Valli
டிங்கு டாங்கு ரப்பப்போ
பாடகர்கள் : மனோ மற்றும் லதா ரஜினிகாந்த்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
ஆண் : நாட்டுக்கேத்த பாட்டிப்போ
பாடப்போறேன் கேட்டுக்கோ
வீரைய்யன் பாட்டு……
வற்றாத ஊற்று…….
ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
ஆண் : நாட்டுக்கேத்த பாட்டிப்போ
பாடப்போறேன் கேட்டுக்கோ
வீரைய்யன் பாட்டு……ஹா
வற்றாத ஊற்று…….
ஆண் : மொத்தம் இங்கே
கெட்டாச்சு நாடு
மக்கள் எல்லாம் பட்டாச்சு பாடு
உண்மை சொல்ல இல்லாத ஆளு
உண்டா இங்கே
எங்கேன்னு கூறு கூறு
ஓ……ஓ……
குழு : யைய்யைய்யய்யா….
குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
சிங்கு லாங்கு ரப்பப்போ
டிங்கு டாங்கு ரப்பப்போ
ஆண் : ஓட்டுக்காக யப்பப்போ
கூட்டம் கூடும் அப்பப்போ
நாட்டுக்காக யார் இப்போ
நன்மை செய்தான் கூறு இப்போ
சொன்னது அம்போ……
சிவ சிவ சம்போ…….
ஆண் : சொன்னா
குழு : ஹே
ஆண் : வெட்கம்
குழு : ஹே
ஆண் : நம் ஊரு சேதி இப்போ
குழு : ஹே
ஆண் : இங்கே
குழு : ஹே
ஆண் : முந்நூறு ஜாதி
எப்போ எப்போ முன்னேறும் தேதி
ஒன்றாய் நின்றால் உண்டாகும் நீதி நீதி
ஓ……ஓ……
குழு : யைய்யைய்யய்யா….
குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
சிங்கு லாங்கு ரப்பப்போ
டிங்கு டாங்கு ரப்பப்போ
ஆண் : வாழைப்பூக்கள் எந்நாளும்
வாசப் பூவாய் மாறாது
{சொந்தம் கொண்ட எல்லோரும்
தாரம் போல ஆகாது} (3)
பெண்டாட்டி பிள்ளை
பேரன்பின் எல்லை
ஆண் : வீட்டை
குழு : ஹே
ஆண் : பாக்கும்
குழு : ஹே
ஆண் : கண்ணாலே நீயும் நாட்டை
குழு : ஹே
ஆண் : பாரு
குழு : ஹே
ஆண் : அண்ணாச்சி நாளும்
நாடும் வீடும் நம்
கோயில் ஆகும்
வீட்டைக் காக்கும் பெண்தானே
தெய்வம் தெய்வம்
ஓ……ஓ……
குழு : யைய்யைய்யய்யா….
குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
சிங்கு லாங்கு ரப்பப்போ
டிங்கு டாங்கு ரப்பப்போ
என்ன என்ன கனவு கண்டாயோ சாமி
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : என்ன என்ன கனவு
கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவுதான்
ஐயா சாமி
ஆண் : ஒன்றை உந்தன் மனம்
கேட்டது அந்த
ஒன்றும் வேறு இடம் போனது
கையில் வரும் என
பார்த்தது இன்று
கை நழுவி ஏன் போனது
ஆண் : என்ன என்ன கனவு
கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவுதான் ஐயா
ஆண் : ஓடைக் குளிர் ஓடை என
மான்கள் நம்பி ஓடும்
வேளை அது கோடை எழும்
கானல் என்று மாறும்
ஆண் : நெஞ்சோடு தோன்றுகின்ற
நேசம் யாவும்
நில்லாமல் ஓடுகின்ற நீர் வேகம்
கண்ணோடு காணுகின்ற
கோலம் யாவும்
தண்ணீரில் போட்டு வைத்த கோடாகும்
ஆண் : வழிக்கி வந்தது துணையா
இல்லை வழுக்கி விட்டிடும் வினையா
இதை என்னென்று சொல்வது
சித்திர பதுமையே
ஆண் : என்ன என்ன கனவு
கண்டாயோ சாமி
வாழ்க்கை ஒரு கனவுதான்டி
குழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்…(2)
ஓம்ம்ம் ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம்
ஓம்ம் ஓம்ம் ஓம்ம்ம்ம் ஓஒம்ம்ம்…(2)
ஆண் : காலை அந்தி மாலை
இந்த பாவை செய்யும் யாகம்
குழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்
ஆண் : நாளை நல்ல வேளை
வந்து சேர நிறை வேறும்
குழு : ஓம்…ஓம்…ஓம் ஓம்
ஆண் : பொல்லாது பூமியிலே
பெண்ணின் பாவம்
நாளான போதும் அது தீராது
வெல்லாது போனதில்லை
பெண்ணின் ஞாயம்
உண்டான நீதி இங்கு மாறாது
ஆண் : வரட்டும் என்றிங்கு இருப்பாள்
குழு : ஓம்…ஓம்…
ஆண் : தர்மம் ஜெயிக்கும்
என்றிவள் பொறுப்பாள்
குழு : ஓம்…ஓம்…
ஆண் : இந்த உத்தமப் பத்தினி
தத்துவம் தவறுமோ
ஆண் : என்ன என்ன கனவு
கண்டாயோ மானே
வாழ்க்கை ஒரு கனவுதானடி
மானே
ஆண் : செய்த தவம் முடிவானது
மானே
நள்ளிரவு விடிவானது
உண்மை இங்கு தெளிவானது மானே
பொய்மை இன்று வெளியானது
ஆண் : என்ன என்ன கனவு
கண்டாயோ மானே
வாழ்க்கை ஒரு கனவுதானடி
என்னுள்ளே என்னுள்ளே
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : …………………………….
பெண் மற்றும் குழு :
{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)
பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்
குழு : ……………………………
பெண் : கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்
பெண் மற்றும் குழு :
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
குழு : ……………………………….
பெண் : கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
பெண் : காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்
குழு : …………………………….
பெண் மற்றும் குழு :
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்
பெண் மற்றும் குழு :
{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)
குக்குக்கூ கூ கூ
பாடகர்கள் : லதா ரஜினிகாந்த் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : {ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய்
ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே } (2)
பெண் : ரியாராரரோரிக் ஹா
ரீட்டரராரா ஹோய்
ரியாராரரோரிக் ஹா
ரீட்டரராரா ஹோய்
பெண் : குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
மாமலை ஓரம் அருவிகள்
நாட்டியம் ஆடும்
இது போலே இன்பம் ஏது………
பெண் : குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
குழு : ஹே ஹேய்
……………
பெண் : ஓங்கி நிற்கும் வானையே
தாங்கி நிற்கும் மூங்கிலே
பூங்குழலை ஊதினாய் ராகம்
என்ன பாடினாய்
ஆற்றங்கரை மேட்டிலே
தென்றல் சொல்லும் பாட்டிலே
தென்பொதிகை காட்டிலே
தேனிறைக்கும் பூக்களே
பெண் : இயற்கையில் ஏதோ ஏதோ
குழு : ஹே ஹேய்
பெண் : அதிசயம் அம்மம்மா
குழு : ஓ ஓஹோ
பெண் : படைச்சது யாரோ யாரோ
குழு : ஹே ஹேய்
பெண் : எனக்கதை சொல்லம்மா
குழு : ஓ ஓஹோ
பெண் : கககரிஸ ரிரிரிஸாஸ
கரிஸாஸ ரிஸாஸதப சதபத பத
பெண் : குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
மாமலை ஓரம் அருவிகள்
நாட்டியம் ஆடும்
இது போலே இன்பம் ஏது……..
பெண் : குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
பெண் : ரிகக பதஸரி பக ஸரிக
குழு : தத்தின தகதின தக்தின தததின
பெண் : கபதஸக பதஸ பதக
குழு : தத்தின தகதின தக்தின தததின
பெண் : ஸரிகரிரிஸாஸ தஸஸரி நிஸபத பதரி
குழு : தரிகிட தாம் தம் தரிகிட தாம் தம்
தரிகிட தாம் தரிகிட தாம் தம் தரிகிட தாம்
பெண் : மாமனல்ல மாமி நீ
மையல் தரும் ரூபிணி
நாட்டியத்தில் பத்மினி
ஆடி கொஞ்சம் காமி நீ
முன்னழகு மோகினி
முத்தம் ஓன்னு தாடி நீ
வஞ்சி உந்தன் தாவணி
நெஞ்சில் இல்லை பாரு நீ
பெண் : இடுப்புக்கு மேலே மேலே
குழு : ஹே ஹேய்
பெண் : பறக்குது பாவாடை
குழு : ஓ ஓ ஹோ
பெண் : அடிக்கடி கீழே கீழே
குழு : ஹே ஹேய்
பெண் : நழுவுது மேலாடை
குழு : ஓ ஓ ஹோ
பெண் : கககரிஸ ரிரிரிஸாஸ
கரிஸாஸ ரிஸாஸஸ சதபத பத
பெண் : குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
மாமலை ஓரம் அருவிகள்
நாட்டியம் ஆடும்
இது போலே இன்பம் ஏது…..
பெண் மற்றும் குழு : குக்குக்கூ கூ கூ
கூவும் குயிலக்கா
தித்தித்தை தை தை
ஆடும் மயிலக்கா
வள்ளி வரப் போறா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
ஆண் : எதுக்கு டா
ஆண் : மல்லியப்பூ முல்லப்பூவு
அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ
ஆண் : என்னடா சொல்ற
ஆண் : அது ஏன்தான் தெரியுமா
நான் சொன்னா புரியுமா
ஹே ஹே ஹே
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
ஆண் : சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ
ஆண் : அட அந்நாளிலே வெளையாடயிலே
அரை டிராயரும் பாவாட போட்டு
ஆண் : நல்ல அப்பா அம்மா என
ஆத்தோரமா அள்ளி விட்டீங்களே எசப் பாட்டு
ஆண் : ஹோய் சின்னசின்ன சொப்பு வச்சு
பொய்யா ஒரு பொங்கச்சோறு
தின்னதெல்லாம் நெஞ்சுக்குள்ளே
வச்சுருப்பா கேட்டுப்பாரு
ஆண் : பட்டணத்தில் பாடம் படிச்சு
ஆண் : முடிச்சவ
ஆண் : பத்து மணி வண்டி புடிச்சு
ஆண் : விடிஞ்சதும்
ஆண் : பட்டிக்காட்டு மண்ணை மிதிக்க
ஆண் : வருகுறா
ஆண் : கட்டி காக்க மாமன் இருக்க
ஆண் : புரிஞ்சுக்கோ
ஆண் : எதுக்கு தெரியுமா
நான் சொன்ன புரியுமா
ஹே ஹே ஹேய்
குழு : வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப்போறா
வெள்ளி மணி தேரா
ஆண் : சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
ஆண் : மல்லியப்பூ முல்லப்பூவு
அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ ஹோய்
ஆண் : பசும்பொன்னு என மொறப்பொண்ணு வர
நீ முன்னால போய் வரவேற்க
ஆண் : சிறு செந்தாமர சின்ன
மூணாம்பிறை
மேலும் அத்தானையே எதிர்ப்பார்க்க
ஆண் : ஒஹ் விட்ட கொறை மீண்டும் வந்து
ஒட்டிக்கிட்டு பாசம் பொங்க
ஆண் : வெட்டி விட்ட வாய்க்கா போல
பொத்துகிட்டு நேசம் பொங்க
ஆண் : எட்டு முழ வேட்டி எடுத்து
ஆண் : இடுப்புல
ஆண் : கச்சிதமா நீயும் உடுத்து
ஆண் : சொலிக்கிற
ஆண் : பட்டு வண்ணச் சேலை எடுத்து
ஆண் : அவளுக்கு
பக்குவமா கையில் கொடுத்து
ஆண் : அசத்திடு
ஆண் : எதுக்கு தெரியுமா
நான் சொன்ன புரியுமா
ஹஹா ஹா ஹா
குழு : வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப்போறா
வெள்ளி மணி தேரா
ஆண் : ஹான் சந்தனம் ஜவ்வாது
பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ டோய்
ஆண் : மல்லியப்பூ முல்லப்பூவு
அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ ஹோய்
ஆண் : அடி சக்க
அது ஏன் தான் தெரியுமா
ஆண் : நான் சொன்னா புரியுமா
ஆண் : ஹே ஹே ஹே
குழு : வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
ஆண் மற்றும் குழு : வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
|