Anbukku Naan Adimai
ஆடு நனஞ்சுதுன்னு
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சாரதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : எத்தனை குத்தங்கள்
பண்ணியவன்
அவன் எப்பவும் தப்பிக்க
எண்ணியவன்
உத்தமன் அல்லடி
உள்ளபடி மக்கள்
மத்தியில் சுத்துற குள்ள நரி
குழு : எத்தனை குத்தங்கள்
பண்ணியவன்
அவன் எப்பவும் தப்பிக்க
எண்ணியவன்
உத்தமன் அல்லடி
உள்ளபடி மக்கள்
மத்தியில் சுத்துற குள்ள நரி
பெண் : சாயம் வெளுக்குமடி
நியாயம் நிலைக்குமடியோய் ஹோய்…
பெண் : பாலாட்டம்
குழு : ஒண்ணிருக்கும்
பெண் : அடி ஒண்ணாட்டம்
குழு : ஒண்ணிருக்கும்
பெண் : அம்மாடி என் பேச்சக் கேளு…
குழு : ஹோய்..ஹோய்,,
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : தந்தனனாதின ஹோய்
தன தந்தனனாதின ஹோய்
தந்தனனாதின ஹோய்
தன தந்தனனாதின ஹோய்
தந்தானே தன தந்தானே
தந்தானே தன தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
பெண் : தந்தன தந்தன தந்தனனா….
தன தந்தன தந்தன தந்தன
பெண் : தம்பட்டம் பம்பைய
தட்டுங்கடி தாளம்
தப்பாம கைகளை கொட்டுங்கடி
பெண் : ஊரெல்லாம் மேஞ்சுது
காட்டுப்புலி
அதன் பேயாட்டம்
ஓஞ்சுது பாட்டுப் படி
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
குழு : தம்பட்டம் பம்பைய
தட்டுங்கடி தாளம்
தப்பாம கைகளை கொட்டுங்கடி
குழு : ஊரெல்லாம் மேஞ்சுது
காட்டுப்புலி
அதன் பேயாட்டம்
ஓஞ்சுது பாட்டுப் படி
பெண் : கூண்டில் புடிச்ச புலி
தாண்டி குதிக்குமடியோய் ஹோய்….
பெண் : பட்டாக்கா
குழு : புத்தி வரும்
பெண் : அத விட்டாக்கா
குழு : சுத்தி வரும்
பெண் : பட்டாக்கா
குழு : புத்தி வரும்
பெண் : அத விட்டாக்கா
குழு : சுத்தி வரும்
பெண் : அம்மாடி சந்தோசம் பாரு…….
குழு : ஹோய் ஹோய்
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
காத்தோடு பூவுரச பூவை வண்டுரச
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா….ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
ஆண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா…ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
பெண் : ஏத்தம் போட்டு இறைச்ச
தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்ச
தண்ணி ஓடும்
ஏன் அது ஏன் அதைத் தேடும்
வயலும் வாடும்
ஆண் : ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி
நாளாச்சுதோ
பெண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா…ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
ஆண் : கோடைக்கானல் குறிஞ்சி
மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி
மலரின் ஜாதி
யார் அது யார் அதைக்
கேட்டா தெரியும் சேதி
பெண் : நான் தானே
சின்னப் பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு
நீராட வா
ஆண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டு ரச
உன்னோடு நா…ன்
பெண் : ஆ…என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : வெவேவீவீ
வெவே வெவே வே வேவேவேவேவீ
வெவே வெவே வே வெவே வெவேவீ
ஆண் : காட்டில் ஒரு சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : விளையாட்டில் அது
ரொம்ப சுட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : பெத்த அம்மா அப்பாவை
அது விட்டுப் பிரிஞ்சு
அட தன்னந்தனியா
தத்தித் தாவித் திரிஞ்சு
அது காடு மலை மேடுகள
தாண்டி வந்திடுச்சாம்
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : குள்ள நரி கூட்டத்திலே
குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
கூடாத குணத்தை எல்லாம்
தானும் கத்துக்கிச்சாம்
ஆண் : குள்ள நரி கூட்டத்திலே
குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
கூடாத குணத்தை எல்லாம்
தானும் கத்துக்கிச்சாம்
ஆண் : கோண வழி குறுக்கு வழி
போக எண்ணிக்கிச்சாம்
பொய் புரட்டு கொலை திருட்டு
நாலும் பண்ணிடுச்சாம்
பல வருஷம் போயிடுச்சாம்
சிங்கம் பெரிசு ஆயிடுச்சாம்
அத வேடரெல்லாம் தேடறப்போ
ஓடி வந்துடுச்சாம் ஹோய்
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : வந்த இடம் நல்ல இடம்
வண்ண மான் வாழும் இடம்
மான் தோலைப் போத்திக்கிட்டு
சிங்கம் வந்திடுச்சாம்
ஆண் : வந்த இடம் நல்ல இடம்
வண்ண மான் வாழும் இடம்
மான் தோலைப் போத்திக்கிட்டு
சிங்கம் வந்திடுச்சாம்
ஆண் : அப்பாவி மான்களெல்லாம்
அன்பு பண்ணிடுச்சாம்
அதக் கண்டு சிங்கத்துக்
கண்ணீர் வந்திடுச்சாம்
அதன் கொடுமை போனதடா
அன்புக்கு அடிமை ஆனதடா
அது மான்களுக்கு ராப்பகலா
காவல் நின்றதடா ஹோய்
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : காவல் நின்ற சிங்கத்துக்கு
காலம் செய்த சோதனைபோல்
குட்டிமான் கூட
ஒரு தாயும் வந்திடுச்சாம்
ஆண் : காவல் நின்ற சிங்கத்துக்கு
காலம் செய்த சோதனைபோல்
குட்டிமான் கூட
ஒரு தாயும் வந்திடுச்சாம்
ஆண் : காதல் மான் தன்னை
இங்கே காண வந்திடுச்சாம்
அந்த மான் ஜோடியைத்தான்
சிங்கம் கொன்னுடிச்சாம்
தப்பை மறைக்க வழியில்லே
தப்பி நடக்க முடியல்லே
மன உளைச்சலிலே அலைச்சலிலே
சிங்கம் உறுமிச்சாம் ஹோய்
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : லல லாலா லல லாலா
லல லாலா லல லாலா லாலா
பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்று உன்னோடு
வாழ்வேன்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
பெண் : பூவும் கொண்டேன்
மஞ்சள் கொண்டேன்
காதலின் தீபம்
ஏற்றி வைத்தேன்
பெண் : காவல் தந்தான்
கருணையும் தந்தான்
கைகளில் மாலை சூடி நின்றான்
பெண் : பார்வைகள் சேரும்
பாசமும் பொங்கும்
பூந்தமிழாலே வாழ்த்தினான்
பெண் : என் எண்ணம்
பொன் வண்ணம்
இன்பம் எங்கெங்கும்
தததம்…..தம்தம்தம்தம்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
கொண்டாடும் இன்பங்கள்
நெஞ்சோடு
பெண் : காலம் யாவும்
கவிதைகள் சொல்லி
கைகளில் ஆடி
வாழ்ந்திடுவேன்
பெண் : காணும் யாவும்
இனிமைகள் கொள்ள
கண்ணோடு கண்ணாய்
சேர்ந்திருப்பேன்
பெண் : நல்வரம்வேண்டும்
நன்மைகள் வேண்டும்
நல்மனதோடு கேட்கிறேன்
பெண் : என் உள்ளம்
உன் இல்லம்
இன்பம் எங்கெங்கும்
தததம்…..தம்தம்தம்தம்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்று உன்னோடு
வாழ்வேன்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
கொண்டாடும் இன்பங்கள்
நெஞ்சோடு
வயலூரு மயிலாட்டம்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வயலூரு மயிலாட்டம்
வடிவேலன் தேராட்டம்
அயலார் முன் வந்தேனே
பாருங்கய்யா
பெண் : இளவாழந் தண்டாட்டம்
எருக்கம்பூ செண்டாட்டம்
அழகான பொண் பார்க்க
வாருங்கய்யா
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு
தாமரைப் போல் சிவந்த கண்ணு
ஆட வந்தா ஊர் கூட வரும்
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண் : பாவாடைதான் தொங்க தொங்க
பூவாடைதான் பொங்க பொங்க
பாலாடைதான் பொண்ணு பாரு
பார்த்தா பசிக்காது….
மயக்குது மினுக்குது
குலுக்குது தளுக்குது
பெண் : நான்தானே தென்னங்கள்ளு
கண்ணாலே என்னை அள்ளு
ஆடுது பாடுது ஆடை
கொஞ்சம் மூடுது
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண் : வாடா ரங்கா வித்தைக் காட்டு
வாங்கி தாரேன் கத்தை நோட்டு
ஜோராகத்தான் வாலை ஆட்டு
ஊரே பாராட்ட…..
நெருப்பிலே குதிக்கணும்
அடுத்தவர் வியக்கணும்
பெண் : மேலே ஓர் தந்திக்கம்பி
போறான்டா இராமர் தம்பி
ஆடுதாம் ஆடுதாம்
ஊருப்பார்க்க கூடுதாம்
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண் : ராஜா ஒரு திட்டம் போட
ராணி ஒரு வட்டம் போட
யாருமில்லை சட்டம் போட
எங்கள் ராஜாங்கம்…..
நினைச்சது நடக்குது
முயற்சியும் பலிக்குது
பெண் : எல்லோரும் என்னை சுத்தி
என் எண்ணம் உன்னை சுத்தி
ஓடுது நாடுது ஊஞ்சல்
போல ஆடுது
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு
தாமரைப் போல் சிவந்த கண்ணு
ஆட வந்தா ஊர் கூட வரும்
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்….
|