Naan Vazhavaippen
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
படம்: நான் வாழவைப்பேன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
ஆகாயம் மேலே பாதாளம் கீழே
ஆனந்த உலகம் நடுவினிலே
ஆஹா நான்தான் மைக்கேல்
அட நீதான் மை கேர்ள் (ஆகாயம்)
நில்லாமல் சுழலும் பூமி இது
எல்லாரும் நடிக்கும் மேடை இது
போட்டேன் நானும் வேஷங்களை
படித்தேன் வாழ்க்கை பாடங்களை
நடிப்பேன் உந்தன் மஞ்சத்திலே
இடம் பிடிப்பேன் உந்தன் நெஞ்சத்திலே
நாடகமா இன்னும் சாகசமா
இந்த ஊடல்கள் என்க்கு ஆகாதம்மா (ஆகாயம்)
பொன்னாக மின்னும் நான் தொட்டது
உன் மிது எந்தன் கை பட்டது
இனிமேல் உன்னை யார் விட்டது
இளமை சுகங்கள் வேர் விட்டது
பெண்ணே எந்தன் எண்ணப்படி
அடி கண்ணே என்னை கட்டிபிடி
பூங்கொடியே சிறு மாங்கனியே
உந்தன் கண்களில் ஆயிரம் காதல் கதை (ஆகாயம்)
எல்லாமே புதுமை என் பாணியில்
சொல்லாமல் புரியும் என் பார்வையில்
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி என்றும் என்னோடு தான்
இந்த ராஜா உந்தன் பின்னோடு தான்
காவலில்லை ஒரு கேள்வியில்லை
இது ராத்திரி நேர ராஜாங்கமே (ஆகாயம்)
|