Mullum Malarum

Rajinikanth Mullum Malarum

அடி பெண்ணே

பாடகர்கள் : Jency Anthony
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : ஜென்சி அந்தோணி இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை

பெண் : வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன

பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன

பெண் : சித்தாடை கட்டாத
செவ்வந்தியே
சிங்காரம் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடி பெண்ணே

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே

பெண் : நீரோடும் ஒரு ஓடை
மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன

பெண் : பார்த்தாலோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன

பெண் : ஒன்றோடு ஒன்றான
எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு
ஆடுகின்றதோ
அடி பெண்ணே

பெண் : அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே

நித்தம் நித்தம் நெல்லு சோறு

பாடகர்கள் : வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பச்சரிசி சோறு..ம்ம் ..
உப்பு கருவாடு
சின்னமனூரு வாய்க்கா
சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை
வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ
எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து
என்னை மீறுது

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பாவக்கா கூட்டு
பருப்போட சேத்து
பக்குவத்த பாத்து
ஆக்கி முடிச்சாச்சு
சிறுகாலான் வருத்தாச்சு
பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது
ரொம்ப பொருத்தமைய்யா
தெனங்குடிச்சா ஒடம்பு இது
ரொம்ப பெறுக்குமைய்யா

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு
நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு
வந்து மயக்குதைய்யா

பெண் : பழையதுக்கு தோதா
புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா
போட்டறச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம்
சலிக்காது தின்னாலும்
அதுக்கு இணை ஒலகத்துல
இல்லவே இல்ல
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும்
அலுக்கவே இல்ல

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன்
பொம்பள தாங்க
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க

ராமன் ஆண்டாலும்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், L. R. Anjali, Chorus
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்,
எல். ஆர். அஞ்சலி மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : லே லே லே லே….
லே லே லே லே….
லே லே லே லே….
அம்மனைக் கும்பிட்டா
நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே
கெட்டதை அம்மனும் கொடுக்காதே
லே லே லே லே….
லே லே லே லே….

ஆண் : ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே

ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா

ஆண் : ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே

ஆண் : {யானையக் கொண்டாங்க
குதுரையக் கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக} (2)

ஆண் : வாழை தென்னை மாவிலையெல்லாம்
தொங்கணும் தோரணமாக
ஏன்டா டேய் ராணியக் கூப்பிடு
அவளோட சேடியும் கூப்பிடு
ஏ மதுர ராஜ்ஜியம் என்னுது
ஒனக்கொரு பாதியக் கொடுக்கிறேன்டா

ஆண் : ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே

குழு : லே லே லே லே….
லே லே லே லே….
லே லே லே லே….
சந்தனம் பூசுங்க
சாமிய நேரில பாருங்க
என்ன வேணும் அத கேளுங்க
லே லே லே லே….
லே லே லே லே….

ஆண் : {பொன்னா பூப்பூத்து
வைரம் காயாக காய்க்கும்
என்னோட தோட்டம்} (2)

ஆண் : மாசம் மூணு போகம் வெளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்
ஏய் போனா போகுது வேல
ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா

ஆண் : ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே

குழு : லே லே லே லே….
லே லே லே லே….
லே லே லே லே….
பொன்னான பல்லக்கு
முல்லப்பூ மாலையும் சாமிக்கு
போட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க
லே லே லே லே….
லே லே லே லே….

ஆண் : {ஊரும் கொண்டாட
உலகம் கொண்டாட
ஊர்கோலம் போகும் சாமி} (2)

ஆண் : நாடும் வீடும் நல்லா வாழ
நீதான் நேர்வழி காமி
சாதி சனம் ஒன்னாக சேந்தது
சாமியத்தான் எல்லாரும் கேக்குது
நீ கேட்டா கேட்டதை கொடுக்கற
சாமியப் பாத்து கேளுங்கடா

ஆண் : ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே..ஹோய்

ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா

ஆண் : ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே…ஹோய்

செந்தாழம் பூவில்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்

ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)

ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)

ஆண் : வளைந்து நெளிந்து
போகும்பாதை மங்கை மோக
கூந்தலோ மயங்கி மயங்கி
செல்லும் வெள்ளம் பருவ
நாண ஊடலோ

ஆண் : ஆலங்கொடி மேலே
கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது காடுகள்
மலைகள் தேவன் கலைகள்

ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

ஆண் : அழகு மிகுந்த
ராஜகுமாரி மேகமாக
போகிறாள் ஜரிகை
நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்

ஆண் : பள்ளம் சிலா்
உள்ளம் என ஏன்
படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

ஆண் : { செந்தாழம் பூவில் } (2)
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

ஆண் : இளைய பருவம்
மலையில் வந்தால் ஏகம்
சொர்க்க சிந்தனை இதழை
வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ண்தனை

ஆண் : ஓடை தரும்
வாடை காற்று வான்
உலகை காட்டுது உள்ளே
வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன்
அற்புத காட்சி

ஆண் : { செந்தாழம் பூவில்
வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா } (2)

ஆண் : பூ வாசம் மேடை
போடுதம்மா பெண்போல
ஜாடை பேசுதம்மா
{ அம்மம்மா ஆனந்தம் } (2)