Chandramukhi

Rajinikanth Chandramukhi

அண்ணனோட பாட்டு

பாடகர்கள் : சின்ன பொண்ணு, கார்த்திக், கே. கே., சுஜாதா மோகன்
பாடலாசிரியர் : கபிலன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகிகள் : சின்ன பொண்ணு சுஜாதா மோகன் பாடகா்கள் : கே.கே, கார்த்திக் இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : வாழ்த்துறேன்
வாழ்த்துறேன் வாரும்
பெண்களுக்கு வாழ்த்துறேன்
பொண்ண பெத்த தாயாரே
போதரமா கேட்டுருங்க
மாப்பிள்ளைய பெத்தவக
மனம் மங்கலமா கேட்டுருங்க

பெண் : சுண்ணாம்பு போல
சுவிச்ச முகத்துக்கு எங்க
சூரியனாா் வம்சம் எங்கெங்கே
வாச்சுச்சோ வெத்தல போல
சிரிச்ச முகத்துக்கே எங்க
சந்திரனார் வம்சம் எங்கங்கோ
வாச்சுச்சோ

ஆண் : அரே அரே
அரே அரே அரே

ஆண் : ஓ ஓ அண்ணனோட
பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
அர்த்தம் நூறுடா போடு சக்கை
போடு போடு போட்டா அளந்து
போடுடா நேத்து காற்றில் ஓடிப்
போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

குழு : { அகர்ந்தவில்லா
நகர்த்து பேசு } (4)

ஆண் : ஓ ஓ அண்ணனோட
பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
அர்த்தம் நூறுடா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ

ஆண் : அன்பின் உறவாயிரு
உண்மை மறவாதிரு நூறு
ஆண்டு வரை வாழ்வில்
வளமாய் இரு

பெண் : வாழை பூப்போல
வெட்கம் பாரு மனசுக்குள்ளே
தான் மத்தாப்பு

ஆண் : இரவில் இனிமேலு
தூக்கம் ஏது மார்பில் தங்காது
மாராப்பு

பெண் : நீ அறியா விஷயம்
ஓ ஓ அது நாளை புரியும் ஓ ஓ

ஆண் : அவன் மூச்சுக்காற்றில்
உன் சேலை எாியும் ஆண் &

பெண் : ஹே
கொக்கரக்கோ சேவல் ஒன்னு
கோழி கிட்ட மாட்டிக்கிச்சு

குழு : { அகர்ந்தவில்லா
நகர்த்து பேசு } (4)

ஆண் : ஓ ஓ அண்ணனோட
பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
அர்த்தம் நூறுடா

ஆண் : இப்புடுச்சூடு

ஆண் : உள்ளம் தெளிவாக
வை எண்ணம் உயர்வாக வை
வாழும் காலம் எல்லாம்
மண்ணில் மரியாதை வை

ஆண் : வேர்கள் இல்லாத
மரமும் உண்டா சொந்தக்காலில்
நீ நில்லேன்மா நீ நின்ன பின்னாலே
ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம்
கூடாதம்மா

ஆண் : கண் இமைக்கும்
நொடியில் அட எதுவும்
நடக்கும் இது எனக்கு
தெரியும் நாளை உனக்கும்
புரியும் ஹேய் அஞ்சுக்குள்ள
நாள வைய் ஆளம் பார்த்து
காலை வைய்

குழு : { அகர்ந்தவில்லா
நகர்த்து பேசு } (4)

ஆண் : ஓ ஓ அண்ணனோட
பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா
ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ
அர்த்தம் நூறுடா போடு சக்கை
போடு போடு போட்டா அளந்து
போடுடா நேத்து காற்றில் ஓடிப்
போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

குழு : { அகர்ந்தவில்லா
நகர்த்து பேசு } (4)

அத்திந்தோம்

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, Vaishali Bhaisane Mhade
பாடலாசிரியர் : No Information
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகி : வைஷாலி பைசனே மஹதே பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : { அத்திந்தோம்
திந்தியும் தோம்தன
திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும்
தோம்தன திந்தாதி திந்தோம் } (2)

ஆண் : ஆடாத ஜவ்வாது
மணம் ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டும்
இசை கேளடி பொம்மி

ஆண் : என் பாட்டு
வந்தாலே மனம்
துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத
இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணன் முத்தாக
தந்த பாட்டு படிச்சேன்
பாட்டிலே பல கோடி
நெஞ்ச நானும் புடிச்சேன்

ஆண் : அத்திந்தோம்
திந்தியும் தோம்தன
திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும்
தோம்தன திந்தாதி திந்தோம்
திந்தாதி திந்தோம் திந்தாதி திந்தோம்

ஆண் : ஹே பொம்மி
ஹே பொம்மி ஹே
பொம்மி ஹே பொம்மி

ஆண் : வட்ட வட்ட
மொட்டுக்களை தட்ட
தட்ட வந்ததம்மா நதி
காத்து ஓ நதி காத்து
மொட்டு மொட்டு மெல்ல
மெல்ல மெட்டு மெட்டு
தட்டுதம்மா சுருதி பாா்த்து
ஓ சுருதி பாா்த்து

ஆண் : ஹே ஆட வைக்கனும்
பாட்டு சும்மா அசைய வைக்கனும்
பாட்டு கேக்க வைக்கனும் பாட்டு
நல்ல கிறங்க வைக்கனும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்கேட்டு சுற்றும்
பூமி எப்போதும்ம்ம்ம்….

ஆண் : அத்திந்தோம்
திந்தியும் தோம்தன
திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும்
தோம்தன திந்தாதி திந்தோம்

ஆண் : சின்ன சின்ன
தொட்டில் கட்டி அம்மா
சொல்லும் ஆரிராரோ
இசைதானே ஓ இசைதானே
ஆணும் பெண்ணும் கட்டில்
கட்டிஆசைமெட்டு கட்டுறதும்
இசைதானே ஓ இசைதானே

ஆண் : ஹே ஆறு
மனமே ஆறு இங்கு
அனைத்தும் அறிந்ததாரு
அறிவை திறந்து பாரு அதில்
இல்லாதத சேரு அட எல்லாம்
தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே
இல்லையம்மா ஆஆ

பெண் : அத்திந்தோம்
திந்தியும் தோம்தன
திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும்
தோம்தன திந்தாதி திந்தோம்

ஆண் : ஆடாத ஜவ்வாது
மணம் ஆடிடும் பொம்மி
ஆண்டவனை தாலாட்டும்
இசை கேளடி பொம்மி

ஆண் : என் பாட்டு
வந்தாலே மனம்
துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத
இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணன் முத்தாக
தந்த பாட்டு படிச்சேன்
பாட்டிலே பல கோடி
நெஞ்ச நானும் புடிச்சேன்

ஆண் : அத்திந்தோம்
திந்தியும் தோம்தன
திந்தாதி திந்தோம்
தகதிந்தோம் திந்தியும்
தோம்தன திந்தாதி திந்தோம்

தேவுடா தேவுடா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : ஹரே ஹரே
ஹரே ஹரே ஹரே

ஆண் : தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுடா சூடூடா
சூடூடா எங்க பக்கம் சூடூடா

ஆண் : ஏ தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுடா சூடூடா
சூடூடா எங்க பக்கம் சூடூடா

ஆண் : எங்காளின்
உள்ளங்கள் எல்லாமே
வைரங்கள் நீ கொஞ்சம்
பட்டை தீட்டடா

ஆண் : ரிப்பிட்டு

குழு : எங்காளின்
உள்ளங்கள் எல்லாமே
வைரங்கள் நீ கொஞ்சம்
பட்டை தீட்டடா

ஆண் : சக்தியெல்லாம்
ஒன்று சேர்ந்தாலே
ஓஓ…. சொர்க்கம் வரும்
இந்த மண் மேலே
ஓஓ…….

ஆண் : தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுடா சூடூடா
சூடூடா எங்க பக்கம் சூடூடா

ஆண் : ஏ ஹரே ஹரே
ஹரே ஹரே ஹரேரா
ஹரே ஹரேரா ஹரே

ஆண் : எண்ணிப்பாரு
கொஞ்சம் ஏர் பிடிக்கும்
ஆள சோத்தில் நாம
கைய வைக்க சேத்தில்
வைப்பான் கால

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : சாக்கடைக்குள்
போயி சுத்தம் செய்யும்
பேரு நாலு நாளு லீவு
போட்டா நாறிப்போகும்
ஊரு

ஆண் : முடி வெட்டும்
தொழில் செய்யும் தோழன்
தான் இல்லையேல்
நமக்கெல்லாம் ஏது அழகு
நதி நீரில் நின்று துணி
துவைப்பவன் இல்லையேல்
வெளுக்குமா உடை அழுக்கு

ஆண் : எந்த தொழில்
செய்தால் என்ன
செய்யும் தொழில்
தெய்வம் என்று
பட்டுக்கோட்டை
பாட்டில் சொன்னானே

ஆண் : ரிப்பிட்டு

ஆண் : சக்தியெல்லாம்
ஒன்று சேர்ந்தாலே
ஓஓ…. சொர்க்கம் வரும்
இந்த மண் மேலே
ஓஓ……. ஆண் &

குழு : ஆ தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுடா சூடூடா
சூடூடா எங்க பக்கம் சூடூடா

குழு : ………………………

ஆண் : உன்னைப்பற்றி
யாரு அடஎன்ன சொன்னால்
என்ன இந்த காதில் வாங்கி
அதை அந்த காதில் தள்ளு

ஆண் : மேகம் மிதந்தாலும்
காகம் பறந்தாலும் ஆகாயம்
தான் அழுக்காக ஆகாதுன்னு
சொல்லு

ஆண் : பூப்பந்தை யாரும்
நீரில் பொத்தித்தான் வெச்சாலும்
பந்து வரும் தண்ணி மேலத்தான்
அட உன்னை யாரும் ஓரம்
கட்டித்தான் வெச்சாலும்
தம்பி வாடா பந்து போலத்தான்

ஆண் : மூணாம் பிறை
மெல்ல மெல்ல
வெண்ணிலவாய் மின்னுவதை
மின்மினிகள் தடுத்திடுமா

ஆண் : ரிப்பிட்டு

ஆண் : சக்தியெல்லாம்
ஒன்று சேர்ந்தாலே
ஓஓ…. சொர்க்கம் வரும்
இந்த மண் மேலே
ஓஓ…….

ஆண் : தேவுடா தேவுடா
ஏழுமலை தேவுடா

குழு : ஹரே ஹரே
ஹரே ஹரே ஹரே
ஹரே ஹரே ஹரே
ஹரே

ஆண் : சுவாமி சூடூடா
சூடூடா எங்க பக்கம் சூடூடா

குழு : ஹரே ஹரே
ஹரே ஹரே ஹரே
ஹரே ஹரே ஹரே
ஹரே

ஆண் : எங்காளின்
உள்ளங்கள் எல்லாமே
வைரங்கள் நீ கொஞ்சம்
பட்டை தீட்டடா

ஆண் : ரிப்பிட்டு

குழு : எங்காளின்
உள்ளங்கள் எல்லாமே
வைரங்கள் நீ கொஞ்சம்
பட்டை தீட்டடா

ஆண் : சபாஷ்சு ஆண் &

குழு : சக்தியெல்லாம்
ஒன்று சேர்ந்தாலே
ஓஓ…. சொர்க்கம் வரும்
இந்த மண் மேலே
ஓஓ…….

கொக்கு பற பற

பாடகர்கள் : Manikka Vinayagam, Rajalakshmy, திப்பு
பாடலாசிரியர் : Na. Muthu Kumar
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகி : ராஜலக்ஷ்மி பாடகா்கள் : மாணிக்க விநாயகம், திப்பு இசையமைப்பாளா் : வித்யாசாகர்

குழு : ஓ ஹோ ஓ ஹோ

பெண் : { கொக்கு

குழு : பற பற

பெண் : கோழி

குழு : பற பற

பெண் : மைனா

குழு : பற பற

பெண் : மயிலே பற } (2)

பெண் : என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற

குழு : பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் ஹோய்யா

குழு : பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம்

பெண் : { கொக்கு

குழு : பற பற

பெண் : கோழி

குழு : பற பற

பெண் : மைனா

குழு : பற பற

பெண் : மயிலே பற } (2)

குழு : ஆஹா ஆஹா

பெண் : ஹே ஹேஹே

குழு : ஹேஹேஹே
பெண் &

குழு : ………………….

ஆண் : மீனாக்ஷி அம்மன
பாா்த்தாக்கா கந்து வட்டியோட
கொடுமைய போக்கச்சொல்லு
ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா தல
காவேரிய அடிக்கடி வரச்சொல்லு

பெண் : நேற்று என்ன
நாளை என்ன இன்று
மட்டும் உள்ளதே இஷ்டம்
போல ஆட்டம் போடு பறந்து

பெண் : காத்து இப்போ
நம்ம பக்கம் சாதகமா
வீசுதே தும்பி இல்ல
நம்ம பட்டம் பறந்து

ஆண் : நூலோட போட்ட
இந்த மாஞ்சா யாரோடும்
டீலும் போடுமே

பெண் : ஆஹா ஆஆஆ…….

குழு : { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2)

பெண் : கொக்கு

குழு : பற பற

பெண் : கோழி

குழு : பற பற

பெண் : மைனா

குழு : பற பற

பெண் : மயிலே பற

குழு : …………………..

ஆண் : ஏத்தி விட்டத
மறந்தாக்கா அந்த நன்றி
என்னும் வார்த்தைகொரு
அர்த்தம் இல்ல

பெண் : காத்தில் இருந்தே
தலையாட்டி நீ நூலுக்கு
தான் நன்றி சொல்லு
மெல்ல மெல்ல

பெண் : பள்ளிகூடம் படிக்கல
கல்லூரிய மிதிக்கல பட்டம்
மட்டும் வாங்கி புட்டோம் பாருடா

ஆண் : புத்தகத்தில் கூட
இல்ல எத்தனையோ
பாடங்கள சொல்லும்
பட்டம் வாத்தியாரு தானடா ஆண் &

பெண் : காத்துக்கு
வேலி போட யாரு காத்தாடி
போல பறப்போம்

பெண் : ஆஹா ஆஆஆ…….

பெண் : கொக்கு

குழு : பற பற

பெண் : கோழி

குழு : பற பற

பெண் : மைனா

குழு : பற பற

பெண் : மயிலே பற

பெண் : என் பட்டமே
பற பற பற வானம்
தாண்டி பற பற என்
நெஞ்சமே பற பற பற
எல்லைகள் இல்லை
பற பற

குழு : { பாஞ்சி பாயிற
பட்டம் இது பட்டய
களப்புற பட்டம் சூப்பர்
ஸ்டாரு பட்டம் நம்
பட்டம் } (2) ஹே ஹே

கொஞ்ச நேரம்

பாடகர்கள் : Madhu Balakrishnan, ஆஷா போஸ்லே
பாடலாசிரியர் : Yuga Bharathi
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகி : ஆஷா போஸ்லே பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : { கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா } (2)

ஆண் : கொஞ்சும் நேரம்
கொஞ்சும் நேரம் எல்லை
மீறக் கூடாதா இந்த நேரம்
இன்ப நேரம் இன்னும்
கொஞ்சம் நீளாதா

பெண் : கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

பெண் : கண்ணில் ஓரழகு
கையில் நூறழகு உன்னால்
பூமி அழகே

ஆண் : உன்னில் நானழகு
என்னில் நீயழகு நம்மால்
யாவும் அழகே

பெண் : ஹோ கண்ணதாசன்
பாடல்வரி போல கொண்ட
காதல் வாழும் நிலையாக

ஆண் : கம்பன் பாடிப்
போன தமிழ்ப் போல
இந்த நாளும் வேகம்
நலமாக

பெண் : மழை நீயாக
வெயில் நானாக
வெள்ளாமை நீ ஆஆ

ஆண் : கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

பெண் : லாலா லாலா
லாலா லாலா லா லாலா
லாலா லாலா லாலா லா

ஆண் : கொக்கிப் போடும்
விழி கொத்திப் போகும்
இதழ் நித்தம் கோலம் இடுமா

பெண் : மக்கள் யாவரையும்
அன்பில் ஆளுகின்ற உன்னைப்
போல வருமா

ஆண் : வெளி வேஷம்
போட தெரியாமல்
எனதாசை கூட தடுமாறும்

பெண் : ஹம் பல கோடி
பேரின் அபிமானம்
உனக்காக ஏங்கும்
எதிர்காலம்

ஆண் : நீ என் நாடு
நான் உன்னோடு
மெய் தானே இது
ஆஆஆ

பெண் : கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம் கொஞ்சிப்
பேசக் கூடாதா அந்த நேரம்
அந்தி நேரம் அன்புத் தூறல்
போடாதா

ஆண் : கொஞ்சும் நேரம்
கொஞ்சும் நேரம் எல்லை
மீறக் கூடாதா

பெண் : இந்த நேரம்
இன்ப நேரம் இன்னும்
கொஞ்சம் நீளாதா ஆஆ

ராரா ராரா

பாடகர்கள் : திப்பு, Binni krishnakumar
பாடலாசிரியர் : Bhuvanachandra
இசையமைப்பாளர் : வித்யாசாகர்


பெண் : ராரா… ராரா ராரா ராரா…

பெண் : ராரா ராரா சரசக்கு ராரா ராரா…
ராரா ராரா சிந்தக்கு சீரா…
ப்ராணமே நீதிரா ஏழுகோ ராதரா…
சுவாசலோ சுவாசமை ரா ரா…

பெண் : ராரா ராரா சரசக்கு ராரா ராரா…
ராரா ராரா சிந்தக்கு சீரா…
ப்ராணமே நீதிரா ஏழுகோ ராதரா…
சுவாசலோ சுவாசமை ரா ரா…

பெண் : தோம் தோம் தோம்…
தோம் தோம் தோம்…

BGM

பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
திரனன திரனன திரனன திரனன…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
திரனன திரனன திரனன திரனன…

பெண் : ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆஆ… ஆஆ…

பெண் : நீ போந்து நே கௌரி…
அபிசாரி கைநேனு வெச்சானு சுமனோஹரா…

பெண் : ஆஆ… காலான மறுகைன…
ஆனந்த ராகலு விழிபிஞ்ச நிழிச்சானுரா…

ஆண் : தனன தீம்த தீம்த தீம்தன…
தனன தீம்த தீம்த தீம்தன…
தனன தீம்த தீம்த தீம்தன… தீம்தனா…

பெண் : வயசு ஜால மூப்ப லேதுரா…
வருலு கொன்ன சின்ன தானிரா…
அனுவும் ஆசை தீர்ச்ச ராவெரா… ராவெரா…

பெண் : சல சல சல ரகளின…
பருவ பூ சொத இதி…
தடி புடி தடி புடி…
தபநல ஸ்வரம் இதி…
ராரா ராரா ராரா…
ராரா ராரா ராரா… ராரா…

BGM

ஆண் : ராஜாதி ராஜ ராஜ கம்பீர…
ராஜ மார்த்தாண்ட ராஜ குலத்திலக…
வேட்டைய ராஜா வாரார் வாரார் வாரார்…

BGM

ஆண் : லக லக லக லக லக லக லக…

BGM

பெண் : ஏ பந்தமோ இதி ஏ பந்தமோ…
ஏ ஜென்ம பந்தால சும கந்தமோ…

ஆண் : ஏ ஸ்வப்னமோ இதி ஏ ஸ்வப்னமோ…
நயனால நடையாடு தொலி ஸ்வப்னமோ…

பெண் : விரகபு வித்தலனு வினவா…
இ தடபடு தனுவுனு கனவா…

ஆண் : மதுவன மனசொனு தெலிசி…
நீ வலபொனு மரச்சுட்ட சுலுவா…

பெண் : இதி கனிவினி எருகன…
மனசொல பலயினா…

BGM

ஆண் : சரசக்க விலிசித்தி விரசமூ தகதிகா…

BGM

பெண் : ஜிகி பிகி ஜிகி திகி…
சொகசொல மொரவினி…

ஆண் & பெண் : மிள வில மகசிரி…
மெனகுல மெரியக…
ராரா ராரா…
பெண் : ராரா…

ஆண் : லக லக லக லக லக லக லக…

ஆண் : தாம் தரிகிட தீம் தரிகிட…
தோம் தரிகிட நம் தரிகிட…

BGM

ஆண் : தத்தத் தரிகிட…
தித் தித் தரிகிட…
தோம் தோம் தரிகிட…
நம் நம் தரிகிட…

BGM

ஆண் : தாம் தீம் தோம் நம் சம் சம்…
தாம் தீம் தோம் நம் சம் சம்…

ஆண் : தகிட தீகிட தோம்கிட…
நம்கிட தக தகிட…
தத் தத் தாழங்கு தோம்…
தத் தத் தாழங்கு தோம்…
தகதீத் தாழங்கு தோம்…

ஆண் : தாழங்கு தக்க ஜம்…
ததீம்த நக்க ஜம்…
தாழங்கு தக்க ஜம்…
ததீம்த நக்க ஜம்…
தாழங்கு தக்க ஜம்…
ததீம்த நக்க ஜம்…

வாராய் வாராய்

பாடகர்கள் : திப்பு, Nithyashree Mahadevan
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன் பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : வாராய் வாராய்
வாராய் வாராய் வாராய்
நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு
கொண்டாடி மஞ்சமே
நான் இட என்னையும்
கை தொட தோகையும்
தோலின் மேல் ஆட

பெண் : தோம் தோம்
தோம் தோம் தோம்
தோம் ஆஆஆ ஆஆ
திரனன திரனன
ஆஆஆ ஆஆ திரனன
திரனன ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : நாள் முற்றும்
நீ துஞ்ஜ தமிழ் நங்கை
இடைத்தேடும் வாராதோ
சுப யோகம் தான் ஆஆ
கண்ணா நீ மெதுவாக
அணைத்தாலே அணையாதோ
வனமானின் நணல் மோகம்
தான்

ஆண் : தனன தீம்த
தீம்த தீம்தன தனன
தீம்த தீம்த தீம்தன
தனன தீம்த தீம்த
தீம்தன தீம்தனா

பெண் : வடியும் ஈர
பூவின் தேன் துளி
பருகும் போது ராஜ
லீலை தான் தழுவும்
மாது மெல்ல நின்
மடி தேடுதோ

பெண் : தலதலதல
என இந்த பருவமும்
உனை எண்ணி தினம்
ஒரு தினம் ஒரு சபலத்தில்
துடிப்பது தேராய் தேவனே
வாராய் வாராய் வாராய்
வாராய்

குழு : ராஜாதி ராஜ
ராஜ கம்பீர ராஜ குல
திலக வேட்டைய
ராஜா வரார் வரார்
வரார்

ஆண் : லக லக
லக லக லக லக
லக லக

பெண் : என் பந்தமோ
இது நின் பந்தமோ
ஏழு ஜென்ம பந்தத்தின்
தொடராகுமோ

ஆண் : என் புஷ்பமோ
இது தேன் புஷ்பமோ
எண்ணங்கள் கலந்தாடும்
புது புஷ்பமோ

பெண் : விரகமும்
விலகனும் வா வா
என் தலைவனும்
தழுவனும் நீ வா

ஆண் : பருவத்து
மனசொன்னு அழைக்க
பெண் வனத்தொரு
மையலுற தொடவா

பெண் : இனி இரவினில்
ததும்பிய மனதுனை
கலந்திட

ஆண் : சரசமும் பிறந்திட
விரகமும் தணிந்திட

பெண் : இளமையின்
இனிமைகள் தொட
தொட புதிர் விட
பெண் &

ஆண் : இடைவெளி
மறைந்திங்கு மறுமுறை
பழகிட நீ தான் நான் தான்

பெண் : சேர

ஆண் : லக லக
லக லக லக லக
லக லக லக லக

ஆண் : தாம் தரிகிட
தீம் தரிகிட தோம்
தரிகிட நம் தரிகிட

ஆண் : தத தரிகிட
திதி தரிகிட தோம்
தோம் தரிகிட நம்
நம் தரிகிட

ஆண் : தாம் தீம் தோம்
நம் சம் சம் தாம் தீம்
தோம் நம் சம் சம்
தகிட திகிட தோம்
கிட நம் கிட தக தக
தின தக்க தத தாலாங்கு
தோம் தத தாலாங்கு
தோம் தகதித் தாலாங்கு
தோம்

ஆண் : { தாலாங்கு
தக்க ஜம் ததீம்த
நக்க ஜம் } (3)