Viduthalai
தங்கமணி ரங்கமணி
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ-ஆஹா ஹா
வெள்ளிமணி வைரமணி பூமேனி-ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ (தங்கமணி)
எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ
இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ
மெதுவா கைப்பட்டா வலிக்காதா- ஹே
அதுதான் எங்கிட்ட நடக்காது
அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது (தங்கமணி)
கண்ணனுக்கு காதலியே ராதா தான்
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான்
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே
ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா-
அஹஹா கேட்டா கேட்டதும் தருவேனா
அடி விளக்கேச்சும் பொழுதாச்சு
விளையாடலாமா............ (தங்கமணி)
ராஜாவே ராஜா
ராஜாவே ராஜா நான்தானே ராதா
பூமாலை கேட்கும் உன் காதல் ராதா
நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும்
தனியாக வந்து சந்திக்க தூண்டும் (ராஜாவே)
ராதாவே ராதா நீதானே ராதா
நானுன்னை தேடும் ராஜாதிராஜா
நீ என்னைப் பார்த்தால் என் கண்கள் ஏங்கும்
தனியாக உன்னை சந்திக்க வேண்டும்.....
எனைப் பார்த்த கண்கள் இனி யாரைப் பார்க்கும்
எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும்
நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே
உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே (ராதா)
எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே
அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே
என் தேவை எல்லாம் அன்பான உள்ளம்
அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம் (ராதா)
நீலக்குயில்கள் ரெண்டு
நீலக்குயில்கள் ரெண்டு மாலைப்பொழுதில் இன்று
கூவித்திரியும் தாவித்திரியும்
ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய் ஹோய்
ஆயிரம் ஆசைகள் கொண்டு (நீலக்)
மாலை இட்ட மாமன் கூடபொண்ணும் இருக்க
மஞ்சள் வெயில் வானம் போல கண்ணும் சிரிக்க
நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சும் கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று நான் காத்துக்கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்
அம்மம்மா ஏதோ ஏக்கம் (நீலக்குயில்கள்)
நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
காணவில்லை நான் தான் கண்ட ஹ கன்னியழகு
தேடி அணைத்தால் தேவி வரத்தான்
நாளெல்லாம் ஏதோ தாகம் (நீலக்குயில்கள்)
நாட்டுக்குள்ள நம்மப் பத்தி
ஆண் நாட்டுக்குள்ள நம்மப் பத்தி கேட்டுப் பாருங்க
பெண் அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் ஹேய் நாட்டுக்குள்ள நம்மப் பத்தி கேட்டுப் பாருங்க
பெண் அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் ஹெ ஹேய் நாட்டுக்குள்ள நம்மப் பத்தி
கேட்டுப் பாருங்க
பெண் அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
இசை சரணம் - 1
ஆண் நேருல நீ பாத்ததுண்டா வீர சிவாஜி ஹா
பெண் நீயும் இப்ப பாத்துக்கையா கிட்ட வந்தாச்சு
ஆண் கண்ணு குறி வைக்குது இப்போ பொறி வைக்குது
பெண் அட நெனச்சாலே ஒடம்பெல்லாம் குப்புங்குது
ஆண் கொஞ்சம் நில்லு நான் யாரு பக்கா கில்லாடி
தில்லு முல்லு என்னான்னு காட்டப் போறேண்டி ஆ...
குழு நாட்டுக்குள்ள இவரப் பத்தி கேட்டுப் பாருங்க ( ஹா )
அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க ( இசை )
குழு லாலா லல லாலா லல லாலா லலலா
லாலா லல லாலா லல லாலா லலலா
லாலா லல லாலா லல லாலா லலலா
லாலா லல லாலா லல லாலா லலலா
இசை சரணம் - 2
ஆண் சூரக் கோட்ட வாத்தியாரு என்ன நடிப்பு ஆ ஹா
பெண் காக்கிச் சட்டை மாட்டிகிட்டா என்ன துடிப்பு
ஆண் தங்கப் பதக்கம்மின்னு ஒரு படம் பாத்தியா
பெண் அந்த நடை என்ன உடை என்ன அசத்திட்டாரு
ஆண் அம்மா கண்ணு நீ அந்த பாட்டக் கேட்டியா
பெண் மச்சான் மச்சான் நீ கொஞ்சம் பாடிக் காட்டையா
ஆண் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
இசை சரணம் - 3
ஆண் வீர தீர கட்டபொம்மன் நானே அல்லவா
வாள் எடுத்தால் தூள் பறக்கும்
பெண் சேதி சொல்லவா
ஆண் நம்ம முகம் பாத்துக்கோ
சிம்மக் குரல் கேட்டுக்கோ
இந்த டயலாக ஒரு வாட்டி நீ கேட்டுக்கோ
இதக் கேட்டா ஜக்கம்மா மீசை துடிக்கும்
பெண் உன்ன பாத்தா தன்னாலே வீரம் பிறக்கும்
ஆண் நாட்டுக்குள்ள நம்மப் பத்தி கேட்டுப் பாருங்க
பெண் ஹேய் அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் ஹேய் நாட்டுக்குள்ள நம்மப் பத்தி கேட்டுப் பாருங்க
பெண் ஹா அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க
ஆண் கண்ணு மைனா என்னோட ஆட்டம் எப்படி
பெண் உங்க ஸ்டைலு என்னான்னு காட்டு இப்படி
ஆண் ஹெ ஹேய் நாட்டுக்குள்ள நம்மப் பத்தி
கேட்டுப் பாருங்க
பெண் ஹேய் அம்மமா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க ( இசை )
ராகம் நானே தான்
பெண் ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
ஹோ பாவம் நானே தான் ஹூ...
கவிஞன் வரலாம் கவிதை பெறலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறாலாம்
ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
ஹோ பாவம் நானே தான் ஹூ...
இசை சரணம் - 1
குழு ஓஹோ... ஓஹோ... ஓஹோ... ஓஹோ...
பெண் நீ வந்த நேரம் நல்ல நேரம்
நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓ...
என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம்
எப்போது எந்தன் ஆசை தீரும்
இடது கண் துடித்தது இள மனம் தவித்தது
ஹோ தெரியலையா ஹோ புரியலையா
கதை இன்னும் உனக்கு
ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
ஹோ பாவம் நானே தான் ஹூ...
கவிஞன் வரலாம் கவிதை பெறலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறாலாம்
ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
ஹோ பாவம் நானே தான் ஹூ... ( இசை )
குழு லலாலா... லால லாலால லா...
லா... லால லால லா...
இசை சரணம் - 2
பெண் ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா
நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஹோ...
சங்கீதம் தானே எந்தன் வாழ்கை
சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை
தினம் தினம் திருவிழா சுகம் தரும் கலை விழா
ஹோ மனக் கதவு ஹோ திறந்திருக்கும்
ஹோ என்றும் உன்னை நினைத்தது
ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
பாவம் நானே தான் ஹூ...
கவிஞன் வரலாம்
கவிதை பெறலாம்
ரசிகன் வரலாம்...
இனிமை பெறாலாம்...ஹோ
ராகம் நானே தான் ஹூ
ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
ஹோ பாவம் நானே தான் ஹூ...
கவிஞன் வரலாம் கவிதை பெறலாம்
ரசிகன் வரலாம் இனிமை பெறாலாம்
ஹோ ராகம் நானே தான்
ஹோ தாளம் நானே தான்
ஹோ பாவம் நானே தான் ஹூ...
|