Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Velaikaran (1987)

வேலைக்காரன் 1987 ல் S.P. முத்துராமன் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி அதிரடி நகைச்சுவை திரைப்படமாகும். ரஜினிகாந்த், சரத் பாபு மற்றும் அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ''நமக்கு ஹலால்'' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மறுஆக்கமே ''வேலைக்காரன்'' திரைப்படமாகும். 7 மார்ச் 1987 ல் இத்திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கண்டது.  

கதை 

சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செல்வந்தரின் குழந்தையை கொலை செய்ய பார்க்கிறது ஒரு கும்பல். அதை தடுத்து, அந்த குழந்தையை காப்பாற்றி அதை தன் மனைவியான K.R.விஜயாவிடம் கொடுத்து உயிரிழக்கிறார் அந்த செல்வந்தரிடம் வேலை பார்க்கும் ஸ்ரீகாந்த். அதனால் தான் பெற்ற குழந்தையை அவரின் மாமனாரான V.K.ராமசாமியிடம் ஒப்படைகிறார். அவர் பெற்ற பிள்ளையை விட முதலாளியின் குழந்தையை காப்பது தான் முக்கியம் என கூறும் K.R.விஜயாவிடம் இனி உனக்கும், நீ பெற்ற பிள்ளைக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் V.K.ராமசாமி. அந்த குழந்தை தான் நம்ம தலைவரு. (வேற யாரு?) வெட்டியாக ஊர் சுற்றிகொண்டிருக்கும் ரஜினியை வேலைக்காக சென்னைக்கு அனுப்புகிறார் V.K.R. சென்னைக்கு வந்த இடத்தில் அவருக்கு ஒரு பெரிய ஹோட்டலில் வேலை கிடைகிறது. அதே சமயம் இந்த ஹோட்டலின் முதலாளியான சரத்பாபுவை யாரோ கொலை செய்ய முயல, அதை நம் தலைவர் தடுக்கிறார். சரத்பாபுவை யார் கொலை செய்ய பார்க்கிறார்கள்? ரஜினி தன் அம்மாவை கண்டுபிடித்தாரா? என்பதே இந்த படத்தின் கதையும், திரைக்கதையும்.

மற்ற அம்சங்கள்

Sir, Iam Raghupathi, son of Gajapathi, son of Valayapathi என்று ரஜினி தன்னை ஹோட்டல் மேலாளரான நாசரிடம் அறிமுகப்படுத்திகொள்ளும் காட்சியிலிருந்து தலைவர் பட்டையை கிளப்புகிறார். I can talk English, I can walk English, I can Laugh English you Bloody Fellow. Vaiyapuri in Tamil Becomes Vaipuri in English and Belpuri in Hindi என்று ரஜினி அதகலபடுத்துகிறார். சூப்பர் ஸ்டாருக்கு அப்பாவியான கதாபாத்திரங்கள் என்றால் அவருக்கு அது அல்வா சாப்பிடுவது போல. ஒரே நேரத்தில் காதல், சோகம், வீரம், பாசம் என்று பன்முக நடிப்பில் வெளுத்துகட்டுகிறார். படத்தில் ரஜினியின் மேனரிசம் மிக அழகாக இருக்கிறது.

அடுத்து படத்தின் நாயகியான அமலா. நான் அமலா நடித்த நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அமலா மேல் எனக்கு பெரிதாக ஈர்ப்பு ஒன்றும் வரவில்லை. ஆனால் இந்த படத்தில் அமலாவை பார்த்த பிறகு 'ஆஹா, என்ன அழகுடா' என்றே என் மனதில் தோன்றியது. அதை விட இந்த படத்தில் ரஜினி அமலாவை பார்க்கும்போதெல்லாம் ஒரு லுக்கு விடுவாரே, அட,அட,அட,அட. இது தாண்டா சூப்பர் ஸ்டார். இதிலிருந்து ஒன்று புரிந்துகொண்டேன். அதாவது நம்ம இளையதளபதி எதையும் 'சொந்தமாக' செய்யவில்லை என்பது தான் அது (உக்காந்து யோசிப்பாங்களோ). அமலாவும், அவர் வரும் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

படத்தில் சரத்பாபு ஹோட்டல் முதலாளியாக வருகிறார். அவரின் வளர்ப்பு தாயாராக கே.ஆர்.விஜயா. ரஜினியின் நண்பராக செந்தில். பார் டான்சராக பல்லவி. ரஜினியின் தாத்தாவாக வீ.கே.ராமசாமி. வில்லனாக நாசர். இந்த படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தும் படத்தை பெரிதும் சுமப்பது ரஜினி தான். படத்தில் அதிகப்படியான காட்சிகள் நகைச்சுவை ததும்பும்படியாகவே இருக்கின்றது. ஆனால் அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்திருக்கிறது. படத்தில் எனக்கு தெரிந்த முக்கிய காட்சி, ஹோட்டலை விலைக்கு வாங்க வரும் அனைவரையும் ரஜினி அடித்து கலாட்டா செய்து அனுப்பும் காட்சி ரகளையான காமெடி. ரஜினிக்கு அடுத்து இந்த படத்தின் ஹீரோ, இசைஞானி தான்.

ராஜாவின் கைவண்ணத்தில் பாடல்கள் அனைத்தும் அசத்தல். தோட்டத்துல பாத்திகட்டி, வா, வா, கண்ணா வா, மாமனுக்கு, பெத்து எடுத்தவ தான், எனக்கு தான் என எல்லாமே சூப்பர். பின்னணி இசையிலும் அதிரவைக்கிறார் ராஜா. இந்த படத்தை இயக்கியது, ரஜினியின் ஆஸ்தான டைரக்டர் S.P.முத்துராமன். தயாரித்தது ரஜினியின் குரு நாதர் திரு K.பாலச்சந்தரின் 'கவிதாலயா'.

நடிகர்கள் 

ரஜினிகாந்த் - ரகுபதி 

சரத் பாபு - ராஜ்குமார் 

அமலா - கௌசல்யா 

K.R. விஜயா - சாவித்ரி 

அச்சமில்லை கோபி - கௌசல்யாவின் கண் தெரியாத தம்பி 

நாசர் - பவுண்ட்ராஜ் 

R.N. சுதர்சன் 

V.K. ராமசாமி - வளையாபதி 

செந்தில் - வையாபுரி 

ஷிஹான் உசேனி 

வெளியீடு மற்றும் வரவேற்பு 

7 மார்ச் 1987 ல் ''வேலைக்காரன்'' திரைப்படம் வெளியிடப்பட்டது. '' ஒரு ஆலையில் உள்ள பொருட்களை அழகான ஓட்டத்தில் திணித்து கொடுக்கப்படுள்ளது '' என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அழைதது. 

சென்னையில் இந்த படம் ஆனந்த், ஈகா, உதயம், ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீபிருந்தா என்று பல திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் 131 நாட்கள் ஓடி ரஜினியின் வெற்றி படவரிசையில் சேர்ந்து கொண்டது. இந்த படம் ரஜினிகாந்த் நடித்த 111வது படமாகும். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்து மிகபெரிய வெற்றி பெற்ற 'நமக் ஹலால்' படத்தின் ரீமேக் படமாகும். அதை விட முக்கியமான விஷயம், 'ஸ்ரீ ராகவேந்திரா' படத்தின் நஷ்டத்தை ஈடு கட்ட, கவிதாலயாவிற்கு ரஜினி நடித்து கொடுத்த படம் தான் இந்த 'வேலைக்காரன்'. சிறந்த நடிப்புக்காக சன்  ஃபிளாஷ் விருதை ரஜினிகாந்த் பெற்றார். 







 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information