Ranga
பட்டுக்கோட்டை அம்மாளு
பட்டுக்கோட்டை அம்மாளு
பார்த்துப்புட்டான் நம்மாளு
கண்ணால சிரிச்சான்
தன்னால அணைச்சான்
பின்னால காலை வாரிட்டான்
பட்டுக்கோட்டை அம்மாளு
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி
பொன்னாட்டம் மினிக்கி
பின்னாடி பள்ளம் பறிப்பா…..(பட்டுக்)
கேடிப்பய நாடகம் போட்டான்
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்
அம்மாளு வந்தாளே நம்பி
அந்தாளு விட்டானே தம்பி
ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா
நாடறிஞ்ச போக்கிரி தான்
நானறிஞ்ச அம்மாளு
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா
உனக்கென்ன சும்மாயிரு….(பட்டுக்)
பாசம் உள்ள தம்பியை போல
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா
எப்போதும் செல்லாது பாச்சா
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே
உன் கதையும் என் கதையும்
ஊர் அறிஞ்சா என்னாகும்
பாம்புக்கு ஒரு கால் இருந்தா
பாம்பறியும் என்னாளும்....(பட்டுக்)
புருசன்தான்......இவன் புருசன்தான்
புருசன்தான்......இவன் புருசன்தான்.
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்கில ஊர்கோலம்
பொண்டாட்டி... இவ பொண்டாட்டி...
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்குல ஊர்கோலம் (புருசன் தான்)
என் காவலுக்கு இளம் சிங்கம் இருக்கு
கண் வலை வீசி புடிச்சேனய்யா....
கொஞ்சி விளையாட துடிச்சேனய்யா ஹா.
என்னை கொஞ்சம் பார்த்தது பொண்ணு
அல்லிப் பூவாய் பூத்தது கண்ணு
அடிக்கடி சிரிக்குது உதட்டையும் கடிக்குது ஏன்
புருசன்தான்......இவன் புருசன்தான்....(இவ பேரு)
எட்டிப் போனா கட்டிப்பா செல்லக்குட்டி
தொட்டுப் பாத்தால் தித்திப்பா வெல்லக்கட்டி
அடி போக்கிரி உனை பார்க்கையில் ஒரு லாகிரி
கிள்ளக் கிள்ள துள்ளுது தேகம்
சொல்ல சொல்ல கொல்லுது மோகம்
இளவட்டு விழி பட்டு பனி மொட்டு வெடிச்சுது வா.
பொண்டாட்டி... இவ பொண்டாட்டி
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா ஹா. கைய கட்டிக்கிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்…..!
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
குட்மார்னிங்...டுடே யூ ஆர் மை பேபி....
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு குடிச்சிரு மாமா (டூத்)
நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே
எனக்காக இங்கே உருவான பொன்னே
ஐ லவ் யூ மை டியர்....இஸ் இட்... ஐ லவ் யூ மை டியர்
என் கண்மணியே பொன்மணியே என்னுயிர் ராஜா
உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு மை டியர் அங்கிள்
ஆஹ்...என் கண்மணியே பொன்மணியே என்னுயிர் ராஜா..
நீதான் என் சொந்தமே ஏதோ ஓர் பந்தமே
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
நான்தானே இங்கு அவள் போற்றும் தம்பி
நாள்தோறும் வாழ்வேன் அதுபோலே நம்பி
யூ ஆர் ரைட் மை டியர்........சர்டன்லி டார்லிங்...
யூ ஆர் ரைட் மை டியர்........ஆஹாஹ்.....(என்)
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட...
கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கள்ளக் காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட...ஆஹ்..
கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே
கட்டான பூ மேனி கரும்பே..ஆ...ஆ....ஆ..
பலகாரமே வெல்லப் பணியாரமே
பரிமாறினா அடி பசியாறுமே
பச்சக்கிளி நெஞ்சத்திலே வெச்சிருக்கா உன்னதான் (நல்ல)
போய்யா நீதான் பொல்லாத ஆள்தான்
உன்னாட்டம் கில்லாடி நான்தான்
கல்யாண தேதி முடிவாகணும் மூணு முடி போடணும்
அப்பாலத்தான் என் முதராத்திரி நம்ம சிவராத்திரி
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா விடும் பட்டாட (கும்ப)
ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே
வாயேண்டி செவ்வாழத் தண்டே
அடையாளமா ஒண்ணு கொடுத்தா என்ன
இதழோரமா ரசம் எடுத்தா என்ன
அம்மாடியோ அப்பாடியோ சும்மாயிரு சொக்காதே (நல்ல)
அழகான பட்டுப்பூச்சி
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே..
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது
அம்மாடி கொஞ்சாத ஆளேது
புது மொட்டு பூவாச்சு பதினெட்டு வயசாச்சு
அழகான பட்டுப்பூச்சி ஆடைக் கொண்டது....
பருகாத மது கலசம் பழகாத புது சரசம்
தொட்டாலும் பட்டாலும் கிட்டாத சந்தோஷம்தான்
ஆனமட்டும் ஆசைக் கொண்டு அனுபவி ராஜா
காலை மட்டும் ஆட வந்தாள் கண்மணி ரோஜா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே..(அழகான)
இரவெல்லாம் களியாட்டம் இவள்தானோ கிளியாட்டம்
கண்ணாடி கன்னத்தில் இல்லாத கள்ளல்லவோ
ராத்திரியில் மாறி வந்தேன் பழரசமாக
போதைகளை ஏற்றி வைப்பேன் பலவிதமாக
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா
லுக்கி லுக்கிலா லுக்கி லுக்கிலா ஹேஹே..(அழகான)
|