Kai Kodukkum Kai
தாழம்பூவே வாசம் வீசு
Movie |
Kai Kodukkum Kai |
Music |
Ilaiyaraaja |
Year |
1984 |
Lyrics |
Pulamaipithan |
Singers |
S. Janaki, S. P. Balasubramaniam |
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ..தாலேலோ..
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
நடந்தா காஞ்ச நிலம் செழிக்கும்
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்.கண்ட கண்ணுபடும்
பேசும் போது தாய பார்த்தேன்
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்
நெஞ்சத்திலே..ஹே..
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ..தாலேலோ..
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
இனி நான் கோடி முறை பொறப்பேன்
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்
இது சத்தியமே..
நீரும் போனா மேகம் ஏது
நீயும் போனா நானும் ஏது
என் உயிரே…ஏ
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா
தாழம்பூவே வாசம் வீசு
தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல
அன்புக்கு பஞ்சமில்ல
தாலேலோ..தாலேலோ..
கண்ணுக்குள்ளே யாரோ
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது
பூவும் பொட்டும் வச்சேனே
பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்
கோவில் கட்டி வச்சேனே
பெண் : ஆத்தா பெருமூச்சு
அது ஆள சுடும் காத்து
கட்டில் கூட முள்ளாச்சு ஹ..
நித்திரையும் போயாச்சு
காலம் நேரம் பார்த்தாச்சு ம்ம்ம்
கைகளும்தான் சேர்ந்தாச்சு
பெண் : தேனே
பெண் : பாலே
பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி
காத்து வாங்கப் போனாலே
பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும்
கண்ணு பட்டுப் போகுமே
பெண் : ராசா வரும் போது
புது ரோசா முகம் பார்க்கும்
பெண் : பாதம் கூட பூவாட்டம்
பாடுதடி பூந்தோட்டம்
பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு
பாதையிலே பூப்போடு
பெண் : தேனே
பெண் : பாலே
பெண்கள் : தேனே…..பாலே…..நீ வா
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
பெண் : கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க
பெண் : கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
ஆத்தா பெத்தாளே ஆம்பளையா என்னத்தான்
ஆத்தா பெத்தாளே ஆம்பளையா என்னத்தான்
நீதி செத்தாலே நான் தொறப்பேன் கண்ணத்தான்
கொடுத்தா கைக்கொடுப்பேன்
உசிரா நானிருப்பேன் எதிர்த்தா
பல்லொடப்பேன் சில்லொடப்பேன் பெண்டெடுப்பேன் (ஆத்தா)
சோடி சேர்ந்து எங்கூட சிலம்பம் ஆட ஆளேது
மோதி பாரு அண்ணாச்சி முதுகெலும்பு மிஞ்சாது
ஜல்லிக்கட்டு காளையெல்லாம்
மல்லுக்கட்டி பாத்தவன்
பேரு பெத்த வீரனெல்லாம்
எங்கிட்டத்தான் தோத்தவன்
தெம்மாங்கு பாட்டெடுப்பேன்டா அதிலும்
திக்கு எட்டும் பேரெடுப்பேன்டா
வித்தைகளை காட்டுவேன்
வெற்றிகளை நாட்டுவேன்........(ஆத்தா)
ஏருப் பூட்டும் முனுசாமி
எருது ஓட்டும் குருசாமி
ஏழை யாரும் என் சாதி
இவங்கதான் என் சாமி
நாலுபேர்க்கு நன்மை செய்ய
காலும் கையும் படச்சவன்
வாழ போல வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும் மொளச்சவன்
அஞ்சாத நெஞ்சமிருக்கு எனக்கு
மக்கள் துணை பக்கமிருக்கு
சத்தியத்த எண்ணுவேன்
சாதனைய பண்ணுவேன்......(ஆத்தா)
|