Batsha

Rajinikanth Batsha

நீ நடந்தால் நடை அழகு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ………………………

பெண் : அழகு அழகு

பெண் : நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு அழகு அழகு
ஹோ நெற்றியிலே சரிந்து
விழும் நீள முடி அழகு அந்த
முடி கோதுகின்ற அஞ்சு
விரல் அழகு அழகு அழகு

குழு : ……………………….

ஆண் : ……………………….

ஆண் : நான் ஆசையை
வென்ற ஒரு புத்தனும்
அல்ல என் காதலை
சொல்ல நான் கம்பனும்
அல்ல உன் காது கடித்தேன்
நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன்
இது கற்பனை அல்ல

பெண் : அடி மனம்
தவிக்கும் அடிக்கடி
துடிக்கும் ஆசையை
திருகிவிடு இருவிழி
மயங்கி இதழ்களில்
இறங்கி உயிர் வரை
பருகி விடு

ஆண் : ஹோ முத்தம்
வழங்காது ரத்தம்
அடங்காது

பெண் : அழகு அழகு

பெண் : ஆ நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு அழகு அழகு

பெண் : ஓஹோ

பெண் : நான் பார்ப்பது
எல்லாம் அட உன் முகம்
தானே நான் கேட்பது
எல்லாம் அட உன் குரல்
தானே அந்த வான் மழை
எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த
சாமிக்கு தானே

ஆண் : மடல் கொண்ட
மலர்கள் மலர்ந்தது
எனக்கு மது ரசம்
அருந்தட்டுமா விடிகின்ற
வரையில் முடிகின்ற
வரையில் கவிதைகள்
எழுதட்டுமா

பெண் : முத்தம்
என்ற கடலில்
முத்து குளிப்போமா
அழகு அழகு

ஆண் : ஓ நீ நடந்தால்
நடை அழகு அழகு
நெருங்கி வரும் இடை
அழகு அழகு வேல்
எரியும் விழி அழகு
அழகு பால் வடியும்
முகம் அழகு அழகு
அழகு

ஆண் : ஹோ ஓ
தங்க முலாம் பூசி
வைத்த அங்கம் ஒரு
அழகு தள்ளி நின்று
எனை அணைக்கும்
தாமரையும் அழகு

பெண் : அழகு அழகு
அழகு அழகு

பாட்ஷா பாரு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Chorus
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & குழு இசையமைப்பாளர் : தேவா

குழு : பாஷா பாஷா
பாஷா பாஷா

ஆண் : யே பாட்ஷா பாரு
பாட்ஷா பாரு பட்டாளத்து
நடையை பாரு பகை நடுங்கும்
நடையை பாரு கோட்டு சூட்டு
ரெண்டும் எடுத்து போட்டு
நடக்கும் புலிய பாரு

ஆண் : பற்றி எரியும் நெருப்பு
போல சுட்டெரிக்கும் விழிய
பாரு ரத்தம் வேர்வை ரெண்டும்
கொண்ட ராஜாங்கத்தின் மன்னன்
தானடா

ஆண் : { இவன் பேருக்குள்ளே
காந்தம் உண்டு உண்மை
தானடா } (2)

நான் ஆட்டோக்காரன்

பாடகர்கள் : S.P. Balasubrahmaniyam
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : நான் ஆட்டோ
காரன் ஆட்டோக் காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்
காரன் நியாயம் உள்ள
ரேட்டுக் காரன் நல்லவங்க
கூட்டுக் காரன்

ஆண் : நல்லாப் பாடும்
பாட்டுக்காரன் காந்தி
பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக்
காரன் எளியவங்க
உறவுக்காரன்

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அட அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான் ஆண்

குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோ
காரன் ஆட்டோக் காரன்
நாளும் தெரிஞ்ச ரூட்டுக்
காரன் நியாயம் உள்ள
ரேட்டுக் காரன் ஆண்

குழு : { ஓஓ ஹோ
ஓஓ ஹோ } (2)

ஆண் : ஊரு பெருசாச்சு
சனத்தொகை பெருத்தாச்சு ஆண்

குழு : ஜும்த
லக்கடி ஜும்தா ஹே
ஜும்த லக்கடி ஜும்தா

ஆண் : ஆஹா ஊரு
பெருசாச்சு சனத்தொகை
பெருத்தாச்சு பஸ்ஸ
எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின்
ஓரத்தில

ஆண் : { அட கண்ணடிச்சா
காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டினா ஆட்டோ
வரும் சொல்றேங்க } (2) ஹான்
முந்தி வரும் பாரு இது மூணு
சக்கரத் தேரு நன்மை வந்து
சேரும் நீ நம்பி வந்து ஏறு

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான் ஆண்

குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன்
ஆட்டோக்காரன் நாளும்
தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக் காரன்

குழு : …………………………

ஆண் : ஆ.. அம்மா
தாய்மாரே ஆபத்தில்
விட மாட்டேன்

குழு : ஜும்த லக்கடி
ஜும்தா ஹே ஜும்த
லக்கடி ஜும்தா

ஆண் : ஏ… அம்மா
தாய்மாரே ஆபத்தில்
விட மாட்டேன் வெயிலோ
புயல் மழையோ மாட்டேன்னு
சொல்ல மாட்டேன் அங்கங்கே
பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்

ஆண் : { நான் பிரசவத்துக்கு
இலவசமா வாரேன்மா உன்
பிள்ளைக் கொரு பேரு
வச்சும் தாரேன்மா } (2)
எழுத்தில்லாத ஆளும்
அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும்
இந்த ஆட்டோக்காரன்
அறிவான்

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான் ஆண்

குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : நான் ஆட்டோக்காரன்
ஆட்டோக்காரன் நாளும்
தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயம் உள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்

ஆண் : நல்லாப் பாடும்
பாட்டுக்காரன் காந்தி
பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக்
காரன் எளியவங்க
உறவுக்காரன்

ஆண் : இரக்கமுள்ள
மனசுக்காரண்டா நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக்
காரண்டா நான் எப்பொழுதும்
ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

ஆண் : அட அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : அஜக்கு
இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா
குமுக்கு தான் ஆண்

குழு : அஜக்கு
இன்னா அஜக்கு தான்

ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : குமுக்கு
அஜக்கு
இன்னா அஜக்கு தான்

ஆண் : அஜக்கு
குமுக்கு இன்னா
குமுக்கு தான்

ஆண் : குமுக்கு

நம்ம தோழன் பாரு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Chorus
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் & குழு இசையமைப்பாளர் : தேவா

குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா

ஆண் : நம்ம தோழன்
பாரு பால் வடியும்
முகத்த பாரு பசுவ
போல குணத்த பாரு

ஆண் : பச்ச ரத்தம்
வழியும் போது பச்சை
குழந்தை சிரிப்ப பாரு

ஆண் : பீசு பீசா கிழிக்கும்
போதும் இயேசு போல
பொறுமை பாரு தேகம்
எல்லாம் வேகும் போதும்
ஒளி கொடுக்கும் மெழுகு
பாரடா

ஆண் : இவன் ஜாதகத்தை
மாத்தி வெச்ச பாவி யாருடா
இந்த எரிமலையில் ஈர துளி
போட்டாதாரடா இந்த
எரிமலையில் ஈர துளி
போட்டாதாரடா

ரா ரா ரா ராமையா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா, Chorus
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : …………………….

பெண் : ஒரே ஒரு சந்திரன்
தான் இரவுக்கெல்லாம்

ஆண் : …………………….

பெண் : ஒரே ஒரு கதிரவன்
தான் பகலுக்கெல்லாம்

ஆண் : …………………….

பெண் : ஒரே ஒரு பாட்ஷா
தான் ஊருக்கெல்லாம் ஒரே
ஒரு பாட்ஷாதான்
ஊருக்கெல்லாம் ஒரே
ஒரு பாட்ஷாதான்
ஊருக்கெல்லாம்

குழு : …………………….

ஆண் : ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள உலகம் இருக்கு
ராமையா அட ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஆண் : எட்டுக்குள்ள வாழ்க்கை
இருக்கு ராமையா எட்டுக்குள்ள
வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல
போறேன் கேளையா

ஆண் : இக்கட ரா ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
அட ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஆண் : முதல் எட்டில்
ஆடாதது விளையாட்டல்ல
நீ இரண்டாம் எட்டில்
கல்லாதது கல்வியும்
அல்ல முதல் எட்டில்
ஆடாதது விளையாட்டல்ல
நீ இரண்டாம் எட்டில்
கல்லாதது கல்வியும்
அல்ல

ஆண் : மூன்றாம் எட்டில்
செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது
குழந்தையுமல்ல

ஆண் : எட்டு எட்டா மனுஷ
வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு
எட்டா மனுஷ வாழ்வ
பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில்
இப்போ இருக்க
நெனச்சுக்கோ

ஆண் : ரா ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
ஆஹாஹாஹா ரா ரா ரா
ராமையா நான் புட்டு புட்டு
வைக்க போறேன் பாரையா
ஹோய் ஹோய்

குழு : …………………

ஆண் : ஐந்தாம் எட்டில்
சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது
உலகமுமல்ல ஐந்தாம் எட்டில்
சேர்க்காதது செல்வமுமல்ல
நீ ஆறாம் எட்டில் சுற்றாதது
உலகமுமல்ல

ஆண் : ஏழாம் எட்டில்
காணாதது ஓய்வுமில்ல
நீ எட்டாம் எட்டுக்கு மேல
இருந்தா நிம்மதியில்ல

ஆண் : எட்டு எட்டா மனுஷ
வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு
எட்டா மனுஷ வாழ்வ
பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில்
இப்போ இருக்க
நெனச்சுக்கோ

ஆண் : ஓஹோ ரா ரா ரா ராமையா
எட்டுக்குள்ள உலகம் இருக்கு
ராமையா அட ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஆண் : எட்டுக்குள்ள வாழ்க்கை
இருக்கு ராமையா எட்டுக்குள்ள
வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல
போறேன் கேளையா

குழு : இக்கட ரா ரா ரா
ராமையா எட்டுக்குள்ள
உலகம் இருக்கு ராமையா
ரா ரா ரா ராமையா
நான் புட்டு புட்டு வைக்க
போறேன் பாரையா

ஸ்டைலு ஸ்டைலு தான்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹே ஹே

பெண் : ஸ்டைல்
ஸ்டைல் சூப்பர்
ஸ்டைல்

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான் ஓ
டச்சு டச்சு டச்சு டச்சு
என்ன டச்சு மீ ஓ கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு என்ன
கிச்சுமீ ஏழு மணிக்கு மேல
நானும் இன்பலட்சுமி

ஆண் : { பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான் } (2)
ஆ டச்சு டச்சு டச்சு டச்சு
என்ன டச்சு மீ ஓ கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு என்ன கிச்சுமீ
ஏழு மணிக்கு மேல நீயும்
இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான்

ஆண் : காதலிச்சா
கவிதை வரும் கண்டு
கொண்டேன் பெண்ணாலே

பெண் : கருப்பும் ஓர் அழகு
என்று கண்டு கொண்டேன்
உன்னாலே

ஆண் : எங்கெங்கே
ஷாக் அடிக்கும்
அறிந்துக்கொண்டேன்
பெண்ணாலே

பெண் : எங்கெங்கே
தேள் கடிக்கும் தெரிந்து
கொண்டேன் உன்னாலே

ஆண் : காஷ்மீர்
ரோஜாவே கைக்கு
வந்தாயே மோந்து
பார்க்கும் முன்னே
முள்ளெடுத்து குத்தாதே

பெண் : அழகு ராஜாவே
அவசரம் ஆகாதே
மொட்டு மலரும்
முன்னே முட்டி முட்டி
சுத்தாதே

ஆண் : அடி ராத்திரி
வரவே என் ரகசிய
செலவே ஒரு காத்தடிக்குது
சோ்த்தணைக்கணும் காத்திரு
நிலவே

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக் கேத்த
மயிலு நானுதான்

ஆண் : பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான்

பெண் : பச்சரிசி
பல்லழகா பால்
சிரிப்பில் கொல்லாதே

ஆண் : அழகு மணி
தேரழகி அசைய விட்டே
கொல்லாதே

பெண் : நெத்தி தொடும்
முடியழகா ஒத்தை
முடி தாராயோ

ஆண் : கட்டை மலர்
குழலழகி ஒத்தை
மலர் தாராயோ

பெண் : அங்கே
தீண்டாதே ஆசை
தூண்டாதே சும்மா
கிடந்த சங்க ஊதி
விட்டு போகாதே

ஆண் : ஊடல் கொள்ளாதே
உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால்
தலையணையும் தூங்காதே

பெண் : அட கெட்டது
மனசு வந்து முட்டுது
வயசு உன்ன பார்த்த
பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு
தினுசு

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்
உன் ஸ்டைலுக்கேத்த
மயிலு நானு தான்

ஆண் : பிகரு பிகரு
தான் நீ சூப்பர் பிகரு
தான் இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான்

பெண் : ஹேய்
டச்சு டச்சு டச்சு
டச்சு என்ன டச்சு மீ

ஆண் : அட கிச்சு
கிச்சு கிச்சு கிச்சு
என்ன கிச்சு மீ

பெண் : ஏழு மணிக்கு
மேல நானும்
இன்பலட்சுமி

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான்

ஆண் : ஹாஹா

பெண் : ஸ்டைலு
ஸ்டைலு தான் இது
சூப்பர் ஸ்டைலு தான்

ஆண் : ஹாஹா

பெண் : உன் ஸ்டைலுக்கேத்த
மயிலு நானு தான்

ஆண் : வா ரே வா
பிகரு பிகரு தான்

பெண் : ஹ்ம்ம்

ஆண் : நீ சூப்பர்
பிகரு தான்

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : இந்த பிகருக்கேத்த
மைனர் நானு தான்

தங்கமகன் இன்று சிங்க நடை

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : தேவா
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா

குழு : …………………………

பெண் : { தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள் } (2)

பெண் : கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும்
நழுவியதே வெட்கத்
தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதே

பெண் : ரத்தத் தாமரை
முத்தம் கேட்குது வா
என் வாழ்வே வா

ஆண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

குழு : …………………………

ஆண் : சின்னக்
கலைவாணி நீ
வண்ண சிலைமேனி
அது மஞ்சம் தனி மாறம்
தலை வைக்கும் இன்பத்
தலகாணி

பெண் : ஆசைத்
தலைவன் நீ நான்
அடிமை மகராணி
மங்கை இவள் அங்கம்
எங்கும் பூச நீதான்
மருதாணி

ஆண் : பிறக்காத
பூக்கள் வெடித்தாக
வேண்டும்

பெண் : தென்பாண்டி
தென்றல் திறந்தாக
வேண்டும்

ஆண் : என்ன சம்மதமா

பெண் : இன்னும் தாமதமா

ஆண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

குழு : …………………………

பெண் : தூக்கம் வந்தாலே
மனம் தலையணை தேடாது
தானே வந்து காதல் கொல்லும்
உள்ளம் ஜாதகம் பார்க்காது

ஆண் : மேகம் மழை
தந்தால் துளி மேலே
போகாது பெண்ணின்
மனம் ஆணில் விழ
வேண்டும் விதிதான்
மாறாது

பெண் : என் பேரின்
பின்னே நீ சேர
வேண்டும்

ஆண் : கடல் கொண்ட
கங்கை நிறம் மாற
வேண்டும்

பெண் : என்னை
மாற்றி விடு

ஆண் : இதழ்
ஊற்றி கொடு

பெண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

ஆண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்

பெண் : கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும்
நழுவியதே வெட்கத்
தாழ்ப்பாள் அது வேந்தனை
கண்டதும் விலகியதோ

பெண் : முத்தம்
என்பதேன் அர்த்தம்
பழகிட வா என்
வாழ்வே வா

பெண் : தங்கமகன்
இன்று சிங்க நடை
போட்டு அருகில்
அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி
எரியும் மெழுகாக
மங்கை உருகி
நின்றாள்