Kochadaiiyaan

Rajinikanth Kochadaiiyaan

எங்கே போகுதோ

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : எங்கே போகுதோ
வானம் எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்

ஆண் : எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்

குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா

ஆண் : காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது வெற்றிச்
சங்கொலி என்றுமே ஓயாது
ஓயாது

ஆண் : ஹே உனது
வாளால் ஒரு சூரியனை
உண்டாக்கு ஹோ ஹோ
ஹே எனது தோழா நம்
தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆண் : ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்

ஆண் : காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்

குழு : தீரா வைரம்
உன் நெஞ்சம் நெஞ்சம்
நெஞ்சம் வெற்றி உன்னை
வந்து கெஞ்சும் கெஞ்சும்
கெஞ்சும்

ஆண் : இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா

ஆண் : எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்

குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா

குழு : …………………………….

ஆண் : எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும்
பொய்த்ததில்லை

குழு : இளைய சிங்கமே
எழுந்து போராடு போராடு
தீரா வைரம் உன் நெஞ்சம்
நெஞ்சம் நெஞ்சம் வெற்றி
உன்னை வந்து கெஞ்சும்
கெஞ்சும் கெஞ்சும்

ஆண் : உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து
விட்டேன் வாழ்த்திய
மணங்களுக்கு என்
வாழ்க்கையே வழங்கி
விட்டேன்

ஆண் : ஹே உனது
வாளால் ஒரு சூரியனை
உண்டாக்கு ஹோ ஹோ
ஹே எனது தோழா நம்
தாய்நாட்டைப் பொன்னாக்கு

ஆண் : எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்

குழு : வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா

ஆண் : காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது வெற்றிச்
சங்கொலி என்றுமே ஓயாது
ஓயாது

எங்கள் கோச்சடையான்

பாடகர்கள் : Kochadaiiyaan Ensemble
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர் : கோச்சடையான் என்செம்ப்ளே இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : மாசில் வீணையே
மாலை மதியமே வீசு
தென்றலே வீங்கிள
வேனிலே மூசு வண்டறை
பொய்கைப் பூவே ஈசா
உந்தன் இணையடி சரணம்

பெண் : ஈசா
உந்தன் இணையடி
சரணம்

குழு : நின்னடி சேர்ந்தால்
நேராது மரணம்

ஆண் : கோச்சடையான்
எங்கள் கோச்சடையான்

பெண் : கோச்சடையான்
கோச்சடையான் கொன்ற
சூடும் கோச்சடையான்

ஆண் : கோச்சடையான்
எங்கள் கோச்சடையான்

பெண் : காற்றைக் கடந்தும்
மூச்சுடையான் எங்கள்
கோச்சடையான் காலம்
கடந்தும் வீச்சுடையான்
எங்கள் கோச்சடையான்

ஆண் : ஹ்ம்ம்

குழு : ஹே

ஆண் : ஹ்ம்ம்

குழு : ஆஹா

ஆண் : கோச்சடையான்
எங்கள் கோச்சடையான்

குழு : ஆஹா
சம்போ சம்போ
சம்போ மகா தேவா
சம்போ மகா தேவா

இதயம்

பாடகர்கள் : சின்மயி, Srinivas
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : சின்மயி பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய் …

பெண் : நல்ல மரத்தின்
நறுங்கிளை எழிந்து
வெள்ளச் சுழியில்
விழுந்து மலராய்

பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

பெண் : இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து
போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ
சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

ஆண் : { பூப்பது மறந்தன
கொடிகள் புன்னகை மறந்தது
மின்னல் காய்ப்பது மறந்தது
காடு காவியம் மறந்தது ஏடு } (2)

பெண் : ஏனோ
ராணா ராணா

ஆண் : யானோ நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன்

பெண் : ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ

பெண் : இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

ஆண் : { செந்தமிழ் பிரியும்
சங்கம் செங்கடல் பிரியும்
அலைகள் ஒலியைப் பிரியும்
காற்று உளியைப் பிரியும்
சிற்பம் } (2)

பெண் : வாசத்துக்கேது
சிறைவாசம்

ஆண் : யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன் யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன்

பெண் : சிறைகோட்டு
பெரும்பயம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே

கர்ம வீரனே

பாடகர்கள் : A. R. Reihana, ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : எ.ஆர். ரெய்ஹானா பாடகர் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது

ஆண் : ஹே வீரனே
கர்ம வீரனே கடமை
வீரனே கர்ம வீரனே

குழு : ஓஹோ ஓ
ஆ ஓஹோ

ஆண் : தோல்விகளாலே
துவண்டுவிடாதே வெற்றி
களாலே வெறிகொள்ளாதே
கல்லடி படும் என்பதாலே
மரம் காய்க்காமல்
போவதில்லை

ஆண் : மாலைகளை
கண்டு மயங்காதே
மலைகளை கண்டு
கலங்காதே சொல்லடி
படும் என்பதாலே வெற்றி
காணாமல் போவதில்லை

குழு : காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை

ஆண் : நின்ற இடத்தில்
நிற்க வேண்டுமா நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில்
வேண்டுமா நீ
பாடிக்கொண்டே இரு

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது
தனக்காக வாழாது

குழு : காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை

ஆண் : கோழைகள்
மன்னித்தால் அது
பெரிதல்ல பெரிதல்ல
வீரர்கள் மன்னித்தால்
அது வரலாறு வரலாறு

குழு : { காற்றே காற்றே
நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ
ஓய்வதே இல்லை

குழு : வாழ்வே வாழ்வே
நீ தீருவதே இல்லை இந்த
வாழ்விலே சத்தியம்
தோற்பதே இல்லை } (2)

ஆண் : பொன்னும்
மண்ணும் வென்று
முடிப்பவன் கடமை
வீரனே அந்த பொன்னை
ஒருநாள் மண்ணாய்
பார்ப்பவன் கர்ம வீரனே
கர்ம வீரனே

பெண் : ஆகாய மேகங்கள்
பொழியும்போது ஆகாயம்
கேளாது தாய்நாடு காக்கின்ற
உள்ளம் என்றும் தனக்காக
வாழாது தனக்காக வாழாது
தனக்காக வாழாது

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

பாடகர்கள் : ரஜினிகாந்த், Haricharan , V. Uma Shankar
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : ரஜினிகாந்த், ஹரிச்சரன், வி. உமா சங்கர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : எதிரிகளை
ஒழிக்க எத்தனையோ
வழிகள் உண்டு முதல்
வழி மன்னிப்பு

ஆண் : உண்மை உருவாய்
நீ உலகின் குருவாய் நீ
எம்முன் வருவாய் நீ
என்மொழி அருள்வாய் நீ

குழு : உன் மார்போடு
காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு
ஞானங்கள் நூறாயிரம்

குழு : தாய் மண்ணோடு
உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ஆண் : மாற்றம்
ஒன்றுதான் மாறாதது

ஆண் : மாறு மாற்றம்
ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம்
உயிரோடு மாறாத
தெல்லாம் மண்ணோடு

ஆண் : பொறுமை
கொள் தண்ணீரைக்
கூடச் சல்லடையில்
அள்ளலாம் அது பனிக்கட்டி
ஆகும் வரை
பொறுத்திருந்தால்

ஆண் : பணத்தால்
சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க
முடியாது

ஆண் : பகைவனின்
பகையை விட
நண்பனின் பகையே
ஆபத்தானது

ஆண் : சூரியனுக்கு
முன் எழுந்து கொள்
சூரியனையே
ஜெயிப்பாய்

ஆண் : நீ என்பது
உடலா உயிரா
பெயரா மூன்றும்
இல்லை செயல்

ஆண் : உடலா
உயிரா பெயரா நீ
மூன்றும் இல்லை
செயலே நீ

ஆண் : விதியை
அமைப்பது இறைவன்
கையில் அந்த விதியை
முடிப்பது உந்தன் கையில்

குழு : உன் வில்லோடு
வில்லோடு வீரம் கொடு
உன் சொல்லோடு
சொல்லோடு மாற்றம்
கொடு

ஆண் : மாற்றம் ஒன்று
தான் மாறாதது

ஆண் : நீ போகலாம்
என்பவன் எஜமான்
வா போகலாம்
என்பவன் தலைவன்
நீ எஜமானா தலைவனா

ஆண் : நீ ஓட்டம்
பிடித்தால் துன்பம்
உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில் துரத்திய
துன்பம் ஓட்டம் பிடிக்கும்

ஆண் : பெற்றோர்கள்
அமைவது விதி
நண்பர்களை
அமைப்பது மதி

ஆண் : சினத்தை
அடக்கு கோபத்தோடு
எழுகிறவன் நஷ்டத்தோடு
உட்காருகிறான் நண்பா
எல்லாம் கொஞ்ச காலம்

குழு : உன் மார்போடு
காயங்கள் ஓராயிரம்
உன் வாழ்வோடு
ஞானங்கள் நூறாயிரம்

குழு : தாய் மண்ணோடு
உன்னாலே மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ஆண் : மாற்றம்
ஒன்றுதான் மாறாதது

ஆண் : ……………………….

பெண் : ஓஓ ஓஓ ஓஓ

சத்தியம் சத்தியம்

பாடகர்கள் : ஹரிசரண், Latha Rajinikanth
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : லதா ரஜினிகாந்த் பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஆண் : மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

ஆண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

ஆண் : இப்பிறவியில்
இன்னொரு பெண்ணை
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம்
சாயா பிரியம் காப்பேன்

ஆண் : செல்ல
கொலுசின் சிணுங்கல்
அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம்
பதித்து நித்தம் எழுவேன்

ஆண் : கை பொருள்
யாவையும் கரைத்தாலும்
கணக்கு கேளேன் ஒவ்வொரு
வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்

ஆண் : கண்ணீா்
கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

ஆண் : மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

ஆண் : அர்த்த ஜாம
திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதும்
எந்தன் காதல் தீரேன்

ஆண் : மாத மலர்ச்சி
மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ
வீழ்ந்தால் தாய்
மடியாவேன்

ஆண் : சுவாசம் போல
அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன்
உறவாய் நெஞ்சில்
சுமப்பேன்

ஆண் : உன் கனவுகள்
நிஜமாக என்னையே
தருவேன் உன் வாழ்வு
மண்ணில் நீள என் உயிர்
தருவேன்

ஆண் : கெட்டி மேளம்
கெட்டி மேளம்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

பெண் : தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது
சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே
{ தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது } (3)

சத்தியம் சத்தியம் 2

பாடகர்கள் : Latha Rajinikanth
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

பெண் : தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

பெண் : வாழை மரம்
போல என்னை வாரி
வழங்குவேன் ஏழை
கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்

பெண் : கணவன் என்ற
சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது
கண்ணில் பார்த்திட
செய்வேன்

பெண் : மழை நாளில்
உன் மார்பில் கம்பளி
ஆவேன் மாலை காற்றை
தலை கோதி நித்திரை
தருவேன்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

பெண் : தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

பெண் : உனது உயிரை
எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்

பெண் : கால மாற்றம்
நேரும் போது கவனம்
கொள்வேன் கட்டில்
அறையில் சமையல்
அறையில் புதுமை
செய்வேன்

பெண் : அழகு பெண்கள்
பழகினாலும் ஐயம்
கொள்ளேன் உன் ஆண்மை
நிறையும் போது உந்தன்
தாய் போல் இருப்பேன்

பெண் : உன் கனவுகள்
நிஜமாக எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்

பெண் : காதல் கனவா
உந்தன் கரம் விட
மாட்டேன் சத்தியம்
சத்தியம் இது சத்தியமே

பெண் : தாய் வழி
வந்த எங்கள் தர்மத்தின்
மேலே சத்தியம் சத்தியம்
இது சத்தியமே

பெண் : ஒரு குழந்தை
போலே ஒரு வைரம்
போலே
{ தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது } (3)

மெதுவாக தான்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Sadhana Sargam
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா

பெண் : மயிலாசனம்
அருகினில் நானே மழை
மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழியோரத்தில் விழுந்து
விட்டேனே நான்

ஆண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
என்னை வாங்கவா

ஆண் : அன்னம் அட
வண்ணம் அழகை
சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு எட்டும் திசை
எட்டும் தினம் காட்டும்
பரிவட்டம் இன்னும்
சொல்ல மொழி இல்லையே

பெண் : கொடி வேண்டுமா
குடை வேண்டுமா உன்
மடி போல யாவும் சுகம்
நல்குமா

ஆண் : படை வேண்டுமா
பகை வேண்டுமா உன்னை
போல் வீழ்த்த ஆள் ஏது
என்னை வெல்ல யாரும்
இல்லை உனையென்றி
திசைகள் வெல்லும்
இசையே

குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா

பெண் : ராணா ரா ணா
என்னை கொஞ்ச ராணா
உன்னை மிஞ்ச ஆனா
அழகு போகும் வீணா
நேரம் போக்க வேணா

ஆண் : தொட்டு வந்த
முல்லை விட்டு வைத்த
தில்லை கொஞ்சம் அன்பு
தொல்லை காட்டும்
இன்ப எல்லை

குழு : ஜாரே ஜாரே
ஜாரே ஜாரே ஜாரே
ஜாரே ஜா ஜாரே ஜா
ஜாரே ஜா ஜாரே ஜா
ஜாரே ஜாரே ஜாரே
ஜா

குழு : ஆதி அந்தம்
ஆடி வந்த ஜோதி இந்த
அழகன் வானம் தாண்டி
வையம் கொண்ட ஏகன்
தோட்ட மலர் தான் இவள்
அல்லவா ருரு ரூ ருரு ரூ
ருரு ரூ …..

ஆண் : அன்னம் அட
வண்ணம் அழகை
சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு எட்டும் திசை
எட்டும் தினம் காட்டும்
பரிவட்டம் இன்னும்
சொல்ல மொழி இல்லையே

பெண் : கொடி வேண்டுமா
குடை வேண்டுமா உன்
மாா் போல யாவும் சுகம்
நகுமா

ஆண் : படை வேண்டுமா
பகை வேண்டுமா உன்னை
போல் வீழ்த்த ஆள் ஏது

பெண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
பழி வாங்கவா

ஆண் : மெதுவாக
தான் மெதுவாக தான்
என்னை ஈர்க்கிறாய்
என்னை வாங்கவா