Naan Mahaan Alla
கல்யாணம் வைபோகம்
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க..அ
இன்பங்கள் சூழ்க..ஆ
நான் பாடும் நல்வாழ்த்து
தெய்வத்தின் வார்த்தைகள் ஆக..
பெண் : கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க…ஆ
இன்பங்கள் சூழ்க..
பெண் : காலமே உன் லீலையால்
பாதை மாறலாம்
கண்களே உன் பார்வையில்
போதை ஏறலாம்
பெண் : {பாசம் நேசம் அன்பு..
போனால் துன்பம் பின்பு} (2)
பளிங்கு நீரும் களங்கம் ஆகும்
புரிந்து கொள்ள வேண்டும்
பெண் : கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க…ஆ
இன்பங்கள் சூழ்க..
பெண் : ஏழை நான் என் வாசலில்
தேவன் தோன்றினான்
வாழ நான் என் வீட்டிலே
தீபம் ஏற்றினான்
பெண் : {பால் போல் பார்த்தேன் அன்று..
பாலோ கள்ளோ இன்று} (2)
நிறத்தில் வெள்ளை குணத்தில் இல்லை
தெரிந்து கொள்ளு கண்ணே
ஆண் : கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க
இன்பங்கள் சூழ்க..
கம் ஆன்
ஆண் : கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க
இன்பங்கள் சூழ்க..
நான் பாடும் நல்வாழ்த்து
தெய்வத்தின் வார்தைகள் ஆக..
ஆண் : கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க
இன்பங்கள் சூழ்க..
குழு : லாலாலாலாலாலா
லலலா லாலா..லலலா லாலா
லாலாலாலாலாலா
லலலா லாலா..லலலா லாலா
லாலாலாலாலாலா
லலலா லாலா..லலலா லாலா
மாலை சூடும்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆண் : மாலை சூடும்
வேளை அந்தி மாலை
தோறும் லீலை இன்ப
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும்
லீலை
ஆண் : ஏகாந்த மோகங்கள்
ஏராளம் உண்டு கண்ணாடி
கன்னம் உண்டு மாலை
சூடும் வேளை அந்தி மாலை
தோறும் லீலை
பெண் : { காயும் வெயில்
காலம் பாயும் மழை
நீயோ } (2)
ஆண் : { கோடையில்
நான் ஓடை தானே
வாடையில் நான்
போர்வை தானே } (2)
பெண் : நீ கொஞ்ச
நான் கெஞ்ச
வேறென்ன இன்பம்
ஆண் : நீண்ட நேரம்
தோன்றுமோ
பெண் : மாலை சூடும்
வேளை அந்தி மாலை
தோறும் லீலை ஏகாந்த
மோகங்கள் ஏராளம்
உண்டு கண்ணாடி
கன்னம் உண்டு
பெண் : மாலை
சூடும் வேளை
அந்தி மாலை
தோறும் லீலை
பெண் : { சோலை
மஞ்சள் சேலை
சூடும் அந்தி வேளை } (2)
ஆண் : { மாங்கனியாய்
நீ குலுங்க ஆண் கிளியாய்
நான் நெருங்க } (2)
பெண் : அம்மம்மா
அப்பப்பா என்னாகும்
தேகம்
ஆண் : ஆடை கொண்டு
மூடுமோ
பெண் : மாலை சூடும்
வேளை அந்தி மாலை
தோறும் லீலை
ஆண் : ஏகாந்த
மோகங்கள் ஏராளம்
உண்டு கண்ணாடி
கன்னம் உண்டு
ஆண் & பெண் : மாலை
சூடும் வேளை அந்தி
மாலை தோறும் லீலை
உன் மேலே ஒரு கண்ணு
ஹே..........ஹே........ஹே.......ஹே......ஹே.....
உன் மேலே ஒரு கண்ணு ஹே....தில்லாலங்கடியோ
வந்தாளே சின்னப் பொண்ணு ஹே...தொட்டால் என்னடியோ
ரோசாப்பூ....... மாராப்பு....... போட......
ஆட்டம் பாட்டம் ஓட்டம் ஐசாலங்காடி......
எல்லாம் இங்கே நோட்டம்.......
சின்னாளப்பட்டி சேலை ஹே தில்லாலங்கடியோ
சிங்காரி என் மேலே ஆஹா பொன்னா மின்னுதையோ
கட்டிலில் கட்டிக்கணும் வந்து சட்டுன்னு ஒட்டிக்கணும்
சித்திர அன்னமிது ஒரு சந்தனக் கிண்ணமிது
அங்கே கொஞ்சம்...... இங்கே கொஞ்சம்.....
கைய வச்சா என்ன மிஞ்சும்
பாத்திரம்.......அங்கிருக்க ஆத்திரம் இங்கிருக்க
முன்னால் இப்படி நின்னால் எப்படி என்னால் ஆகுமாடி (உன்)
உத்தமப் பத்தினியே அடி முத்தின கத்திரியே
கண்ணுல வச்சிருக்கேன் உன்ன நெஞ்சிலே தச்சிருக்கேன்
சின்னப்புள்ளே.........வண்ணக் கிள்ளே......
உன்ன மிஞ்சும் பொண்ணுமில்ல.....
ஆயிரம்......கண்படுது ஆனந்தம் தென்படுது
எல்லா வளமும் எல்லா கண்களும் என்னால் தங்குதய்யா (உன்)
வாங்க வாங்க அண்ணாச்சி
வாங்க வாங்க அண்ணாச்சி
உங்க ஊழல் இப்போ என்னாச்சு அட
காலமெல்லாம் பாடுபட்டு
காந்திமகான் உசுர விட்டு வாங்கி தந்த
சுதந்திரத்த நீங்களெல்லாம் தின்னாச்சு......(வாங்க)
பொறந்தாலும் பொறந்தீங்க ஊரக் கெடுக்க
பெத்தெடுத்த தாய்குலத்தின் பேரக் கெடுக்க
படிச்சாலும் படிச்சீங்க ஏட்ட கெடுக்க
பதவியிலே உக்காந்து நாட்டக் கெடுக்க
மன்னருங்க ஆனாலும் மந்திரிங்க ஆனாலும்
மக்கள் பலம் இல்லாட்டி என்னாகும்
ஊழல் எல்லாம் பண்ணாலே ஊர் பணத்த தின்னாலே
புரட்சி ஒண்ணு தன்னாலே உண்டாகும்
இனிமேலும் தாங்காது என் கண்கள் தூங்காது
ஓடஓட துரத்தி துரத்தி ஆளப் புடுச்சி தெருவில் நிறுத்தி
பாடம் சொல்லும் வேளை இப்ப வந்தாச்சு
வாங்க வாங்க அண்ணாச்சி........
காவல் துறை கன்னம் வைக்க போகலாமா
காவேரி கூவத்தை போல் ஆகலாமா
நோய் நொடிய தீர்ப்பவர்தான் டாக்டர்காரு
உயிர் பறிச்சா உருப்புடுமா உம்ம வேலை
பாதை விட்டு போனீங்க பைத்தியமா ஆனீங்க
பாவங்கள பண்ணீங்க அண்ணாச்சி
பண்ணதெல்லாம் தப்பண்டி பட்டதென்ன செப்பண்டி
பாவமெல்லாம் ஒத்தண்டி ஏவண்டி
இனிமேலும் திருந்தாட்டி இதுக்காக வருந்தாட்டி
உனக்கு தெரியும் எனக்கு தெரியும்
என்ன நடக்கும் ஏது நடக்கும்
போகப்போக புரிஞ்சிப்பீங்க. அண்ணாச்சி ........(வாங்க)
|