Thalapathi (1991)
Manirathnam once mentioned in an interview that the three Indian actors most difficult to make a movie with were Rajinikanth, Chiranjeevi and Amitabh Bachan. His style of moviemaking clashes with the image these actors have cultivated for themselves and the expectations their fans have from their movies. But he manages quite nicely in Thalapathi with Rajnikanth. It is definitely more a Manirathnam movie than a Rajnikanth movie. The basic, familiar story (with its roots in one of our most famous epics) has been skilfully modernised with his trademark screenplay and dialogs, great cinematography and foot-tapping numbers.
Surya (Rajinikanth) was abandoned by his mother as a baby and has grown up as a rowdy in the slums. The area is ruled with an iron hand by local dada Devaraj (Mammootty), whose thug is killed by Surya. The two are against each other initially but become thick friends soon. Surya thereafter becomes Deva's Thalapathi (commander), carrying out his orders. Surya's mother(Srividya) has since married and has a son Arjun (Arvind), who comes to the town as collector. Surya loves Brahmin girl Subbulakshmi (Shobana) but her father marries her off to Arjun while Surya weds Padma(Banupriya) whose husband he had earlier killed. Surya and his mother soon comes to know the truth but are torn between relations and loyalties since Arjun vows to eliminate Deva and Surya while Deva swears revenge on Arjun for police atrocities.
Manirathnam uses the Mahabharath as the base with modern day versions of the main characters here and makes several nods to leave us in no doubts about this fact. So we have characters named Surya(for Karnan) and Arjun(for Arjuna). There also a couple of other hints like the name of a town where Arjun goes to quell some riots(Pandavapuram). The ending is different here, though I believe this might have something to do with the standing of its main stars.
Thalapathi gives us some strong characters and then builds on the emotional interactions between them. Naturally, the movie works best during the scenes of confrontation between these characters. Sparks fly during Rajni's meeting with Mammootty in the rain and later, when the two go up against Arvind Swamy. This scene is picturised very well with the camera cutting between the two teams on opposite sides of the table and Rajni's aggression providing an effective foil to Mammootty's calmness. Sentiments take the upper hand once the hidden relationships are revealed. Rajni's loyalty to Mammootty and Srividya's desire to see neither Arvind or Rajni hurt provide ample fodder for sentiments.
Romance takes a backseat to emotions and we see very little of Manirathnam's touches in this department. Shobana falls for Rajni a little too quickly but the scene where she reveals that she likes Rajni's 'goonda' activities is nicely picturised in a great location. Their meeting after her marriage to Arvind is also conducted naturally and decently.Rajni only has a 'guardian' relationship with Banupriya inspite of their marriage but the girl who plays her daughter is cute and delivers her lines well in her conversations with Rajni. Mammootty and Geetha make a nice radiant couple.
Rajinikanth gets a chance to emote quite a bit more than his other recent movies and does quite well though his fans would not have been happy to see their hero being tortured by a policeman and not fighting back(though he gets his revenge later) or losing the girl he loves. He displays some nice footwork in two songs. Mammootty is dignified and the Manirathnam's clipped dialogs suit his character well. Arvind Swamy looks young and smart in his debut and stands up well to the much more senior artistes. Shobana uses her large, expressive eyes to good use in the initial scenes when she is scared of Rajni and later when she tearfully asks Mammootty to let go of her father. It looks rather odd to see Srividya, who played Rajnikanth's wife in his first movie, play his mother here but she does her job well while Jaishanker gives her good support. Banupriya is underused.
Thalapathi, like all Manirathnam movies, is technically excellent. Manirathnam stuck with Santosh Sivan, his cameraman for Roja. The photography though is completely different. Here, all the scenes have an orange hue and this lends an even greater effect to the already glorious scenes like sunsets. Ilaiyaraja reserved some of his best songs for Manirathnam and things are no different here. Adi Raakkaamma... is extremely catchy and the change into the slow tune towards the end is surprising and done very smoothly. Yamunai Aatrile... is melodious and its shortness leaves us asking for more. Sundari... is another melodious duet while Kaattukuyilu..., with SPB and Jesudas lending voices to Rajni and Mammootty, is fast-paced and nicely choreographed.
In a nutshell, Thalapathi delivers as expected. Justified by great actors and technical crew, Thalapathi marks an auspicious beginning for a new age crime drama in Indian cinema. A timeless film, and has a cult following all for the right reasons.
"தளபதி" நினைவுகள்
இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் பேட்டி எடுத்து இதுவரை நமக்குத் தெரியாத மணிரத்னம் கருத்துகளை நமக்குப் பரத்வாஜ் ரங்கன் தெரிவித்து இருந்தார். அதில் தலைவர் ரசிகனாகத் தளபதி குறித்து நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று ஆர்வமாக இருந்தேன் ஆனால், அந்த அளவிற்கு இல்லை.
எனவே, தளபதி படம் குறித்துச் சில தகவல்களைப் பகிர வேண்டும் என்று விரும்பியதே இக்கட்டுரை.
தளபதி படம் வெளியான போது நான் தலைவர் ரசிகன் அல்ல அதனால் படம் தொடர்பான சில நினைவுகளைத் தவிர எதுவுமே தெரியாது ஆனால், தற்போது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
என் நினைவில் இருக்கும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு: இக்கட்டுரை ரஜினி ரசிகர்களுக்கானது அதோடு “தளபதி” படத்தை ரசித்தவர்களுக்கானது. மற்றவர்கள் விருப்பம் இருந்தால் தொடரலாம்.
குனித்த புருவம்
பள்ளி மாணவர்கள் பலர் குறிப்பாகச் சுமாராகப் படிப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் படத்தில் வரும் “குனித்த புருவமும்” பாடல் ரொம்பப் பிடிக்கும் காரணம் “தமிழ்” பாடப் புத்தகத்திலும் இந்தப் பாடல் வந்தது அதோடு தேர்விலும் வந்ததால், பலரும் சரியாக எழுதி விட்டார்கள்.
இந்தப் பாடல் அனைத்து மாணவர்களுக்கும் மனப்பாடம் செய்ய எளிதாக அமைந்ததும் இது பற்றி அனைவரும் பேசிக்கொண்டு இருந்ததும் நன்றாக நினைவு இருக்கிறது. நானும் தேர்வில் பிழையில்லாமல் எழுதினேன் 🙂 .
தற்போது போல DVD CD வெளியாகாமல், கேசட்டுகள் பிரபலமாக இருந்த காலம். “கோபி” முத்துசா வீதியில் என் அண்ணனின் (பெரியப்பா மகன்) கடை இருந்தது. அதன் அருகே பல எலக்ட்ரானிக் கடைகளில் பெரும்பாலும் “ராக்கம்மா” பாடல் பாடிக் கொண்டே இருக்கும்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அனைவருக்கும் தெரிந்த விசயம். எங்குச் சென்றாலும் தளபதி பாடல்களே!
தலைவருக்கும் நடனத்திற்கும் வெகு தூரம் என்றாலும் ஸ்டைல் என்ற ஒன்றின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுவார். மற்ற திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வித்யாசமாக படமாக்கப்பட்ட விதமும் நடனமும் அனைவரையும் கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.
என்னுடைய இன்னொரு அண்ணன் கோபி பேருந்து நிலையம் அருகே மியூசிகல்ஸ் கடை வைத்து இருந்தார். அதில் பதிவு செய்ய ஏகப்பட்ட பேர் வந்தது நினைவில் உள்ளது. அனைத்து கடைகளிலும் ராக்கம்மா, காட்டுக்குயிலு மற்றும் சுந்தரி பாடல்கள் தான் ஓடிக்கொண்டு இருக்கும்.
படம் எங்கே பார்த்தேன்?
இவையெல்லாம் நன்றாக நினைவு இருக்கிறது ஆனால், படம் எங்கே பார்த்தேன் என்று நினைவில்லை. ஒரே ஒரு காட்சி மட்டும் நினைவு இருக்கிறது உடன் என் அண்ணனும் இருந்தார் இதை அடிக்கடி கூறுவதால் இது மட்டும் நினைவில் இருக்கிறது.
கலிவரதன் “நான் யார் தெரியுமா?” என்று கேட்டதும் திரையரங்கில் ஒருவர் “மொட்டையன்’ என்று கிண்டலடித்தது மட்டுமே நினைவில் இருக்கிறது 🙂 .
தளபதி படம் தற்போது தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதெல்லாம் நானும் என் அண்ணனும் இந்தக் காட்சியையும், “தொட்ரா பார்க்கலாம்” காட்சியையும் நினைவு கூறி மகிழ்வோம்.
நான் பாட்ஷா பார்த்துத் தான் தலைவர் ரசிகன் ஆனதால், இதில் இருந்து தான் அனைத்தும் நினைவு இருக்கிறது.
உண்மையைக் கூறினால் பாட்ஷா படத்திற்குப் பிறகு தான் தளபதி படத்தைப் ரசித்துப் பார்த்தேன். ஒருவரை நமக்குப் பிடித்த பிறகு இதுவரை ரசிக்காத / அதிகம் ஈர்க்கப்படாத காட்சிகள் எல்லாம் அசத்தலாகத் தெரியும். அது போலானது தளபதி.
காலத்திற்கும் பெயர் கூறும் படம்
மணிரத்னம், தலைவர் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான படத்தைக் காலத்திற்கும் பெயர் கூறும் படத்தைக் கொடுத்து இருக்கிறார். வழக்கமான தலைவர் படங்களில் இருந்து மாறுபட்ட படம் என்று உறுதியாகக் கூற முடியும்.
மாஸ்
இன்றும் “தொட்ரா பார்க்கலாம்..” என்று கிட்டியிடம் கூறும் வசனம் பலரிடையே பிரபலம்.
மாஸ் என்று கூறப்படும் மிரட்டலான காட்சி இது. இந்தக் காட்சியைத் தலைவரைத் தவிர எவர் செய்து இருந்தாலும், அது மிகை நடிப்பாகவோ அல்லது சாதாரணமான காட்சியாகவோ மாறி இருக்கும். இது போல நினைவு வைத்து அனைவரும் கூறும் காட்சியாக வந்து இருக்காது.
மணிரத்னம் அவர்கள் எப்படி இதைக் கற்பனை செய்தார்? நடைமுறையில் இது போல ஒரு ரவுடி கூற முடியுமா? அப்படிக் கூறுவது போல வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? இதெல்லாம் எப்படி யோசித்தார் என்று யோசனையாக இருந்தது.
மணிரத்னம் பஞ்ச் வசனங்கள் வைப்பவர் போலவும் தெரியவில்லை ஆனால், “இது சூர்யா சார் உரசாதீங்க!” வசனம் எந்த மன நிலையில் வைத்து இருப்பார்?
இது பஞ்ச் வசனம் போலவும் இல்லை. இதை வேறு யார் கூறி இருந்தாலும் காலம் கடந்தும் பலருக்கு நினைவில் இருக்க வாய்ப்பே இல்லை.
இந்த வசனம் தலைவரால் பிரபலமானதா? அல்லது மணிரத்னம் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கொடுத்ததால் பிரபலமாகியதா என்று எனக்குக் குழப்பம் இருக்கிறது.
அரவிந்தசாமி
அரவிந்தசாமிக்கு இந்தப் படம் நடித்த போது 20 வயது தான் ஆகி இருந்தது என்று சமீபத்திய விகடன் பேட்டியில் கூறியிருந்தார். நான் கூட 25 க்கு மேல் இருக்கும் என்று நினைத்தேன்.
கலெக்டர் கதாப்பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார்.
நறுக் வசனங்கள்
தலைவர் தங்கள் தரப்பு நியாயத்தை நீட்டி முழக்கிக் கூறியதும் இறுதியாகப் “பேசி முடிச்சுட்டீங்களா?” என்று கேட்பார். இந்த ஒரு பதிலில் அவர்கள் அவ்வளவு பேசியதை ஒன்றுமில்லாமல் ஆக்கியதையும் இனி பேசுவது பயனில்லை என்றும் உணர்த்தி இருக்கும்.
மணிரத்னம் சுருக்கமாக வசனங்களை வைப்பார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். அவை தளபதி படத்தில் ஏகப்பட்டது இருக்கும்.
தலைவரை சிறையில் இருந்து விடுவிக்கும் போது
ஏன்?
தேவா
அம்ரிஷ் பூரி பேசும் போது (இந்த இடத்தில் வரும் பின்னணி இசை அசத்தல்)
அவன் கூட இருந்தால் அழிஞ்சு சாவ
உங்கூட வாழறதை விடத் தேவா கூடச் சாவது மேல்
நல்லா இரு
மம்முட்டி –> அரவிந்தசாமி
இப்ப உங்களுக்கு என்ன வேணும்?
எல்லாத்தையும் நிறுத்தனும்
முடியாது.
சாருஹாசன் கூறும் “நான் செத்தப்புறம்“
கலிவரதன் –> மம்முட்டி
வயசாகுதுல்ல.. சாவுக்காக காத்துட்டு இருக்கிறேன்
யார் சாவுக்கு?
என்று கூற ஏகப்பட்ட வசனங்கள் இருக்கிறது. இதெல்லாம் சிறிய வசனங்கள் என்றாலும், மிகவும் சக்தி வாய்ந்த வசனங்களாகவும் எளிதில் நினைவில் இருக்கும் வசனங்களாகவும் இருக்கிறது.
படத்திற்கு இரண்டு முடிவு
தளபதி படத்தைப் பற்றி அப்போது இருந்து தற்போது வரை தொடரும் ஒரு பேச்சு… படத்திற்கு இரண்டு முடிவு. தமிழில் மம்முட்டி இறந்து விடுவார் மலையாளத்தில் ரஜினி இறந்து விடுவார் என்பது ஆனால், மணிரத்னம் அப்படி எதுவும் இல்லை என்று கூறி விட்டார்.
எப்படி நம்பிக்கைக்கு உரியவரானார் ?
இதில் மம்முட்டி எப்படித் தலைவரை உடனே தன் தளபதியாக்கிக் கொள்கிறார் என்பது தான் புரியவில்லை. இதற்குச் சரியான காரணம் எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஏற்கனவே பழைய ஆட்கள் பலர் இருக்க உடனே எப்படி இவர் நம்பிக்கைக்குரிய நபரானார் என்பது எனக்கு இருக்கும் சந்தேகம்.
ஸ்ரீவித்யா சிறு வயதில் எப்படி கர்ப்பமானார் அதற்குக் காரணம் யார்? என்பதை மக்களே ஊகித்துக் கொள்ளட்டும் என்று விட்டதாக மணிரத்னம் குறிப்பிட்டு இருக்கிறார்.
இளையராஜா
இந்தப் படத்தில் சிறப்பாகக் கூற எத்தனையோ விசயங்கள் இருக்கிறது என்றாலும் அத்தனை விசயங்களும் நமக்குப் பிரம்மாண்டமாகவும் ஒரு மாஸ் தோற்றத்தைக் கொடுத்ததற்கும் முக்கியக் காரணம் இளையராஜா என்றால் மிகையில்லை.
என்ன ஒரு அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை!! பின்னணி இசையைப் பற்றி மட்டுமே என்னால் ஒரு கட்டுரை எழுத முடியும். அந்த அளவிற்கு வரைமுறையில்லாமல் அசத்தல் இசை கொடுத்து இருக்கிறார். பின்னணி இசையைக் கேட்டாலே காட்சியைக் கூற முடியும்.
அந்த அளவிற்குப் பின்னணி இசை அனைவர் மனதிலும் இருக்கும். இதற்கு யாருடைய ரசிகராகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
நான் கூறுவது மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் ஆனால், உண்மை. ஏற்கனவே கூறி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் பாடலின் இசை கேட்டுக் கண் கலங்கினேன் என்றால் அது “சின்னத்தாயவள்” பாடலில் வரும் வயலின் இசை கேட்டுத் தான்.
இளையராஜா எத்தனையோ அற்புதமான இசையைப் பல்வேறு படங்களில் கொடுத்து இருக்கிறார் ஆனால், எனக்கு இந்த வயலின் இசையே உலுக்கியது. உங்களுக்கு மனது வருத்தம் அல்லது சோகம் இருக்கும் நேரத்தில் இதைக் கேட்டுப் பாருங்கள் கலங்கி விடுவீர்கள்.
இவரெல்லாம் மனுசனே கிடையாது.
முதன் முதலாக மம்முட்டி தலைவரை ஒரு பாலத்தில் மழை பெய்து கொண்டு இருக்கும் நேரத்தில் மிரட்டும் போது வரும் பின்னணி இசையெல்லாம் கேட்டு ஒவ்வொரு முறையும் பிரம்மித்து இருக்கிறேன். இசையில் பிரம்மாண்டம் என்கிறார்களே அதைக் காண முடியும்.
அதாவது அந்தக் காட்சியை அடிதடி இல்லாமலேயே ஒரு படி மேலும் மிரட்டலாக கொண்டு வர உதவி இருப்பது பின்னணி இசை தான்.
காலத்தால் அழியாத பல பாடல்களை, பின்னணி இசையைக் கொடுத்த மணிரத்னம் இளையராஜா கூட்டணிக்கு இதுவே கடைசிப் படமானது. “ரோஜா” படத்தில் ரகுமான் அமைந்தது யதேச்சையானது என்று கூறி இருக்கிறார் ஆனால், நம்பத்தான் முடியலை.
மணிரத்னம் இளையராஜா இருவருக்கும் “ஜூன் 2” பிறந்த நாள் .
ராக்கம்மா / சுந்தரி கண்ணால் ஒரு சேதி / காட்டுக்குயிலு
ராக்கம்மா பாடல் BBC உலகளவில் தேர்வு செய்த சிறந்த பாடல்களில் ஒன்றாக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. “சுந்தரி கண்ணால் ஒரு சேதி” ஒரு காவியத்தையே படைத்து இருக்கும். இசையும் அதற்கேற்ப காட்சியமைப்பும் காவியமாக இருக்கும்.
இதில் தலைவர் தலைமுடியைக் கட்டி கொண்டை போலப் போட்டுக் கொண்டு வெற்று உடம்புடன் இருக்கும் காட்சி அசத்தலாகவும் புதுமையாகவும் இருக்கும்.
தலைவரை எப்போதும் ஒரே மாதிரியான ஒப்பனையிலேயே பார்த்த ரசிகர்களுக்கு இது மிக வித்யாசமாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தச் சமயத்தில் நான் தலைவர் ரசிகன் இல்லையென்பதால் இது குறித்து ரசிகர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.
ராக்கம்மா பாடலை எட்டு இரவுகள் மகாபலிபுரம் மலையில் படப்பிடிப்பு நடத்தியதாக முன்பு படித்து இருக்கிறேன். இதில் நடித்தவர் இந்தி நடிகை சோனுவாலியா. இவர் பெயர் ஏனோ எனக்கு இன்னும் மறக்கவில்லை.
“காட்டுக்குயிலு” பாடலில் இசையுலகின் ஜாம்பவான்களான SPB மற்றும் யேசுதாஸ் இருவரையும் பொருத்தமாகப் பாட வைத்தது இளையராஜாவின் சாதனை. நடிகர்களில் இரு திறமையானவர்கள் ஒரு படத்தில் என்பது போல பாடகர்களில் இரு திறமையானவர்கள் ஒரு பாடலில்!
மலையாள நடிகர் மம்முட்டிக்கு பொருத்தமாக மலையாளப் பாடகர் யேசுதாஸ், ரஜினியே பாடுவது போல இருக்கும் குரலுக்கு வழக்கமான SPB. இவையெல்லாம் அதுவா அமையனும்!
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு
“சின்னத்தாயவள்” இரண்டாவது பாடல் கோவிலில் வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருக்கும். சந்தோஷ் சிவன் முதன் முறையாக மணிரத்னம் அவர்களுடன் இணைந்த படம். பலரும் இதற்கு PC ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவு என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
ஒளிப்பதிவாளர் யாராக இருந்தாலும் மணிரத்னம் தன்னுடைய தனித் தன்மையைக் காட்சிகளில் கொண்டு வந்து விடுகிறார். படத்தைப் பார்த்தாலே இது மணிரத்னம் படம் என்று அனைவரும் கூறும் படி காட்சியமைப்புகள் இருக்கும்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு “தளபதி” படத்தை எங்கேயோ கொண்டு சென்று இருக்கிறது. எத்தனை அழகான காட்சிகள்! மறக்க முடியுமா..!!
ஷோபனா
எனக்குக் கூற நிறைய இருக்கிறது என்றாலும் ஷோபனா தலைவர் குறித்து நான் மிகவும் ரசித்த இரு காட்சிகளைக் கூற விரும்புகிறேன்.
ஷோபனா அரவிந்தசாமியை திருமணம் செய்ய வேண்டியதாக தலைவரிடம் கூறியதும் தலைவர் கடுப்பாகித் திட்டி அனுப்பிய பிறகு மனசு கேட்காமல் திரும்பிப் பார்க்கும் காட்சி காதலித்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தக் காட்சியின் வலி புரியும்.
இதே போல இறுதியில் அரவிந்தசாமியை காண வரும் தலைவர், ஷோபனாவைப் பார்த்து “நல்லா இருக்கியா?” என்று கேட்பதும் அதற்கு ஷோபனா பதில்களும் ரசனையான காட்சிகள்.
மம்முட்டி
பானுப்ரியா மம்முட்டியிடம் “உங்கள் ஆட்கள் என்னிடம் பணம் கொடுக்கும் வரும் போது தவறாக நடக்கிறார்கள் நாங்கள் ஊருக்கே போகிறோம்” என்று கூறுவார். அந்தக் காட்சியில் மம்முட்டியின் நடிப்பு தாறுமாறாக இருக்கும்.
உடனடி ஆத்திரம் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவரது உடல் மொழி, நடிப்பு என்று சொல்லவே முடியாதபடிக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும்.
இந்தக் காட்சி மட்டுமல்ல தலைவர், அரவிந்தசாமி அண்ணன் என்று தெரிந்ததும் ஒரு அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பார் அதுவும் இதே போல.
மம்முட்டி மிகச் சிறந்த தேர்வு. இவருடைய கம்பீரமான குரலும் இவரது கதாப்பாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கும். இவரது குரல் Base குரல் போல இதில் இருக்கும்.
மம்முட்டி மலையாளத்தில் மிகப்பெரிய நடிகர். தலைவர் தமிழில் மிகப்பெரிய நடிகர்.
இருவரையும் இணைத்து சமமான அந்தஸ்தில் யார் நடிப்பு சிறந்தது என்ற கேள்விக்கே இடம் தராமல் இருவரையும் மிகச் சரியாக பயன்படுத்தி இருக்கும் மணிரத்னம் அவர்களின் திறமை மிரட்டுகிறது. இதெல்லாம் சாதாரணம் விசயமல்ல.
பிரபலமான இருவர்
இந்தப் படத்தில் சிறு காட்சியில் வந்து இன்னும் பலரின் நினைவுகளில் இருப்பவர்கள் இருவர். ஒருவர் அறிமுகச் சண்டைக் காட்சியில் வரும் சண்டை நடிகர் “தினேஷ்”, இதன் பிறகு “தளபதி தினேஷ்” என்று அழைக்கப்படுகிறார்.
பின்னர்ச் “சந்திரமுகி” படத்திற்குச் சண்டைக் காட்சியும் அமைத்தார்.
இன்னொருவர் “காட்டுக்குயிலே” பாடலில் வரும் ஷர்மிலி தனித்துத் தெரியப்பட்டு (அதற்கு அவரது முடி அலங்காரம் ஒரு காரணம்) பலரால் இன்றும் நினைவில் இருப்பவர். இது குறித்து சில வருடங்கள் முன்பு ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
தளபதி Font
எனக்கு நினைவில் இருக்கும் வரை தளபதி படத்தின் Font வித்யாசமாகக் கவர்ச்சிகரமாக வந்தது. இதற்கு முன் சில படங்கள் வந்து இருந்தாலும் “தளபதி” போல மனதில் நிற்கவில்லை. இன்னொன்று என்றால், விக்ரம் பட Digital font கூற முடியும்.
இது குறித்து மணிரத்னம் குறிப்பிடும் போது
“அப்போது இதெல்லாம் புதிதாக இருந்தாலும் தற்போது இவற்றை வடிவமைக்கவே பல நிறுவனங்கள் வந்து விட்டன, அவர்களிடம் கூறி விட்டால் நம் விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைத்துக் கொடுத்து விடுவார்கள்” என்று கூறி இருக்கிறார்.
தனித்துவமான நடிப்பைப் பெற்ற மணிரத்னம்
“கோச்சடையான்” பேட்டியில் (இது எனக்குப் பிடிக்காத ஒரு பேட்டி கூட, விவேக் ரொம்பப் பில்டப் செய்து ரசிகனுக்கே யப்பா போதும் என்கிற அளவிற்கு ஆனது) மணிரத்னம் தன்னிடம் வேலை வாங்கியதை தலைவர் குறிப்பிட்டு இருந்தார்.
“அதில் கோபப்படும் போது அதை நினைங்க இதை நினைங்க என்று கூறினார்.. கோபப்படுறதுக்கு எதுக்குயா இதெல்லாம் நினைக்கணும்..!
அடிப்படையில் நான் சிறந்த நடிகன் இல்லை.. அதனால் அப்படியே உள்வாங்கி நடிப்பதெல்லாம் எனக்குத் தெரியாது, அப்படி நடித்ததும் இல்லை“
என்று கூறினார்.
ஆனால், இறுதியில் தன் வழக்கமான நடிப்பை விட்டு அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்வதாகக் கூறி அதன் படி நடித்து இருக்கிறார். இதுவே இன்றும் தலைவரை மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது என்று நம்புகிறேன்.
“ஒரு அணைப்பகுதி படப்பிடிப்பில் அனைவரும் தயாராக இருக்க, தனக்கு தற்போது நடிக்கும் மனநிலை இல்லையென்று கூறி படப்பிடிப்பை ரஜினி ரத்து செய்து விட்டார் ஆனால், அடுத்த நாள் ஒரே டேக்கில் இந்தக் காட்சியை நடித்துக் கொடுத்தார்“
என்று மணிரத்னம் குறிப்பிட்டு இருக்கிறார்.
மணிரத்னம் தலைவரின் நடிப்பிற்கு Benchmark ஆக வைத்து இருந்தது “முள்ளும் மலரும்” படத்தைத்தான். இதை மனதில் வைத்தே “தளபதி” காட்சிகளை அமைத்ததாகக் கூறியிருக்கிறார்.
அதோடு அப்போது இவருக்குள் மாற்றத்தை ஏற்படுத்தியதில் “முள்ளும் மலரும்” (இயல்பான காட்சியமைப்புகள்) முக்கியப் பங்கு வகித்து இருக்கிறது.
இறுதியில் தலைவருக்குக் குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையென்று விடுதலை செய்யப்படும் காட்சி சினிமாத்தனமாக இருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது என்று அரைகுறையாக நினைவு இருக்கிறது.
படம் எப்படித் தொடங்கியது?
மணிரத்னத்தின் அண்ணன் GV தலைவருக்கு நெருக்கம் என்பதால், தலைவர் தான், வெங்கடேஷ் மூலம் மணிரத்னம் அவர்களை அணுகி படம் செய்யலாம் என்று கேட்டு இருக்கிறார்.
தலைவருடன் படம் என்று முடிவாகியதும் கதை பிரம்மாண்டமாகவும் அதே சமயம் தன்னுடைய படமாகவும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து துரியோதனன் / கர்ணன் கதையான மகாபாரதத்தில் மாற்றங்கள் செய்து கதை உருவாக்கியிருக்கிறார்.
இக்கதையைக் கூறியதும் தலைவர் ஏற்றுக் கொண்டு மம்முட்டி கதாப்பாத்திரத்திற்கு சக்தி வாய்ந்த நடிகரை போடலாம் என்று பரிந்துரைத்து இருக்கிறார். அப்படி இருந்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் மணிரத்னம் கூறும் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது.
“ஒரு நடிகராக அவருக்குத் தன் திறமை மீது முழு நம்பிக்கை இருந்தது. அவருக்குக் கதையின் கருவும் கதாப்பாத்திரமும் பிடித்து விட்டால் வேறு எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ள மாட்டார்.”
தலைவருக்கு எப்போதுமே தன் மீது நம்பிக்கை இருக்கிறது. எனவே தான் வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். வில்லன் சக்தி வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே கதாநாயகன் கதாப்பாத்திரம் எடுபடும். இதை நன்றாக உணர்ந்து இருக்கிறார்.
எனவே, தலைவருக்கு இணையான பலம் உள்ள மம்முட்டி கதாப்பாத்திரத்தை நினைத்து பயக்கவில்லை. “பாட்ஷா” இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்பட முக்கியக் காரணங்களுள் ஒருவர் ரகுவரன். எவராலும் மறுக்க முடியாது.
எனக்கு இன்றளவும் இருக்கும் ஏக்கம் எந்திரனில் “ரகுவரன்” நடிக்கவில்லையே! என்பது. இந்த சமயத்தில் காலமாகி விட்டார் 🙁 . “சிவாஜி” கவுரவத் தோற்றமே கடைசித் தலைவர் படம்.
வலிக்கும் வார்த்தைகள்
தளபதி படத்தில் சுருக்குனு தைக்கும் வார்த்தைகள் உண்டு.
தலைவர் அரவிந்தசாமியிடம் பேசும் போது உங்க கூடப்பிறந்த அண்ணன் சொல்வதா நினைத்துக்குங்க என்றவுடன் “உன்னை மாதிரி ஒரு அண்ணன் எனக்குப் பிறந்து இருந்தால், உன்னை அப்பவே விட்டெரிஞ்சு இருப்பாங்க” என்று கூறுவார்.
கரக்ட் சார்… கரக்ட் என்று கூறும் காட்சி உண்மையிலே அந்த நிலையில் இருந்தால் ஒருவருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்க வைக்கும் காட்சி. ஏற்கனவே மனதளவில் அனைத்தையும் இழந்த ஒருவனை அறியாமலே மேலும் குத்திக் கிழிக்கும் வார்த்தை.
பொருத்தமான இடத்தில் வைக்கப்பட்ட வசனம். இதை விடச் சரியாக இந்த வசனத்தை வேறு எங்குமே பயன்படுத்தி இருக்க முடியாது.
இதே போலத் துவக்கத்தில் கிராமத்தில் போர் போட்டுத் தண்ணீர் வந்தவுடன் “தப்பு பண்ணிட்டியேம்மா! ஒரு மகனோடு நிறுத்திட்டியேம்மா” என்று கூறும் போது ஒரு தாயின் நிலையில் “ஸ்ரீவித்யா” நிலை பரிதாபமானது.
அரவிந்தசாமி கேட்டதுக்கு எந்த விதத்திலும் குறைவானது அல்ல ஆனால், இரு காட்சிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும்.
25+ வருடங்கள்
படம் வெளியாகி 25+ வருடங்களாகிறது. இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை இப்படத்தைப் பார்த்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றைக் கண்டு ஆச்சர்யப்படலாம் ஆனால், முதல் முறை இத்தனை விசயங்களை எப்படி யோசித்து எடுத்து இருக்க முடியும்?
இதெல்லாம் யோசித்து வைக்கப்பட்டதா? எதிர்பாராமல் க்ளிக் ஆகியதா? உண்மையில் இது போல ஏகப்பட்ட கேள்விகள் என்னிடம் உள்ளது ஆனால், புத்தகத்தில் கதை / தொழில்நுட்பத் தகவல்களே தளபதி படத்திற்கு அதிகம் கேட்கப்பட்டு இருந்தது.
நான் அதிகம் எதிர்பார்த்தது இது போன்ற உணர்வுப் பூர்வமான காட்சிகளும், வசனங்களும், மிரட்டிய பின்னணி இசை பற்றியும் தான். சில இடங்களில் இவரின் கேள்விகளுக்கு (மசாலா படம்) மணிரத்னம் கோபம் அடைந்து பதில் கூறியிருக்கிறார்.
அனைவரின் எதிர்பார்ப்பையும் ஒருவரால் நிறைவேற்ற முடியாது ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். இனி எப்போது “தளபதி” பற்றிப் பேசப் போகிறார்?! என்ற என் ஆதங்கமே கூற வருவது.
கட்டுரையை முடிக்க மனமில்லாமல் முடிக்கிறேன்.
கொசுறு 1
உண்மையில் இப்புத்தகத்தில் நான் இன்னும் தளபதி குறித்து எதிர்பார்த்தேன் அவை இல்லாததால் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதலாம் என்று தான் இதை ஆரம்பித்தேன் ஆனால், சத்தியமாக இவ்வளோ எழுதுவேன் என்று நினைக்கவில்லை.
இதில் நான் கூற நினைத்ததில் 30% தான் கூறி இருப்பதாகக் கருதுகிறேன். எனக்குள்ளே “தளபதி” குறித்து இத்தனை செய்திகள் இருப்பதே எனக்கே தற்போது தான் தெரியும்.
கொசுறு 2
இதில் நான் “ரஜினி” என்று கூறாமல் “தலைவர்” என்று தான் கூறி இருப்பேன். இதற்குக் காரணம் முன்பு தலைவருக்குத் திரை ரசிகனாக இருந்தேன் ஆனால், நாளடைவில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு / கருத்துகளுக்குப் பெரிய ரசிகனாகி விட்டேன்.
அவர் மீது இருக்கும் மதிப்பு / வயதின் காரணமாகப் பெயர் கூறி என்னால் தற்போது அழைக்க முடியவில்லை என்பதாலே “தலைவர்” என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
- கிரி
(Written in 26 August 2015)
Dhalapathi Review by The Indian Express
DHALAPATHI - KALKI REVIEW
(24.11.1991 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|