Baba
கிச்சு கிச்சு தா
Movie |
Baba |
Music |
A. R. Rahman |
Year |
2002 |
Lyrics |
Vairamuthu |
Singers |
S. P. Balasubramaniam, Reena Bhardwaj |
ஹே யூ
ஹே யூ அஹா ஹா ஹா
ஹே யூ அஹா ஹா ஹா பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்
கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாறச்சொன்னால் மாற மாட்டான் பாபா பாபா
நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி
விவகாரம் இல்லையடி அஹா ஹா ஹா
பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
வா வா என்று கொஞ்சும் போது பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே
வா வா என்று கொஞ்சும் போது பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே
புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா
புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா
புதிரல்ல புதிரல்ல நான் புதையாத புதையலடி
தமிழ்நாடு தமிழ்நாடு என் உயிர் நாடு
அன்பாக நீ வந்தால் பாபா ஒரு பிள்ளையடி
வம்பென்று வந்துவிட்டால்
பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்
பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்
உன் நிறம் போல என் நிறம் மாற வரம் ஒன்று தருவாய் பாபா
உன் நிறம் போல என் நிறம் மாற வரம் ஒன்று தருவாய் பாபா
மதி கொண்டு சேரவில்லை விதி கொண்டு சேர்த்ததடி
நான் என்ன செய்வதடி அஹா ஹா ஹா
நிறம் என்றால் நிறமல்ல வரம் வாங்கி வந்ததடி
என் அன்னை தந்ததடி அஹா ஹா ஹா
பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகுதான்னு பாப்போம் வா
பாபா என் பக்கம் வா
உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா
துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கத்தை முடி
தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ
கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்
கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே
நீ மாறச்சொன்னால் மாற மாட்டான் பாபா பாபா
நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி
விவகாரம் இல்லையடி அஹா ஹா ஹா
மாயா மாயா
Movie |
Baba |
Music |
A. R. Rahman |
Year |
2002 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Benny Dayal, Karthik, Sujatha Mohan |
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி
பட்டும் படாமலே
தொட்டும் தொடாமலே
தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு (2)
வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும்
பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும்
உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த பதவியின் வியாதி
உனது கை கால்களே
உதவும் நண்பர்களே
திரைகடல் மேல எண்ணை துளியினை போல்
நீ ஒட்டி ஒட்டாமலிரு
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
கண்ணீரில் கண்ணீரில்
நான் வரைந்த கடிதம் படி
மாயை போல் சாயை போல்
காதல் உறவு ஓர் நாளும் ஆவதில்லை
உணர்வோடும் உயிரோடும்
வாழும் அழகு பொய்யாகி போவதில்லை
காற்றே போ காற்றே போ
என் காதலனை கண்டு பிடி
பட்டும் படாமலே
கொஞ்சம் பரவாயில்லை
தொட்டும் தொடாமலே
ஒருநாள் இதமா இல்லை
தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு
தாமரை இலை தண்ணீர் போல்
நீ என்னை எண்ணாமல் இரு
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ என்னோடு ஒன்றானால் சம்சாரி
சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
நீ தொட்டால் நான் பொன்னாவேன் உன் ராசி
சக்தி கொடு
Movie |
Baba |
Music |
A. R. Rahman |
Year |
2002 |
Lyrics |
Vairamuthu |
Singers |
Karthik |
நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு
இறைவா… இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு
நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு
பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு
வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
இறைவா… இறைவா
முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
இறைவா… இறைவா
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு
நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும்
நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு
டிப்பு டிப்பு டிப்பு
பாடகர் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : புர்ரா…….
ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
குழு : நேரம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
புர்ரா…….
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே
ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே
ஆண் : வாழ்க்கை ஒரு
குழு : சினிமா சினிமா
ஆண் : மூன்று மணி
குழு : நேரம் தான்
ஆண் : மூன்று மணி நேரம்
போல மூன்றே மூன்று
பருவம் தான் குழந்தை
பருவம் ஒன்று இளமை
பருவம் ரெண்டு முதுமை
பருவம் மூன்று மனிதா
ஆண் : மூச்சு தீர்ந்து
போவதற்குள் மூன்று
உலகம் வெல்லவா
ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே
ஆண் : வாழ்க்கை ஒரு
குழு : சினிமா சினிமா
ஆண் : மூன்று மணி
குழு : நேரம் தான்
ஆண் : மூன்று மணி
நேரம் போல
குழு : மூன்றே மூன்று
பருவம் தான்
ஆண் : குழந்தை பருவம்
ஒன்று இளமை பருவம்
ரெண்டு முதுமை பருவம்
மூன்று மனிதா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : குழந்தை குழந்தை
மனசு அது கடவுள் வாழும்
மனசு வட்ட நிலவை விரட்டி
பிடித்து வாலி பால் ஆடும்
வயசு
ஆண் : வலிமை வளர்க்க
உடலை வளர்க்க உறவை
வளர்க்க எழுந்து வா அன்னை
தந்தை மதித்து பொழுது
போக்கை குறைத்து புத்தி
எல்லாம் வளர்த்து
ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு டிப்பு ஓகே
ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
குழு : நேரம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
குழு : ஹாஹா ஹோஹோ
ஹாஹா ஹோஹோ ஹா
ஹா ஹோஹோ ஹாஹா
ஹோஹோ பலே பலே
பலே பலே
ஆண் : இளமை இளமை
வயசு அது ரெக்கை முளைக்கும்
வயசு ஓ தூணுக்கெல்லாம்
சேலை கட்டி தொட்டு
பார்க்கும் மனசு
ஆண் : சேலை உன்னை
தேடி வருமா வேலை தேடி
விரைந்து போ தேடி செல்லும்
காதல் காதல் இல்லை நண்பா
ஆண் : உண்மை காதல்
சொல்லவா நல்ல காதல்
என்பதென்ன தேடி வந்த
காதலே
ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே புர்ரா…….
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : முதுமை முதுமை
வயசு அது முழுசாய்
வாழ்ந்த வயசு நண்பர்
பகைவர் யார் வந்தாலும்
அன்பாய் பார்க்கும் மனசு
ஆண் : குடும்ப பாரம் கடந்து
கடந்து ஆசை துறந்து வாழ்கவே
மெளனமாக இருந்து ஞானமெல்லாம்
வளர்த்து வந்த வேலை முடித்து
ஆண் : இன்று வந்த தலை
முறைக்கு வாழ்த்து சொல்லி
வாழ்கவே
ஆண் : டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு கும்மரே நல்ல
சேதி சொல்ல போறேன்
டிப்பு கும்மரே
ஆண் : வாழ்க்கை ஒரு
குழு : சினிமா சினிமா
ஆண் : மூன்று மணி
குழு : நேரம் தான்
ஆண் : மூன்று மணி
நேரம் போல
குழு : மூன்றே மூன்று
பருவம் தான்
ஆண் : குழந்தை பருவம்
ஒன்று இளமை பருவம்
ரெண்டு முதுமை பருவம்
மூன்று டிப்பு டிப்பு டிப்பு
டிப்பு டிப்பு டிப்பு ஓகே
ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
குழு : நேரம் தான்
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : புர்ரா….
ஆண் : பாபா
குழு : சினிமா சினிமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஆண் : பாபா
ராஜ்யமா இல்லை
பாடகர் : ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா எங்கிவன் நாளை
எங்கிவன் மன்னனா இல்லை
மௌல்வியா யாரிவன் நாளை
யாரிவன்
ஆண் : ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்
ஆண் : கேள்வியாய்
வாழ்கிறான் மௌனத்தை
ஆள்கிறான்
ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா
ஆண் : மகனில்லை மகனில்லை
என்னும் நாளில் மடியில் வந்த
ராஜாவை தமிழர்கள் மனையெங்கும்
மனம் வீச தெய்வம் தந்த ரோஜாவை
ஆண் : முதுகினில் புகழினை
தூக்காமல் மூட்டை தூக்க
பார்த்தாலே விதியிது விதியிது
என எண்ணி மூச்சு வாங்கி
வேர்த்தாலே
ஆண் : தொழில் என்ன
செய்தாலும் இழிவில்லை
என்பானே உழைக்காமல்
உண்டால் தான் பிழை
என்று சொல்வானே
ஆண் : ஏற்றமோ
இறக்கமோ எதையுமே
ஏற்பவன்
ஆண் : ஆயிரம் கோடி
அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்
ஆண் : கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆதிக்கம்
ஆண் : திருமகன் வருகிற
திருநீரை நெற்றி மீது
தினம் பூசி
ஆண் : அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி
ஆண் : தனது அன்பு
தாயை கை தொழும்
பாபா தான் சிந்தையில்
எந்நாளும் சின்னஞ்சிறு
பாபா தான்
ஆண் : ஏழைகள்
பார்வையில் முழு
மனிதனாய் தெரிகிறான்
ஆண் : ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா
|