Maveeran
வாங்கடா வாங்க என் வண்டிக்கு
Movie |
Maaveeran |
Music |
Ilaiyaraaja |
Year |
1986 |
Lyrics |
Gangai Amaran |
Singers |
Malaysia Vasudevan |
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு...ஒதுங்கு ஒதுங்கு....
பப பாப்பா...பபபபா பபப்பப்பப்பா...
பப பாப்பா...பபபபா (இசை)
டுர்.........ர்....
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கடா வாங்க...
டுர்.....ர்..டடக் டடக் டடக் டடக்
டுர்.....ர்..டடக் டடக் டடக் டடக்
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்...
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்...
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்...
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்...
எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே...
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே...
ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு...
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கடா வாங்க...
தந்தான தந்தனானா..னா.. தந்தான தந்தனானா...
தந்தானத்தன தந்தன ஆண்குழு: தந்தன
தந்தானத்தன தந்தன ஆண்குழு: தந்தன
தந்தன தந்தன தந்தன தந்தா...
உச்சி மலையில தான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
உச்சி மலையில தான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
அஞ்சறிவு உள்ளதெல்லாம் ஒண்ணுக்கொண்ணு சேந்திருக்கு
ஆறறிவு உள்ளதுக ஜாதிகளை வச்சிருக்கு
ஆண் : ஆகாயம் நீரும் அந்த அக்கினியும் காத்தும்
பொதுவான போது இந்த பூமி மட்டும் வேறு
இந்த உண்மைய புரிஞ்சு உள்ளதை தெரிஞ்சு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
ஆண் : வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...
ஆண்:ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு...ஒதுங்கு ஒதுங்கு....ஒதுங்குடா...டேய்...
எழுகவே படைகள் எழுகவே
எழுகவே படைகள் எழுகவே
விடியவே இரவு விடியவே
ஆட்டம் போட்ட கூட்டம் இங்கு
ஆட்டம் காண போகுது
கேள்வி கேட்டு வேள்வி செய்ய வேளை வந்தது (எழுகவே)
மூச்சு வாங்க உழைத்தீர்கள் முடிவென்ன ஆச்சு
குனிந்து குனிந்து நடந்தீர்கள் கூன் விழுந்தாச்சு
நெசவு செய்து கொடுத்தீர்கள் அடிமைகள் போலே
உடுத்திக் கொள்ள உடையில்லை இடுப்புக்கு மேலே
அடுப்பு உண்டு பூனைக்கு
அதுவும் இல்லை ஏழைக்கு
உழைக்கும் மக்களே ஒன்று கூடுங்கள்
வேளை வந்தது கேள்வி கேளுங்கள்
உழைக்க ஒருவன் பிழைக்க ஒருவன்
என்ற விதியை கொளுத்துங்கள்......(எழுகவே)
ஜாதி பேத வேதாந்தம் இனி இங்கு இல்லை
உறங்கி வாழும் ராஜாங்கம் நிரந்தரம் இல்லை
உனக்கும் எனக்கும் போராட ஒருத்தரும் இல்லை
சார்ந்து வாழும் வாழ்க்கை போல் சாபங்கள் இல்லை
பழைய விலங்கை உடைக்கிறேன்
புதிய உலகம் படைக்கிறேன்
வேட்டையாடவே சாட்டை வாங்குவேன்
தாழ்வு நீங்கவே தலைமை தாங்குவேன்
சிதறிக் கிடக்கும் நெருப்பைச் சேர்த்து
பழைய இருட்டை கொளுத்துவேன்........(எழுகவே)
நீ கொடுத்ததே.. திருப்பி கொடுப்பேன்
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே (நீ)
இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே
முட்டும் போது முட்டி வலிக்கும்
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் தானே
ராஜா வீட்டு கன்னுக்குட்டி
ரொம்பதானே துள்ளுது
கட்டிப் போட்டு காளையதான்
கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும் இந்த
காளைக் கிட்ட மாட்டும் போது......(நீ)
நான் கொடுத்ததை
நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால்
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் (நான்)
உன்னை சுற்றி வட்டம் இடுது ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே
ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா
வண்டைப் போல பாட்டு பாடு
வந்து வந்து ஆட்டம் போடு (நான்)
உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும் ராஜா
எத்தனையோ மின்னல் மின்னுது
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம்
யாருமில்லை இங்கு இன்று
என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு..... (நான்)
சொக்குப்பொடி
சொக்குப்பொடி கக்கத்திலே வச்சிருக்கேன்
இஷ்டமின்னா சுத்தி சுத்தி வந்திருவேன்
சொக்குப்பொடி என்னத்துக்கு சின்ன மாமா
நான் சொக்கி சொக்கி போன பின்னும் போடலாமா
சொக்கிப் போன பின்னாலும்
வெட்கம் ஏன்டி புள்ளி மானே
வழியே மறிச்சு கொடியே நீ
வம்பிழுக்க வந்திருக்க...... (சொக்கு)
வால வயசுலதான் வேதனை....கொஞ்சமில்ல
மாமன் படைச்சுபுட்ட சாதனை.....பஞ்சமில்ல
பொண்ணு விரிச்ச வல கண்ணிலே....ஆமாம் சொல்லு
இன்னும் எழுந்திருக்க கூடல...அப்படி சொல்லு
நாளாக என் மேனி நூலாக போயாச்சு
என்னாச்சு என் மாமா உன் பேச்சு வீணாச்சு
தேனாச்சு உன் பேச்சு தேனோட பாலாச்சு
நான் கேட்டு என் நெஞ்சு இப்போது பாழாச்சு
மாமா மாமா.....கூட்டிக்கிட்டு வீட்டுக்குள் பூப்போட்டு
சேர்ந்ததிப்போ தாளம் தட்டு
அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு...(சொக்கு)
தனியா படுத்திருக்கேன் பாயிலே.....ஆமாம் புள்ளே
துணையா எம் பக்கத்திலே வா புள்ளே..ஆமாம் புள்ளே
ஒரு நாள் ஒரு பொழுது தூங்கல.....தூங்கவில்ல
பருவம் படுத்துவது தாங்கல......தாங்கவில்ல....
சொல்லாம கொள்ளாம அள்ளாம கிள்ளாம
வெள்ளாம நான் போட்டேன் ஏன் புள்ள என்னாச்சு
பார்த்தாலும் பார்த்தீங்க கேட்டாலும் கேட்டீங்க
ஆத்தாடி ஏதேதோ கூத்தாகி போயாச்சு
சின்னச் சிட்டு என்னத்தான் நீ தொட்டு
இஷ்டப்பட்டு மல்லுக்கட்டு
அதுக்கும் இதுக்கும் எதுக்கும்
ஒரு வேள இப்போ வந்திருச்சு...(சொக்கு)
அம்மா........அம்மா.......
அம்மா........அம்மா.......
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே மஹா
துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே
என் அம்மா.......நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே....(சொந்தம்)
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ
கோயில் கொண்ட நீயும் என்ன
கல்லில் செய்த ரூபமோ.......(சொந்தம்)
அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி
எரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் ஞாயம் தூங்குமா
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா
தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ
இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ.......
ஹே மைனா வா மைனா
ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட......கூட கூட........
ராகத்தோடு பாட பாட தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ (மைனா)
கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்
ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம்
வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும் என் அன்பே.....(மைனா)
பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்
பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள்
பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும் என் அன்பே......(மைனா)
|