Annaatthe

Rajinikanth Annaatthe

நாடி நரம்பு முறுக்க முறுக்க

பாடகர்கள் : அறிவு, ரஜினிகாந்த்
பாடலாசிரியர் : Arivu
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகர்கள் : அறிவு மற்றும் ரஜினிகாந்த் இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : நாடி நரம்பு முறுக்க முறுக்க
ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க
அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க
தொடங்குது ஓம்கார கூத்து

ஆண் : எ பார் அண்ணாத்தே
எட்றா நீ மோலம்தா
நான் ஸ்டாப் ஆட்டம் பார்
இது போக் ரேப்பர் சூப்பர் ஸ்டார்

ஆண் : பல பல வேட்டி சொக்கா
நாட்டு புறத்து ஆளு மக்கா
தலைமுறை தாங்கி நிற்கும்
சேர்த்து வெச்ச பேரு மக்கா

ஆண் : தர தர சம்பவம்
தனி ஒருவனின் தாண்டவம்
வழி விடு வழி விடு
இது என்ட்ரி ஆப் த கண்ட்ரி சிங்கம்

ஆண் : ஹஹஹஹஹா

குழு : ……………………………………………

குழு : தீரான தீர தீரான
தீரான தீர தீரான

ஆண் : எ பார் அண்ணாத்தே!!!

குழு : தீரான தீர தீரான
தீரான தீர தீரான

ஆண் : எட்றா நீ மோலம்தா!!!

குழு : தீரான தீரான தீர தீர
தீரான தீரான தீர தீரான
தீர தீர தீரான

ஆண் : நரிகள் ஆடி வேட்டை
தரிசனம் இல்லை காட்ட
உரிமைய மெல்ல நாட்ட
களம் எறங்கு டா

ஆண் : தடை உனக்கு ஒரு சாட்டை
கழுகு இருக்குது காட்ட
உறவு இருக்குது கேட்க
தம்மு இருக்கு வா

ஆண் : எ பார் அண்ணாத்தே
எட்றா நீ மேலத்த

குழு : தீரான தீர தீரான
தீரான தீர நா
தீரான தீர தீரான
தீரான தீர நா

ஆண் : தனி மரமென நின்னாலும்
பணிவது இல்லை தன்மானம்
சதிவலை எரித்து
நிமிர்ந்து நிற்ப்பது பதிலடி

ஆண் : நெரு நெருப்பென முன் கோவம்
தடை எதிர்த்திட வந்தாலும்
ஒரு முடிவிலா நீ நின்றால்
எதிரி தவுடு போடி

ஆண் : ஹஹஹஹா

ஆண் : இருகரம் வழி தடம்
அது வழி பொறுத்திட விழித்திடும்
இனி உனக்கு எழுத்தினை சரித்திரம்
அடி அதுர அதிர எதிரி சேதார

ஆண் : பொறி பறக்குற
போர் களம் இது
அறத்தினை உருவாக்கணும்
ஒரு புது யுகம் உனதாக்கணும்
இனி எவன் தடுப்பது
உன்னை பகைப்பது வா

குழு : தீரான தீர தீரான
தீரான தீர நா

ஆண் : எ பார் அண்ணாத்தே

குழு : தீரான தீர தீரான
தீரான தீர நா

ஆண் : எட்றா நீ மோலம்தா!!!

குழு : தீரான தீர தீரான
தீரான தீர நா

ஆண் : நான் ஸ்டாப் ஆட்டம் பார்!!!

குழு : தீரான தீர தீரான
தீரான தீர நா

ஆண் : இது போக் ரேப்பர் சூப்பர்

அண்ணாத்த அண்ணாத்த

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Chorus
பாடலாசிரியர் : Viveka
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூரா தாறு மாறா விசிலு பறக்க
ஆற வாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா

ஆண் : அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸு

குழு : ஹேய் ஹேய்

ஆண் : கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு

ஆண் : உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்……

குழு : அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..

குழு : அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..

ஆண் : அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா
ஹேய் தலைவா ஹேய் தலைவா

குழு : கீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகையாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு ஹேய்
தாளடிக்கும் களத்துல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு ஹேய்

குழு : வேரில் வீரம் தாங்கி ஓங்கி
வாழும் அதிசய நிலமடா ஹேய்
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும்
மறத்தமிழ் இனமடா ஹேய்

குழு : பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்கார மச்சக்காரா
காவக்கார வாயா…..

ஆண் : காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு

ஆண் : உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுய தவறுணரும் செயலல்லவா

ஆண் : நெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்

குழு : விறல் பத்து இருக்குது
விடியில எழுப்பிடு

ஆண் : எதற்கும் நீ அஞ்சக்கூடாதே

குழு : கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்

ஆண் : நொடியும் நீ துஞ்சக்கூடாதே

குழு : அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..

குழு : அண்ணாத்த பேசுனா
ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா
ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம்தான்…..

ஆண் : போடு……அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு

ஆண் : ஹேய்…..அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
ஆண் மற்றும்

குழு : கொல கொல மாஸு

குழு : ஹேய் தலைவா ஹேய் தலைவா

குழு : அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசுதான்

குழு : அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மோதுனா
பட்டாசு பட்டாசுதான்

மானா மதுரையில

பாடகர்கள் : நகாஷ் அசீஸ், Anthony Daasan, Vandana Srinivasan
பாடலாசிரியர் : Mani Amuthavan
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகர்கள் : நாகாஷ் அஜீஸ், அந்தோணி தாசன் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : மானா மதுரையில
மாமன் குதிரையில
மாலை கொண்டு வாரான்

ஆண் : மீனா மினுங்கையில
மின்னி சினுங்கையில
மேளங் கொட்ட போறான்

ஆண் : ஹேய் மலந்து மலந்து
அணிச்சங் கொளுந்து
மனமனக்குதடி
மாப்புள மாப்புள தோளோட ஆட
வளந்து வளந்து அழக சொமந்து
மினு மினுக்குதடி
வெத்தல வெத்தல பாக்கோட கூட

பெண் : அஞ்சன அஞ்சனமே விழி பூச
கொஞ்சுனு கொஞ்சுதம்மா வலையோச

ஆண் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு அனைவரும் : பொம்மி நடந்து வர
கும்மி அடிங்க ஜோரா
தாலி சூட போறா
அம்மி மிதிக்கபோறா
அன்ப வெதைக்க போறா
தாய் வீட்டு சீரா

ஆண் : ஏய் தவுல அடிக்க
நாயனம் ஒலிக்க நேரம் நெருங்குதடி
அச்சத அச்சத உன்மேல தூவ
வெரல புடிக்க விரதம் முடிக்க
வரான் தெரிஞ்சுக்கடி
அங்கன இங்கன நீ துள்ளி தாவ

பெண் : அக்கறை அக்கறையா இருப்பான்டி
சக்கர சக்கரையா இனிப்பான்டி அனைவரும் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு…….

ஆண் : ஓஹோ ….ஹ ஹா…….ஓஹோ

ஆண் : ஹோ ஓ ஓ ஓ…… ஓ…… ஹோ……

ஆண் : மண்ணுதான் வித ஒன்னுதான்
அத நூறா மாத்தி நீட்டுமே
நின்னுதான் எங்க பொண்ணுதான்
மறு வீட்ட ஏத்தி காட்டுமே

ஆண் : நெட்டை இல்ல குட்டை இல்ல
ரெண்டு கரையும் நேராக
கொட்டும் மழை கொட்டையில
தாங்கி பிடிக்கும் ஆறாக
யாரு பெருசுன்னு என்னாத விட்டு தள்ளு
வண்ணம் எனஞ்சு நின்னாதான் வானவில்லு

ஆண் : ஆணும் பொன்னும் ஒண்ணுக்கொண்ணு
சேர்ந்து வாழ வேனுங்கண்ணு
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு அனைவரும் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு

குழு : …………………………………….

ஆண் : மருதானி செவப்பு செவப்பு
மகராணி சிரிப்பு சிரிப்பு
மருதானி செவப்பு செவப்பு
மனமேடை நெனப்பு நெனப்பு….

சார சார காற்றே

பாடகர்கள் : சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷால்
பாடலாசிரியர் : Yugabharathi
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஷ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : சார சார காற்றே
சார சார காற்றே

பெண் : சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

பெண் : சடசடன்னு கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே என் ஆயுள் ரேகையே

ஆண் : படபடன்னு கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே நம் தோளில் மாலையே

பெண் : பச்சை மனது பால் நிறம்
அன்பில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே

ஆண் : {தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா} (2)

பெண் : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே
ஹே ஏ ….

பெண் : யாழிசையும் ஏழிசையும்
உன் குரலோ
நீ நெருங்க பார்ப்பதுதான்
சொர்க்கங்களோ

ஆண் : தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ

பெண் : சித்தம் உனையெண்ணி
சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம் புகுந்திட
நடை மாறுதே

ஆண் : அந்தி பகலை மறந்து
உறவு நீள
அன்பே நீ வந்தாயே

பெண் : ஓ சார சார காற்றே
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே

ஆண் : சார சார காற்றே
அன்பை பொழிகிறதே ஆனந்தக் கீற்றே

பெண் : சிலுசிலுன்னு பூந்தென்றல் சூடேற்ற
உயிரணுவே பொன்னூஞ்சல் ஆடுதே

ஆண் : குளுகுளுன்னு தீவெயில் தாலாட்ட
அடைமழையில் என் ஆசை மூழ்குதே

பெண் : லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே

ஆண் : தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா

ஆண் : ஹே ஏ தினக் தகிட
தினக் தகிட
தானே தானே தானா
தானே தினக் தகிட
தினக் தகிட
தானே நானா நா

பெண் : ஓ சார சார காற்றே

வா சாமி…வா சாமி

பாடகர்கள் :முகேஷ் மொஹமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதின்
பாடலாசிரியர் : Arun Bharathi
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகர்கள் : முகேஷ் மொஹமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி மற்றும் கீழக்கரை சம்சுதின் இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : சாட்ட எடுத்துகிட்டு
வேட்டி மடிச்சிக்கிட்டு
எதிரிய எருவென
எரி எரி எரிடா

ஆண் : கன்னங் கருப்பிருட்டு
கடுவாய் புலிவெரட்டு
கயவரின் கதையினை
முடி முடி முடிடா

குழு : போடு …போடு…..

ஆண் : வீச்சருவா கொண்ட
கொல குலசாமி வந்துருச்சே
பகைக் கொலைநடுங்க

குழு : வா சாமி…வா சாமி

ஆண் : கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே
அவன் தொடநடுங்க

குழு : வா சாமி..வா சாமி

ஆண் : திமுதிமு குதிரைகள்
திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே
கரு கரு தருமத்தின்
தலைவனிடம்
உன் ஆட்டங்கள் முடிகிறதே ஆண் மற்றும்

குழு : மீசைய பாரு
கெடா கெடா
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதியக் குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஒடுங்கடா

ஆண் : வீச்சருவா கொண்ட
கொல குலசாமி வந்துருச்சே
பகைக் கொலைநடுங்க

குழு : வா சாமி…வா சாமி

ஆண் : கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே
அவன் தொடநடுங்க

குழு : மொகன மொகன ஆண் மற்றும்

குழு : வெள்ள குதிரயில
வேட்ட தொடங்கையில
நரிகளின் நரித்தனம்
ஒடு ஒடு ஒடுங்கும்
வேங்க திமிறையில
வேகம் எடுக்கையில
பகைவனின் தொடைகளும்
நடு நடு நடுங்கும்

குழு : வா சாமி…வா சாமி
வா சாமி…வா சாமி

ஆண் : உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க

குழு : வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆண் : சந்ததியா காத்து நிக்க
சங்கடங்கள் தீத்து வைக்க
பாவக் கணக்க தீத்துக் கட்ட

குழு : வாரான் வாரான் வாரான்
மதுர வீரன் மதங்கொண்டு வாரான்

ஆண் : நெருப்புக் கண்ணில் எரியுதடா
எதுத்து நிக்க யாரு
நெருங்கி வரும் வினைகளெல்லாம்
தவிடு பொடியாக்கு ஆண் மற்றும்

குழு : மீசையப் பாரு
கெடா கெடா
மிருகத்தை அழிக்க வர்றானடா
குருதியக் குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஒடுங்கடா

ஆண் : வீச்சருவா கொண்ட
கொல குலசாமி
பகை கொலை நடுங்க

குழு : வா சாமி.. வா சாமி

ஆண் : கெட்டவன அது
பொலி பொலி போட
நஞ்சுடுச்சே
அவன் தொட நடுங்க

குழு : வா சாமி…வா சாமி

ஆண் : அடி அடி இடியென தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே ஆண் மற்றும்

குழு : சலங்கைகள் ஆடுது
சடா சடா
சடையினில் இறுக்கிட வர்றானடா
உடுக்கையின் ஓசை
விடா விடா
உருமிய ஓங்கி அடிங்கடா ஆண் மற்றும்

குழு : மீசையை பாரு
கெடா கெடா
மிருகத்தை அழிக்க வர்றானடா
குருதியை குடிப்பான்
மொடா மொடா
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா

குழு : வா சாமி…..

என்னுயிரே என்னுயிரே (பெண்)

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : Thamarai
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகி : கே. எஸ். சித்ரா இசைஅமைப்பாளர் : டி. இமான்

பெண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

பெண் : உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

பெண் : காணாத தூரம்
நான் போன போதும்
உன் காவல் நீளும் அங்கேயும்
உன் காலின் பாதம்
தீண்டாத காலம்
என்றேதும் இல்லை எங்கேயும்

பெண் : வெயில் மழையில் வேண்டும் நிழலாய்
உடன் வருவாய் நீங்காமல்
புயல்குலைக்கும் பூமினிலும்
துணை இருப்பாய் தூங்காமல்

பெண் : உள்ளம் கலைந்தது
இன்னும் தொடர்கிறதே
அண்ணன் கை விறல் பற்றி படர்கிறதே
தங்கை மனம் கங்கை என பெருகுதே

பெண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

பெண் : உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் உந்தன் தங்கம்

பெண் : என்னுயிரே….

என்னுயிரே என்னுயிரே (ஆண்)

பாடகர்கள் : சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர் : Thamarai
இசையமைப்பாளர் : டி. இமான்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசைஅமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…ஆ…
என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

ஆண் : உறவென்று சொன்னால் நீ தானே
உதிரத்தில் ஓடும் பூந்தேனே
வரமும் தவமும் நீயே
வலியும் மருந்தும் நீயே
உயிரினில் கலந்த என் தாயே

ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

குழு : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

ஆண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

ஆண் : பூமாலை கூடி
பொன் ஆரம் சூடி
நீ நிற்கும் கோலம் அம்மம்மா
ஊரார்கள் கூடி உன் வாழ்த்து பாடி
தோய்கின்ற நேரம் கண்ணம்மா

ஆண் : நிழல் என நான் நீண்டு இருப்பேன்
அடி எடுத்து நீ போக
குடை பிடித்தே கூரை கொடுப்பேன்
வெயில் மழையில் காப்பாக

ஆண் : தங்கை திருமுகம் நெஞ்சில் நிறைகிறதே
தும்பை மலரிலும் மஞ்சள் வழிகிறதே
புத்தம் புது விடியலும் புலருதே

ஆண் : என்னுயிரே என்னுயிரே
யாவும் நீ தானே
கண் இரண்டில் நீ இருந்து
பார்வை தந்தாயே

ஆண் : ஒரு கோடி பூக்கள் நாம் தானே
கொடி அது சாய்ந்தும் பூத்தோமே
இனிய சுமையாய் தோளில்
இறுக அணைத்த நாளில்
அன்னை என என்னை உணர்ந்தேனே

ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

ஆண் : தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் செல்ல தங்கம்
தங்கம் தங்கம் செல்ல தங்கம் தங்கம்
செல்ல தங்கம் தங்கம் சொக்க தங்கம்

ஆண் : என்னுயிரே….