Priya
அக்கரைச் சீமை
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே } (2)
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
ஆண் : பார்க்க பார்க்க
ஆனந்தம் பறவைப் போல
உல்லாசம் வேலை இன்றி
யாரும் இல்லை எங்கும்
சந்தோஷம்
ஆண் : வெறும் பேச்சு
வெட்டி கூட்டம் ஏதும்
இல்லை இந்த ஊரில்
ஆண் : கள்ளம் கபடம்
வஞ்சகம் இன்றி
கன்னியமாக ஒற்றுமை
உணர்வுடன் வாழும்
சிங்கப்பூர்
ஆண் : அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே புதுமையிலே
மயங்குகிறேன்
குழு : ………………………
ஆண் : சிட்டுப் போல
பிள்ளைகள் தேனில்
ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள்
போல ஆடும் உற்சாகம்
ஆண் : தினம் தோறும்
திருநாளே சுகம் கோடி
மனம் போல
ஆண் : சீனர் தமிழர்
மலாய மக்கள் உறவினர்
போல அன்புடன் நட்புடன்
வாழும் சிங்கப்பூர்
ஆண் : அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே
ஆண் : மஞ்சள் மேனி
பாவைகள் தங்கம் மின்னும்
அங்கங்கள் காவியத்தில்
வார்த்தை இல்லை
உன்னைப் பாராட்ட
ஆண் : நடை பார்த்து
மயில் ஆடும் மொழி
கேட்டு கிளி பேசும்
ஆண் : கண்ணில்
தவழும் புன்னகைக்
கண்டேன் சொர்க்கம்
போல இன்பமும்
பெருமையும் வாழும்
சிங்கப்பூர்
ஆண் : அக்கரைச் சீமை
அழகினிலே மனம் ஆட
கண்டேனே புதுமையிலே
மயங்குகிறேன்
ஆண் : ………………………
குழு : ………………………
டார்லிங் டார்லிங் டார்லிங்
பாடகி : பி.சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே
பெண் : மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ
பெண் : யாரும்
சொல்லாமல் நானே
ஆசை என்றால் என்ன
வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள்
நூறு கண்ணா காவல்
கொள்ள ஓடி வா
பெண் : புது சுவை
தரும் சுகம் சுகம்
அதை நீ சொல்லவா
ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ
பெண் : காதல் இல்லாத
வாழ்வில் என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம்
அன்பே மோகம் நெஞ்சுக்குள்
வாடும் கண்ணா பாடம்
சொல்ல ஓடி வா
பெண் : மலர் எனும்
உடல் தரும் மனம்
அதை நீ கொண்டு
போ ஐ லவ் யூ ஐ
லவ் யூ
பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ
பெண் : காவல்
இல்லாத நேரம்
தேடி வந்து என்ன
தேவை என்று
சொல்வாய் ஆடும்
பொன்னூஞ்சல் ஆடு
கண்ணா தேனை
உண்ண ஓடி வா
பெண் : கனி தரும்
கொடி இவள்
அணைத்திட
பூஞ்சோலை வா
ஐ லவ் யூ
ஐ லவ் யூ
பெண் : டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ லவ் யூ
லவ் யூ டார்லிங்
டார்லிங் டார்லிங்
ஐ லவ் யூ என்னை
விட்டு போகாதே
பெண் : மன்னன்
உன்னை எந்தன்
நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை
அன்பை எந்தன்
கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஐ லவ் யூ
என் உயிர் நீதானே
பாடகி : ஜென்சி அந்தோணி
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : …………………..
ஆண் : ……………………
பெண் : …………………..
ஆண் : ……………………
பெண் : …………………..
ஆண் : என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
பெண் : என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
ஆண் : நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே
பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே
பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே
பெண் : பூங்கொடி தள்ளாட
பூவிழி வண்டாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே
ஆண் : ………………….
பெண் : பூங்கொடி தள்ளாட
பூவிழி வண்டாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே
பெண் : நீ தந்த சொந்தம்
மாறாதே நான் கண்ட
இன்பம் தீராதே
பெண் : உன்னருகில்
உன் நிழலில் உன்
மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள்
வாழ்ந்திட வந்தேன்
பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே
குழு : …………………
பெண் : பாவையின்
பொன்மேனி ஜாடையில்
தானாட பார்வையில்
பூந்தென்றல் பாடிட
வந்தேனே
ஆண் : …………………
பெண் : பாவையின்
பொன்மேனி ஜாடையில்
தானாட பார்வையில்
பூந்தென்றல் பாடிட
வந்தேனே
பெண் : நீ கொஞ்சும்
உள்ளம் தேனாக
நான் கொள்ளும்
இன்பம் நூறாக
பெண் : என்னருகில்
புன்னகையில்
கண்ணுறங்கும்
மன்னவனே
காவியம் போலொரு
வாழ்வினை கண்டேன்
பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (2)
நீ யாரோ இங்கு
நான் யாரோ ஒன்று
சேர்ந்தோமே இன்பம்
காண்போமே
பெண் : { என் உயிர் நீதானே
ஹோ உன் உயிர் நாந்தானே
ஹோ } (3)
ஹே பாடல் ஒன்று
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ ஆஆஆ
ஆஆஆ
ஆண் : ஹா ஆஆ ஆஆ
பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
ஆண் : { மின்னல் உந்தன்
பெண்மை என்னைத்
தாக்கும் ஆயுதம் } (2)
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம்
ஹோய் ஹோய் மேகம்
உந்தன் கூந்தல் மலர்
ஆடும் ஊஞ்சலாம்
ஆண் : என் ஜோடிக்
கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை
நீயே
பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
பெண் : { தீபம் கொண்ட
கண்கள் என்னை
நோக்கும் காதலில் } (2)
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும்
ஜாடையில் ஹோய்
ஹோய் தாகம் கொண்ட
நெஞ்சம் என்னைப் பார்க்கும்
ஜாடையில்
பெண் : இளம் காதல்
ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி
நானே
ஆண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
பெண் : { நேரம் இன்ப
நேரம் விழி போடும்
ஓவியம் } (2)
ஆண் : ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம் ஹோய்
ஹோய் ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம்
பெண் : ஒரு மாலை
நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை
நானே
பெண் : ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
ஆண் : சேரும் போது
அந்த கீதம் அதை
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே பாடல் ஒன்று
ராகம் ஒன்று
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே ஹனுமான்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஸ்ரீராமனின்
ஸ்ரீதேவியே ஹனுமான்
உன்னை காக்க சிறையில்
உன்னை மீட்க கடல் தாண்டி
வந்தானம்மா எதிர் போரை
வெல்வானம்மா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ஆண் : பாடி பாடி
அழைக்கின்றேன்
ஜாடையாக சேதி
சொல்வாய் பாதை
ஒன்று கண்டுகொள்ள
நீயும் பாடுவாய் தயக்கம்
என்ன கலக்கம் என்ன
தேவி நீ குரல் கொடு
ஆண் : ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
ஆண் : நேரம் பார்த்து
நெருங்குவேன் காவல்
தாண்டி காக்க வந்தேன்
போட்டி என்று வந்த
பின்னே நேரில் மோதுவேன்
கவலை இல்லை மயக்கம்
இல்லை தேவி நீ குரல் கொடு
ஆண் : ஸ்ரீராமனின்
ஸ்ரீதேவியே ஹனுமான்
உன்னை காக்க சிறையில்
உன்னை மீட்க கடல் தாண்டி
வந்தானம்மா எதிர் போரை
வெல்வானம்மா ஓ ப்ரியா
ஓ ப்ரியா ஓ ப்ரியா
|