Mannan
ராஜாதி ராஜா
Movie |
Mannan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Vaali |
Singers |
S. P. Balasubramanyam, Swarnalatha |
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா
பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பெண் : பூமேனி கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
***
ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்
பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்
ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்
பெண் : மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ
பெண்குழு : லால லால லால லால லால லா
ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ
பெண்குழு : லால லால லால லால லால லா
பெண் : காதும் காதுமாய்
ஆண் : காதல் மந்திரம்
பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
***
பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
பெண் : உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க
ஆண் : ஓடை மீது ஓடம் போல ஆட வா
பெண்குழு : லால லால லால லால லால லா
பெண் : உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா
பெண்குழு : லால லால லால லால லால லா
ஆண் : காதல் கன்னிகை
பெண் : காமன் பண்டிகை
ஆண் : காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு
பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா
பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா
ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும் வெண்பனி
பெண் : என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்
ஆண் : ரூபாப்பா..... ராபாப்பா....ராப பப்பா
ரூ. ரூ.. ரூ.. ரூ.. ரூ.. ரூ.. ரூடூரூ....ரூ
அம்மா என்றழைக்காத
Movie |
Mannan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Vaali |
Singers |
K. J. Yesudas |
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அடிக்குது குளிரு
Movie |
Mannan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Vaali |
Singers |
Rajinikanth, S. Janaki |
ஹா…. அடிக்குது குளிரு….ஹோ… துடிக்குது தளிரு..
ஹா…அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு….
அது சரி…..அது சரி…..
துடிக்குது தளிரு…
இத பார்ரா…
முல்லை பூங்கொடி…. கொம்பை தேடுது
அப்டியா?…..
கொம்பை போல உன் அன்பை தேடுது
ஓஹோ…
வா கட்டபொம்மன் பேரா … கட்டழகு வீரா…
ஹாஹா …. எப்டி .. எப்டி?
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா…
அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ..ஆடி ரதம் அழைக்குது..
ஆஆஆஆ…ய்ய்……
கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…ஆலிலை தவிக்குது
ஓஓ…ஹோ.
முத்தம் நூறு கேட்டு வாங்கவே… நாணமெனை தடுக்குது
அட்ர்ரா சக்கை!
பித்தம் ஏறி தூண்டில் மீனென.. நூலிடை துடிக்குது
இதெப்டி இருக்கு?
சுகமான கட்டில் நாடகம் … நீயும் நானும் ஆடலாம்
அக்…ஹா!
வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கம் இன்றி கூடலாம்.
அப்டி போடு!
உன்னை பார்த்து நான் .. சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
அடிக்குது குளிரு …
ஹா…. அது சரி … அது சரி…
துடிக்குது தளிரு…
அது ரொம்ப சரி… ரொம்ப சரி..
சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை …
மாலையிட கிடைக்கலாம்
இங்கே வந்து காலை மாலை தான்
சேலையை துவைக்கலாம்
என்னை போல ஒரு நல்ல மாப்பிள்ளை
வாய்ப்பதொரு அதிசயம்
என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பாவையென் பாக்கியம்.
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது..
இல்லைய பின்ன?
மங்கை செய்த பூர்வ புண்ணியம்.. மன்னன் வந்து சேர்ந்தது
போச்சுடா…
உன்னை பார்த்து நான் … சொக்கி போகிறேன்..
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
அடிக்குது குளிரு….
ஆ..ஆ… அஹ்ஹஹா……ஹா……
என்னை மடக்குது தளிரு…
ம்ம்..ஹ்ம்… ஹஹ்ஹா..ஹா..
முல்லை பூங்கொடி….
ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்….
கொம்பை தேடுது..
ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்………………….
கொம்பை போல என்
ஹஹஹஹா………….
அன்பை தேடுது
வாரே…………வாரே………….வா.
கட்டி தங்க மேனி…. கட்டழகு ராணி..
அஹா.. ஆஹ்…..
கொட்டி பார்த்த தேனி…
ஆஆஆஆ……………….
கட்டில் பக்கம் வா நீ..
அஹ்ஹ்,…ஹா ஹா…
அடிக்குது குளிரு.
சண்டி ராணியே என்னக்கு
Movie |
Mannan |
Music |
Ilaiyaraaja |
Year |
1992 |
Lyrics |
Vaali |
Singers |
S. P. Balasubramaniam |
என் சுதந்திரத்தை எந்நாளும் யாருமே பறித்ததில்லை
என் சரித்திரத்தில் எந்நாளும் பெண்மகள் ஜெயித்ததில்லை
என்ன ஆச்சு எங்கு போச்சு சின்ன ராணி உன் சாகசம்
ஆட்டம் பாட்டம் நோட்டம் எல்லாம் காட்டலாமா நீ என் வசம்
ஓட்டும் பொது ஒட்டுவேனே ..
முட்டும் பொது முட்டுவேனே ..
ஓட்டும் பொது ஒட்டுவேனே .. எதுக்கு வம்பு தும்பு
என்னிடத்தில் மண்டி போட்டி ..
சண்டி ராணியே என்னக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ
இந்த ஊரு ராணி என்று உம்மை நினைத்தாய்
தட்டி கேட்க ஆள் இல்லாமல் தாதி குதித்தாய்
சந்தியே ஓ சந்தியே வா வா ..
சண்டி ராணியே என்னக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ
சண்டி ராணியே என்னக்கு கப்பம் கட்டு நீ
ஜென்ம ஜென்மமாய் என்னக்கு கட்டு பட்டு நீ
கும்தலக்கடி
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி} (2)
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : பாட்டாளிக் கூட்டமெல்லாம்
பாரவண்டி இழுக்குது
குழு : பாடுபட்டுப் பொழைக்குது
பாட்டுக்கள் எடுத்துப் படிக்குது
ஆண் : அன்னாடம் மீன் பிடிக்கும்
ஏழை சனம் கடலிலே
குழு : போகுறப்போ படகிலே
ஏலேலோ என்று பாடுது
ஆண் : ஏத்தம் இறைப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : ஏரைப் பிடிப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : மூட்டை சுமப்பவன்
குழு : ஹேய்ய்
ஆண் : முடியை வழிப்பவன்
ஆண் : எல்லாம் ஒரு இனம்
இங்கு பாடித்தான் செய்யுது வேல
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : பாட்டாலே மனம் கொண்ட
பாரங்கள் நீங்குவதாலே
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : நாம் கூடத்தான்
ஒரு கச்சேரி வைப்போமடா
குழு : ஹேய்
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : தை மாசம் பிறந்திடுச்சு
பொங்கப் பானை வைக்கலாம்
குழு : புதுசு வாங்கிக்கட்டலாம்
பொங்கலோ பொங்கல் பாடலாம்
ஆண் : ஓயாமல் உழைக்கும் வர்க்கம்
நாளும் இங்கு சிரிக்கணும்
குழு : நாடும் வீடும் செழிக்கணும்
நல்லது எல்லாம் நடக்கணும்
ஆண் : ஏறி கெடக்குது
குழு : ஹேய்ய்
ஆண் : எல்லாம் விலையிலே
குழு : ஹேய்ய்
ஆண் : ஏற்றம் வரலியே
குழு : ஹேய்ய்
ஆண் : எங்க நிலையிலே
ஆண் : மாசம் தான் வரும்
எங்க சம்பளம் பத்தலே சாமி
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : போனஸ்தான் தரும்
முதலாளியை மெச்சிடும் பூமி
குழு : ஹேய்ய் ஹே
ஆண் : போராடினா வெற்றி நிச்சயம்
நிச்சயம் தான் ஹேய்…
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : நான் மாமனாரு வீட்டில்
மன்னனாக ஆனேன்
ஆனபோதும் இங்கே
அண்ணனாகிப் போனேன்
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி
ஆண் : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
குழு : கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
ஆண் : ஆமாம்
குழு : இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து
ஆண் : போடு
குழு : {கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு
இதை கும்மிடிபூண்டி
கூட்சு வண்டியில் ஏத்து} (2)
|