Naan Adimai Illai
தேவி தேவி
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
குழு : தனனம்….(8)
தனனம் தனம்
தனனம் தனம்…..ஆஅ…..
………………………………
ஆண் : தேவி தேவி தேனில் குளித்தேன்
பெண் : காதல் பாடம் கண்ணில் படித்தேன்
ஆண் : இன்று நீ பாற்கடல்
நீந்தி வந்தாயே
பெண் : பாவையின் பாற்குடம்
ஏந்த வந்தாயே
ஆண் : அழகே இனி ஒரு பிரிவில்லை
இளமைக்கு முடிவில்லை
தேவி தேவி தேனில் குளித்தேன்
குழு : ஹா……ஆஅ….ஆஅ…..ஆ…..
பெண் : ராத்திரி முழுதும் தூக்கமில்லை
கண்கள் என் பேச்சை கேட்கவில்லை அஹ்ஹ
ஆண் : கடிதங்கள் எழுத நேரமில்லை
எழுதுகோல் எடுத்தேன் ஈரமில்லை
பெண் : பள்ளிக் கொண்ட நானோ
துள்ளி எழுந்தேன்
சொல்லிவிடும் முன்பே
வந்து விழுந்தேன்
ஆண் : தானே வந்தாய் மானே
கையில் அடங்கு தொடங்கு
ஆண் : தேவி
பெண் : ஆஹாஹ்
ஆண் : தேவி
பெண் : ஆஹாஹ்
ஆண் : தேனில் குளித்தேன்
பெண் : காதல் ஆண் : ஹ்ம்ம்
பெண் : பாடம் ஆண் : ஆஹ்ஹ
பெண் : கண்ணில் படித்தேன்
பெண் : ஆஆஆஅ ஹாஆஆஆ
ஆஆஆஅ ஹ்ஹாஆஹா
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண் : நீரில்லை என்றால் மீனுமில்லை
நீயில்லை என்றால் நானுமில்லை
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ….ஆ
பெண் : பொய்யில்லை என்றால் கானம்மில்லை
உன் மொழி இல்லை என்றால் நானும்மில்லை
ஆண் : கட்டழகு மேனி கட்டுப்பட்டது
எந்தன் கண்ணில் ஏதோ தட்டுப்பட்டது
பெண் : போதை ஏறும்போது
சுக விருந்து அருந்து
பெண் : காதல் பாடம் கண்ணில் படித்தேன்
ஆண் : ஆ தேவி தேவி தேனில் குளித்தேன்
பெண் : பாவையின் பாற்குடம்
ஏந்த வந்தாயே
ஆண் : இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பெண் : அழகே இனியொரு பிரிவில்லை
இளமைக்கு முடிவில்லை
பெண் : தேவா ஆண் : ஆஹ்
பெண் : தேவா ஆண் : ஆஹ்
தேனில் குளித்தேன்
பெண் : ஆஅஹ்ஹ்ஹஹாஆ
ஒரு ஜீவன்தான்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
குழு : லல்ல லல்ல ல ல ல லா
லல்ல லல்ல ல ல ல ல லா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
பெண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
ஆண் : பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
பெண் : காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
பெண் : வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்
ஆண் : உருவானது நல்ல சிவரஞ்சனி
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
பெண் : உனக்காகத்தான்
இந்த கீதாஞ்சலி
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
ஆண் : ராகங்களின் ஆலாபனை
பெண் : மோகங்களின் ஆராதனை
ஆண் : உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஆண் : ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
குழு : ஹா….ஆஅ….ஆஅ…. (4)
பெண் : காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ….ஹோ ஓ ஓ
ஆண் : ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ….
பெண் : வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
ஆண் : வளையோசைதான்
நல்ல மணிமந்திரம்
குழு : ஹா….ஆஅ….ஆஅ….
பெண் : நான்தானைய்யா நீலாம்பரி
ஆண் : தாலாட்டவா
ஹஹஹா….நடுராத்திரி
பெண் : ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
பெண் : ஒரு ஜீவன்தான்
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : உன் பாடல்தான்
ஆண் : ஹா…ஆஅ….ஆ….
பெண் : ஓயாமல் இசைக்கின்றது
ஆண் : இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பெண் : பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
ஆண் : காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
போனாப் போகுது
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பெண் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது
வீணா போகுது எடுத்துக்க
பெண் : கொஞ்ச வந்தா கோபம் என்ன
கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னையும்
ஆழம் பார்ப்பதென்ன
பெண் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது
வீணா போகுது எடுத்துக்க
பெண் : {கண்ணாலே பாருங்க
இப்பக் கதவு மூடப்படும்
பொழுதாகிப் போச்சுன்னா
இவ தயவு தேவைப்படும்} (2)
பெண் : முழுக்க நனைஞ்சா
போர்வை எதுக்கு
இதுக்கு மேலே மீசை எதுக்கு
கட்டிக் கொண்டால் கேள்வி இல்லை
கட்டில் மேலே தோல்வி இல்லை
பெண்ணை வெல்ல ஆணும் இல்லை
பெண் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிச்சுக்க
தானாக் கனிஞ்சது
வீணா போகுது எடுத்துக்க
பெண் : ………………………….
பெண் : {பாய்ப்போட்டுத் தூங்குமா…..
இந்த பருவம் பொல்லாதது
வாய் விட்டு கேட்குமா……
இந்த வயசு பொல்லாதது} (2)
பெண் : மெத்தை மேலே வித்தை நூறு
கற்றுக் கொண்டால் என்ன கேடு
அங்கம் எங்கும் தங்க வீணை
கண்டும் தூங்கும் இந்தப் பூனை
என்னைத் தழுவு எந்தன் ஆணை
ஆண் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிக்கிறேன்
பெண் : ஹான்
ஆண் : ஹான் தானாக் கனிஞ்சது
தேனா இனிக்குது எடுக்கிறேன்
பெண் : ஹான் ஹான்
ஆண் : ஹஹாமோகம் இங்கே….ஏ….ஏ….ஏ….
ஏறிப்போச்சு
பெண் : ஹா…..
ஆண் : ஹோய் ஹோய் தாறுமாறா…..ஹான் ஹான்
அய்யய்யோ ஆகிப்போச்சு
பெண் : ஹா…..
ஆண் : பானை தொறந்தது
பூனை புகுந்துருச்சு
ஆண் : போனாப் போகுது
புடவை பறக்குது புடிக்கிறேன்
அட தானாக் கனிஞ்சது
தேனா இனிக்குது எடுக்கிறேன்
ஹ்ம்ம்ஹாஹஹா
வா வா இதயமே
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பெண் : ஹா…ஆ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆ…..ஹா….ஆஅ….ஆஅ…..
பெண் : வா வா இதயமே
என் ஆகாயமே
உன்னை நாளும் பிரியுமோ
இப்பூ மேகமே
கடல் கூட வற்றி போகும்
கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ
வா வா இதயமே என் ஆகாயமே
ஆண் : தேவலோக பாரிஜாதம்
மண்ணில் வீழ்தல் என்ன ஞாயம்
எந்தன் பாதம் முள்ளில் போகும்
மங்கை உந்தன் கால்கள் நோகும்
வான வீதியில் நீயும் தாரகை
நீரில் ஆடும் நான் காயும் தாமரை
காதல் ஒன்றே ஜீவனென்றால்
தியாகம் உந்தன் வாழ்க்கை என்றால்
ஏழை வாசல் தேடி வா
ஆண் : வா வா இதயமே
என் ஆகாயமே
உன்னை நாளும் வாழ்த்துமே
இப்பூ மேகமே
பெண் : வான வில்லும் வண்ணம் மாறும்
வெள்ளி வேரும் சாய்ந்து போகும்
திங்கள் கூட தேய்ந்து போகும்
உண்மை காதல் என்றும் வாழும்
காற்று வீசினால் பூக்கள் சாயலாம்
காதல் மாளிகை சாய்ந்து போகுமோ
ராமன் பின்னே மங்கை சீதை
எந்தன் வாழ்வோ உந்தன் பாதை
காதல் மாலை சூட வா
ஆண் : வா வா இதயமே
என் ஆகாயமே
பெண் : உன்னை நாளும் பிரியுமோ
இப்பூ மேகமே
ஆண் : கடல் கூட வற்றி போகும்
பெண் : கங்கை ஆறும் பாதை மாறும்
ஆண் : இந்த ராகம் என்றும் மாறுமோ
இருவர் : வா வா இதயமே என் ஆகாயமே
|