Thanikaattu Raja (1982)
தனிக்காட்டு ராஜா 1982 ல் V.C. குகநாதன் எழுதி இயக்கிய தமிழ் மொழி அதிரடி திரைப்படமாகும். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் ஜெய்சங்கர், விஜய் குமார், சத்ய கலா மற்றும் Y.G. மகேந்திரன் ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. மேலும் ''சந்தன காற்றே'' மற்றும் ''ராசாவே உன்னை நான்'' ஆகிய பாடல்கள் 1982 ல் பெரும் பிரபலமடைந்தது. சத்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் D. ராமநாய்டு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். P.S. நிவாஸ் ஒளிப்பதிவில் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
கதை
சூரி ஒரு நேர்மையான இளைஞன். அவன் மெக்கானிக் தொழில் செய்து கொண்டு இருப்பான். பெரும்பாலும் நீதி மற்றும் நியதிற்காக போராடி சிக்கலில் மாட்டிக்கொள்வான். அவர் ஒரு பணக்கார பெண்ணான வாணியை காதலிக்கிறார். ஆனால் வாணியின் தந்தை அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய மேலாளர் மூலமாக அந்த காதலை முடித்துக் கொள்ளமாறு மிரட்டுகிறார். அப்போது நடைபெறும் சண்டையில் வாணியின் மானத்தை காப்பாற்ற மேலாளரை சூரி கொலை செய்து விடுகிறான். அதனால் சூரிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்தி சிறை தண்டனையாக மாற்றுவதற்கு வாணி ஒரு பணக்கார மற்றும் முரட்டுத்தனமான மனிதனை திருமணம் செய்து கொள்கிறாள். அப்போது தான் அவரது பணத்தை பயன்படுத்தி சூரியின் தண்டனையை குறைத்து காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறாள்.
விடுதலை ஆனபிறகு வாணி வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை அறிந்து குடி பழக்கத்திற்கு அடிமை ஆகிறான் சூரி. அதன் பின் தனது கிராமத்திற்கு திரும்பி செல்கிறார். அங்கு தனது நேர்மையான குணத்தால் கிராம மக்களிடையே மிகவும் பிரபலம் அடைகிறார். அங்கு அவர் தேவசாசியாக மாற வற்புறுத்தப்படும் பெண் வித்யா என்பவளை காப்பாற்றி அடைக்கலம் கொடுக்கிறார். பின்னர் அவளை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அவர் மது அருந்தும் பழக்கத்தை விடவில்லை. வாணி அவரை சந்தித்து குடி பழக்கதை விட்டுவிடுமாறு கேட்கிறாள். அதன் பின் ஒரு புது மனிதனாக மாறுகிறார் சூரி. வாணி இன்றும் சூரியுடன் பழகுவதாக அவளது கணவர் பொய்யான குற்றம் சாட்டுவார். அவ்வாறு கொடுமைகள் அனுபவித்தாலும் திருமணத்தின் புனிதத்தை காப்பாற்றுவதற்காக அவள் அமைதிகயாக இருப்பாள். சூரி மற்றும் வாணியின் வழக்கை இயல்பு நிலைக்கு திரும்புமா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - சூரி
ஸ்ரீதேவி - வாணி
ஸ்ரீப்ரியா - வித்யா
ஜெய்சங்கர் - எத்திராஜ்
மேஜர் சுந்தர்ராஜன் - ஜெய் பிரகாஷ்
சங்கிலி முருகன் - வடிவேலு '
Y.G. மகேந்திரன் - ரவி
விஜய குமார் - வாசு
V.K. ராமசாமி - ''சேலையூர்'' S.K.R
வென்னீராடை மூர்த்தி - கன்னிசாமி
தேங்காய் ஸ்ரீனிவாசன் - சிவா
R.S. மனோகர் - ராஜசேகர்
சத்யகலா - சீதா
ராஜேஷ் - எத்திராஜின் சகோதரர்
K. கண்ணன் - பரந்தாமன்
K. நட்ராஜ் - கிராமத்தில் வசிப்பவர்
C.L. அனந்தன் - அடியாள்
M.R.R. வாசு - வித்யாவின் மாமா
Y. விஜயா - மாதவி
இடிச்சப்புளி செல்வராசு - பொன்னுசாமி
செந்தாமரை - நில உரிமையாளர்
Jr. மனோகர் - சூரியின் நண்பன்
I.S. ராமசந்திரன் - ராமு
V. கோபாலகிருஷ்ணன் - சங்கரலிங்கம்
சில்க் ஸ்மிதா (சிறப்பு தோற்றம்)
THANIKATTU RAJA - KALKI REVIEW
(04.04.1982 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)
|