Raja Chinna Roja (1989)
ராஜா சின்ன ரோஜா 1989 ல் S.P. முத்துராமன் இயக்கத்தில் வெளியான தமிழ் மொழி நேரடி செயல் அனிமேஷன் குழந்தைகள் திரைப்படமாகும். A.V.M. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் M. சரவணன் மற்றும் M. பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
நடிகர்களுடன் நேரடி அனிமேஷன் கதாபாத்திரங்களை பயன்படுத்திய ஒரே தமிழ் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு நகரத்திற்கு வரும் ராஜாவை சுற்றியே கதை செல்கிறது. ராஜா தனது குழந்தை பருவ நண்பனை சந்திகின்றான் மேலும் ராஜாவின் நண்பன் தனது மாமாவின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் மாறு ராஜாவை கட்டாயப் படுத்துகிறான்.
T.S. விநாயகம் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். R. விட்டல் மற்றும் C. லான்சி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளனர். மேலும் சந்திரபோஸ் இசையில் ''சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா'' என்ற பாடல் இன்றும் பிரபலமாக உள்ளது. இத்திரைப்படம் 20 ஜூலை 1989 ல் வெளியிடப்பட்டு 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றியை கண்டது.
கதை
ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. அவருக்கு நடிகராக வேண்டும் என்பது ஆசை. அதனால் போதைப் பொருள் வியாபாரம் செய்யும் வஞ்சகர்கள் நிறைந்த ஒரு நகரத்திற்குள் செல்கிறான். அவரது நடிகராகும் ஆசையை நிறைவேற்ற நகரத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்குகிறார்.அந்த வீட்டு உரிமையாளரின் மகள் உஷாவை ராஜா காதலிக்கிறார். ராஜாவின் தோற்றம் மற்றும் நல்ல குணத்தால் ஈர்க்கப்பட்ட உஷாவும் ராஜாவை காதலிக்க ஆரம்பிக்கின்றாள். ஒரு நாள் தற்செயலாக ராஜா தனது குழந்தை பாருவ நண்பனான பாஸ்கர் என்பவனை சந்திக்கின்றான். பாஸ்கர் ஒரு மோசமான பணக்காரன். அவன் ராஜாவுக்கு ஒரு நடிப்பு வேலையை வழங்குகிறான். பின்னர் ராஜாவை தனது மாமா வீட்டிற்கு அழைத்து செல்கின்றான். வீட்டின் நிர்வாகத்தை பார்த்து கொள்ளம் பொறுப்பு மற்றும் பாஸ்கருடைய மாமாவின் ஐந்து குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பும் ராஜாவிற்கு வழங்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிரச்சனைகள் உள்ளது. அதாவது சோம்பேறியாக இருப்பது மற்றும் படிப்பது இல்லை போன்றவை ஆகும். பாஸ்கர் அவனது மாமாவை ஏமாற்றி அவரது பணத்தை எடுக்க தன்னை பயன் படுத்துகிறான் என்பதை ராஜா கண்டுபிடிக்கிறான். பாஸ்கர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவான். ரவிச்சந்திரனுக்கு தற்காலிகமாக கண் பார்வை பறிபோகும். ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு விடுவார் ரவிசந்திரன். பாஸ்கரின் உண்மையை அறிய மீண்டும் குருடனாக நடிப்பார் ரவிச்சந்திரன். பாஸ்கரின் உண்மையை தெரிந்து கொண்ட பிறகு பாஸ்கரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது காரை எடுத்து செல்கிறான் பாஸ்கர். இதன் விளைவாக காரில் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக ரவிச்சந்திரனை கைது செய்கிறது போலீஸ். ராஜா குழ்நதைகளுடன் பாஸ்கரின் குகைக்கு சென்று பாஸ்கரை கையும் களவுமாக பிடிக்கின்றான். இறுதியாக ஒரு திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்ற தனது லட்சியத்தை ராஜா அடைவதாக படம் முடிகிறது.
நடிகர்கள்
ரஜினிகாந்த் - ராஜா, நடிகராகவேண்டும் என்ற ஆசை கொண்ட இளைஞன்
கௌதமி - உஷா, வீட்டு உரிமையாளரின் மகள் மற்றும் ராஜாவை காதலிப்பவள்
ரகுவரன் - பாஸ்கர், ராஜாவின் நண்பன் மற்றும் தனது பணக்கார மாமாவை ஏமாற்ற ராஜாவை பயன்படுத்தியவன்
ரவிச்சந்திரன் - பாஸ்கரின் மாமா
V.K. ராமசாமி - ரவிச்சந்திரனின் மாமா
சின்னி ஜெயந்த் - ராஜாவின் நண்பன்
S.S. சந்திரன் - சமையல்காரர்
கோவை சரளா - பணிப் பெண்
பேபி ஷாலினி - சித்ரா, ரவிச்சந்திரனின் மகள்
கிட்டி - பாஸ்கரின் கூட்டாளி
LIC நரசிம்மன் - போலீஸ் இன்ஸ்பெக்டர்
ரூபினி - ரூபினி
அழகு - பாஸ்கரின் கூட்டாளி
ராகவி - ரவிச்சந்திரனின் மகள்
தயாரிப்பு
''மனிதன் '' (1987) திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு A.V.M. புரொடக்ஷன்ஸ் M. சரவணன் அதே நடிகர்கள் மற்றும் அதே படக்குழுவினருடன் இணைந்து மற்றொரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார். குழந்தைகளை குறிவைத்து முன்னணி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரபோஸ் இசையில் S.P. முத்துராமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்க நினைத்தார். ஆரம்பத்தில் சிவாஜி கணேசன் நடித்த ''பாபு'' (1971) திரைப்படத்தை மாற்றி அமைக்க படக் குழுவினர் நினைத்தனர். ஆனால் அதன் கதை ''ஆறிலிருந்து அறுபது வரை '' மற்றும் ''எங்கேயோ கேட்ட குரல்'' போன்ற படங்களின் வழிகளில் இருப்பதாக ரஜினிகாந்த் உணர்ந்தார். அதனால் அந்த படம் அவரது இமேஜிக்கு பொருந்தாது என்றார்.
திரைக்கதை எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் தனது சொந்த படமான ''உன்னைத்தான் நம்பி'' (1974) திரைப்படத்தின் கதையை மீண்டும் பயன் படுத்தினார். மேலும் ஒரு சில குழந்தைகளை உள்ளடக்கிய கதையை உருவாக்க ''தி சவுண்ட் ஆப் மியூசிக்'' மற்றும் ''மேரி பாப்பின்ஸ்'' போன்ற படங்களில் உள்ள வெற்றிகரமான வழிகளை பின்பற்ற முடிவு செய்தார்.
"கிராபிக்ஸ்"
"கிராபிக்ஸ்" என்பது பற்றி, தமிழ் னிமாவிற்கு பெரியதாக தெரியாத காலத்தில், யானை, முயல், குரங்கு என, பல மிருகங்கள், 'கார்ட்டூன்' வடிவத்தில், 'ராஜா ன்ன ரோஜா...' பாடலில் இடம்பிடித்தன. மும்பையைச் சேர்ந்த, ராம்மோஹன் என்பவர் தான், இப்பாடலுக்கான கார்ட்டூன் வரைந்து கொடுத்துள்ளார்.
சந்திரபோஸ் இசையில், 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...” பாடல், ரஜினி ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக, இன்றும் உள்ளது. ராஜா ன்ன ரோஜாவில் இருந்து, அனைவருக்கும் பிடித்த ரஜினி உருவாக ஆரம்பித்தார்.
|