Thillu Mullu
ராகங்கள் பதினாறு
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது (ராகங்கள்)
கலை மாது தான் மீட்டும் இதமான வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆதார சுதி கொண்ட வீணையம்மா! (ராகங்கள்)
இடையாட வளையாட சலங்கைகள் ஆட
இலையோடு கொடி போல நடமாடினாள்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா! (ராகங்கள்)
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
லலலா லலலா லலலா லலலா
தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு
தில்லு முல்லு உள்ளமெல்லாம் கல்லு முல்லு
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
மன்மத வேஷத்தில் வந்தான்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்பிள்ளை வேஷம் போட்டான்
அவனிடம் பெண்ணொன்றும் கிடையாது
வெட்கமில்லை துக்கமில்லை ஹோ ஹோ
வேஷம் போடு தோஷமில்லை ஹோ ஹோ
காலையில் சாமியார் மாலையில் மாமியார்
காலையில் சாமியார் மாலையில் மாமியார் (தில்லு)
நல்லது செய்திட பொய் சொல்லலாம் என
வள்ளுவர் சொன்னாரு
நாட்டுக்கு கோவிலை கட்டிய ஒருவர்
திருடவும் செய்தாரு
சத்தியத்தை சொல்லிவிட்டு தத்துவத்தை விட்டு விட்டு
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா (தில்லு)
ஆண்மையில்லாதவன் மீசை வைத்தால் அது
வீரத்தைக் காட்டாது
பெரியமுள் சிறியமுள் இரண்டுமில்லாதது
நேரத்தை காட்டாது
நல்லதுக்கு கத்தி எடு ஹோ ஹோ
இல்லையனா விட்டு விடு ஹோ ஹோ
என்னமும் செய்யலாம் நன்மைதான் முக்கியம்
என்னமும் செய்யலாம் நன்மைதான் முக்கியம்
தில்லு முல்லு தில்லு முல்லு
தில்லு முல்லு தில்லு முல்லு
தங்கங்களே.......தம்பிகளே.......
தங்கங்களே.......தம்பிகளே........
மதுரை வீரன் சொல்லுவதைக் கேளுங்க
அண்ணன் அவன் சொன்ன வழி
நல்ல வழி பூமியில வாழுங்க..... (தங்கங்களே)
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
நீங்க எப்போதும் தலைவரை நம்புங்க - இங்கே
ஏழைகள் முன்னேற கோழைகள் கண்டோட
அண்ணாவின் சாலையிலே செல்லுங்க
தாய்க்கு பின் தாரம் தான்
தாய் சொல்லை தட்டாதே
எங்களின் தங்கமே.......
பல்லாண்டு வாழ்க நீ............(தங்கங்களே)
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்கன்னு
மார்த்தட்டி சொன்ன வந்தான் நானடா
அட ஐயா நான் கவிஞன் இல்லே
அது போல ரசிகன் இல்லே
அதுக்கு மேலே சொல்லுவதும் ஏனடா
திரிசூலம் ரிஷிமூலம் பராசக்தி பதிபக்தி
முதல் தேதி பொன்னூஞ்சல்
தவப்புதல்வன் விடிவெள்ளி ஆ......
தங்கங்களே தம்பிகளே
கட்டபொம்மன் சொல்லுவத கேளுங்க
தங்க மகன் காமராசு சொன்னபடி
பூமியிலே வாழுங்க......
அடியே காந்தா அடி காந்தா அடிபாவி
ஒடம்பெல்லாம் ஒரு கோடி
நாளெல்லாம் அலஞ்சேனடி
ரத்த கண்ணீர் விட்டேன்டி
தங்கங்களே தம்பிகளே
நடிகவேள் சொல்லுவதைக் கேளுங்க
நமது ஐயா சொன்னபடி
பகுத்தறிவு பாதையிலே செல்லுங்க
காதலுந்தான் வந்திருச்சு
ஆசையிலே நான் ஓடி வந்தேன்
பதினாறு வயசினிலே........
சுகம்தானா சொல்லு கண்ணே
மை நேம் இஸ் பில்லா
வாழ்நாளில் எல்லாம்
எல்லாருக்கும் நல்லா இருப்பேன்
அன்பு ஒரு ஆலயமாம் அன்புக்கு நான் அடிமை
ஜானியுடன் காளியுமாவேன்
தங்கங்களே தம்பிகளே
பில்லா நான் சொல்லுவத கேளுங்க
ஆறு முதல் அறுபதுக்கு........
பாடுப்பட்டு எந்நாளும் வாழுங்க......(தங்கங்களே)
அந்த நேரம் பொறுத்திருந்தால்
அந்த நேரம் பொறுத்திருந்தால் – நல்ல
அனுபவம் கிடைத்திருக்கும்
ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்
அன்பும் சுகமும் வந்திருக்கும் (அந்த)
சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன்
பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய்
வெட்கம்.......வெட்கம் வந்தது ஒரு பொழுது
திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது (அந்த)
முந்தானை கொஞ்சம் நீராட
மோக கங்கையில் நானாட
உன் கண்கள் மெல்ல விளையாட
உண்மை என்றே விழித்தேனே ( அந்த)
குங்கும பொட்டு தீட்டி வைத்தான்
கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான்
சங்கமம் என்றே நினைத்தேனே
தழுவும் வேளையில் விழித்தேனே (அந்த)
|