறு வண்ணம் பொருந்திய ஒரு பாத்திரம். கிராமத்து இளைஞனாக கொண்டாட்டம் காட்டுகிறார் என்றால் நகரத்துக்கு வந்த பிறகு பொறுப்பு கூட்டுகிறார். 

நகைச்சுவை காட்சிகளில் ரஜினியின் டைமிங் அருமையாக வேலை செய்து இருக்கிறது. 

பெருமாள் கோயில் திருமண காட்சியில் அய்யரிடம் மந்திரம் சொல்லும் காட்சி,  விருந்துக்கு சென்று அங்கே நடக்கும் சிரிப்பு கலவரம் ஆகட்டும் ரஜினி தான் காமெடியிலும் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்திருக்கிறார். 

வீரா, மோகன் பாபு நடித்த அல்லூரி முகடு என்ற தெலுங்குப் படத்தின் மறு ஆக்கம். 
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த இந்தப் படம் ரஜினிக்காக பல மாறுதல்கள் கண்டது. 

சுரேஷ் கிருஷ்ணாவின் ஒரு சிறந்த படமிது என்பது என் கருத்து. 

கொஞ்சம் தவறினால் சூப்பர் ஸ்டார் பிம்பத்திற்கு பெரிய வேட்டு வைக்கக் கூடிய கதையை மிகவும் சிரத்தை எடுத்து ரஜினி ரசிகர்களுக்கும் தமிழ் குடும்பங்களும் கொண்டாடி மகிழும் வண்ணம் ஒரு நல்ல நகைச்சுவை படமாக கொடுத்து இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. 

அண்ணாமலை, பாட்சா கொண்டாப்படும் அளவுக்கு வீரா கவனிக்கப்படுவதில்லை என்பது என் தனிப்பட்ட எண்ணம். 

மூன்று மணி நேரம் ரசிகர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு சிரிக்க வைப்பது எல்லாம் தனிக்கலை, அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கைவந்த கலை என்று 90களில் அடித்து சொன்னப் படம் வீரா.

- தேவ்

ஓவியம் : அறிவரசன்

Veera Review - Indian Express





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information