Thudikkum Karangal

Rajinikanth Thudikkum Karangal

அடடா இதுதான் சுகமோ

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : S. P. Balasubrahmanyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

பெண் : அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண் : அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இனிமேல் தினமும் விழாக் கோலமே

பெண் : விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்

ஆண் : விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜுவாலைகள்

பெண் : கன்னங்களில் தாமரை காதல் தூவும்
சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும்

ஆண் : கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும்

பெண் : அடடா

ஆண் : ஆஹா

பெண் : இதுதான்

ஆண் : ஓஹோ ஹோ

பெண் : சுகமோ

ஆண் : மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே

ஆண் : ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது
ஏனோ ஏனோ கண்மணி

பெண் : தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது
நேரம் இதோ பவுர்ணமி

ஆண் : நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும்

பெண் : குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும்
அடடா இதுதான் சுகமோ……

ஆண் : அடடா

பெண் : ஆஹா

ஆண் : இதுதான்

பெண் : ஆஹா

ஆண் : சுகமோ

பெண் : மலர்களின் இதழ் வழி
பனி மழை விழும் சுகமோ
இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே இருவர் : லல்லாலால லல்லாலால
லல்லாலால லல்லாலால

மேகம் முந்தானை

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : S. P. Balasubrahmanyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

குழு : ………………………..

ஆண் : மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே

பெண் : ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே

ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்

பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

ஆண் : மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே

பெண் : ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே

ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்

பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

பெண் : முத்து முத்தா சிரிக்கிற என்னைக் கண்டு

ஆண் : கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு

பெண் : கல்யாணப் பரிசாகும்

ஆண் : கொத்து கொத்தா குலுங்குது முல்லைச் செண்டு

பெண் : கல்யாணப் பரிசாகும்
கையோடு எடுத்து வந்தேன் கட்டிய பூமாலை

ஆண் : நானுண்டு எட்டி எடுப்பேன்
கட்டி முடிப்பேன் கொட்டிக் கொடுப்பேன்

ஆண் : கன்னிப்பொண்ணு சிரிச்சுப்புட்டா காரியமாகாதா

பெண் : கையிரண்டை வளைச்சுப்புட்டா சந்தனம் பூசாதா

ஆண் : மஞ்சள் வெயில் குளிருக்கு வாடும் இங்கே

பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே

ஆண் : தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்

பெண் : நெஞ்சம் எல்லாம் ஒரு துணை தேடும் இங்கே

ஆண் : தீகூட குளிர்காயும் ஹோய்
தோளோடு உரசிப்புட்டா வாலிபச் சூடேறும்

பெண் : செவ்வந்தி பூவிழி மஞ்சம்
தேடுது நெஞ்சம் வாலிபம் கொஞ்சம்

பெண் : இன்றுவந்த வசந்த விழா எத்தனைச் சந்தோஷம்

ஆண் : காலை வந்து விடியும் வரை காமனின் சங்கீதம்

ஆண் : மேகம் முந்தானை
ஆடுது முன்னாலே

பெண் : ஆசை மச்சானை
தேடுது கண்ணாலே

ஆண் : வானம் என்னும் குமரிப் பொண்ணு பூசுது செந்தூரம்

பெண் : காண வந்த மனதுக்குள்ளே எத்தனை சந்தோஷம்

குழு : ………………………………

சந்தனம் பூச

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : S. P. Balasubrahmanyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

பெண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்

ஆண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்

ஆண் : மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்…ஹ்ம்ம் ம்ம்ம்
மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள்
வான் தந்த காதல் சீதனம்…ஹான்..

பெண் : இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள்
இசைவண்டு பாடும் மோகனம்…
இசை வண்டு பாடும் மோகனம்

ஆண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

பெண் : விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்

பெண் : நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
நீ பார்க்கும் நேரங்கள்
நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன

ஆண் : இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தன…ஹா
உன் கைகள் என்னை கொய்தன

பெண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்

ஆண் : விண்ணிலவு பாலூட்ட …

பெண் : ஹா

ஆண் : பெண்ணிலவு தாலாட்ட…

பெண் : ஹா

ஆண் : நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்

தொட்டுக்கிட்டா

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : S. P. Balasubrahmanyam
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

பெண் : தொட்டுக்கிட்டா குத்தமில்லே
பக்கத்திலே யாரும் இல்லே வரவா
வாடா கண்ணா வா அட வாடா கண்ணா வா
எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா

பெண் : தொட்டுக்கிட்டா குத்தமில்லே
பக்கத்திலே யாரும் இல்லே வரவா
வாடா கண்ணா வா அட வாடா கண்ணா வா
எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா

பெண் : பசிச்சா அட பால் ஆச்சும் கொஞ்சம் குடிங்க
ரசிச்சா உங்க நெஞ்சோடு என்னை அணைங்க
கண்ணாடி உடம்பு காதல் கிடங்கு
முன்னூறு மடங்கு மோகம் வர பசிச்சா
அட பால் ஆச்சும் கொஞ்சம் குடிக்க வா வா
அணைக்க வா வா ரசிக்க வா வா

பெண் : கீழ்லோகம் பூலோகம்
மேலோகமும் நான் போகணும்
என்னோடு நீ சேறு எல்லாமும் தெரியும்

பெண் : எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா

பெண் : தொட்டுக்கிட்டா குத்தமில்லே
பக்கத்திலே யாரும் இல்லே வரவா
வாடா கண்ணா வா அட வாடா கண்ணா வா
எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா

ஆண் : ……………………

பெண் : ஹாஹாஹா

பெண் : புடிச்சா என்ன பூவா மெல்ல எடுங்க
எடுத்த உங்க இஷ்டம் போல அள்ளி கொடுங்க
தை மாச குளிரு ஒடம்பு தளிரு
காய் மேல மலரு காதல் தரும்
புடிச்சா என்ன பூவா மெல்ல எடுக்க வா வா
கொடுக்க வா வா தொடுக்க வா வா

பெண் : நானாச்சு ஐயா அட நீயாச்சு ஐயா
வா பாக்கலாம் நாளாச்சு ஐயா
வீணான விளையாட்டு பேச்சு இப்போ எதுக்கு

பெண் : எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா

பெண் : தொட்டுக்கிட்டா குத்தமில்லே
பக்கத்திலே யாரும் இல்லே வரவா
வாடா கண்ணா வா அட வாடா கண்ணா வா
எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா ஹா ஹா
எப்பா எப்பா
எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா எப்பா
ஏழுலகம் இங்கே உண்டு வா சும்மா ஹா

உள்ளத்தில் என்னென்ன

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
இசையமைப்பாளர் : S. P. Balasubrahmanyam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹா..சலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்

ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹா..சலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்

ஆண் : இளம் பாவை கொடுத்த மனது
எனக்கென்று அடித்த கனவு
இளங்காற்றில் இணைந்து கலந்துதான்
போனதோ

ஆண் : இசை பாடி திரிந்த குயிலும்
விளையாடி களித்த மயிலும்
பிரிவென்ற இடத்தை நினைத்துதான்
சேர்ந்ததோ

ஆண் : வீசும் காற்றில் துன்பம்
வேகும் நெஞ்சில் துன்பம்
எங்கோ எங்கெங்கோ
இன்பமே
பெண் உள்ளம் ஒரு நெருப்பு
பெருகுதடி வெறுப்பு
இளமை எனும் களிப்பு
உன் இதழில் வந்த சிரிப்பு

குழு : தந்தனதந்தனனா …………
லாலலலாலா……………….

ஆண் : நெருக்கத்தில் இனித்த இனிப்பும்
விருப்பத்தில் அணைத்த அணைப்பும்
வெறுப்பினில் அனைத்தும் மறந்துதான்
போகுமோ

ஆண் : விரல் தொட்டு பிடித்த பிடிப்பும்
மனம் தொட்டு துடித்த துடிப்பும்
விரைவினில் நடித்த நடிப்பென
ஆகுமோ

ஆண் : வெள்ளை பூவில் கள்ளம்
சொல்லி பார்க்கும் உள்ளம்
உண்மை என்னென்பேன்
பெண்மையே
தெரிந்ததடி உன் நெஞ்சம்
தேவை இல்லை பொன் மஞ்சம்
மனதுகளில் ஏன் வஞ்சம்
மதுவின் வசம் என் நெஞ்சம்

ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன
எண்ணங்கள் வந்தென்ன
பெண் புத்தி உன் புத்தி
எந்நாளும் பின் புத்திதான்
ஹா..சலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்

ஆண் : சலனமுள்ள எண்ணத்தில்
சரிந்து விழும் மனங்கள்
தெளியவில்லை நெஞ்சத்தில்
தேவி தந்த ரணங்கள்

வாலிபம் வாடா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Durga
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : S. P. Balasubrahmanyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் துர்கா இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

பெண் : …………………………

ஆண் : …………………………….

ஆண் : வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹான்…
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹா

ஆண் : மனதில் காவிரி நீரலை ஓடி வர
நினைவில் புது வித ஆனந்தம்

ஆண் : மயக்கம் பூவிழி பார்வையும் பாடி வர
மகிழும் இனிமைகள் ஆரம்பம்
பூங்காற்றும் தேகம் யாவும் தழுவிடும்
ஏதேதோ எண்ணம் நெஞ்சில் துளிர் விடும்
யாவும் ஆனந்தம்
நம்தன நம்தன தனனம்

பெண் : ஹான் ஹாஹாஹா
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம்
தம் தம் தம் தம்த தம்

பெண் : ஹே கோ ஸ்லோவ் மேன் யூ யூ ….

ஆண் : வசந்தம் வாலிபம் வாழ்வினில் நாளும் வர
வரவு வருவது ஆனந்தம்
வயது பெண்மகள் வாசனை மேனி தொட
உறவு உணர்வுகள் ஆரம்பம்
ஆஹாஹா ஆடும் கூடும் இனிமைகள்
ஓஹோஹோ ஓடும் பாடும் தனிமைகள்
இன்பம் பேரின்பம் ரப்பபபம்……

ஆண் : ஹோ ஹோ ஹு ஹோ
வாலிபம் வாடாத பூமாலை
மனதில் வாழ்ந்திடும் எண்ணங்கள் பூஞ்சோலை
ஆனந்தம் பேரானந்தம் ஹான்…
ஆனந்தம் பேரானந்தம்
தம் தம் தம் தம் தம் தம்