Ejamaan

Rajinikanth Ejamaan

ஆலப்போல் வேலப்

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

பெண் : பதில் கேளு
அடி கண்ணம்மா ஆஆ
நல்ல நாளு கொஞ்சம்
சொல்லம்மா என்னம்மா
கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே

குழு : தும்தும் தும்தும்
தும்தும் தும்தும் தும்தும்
தும்தும் தும்தும் தும்தும்
தும்தும் தும்

பெண் : எம்மனசு மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு

குழு : ஓஓஓஓஓஓஓஓ.

ஆண் : கொத்து மஞ்சள்
தான் அரைச்சி நித்தமும்
நீராடச் சொல்லு மீனாட்சிக்
குங்குமத்த.நெத்தியில
சூடச் சொல்லு

பெண் : சொன்னத
நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்க
போய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை
போடுறேன் அன்னத்தின்
காதுல ஓதிடு

பெண் : மாமன்
நெனப்புத்தான்
மாசக்கணக்கிலே
பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச
பெண்ணையே

ஆண் : ஆலப்போல்
வேலப் போல் ஆலம்
விழுது போல் ஆசை
நெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

ஆண் : வேலங்குச்சி
நான் வளைச்சு வில்லு
வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச
வாரேன்

பெண் : ஆலங்குச்சி
நான் வளைச்சு பல்லக்கொன்னு
செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன்
வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச
வாரேன்

ஆண் : வட்டமாய் காயும்
வெண்ணிலா கொல்லுதே
கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும்
பாயும் தான் குத்துதே
குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும்
ஓசை அடங்கட்டும் காத்தா
பறந்து வருவேன் புதுபாட்டா
படிச்சி தருவேன்

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

ஆண் : பதில் கேளு
அடி கண்ணம்மா ஆஆ
நல்ல நாளு கொஞ்சம்
சொல்லம்மா என்னம்மா
கண்ணம்மா ஹோய்
ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே

பெண் : நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

அடி ராக்குமுத்து

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண் : அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

ஆண் : கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

குழு : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

ஆண் : வான்சுமந்த வான்
சுமந்த வெண்ணிலவ
வெண்ணிலவ தான்சுமந்த
தான்சுமந்த பெண்நிலவே
பெண்நிலவே

குழு : மூணு மாசம் ஆன
பின்னே முத்துவரும்
முத்துவரும் பூர்வஜென்மம்
சேர்த்து வெச்ச சொத்துவரும்
சொத்துவரும்

ஆண் : வெள்ளிமணி
தொட்டில் ஒன்னு
விட்டத்தின் மேலே
மாட்டிடனும் தங்கமணி
கண்ணுறங்க தாலேலோ
பாடி ஆட்டிடனும்

குழு : அடி வாடி ரங்கம்மா
தெரு கோடி அங்கம்மா
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : ஏழு சனி மார்கழிக்கும்
பொங்கவச்சி பொங்கவச்சி
மாவிளக்கும் பூவிளக்கும்
ஏற்றிடனும் ஏற்றிடனும்

ஆண் : வாரிசு ஒன்னு
தந்ததிற்கு நன்றி சொல்லி
நன்றி சொல்லி ஏழைக்கெல்லாம்
கூழு காய்ச்சி ஊத்திடனும்
ஊத்திடனும்

ஆண் : அம்மன் அருள்
இல்லையின்னா பெண்ணிங்கு
தாயாய் ஆவதெங்கே பிள்ளை
செல்வம் இல்லை என்ற
பேச்சுக்கள் பொய்யாய்
போனதிங்கே

குழு : ஊரில் எல்லாரும்
ஒன்னு சேரும் இந்நேரம்
வானவராயருக்கும்
ராணிக்கும் வாரிசு
வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : அட வேலாண்டி
பால்பாண்டி வேட்டிய
கட்டுங்கடா அட மாயாண்டி
முனியாண்டி மத்தளம்
கொட்டுங்கடா

குழு : கிளி மூக்கு
முத்தம்மா என் வாக்கு
சுத்தம்மா வானவராயனுக்கும்
ராணிக்கும் வாரிசு வந்தாச்சு

ஆண் : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு

குழு : அடி ராக்குமுத்து
ராக்கு புது ராக்குடியை
சூட்டு வளை காப்பு தங்க
காப்பு இவ கை பிடிச்சு
பூட்டு

எஜமான் காலடி

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண் : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வெச்சோம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்
{ உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி
காமி } (2)

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண் : ஊருஜனம்தான்
வாழ நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த துன்பம்
யாவும் போயாச்சு வீடு வர
ஆத்துத் தண்ணி வந்து தாகம்
தீர்ந்தாச்சு வீதியெல்லாம்
பள்ளிக்கூட பெல்லு ஓச
கேட்டாச்சு இல்லாமை
இங்கு கிடையாது

குழு : எங்க எஜமான்
இருக்கையிலே

ஆண் : பொல்லாப்பு
நம்ம நெருங்காது

குழு : எஜமான்
உங்க காவலிலே
உங்களத்தான் நம்புதிந்த
பூமி இனி எங்களுக்கு
நல்ல வழி காமி

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஆண் : தோட்டம் காடு
மேடெல்லாம் சொந்தம்
தேடும் தொழிலாளி ஏழை
கூட்டம் முன்னேற நீங்கதானே
கூட்டாளி ஊருக்கொரு கஷ்டம்
வந்தா பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல தேவை
இல்ல நாற்காலி தன்னால
வணங்குது ஊரு

குழு : எங்க எஜமான்
நடக்கையிலே

ஆண் : எந்நாளும்
குறை கிடையாது

குழு : எஜமான்
இங்க இருக்கையிலே
உங்களத்தான் நம்புதிந்த
பூமி இனி எங்களுக்கு
நல்ல வழி காமி

ஆண் : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வெச்சோம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்
{ உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி
காமி } (2)

குழு : எஜமான் காலடி
மண்ணெடுத்து நெத்தியில
பொட்டு வைப்போம் எஜமான்
அவன் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

இடியே ஆனாலும்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இடியே ஆனாலும்
தாங்கி கொள்ளும் இதயம்
இடியே ஆனாலும் தாங்கி
கொள்ளும் இதயம்

ஆண் : சிறு பழி தாங்க
கூடலியே சிறு பழி தாங்க
கூடலியே

ஆண் : ஊருக்கு முன்னே
குறை சொன்ன பின்னே
தடுமாறும் விண்ணே
தாங்காது மண்ணே

ஆண் : ஒரு பாவம்
சேரலயே பழித்தோர்க்கு
வாழ்வில்லையே

ஆண் : இடியே ஆனாலும்
தாங்கி கொள்ளும் இதயம்
இடியே ஆனாலும் தாங்கி
கொள்ளும் இதயம்

ஆண் : { சிறு பழி தாங்க
கூடலியே சிறு பழி
தாங்க கூடலியே } (2)

நிலவே முகம்

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு இளம்
பூங்கொடியே இது
தாய் மடியே

பெண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான
மொழி பேசு அணைத்தேன்
உனையே இது தாய் மடியே

ஆண் : நிலவே
முகம் காட்டு

பெண் : பனி போல
நீரின் ஓடையே
கலங்கியதென்ன
மாமா இனிதான
தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

ஆண் : காலம் மாறும்
கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும்
ஏதம்மா நான் உன்
பிள்ளை தானம்மா

பெண் : நானும் கண்ட
கனவு நூறய்யா எனது
தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

ஆண் : எனை சேர்ந்தது
கொடி முல்லையே இது
போலே துணையும்
இல்லையே இனி நீ என்
தோளில் பிள்ளையே

ஆண் : நிலவே முகம்
காட்டு எனைப் பார்த்து
ஒளி வீசு

பெண் : அணைத்தேன்
உனையே இது தாய்
மடியே

ஆண் : சுமை போட்டு
பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின்
நீரென்றால் தினம்
குடிப்பவன் நானே

பெண் : மாலையோடு
நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும்
ஊரைய்யா உன்னை மீற
யாரைய்யா

ஆண் : மாமன் தோளில்
சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும்
கிள்ளையே நீ என்
வாழ்வின் எல்லையே

பெண் : இதை மீறிய
தவம் இல்லையே இனி
எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே
நிலவே முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு அலை போல்
சுதி மீட்டு இனிதான மொழி பேசு

ஆண் : இளம் பூங்கொடியே
இது தாய் மடியே நிலவே
முகம் காட்டு எனைப்
பார்த்து ஒளி வீசு

ஒரு நாளும்

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam, எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : கங்கண கணவென
கிண்கிணி மணிகளும்
ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும்
மங்களம் மங்களம் எனும்
மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கின்றதே
இது சுகம் தரும் சுயம்வரமே
ஆஆஆஆஆஆஆஆ

பெண் : { ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும் } (2)

பெண் : விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும்
{ எனையாளும் எஜமானே } (4)

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

ஆண் : ஒரு நாளும்
உனை மறவாத
இனிதான வரம்
வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும்

குழு : தனனனனனா
தனனனனனா தனனனனனா
தனனனன னானானானானா

பெண் : சுட்டுவிரல் நீ
காட்டு சொன்னபடி
ஆடுவேன் உன்னடிமை
நான் என்று கையெழுத்துப்
போடுவேன்

ஆண் : உன்னுதிரம் போலே
நான் பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்
அழகைத் தேடுவேன்

பெண் : தோகை கொண்டு
நின்றாடும் தேன்கரும்பு
தேகம்

ஆண் : முந்தி வரும்
தேன் வாங்கிப் பந்தி
வைக்கும் நேரம்

பெண் : அம்புகள் பட்டு
நரம்புகள் சுட்டு வம்புகள்
என்ன வரம்புகள் விட்டு

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

ஆண் : ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும் விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும்

ஆண் : { இணையான
இளமானே துணையான
இளமானே } (2)

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

பெண் : ஒரு நாளும்
உனை மறவாத இனிதான
வரம் வேண்டும் உறவாலும்
உடல் உயிராலும் பிரியாத
வரம் வேண்டும்

ஆண் : கட்டில் இடும்
சூட்டோடு தொட்டில்
கட்டு அன்னமே முல்லைக்
கொடி தரும் அந்தப் பிள்ளைக்
கனி வேண்டுமே

பெண் : உன்னை ஒரு
சேய் போலே என் மடியில்
தாங்கவா என்னுடைய
தாலாட்டில் கண்மயங்கித்
தூங்கவா

ஆண் : ஆரீராரோ
நீ பாட ஆசை உண்டு
மானே

பெண் : ஆறு ஏழு
கேட்டாலும்
பெற்றெடுப்பேன் நானே

ஆண் : முத்தினம் வரும்
முத்து தினம் என்று
சித்திரம் வரும்
விசித்திரம் என்று

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

பெண் : ஒரு நாளும்
உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்

ஆண் : உறவாலும்
உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

பெண் : விழியோடு
இமை போலே விலகாத
நிலை வேண்டும்

ஆண் : இணையான
இளமானே துணையான
இளமானே

பெண் : ஓ..எனையாளும்
எஜமானே எனையாளும்
எஜமானே

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆ…

தூக்கு சட்டிய தூக்கி

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கம் கம் கைநாட்டு

ஆண் : என்னங்க எஜமான்
திட்டுறீங்க

ஆண் : தூக்கி பாரு
தூக்கு சட்டிய

ஆண் : அட அதான
பார்த்தேன்

ஆண் : தூக்கு சட்டிய தூக்கி
பார்த்து மோப்பம் புடி டா எதுல
என்ன இருக்குதுன்னு கண்டு
புடி டா

ஆண் : தூக்கு சட்டிய தூக்கி
பார்த்து மோப்பம் புடி டா
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடி டா

ஆண் : பல வீட்டு சோத்து
ருசி பார்த்து புட்டா கஷ்டமடா
ஒரு வீட்டில் இத்தனையும்
கிடைக்குறதும் கஷ்டமடா

ஆண் : யாரும் பார்க்காம
தெரியாம திங்கோனும்

ஆண் : தெரிஞ்சி போச்சுன்னா

ஆண் : தலை கவிழ்ந்து
நிக்கோணும்

ஆண் : கெடைச்சதெல்லாம்
எடுத்து வெய் முடிஞ்சுதுனா
மிச்சம் வெய்

குழு : { தூக்கு சட்டிய தூக்கி
பார்த்து மோப்பம் புடிப்போம்
எதுல என்ன இருக்குதுன்னு
கண்டு புடிப்போம் } (3)

ஆண் : கம்மன் சோறு
கத்திரிக்கா கூட்டு இருக்கு
நேத்து வெச்ச மீன் குழம்பு
இங்கே இருக்கு

ஆண் : கேப்ப கழி குச்சி
கருவாடும் இருக்கு சாம
சோறு சனபு கீரை பருப்பும்
இருக்கு

ஆண் : பொறிச்ச வாத்து
முட்ட வாசம் ஆஹா ஆஹா
பொறிச்ச வாத்து முட்ட வாசம்
பருத்தி கட்டு வரைக்கும் வீசும்

ஆண் : ஆமா

ஆண் : பொறிச்ச வாத்து
முட்ட வாசம் பருத்தி கட்டு
வரைக்கும் வீசும்

ஆண் : செட்டி நாட்டு
ஆச்சி சுட்ட முட்ட
தோசை நாக்கில் பேசும்

ஆண் : தரிகிட தோம்
தரிகிட தோம் தத்தி
தோம்

ஆண் : நெல்லு சோறும்
கொள்ளு சாரும் மனச
கொள்ளை அடிக்கும்
பாரு

ஆண் : ஐயோ

ஆண் : சோள சோறும்
புளிச்ச மோரும் ரசிச்சு
ரசிச்சு குடிச்சு பாரு

ஆண் : இஷ் அட புளிச்ச
தண்ணி கூட சேர்த்து
வெங்காயத்தை கடிக்க
வேணும் பொரிச்ச மொளகா
வத்தல் ஓட கரைச்சி கரைச்சி
குடிக்க வேணும்

ஆண் : யாரும் பார்க்காம
தெரியாம திங்கோனும்

ஆண் : தெரிஞ்சி போச்சுன்னா

ஆண் : தலை கவிழ்ந்து
நிக்கோணும்

ஆண் : கோழி குழம்பிருக்கு
கூடி திங்க தெம்பு இருக்கு

குழு : ஐயா எஜமான்

உரக்க கத்துது

பாடகர்கள் : எஸ். ஜானகி
பாடலாசிரியர் : R.V. Udhaya Kumar
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { உரக்க கத்துது
கோழி தண்ணி இறைச்சி
கொட்டுது வாலி } (2)
இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு

பெண் : வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : கம்மன் கருத்து கிட்ட
வருது கொல்ல புறமா கொஞ்ச
வருது பஞ்சி நெருப்ப சுத்தி
வருது பத்தி கிட தான்
பக்கம் வருது

பெண் : சொக்குதுங்க வெடல
புள்ள என்ன சத்தியமா யாரும்
தொடல கண்டவக கண்ணு
படல ஒன்னும் மத்தவங்க
சொல்லி தரல

பெண் : ஆத்து பக்கம் குளிச்சா
ஆத்து தண்ணி சுடுது கூர பாயில்
படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே
ஏக்கத்த மாத்தையா என்ன
தேத்தையா

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : மஞ்ச ரதமே மெல்ல
மெல்ல வா வஞ்சி இடுப்ப
கிள்ள கிள்ள வா

பெண் : பிஞ்சி மனச சொந்தம்
கொள்ள வா கொஞ்சம்
கொஞ்சமா சொல்லி
தரவா

பெண் : உன்னதான் தெனம்
நெனச்சேன் இங்க கொதிக்குது
உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள
நெருப்ப வந்து அணைக்கணும்
தொட்டு இதமா

பெண் : நேச பட்டு தினமும்
நேந்து கிட்டேன் பலமா ஆச
பட்டு நேசமா ஓரங்கட்டு
வேசமா ஏக்கத்த மாத்தையா
என்ன தேத்தையா

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண் : இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு

பெண் : வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா ஓ ஓ

பெண் : உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி