Siva
அடி வான்மதி
அடி வான்மதி...என் பார்வதி...
காதலி...கண் பாரடி...
தேடி வந்த தேவதாசை காண ஓடிவா
அடி பார்வதி என் பார்வதி
பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி...என் பார்வதி...
சின்ன ரோஜா இதழ் அது
கன்னம் நான் என்றது...
பாடும் புல்லாங்குழல்...உன்
பாஷை நான் என்று கூறும்...
கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்...
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர மீண்டும் நீ வரவேண்டும்..
கண்வாசல் சாத்தாது வா...ஆ...
ஒரு வான்மதி உன் பார்வதி காதலி நீ காதலி
தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன்
என் தேவதாஸ் என் தேவதாஸ்
பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னை பார்த்தேனே (ஒரு)
கோடை காலங்களில்
குளிர் காற்று நீயாகிறாய்...
வாடை நேரங்களில்…….
ஒரு போர்வை நீயாக வந்தாய்
கண்கள் நாலும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமை ஆனோம்
மைவிழி ஆசை கை வளையோசை...
என்னென்று நான் சொல்லவா...ஆ.......(அடி வான்மதி).
இரு விழியின் வழியே
இரு விழியின் வழியே நீயா வந்து போனது - இனி
விடியும் வரையில் தூக்கம் என்ன ஆவது - இரு
பார்வைகள் பரிமாறிடும் மன ஆசைகள் அணை மீறிடும்
அணை மீறும் போது காவல் ஏது ……….(விழியின்)
தொட்டில் இடும் இரு தேமாங்கனி
என் தோளில் ஆட வேண்டுமே
கட்டில் இடும் உன் காமன் கிளி
மலர் மாலை சூட வேண்டுமே
கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு
தேதி ஒன்று பார்க்கின்றேன்
கொஞ்சும் கிளி மஞ்சம் இடும்
தேதி சொல்ல போகிறேன்
கார் கால மேகம் வரும்..ம்..ம்..
கல்யாண ராகம் வரும்
பாடட்டும் நாதஸ்வரம்..ம்..ம்..
பார்க்கட்டும் நாளும் சுகம்
விடிகாலையும் இளமாலையும்
இடை வேளையின்றி இன்ப தரிசனம் ( விழியின் )
உன் மேனியும் நிலைக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
ஒவ்வொன்றிலும் உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
எங்கே எங்கே ஒரே தரம்
என்னை உன்னில் பார்க்கிறேன்
இதோ இதோ ஒரே சுகம்
நானும் இன்று பார்க்கிறேன்
தென்பாண்டி முத்துக்களா..ஆ..ஆ..
நீ சிந்தும் முத்தங்களா
நோகாமல் கொஞ்சம் கொடு..
உன் மார்பில் மஞ்சம் இடு
இரு தோள்களில் ஒரு வானவில்
அது பூமி தேடி வந்த அதிசயம் (விழியின்)
அட மாப்பிள்ள
அட மாப்பிள்ள.......சும்மா மொறைக்காதே
மச்சான் சொன்னா கேளு
என்ன பாக்குற.......
இப்ப கல்யாணப் பந்தல் ஒண்ணு போடு
ஹா வண்ண வண்ணத் தோரணம்
வாசலிலே ஆடணும்
ஆட்டணும் இல்ல ஆடணும் டா.......சர்தான்
மேலும் கீழும் பார்வை என்ன
முகூர்த்த நேரம் நெருங்கி வருது
டோய் டோய் டோய் டோய்
அட மாப்பிள்ள சும்மா மொறைக்காதே
மச்சான் சொன்னா கேளு
ஊரில் எல்லோரும் என்னோட சொந்தம்
உள்ளபடி சொன்னா இது ஒண்ணே என் செல்வம்
யாரா இருந்தாலும் நான் கேப்பேன் நியாயம்
நமக்கென்ன போடா என போனாதான் பாவம்
நல்லதுக்கு எப்போதும் இல்லேடா காலம்
முன்னவங்க சொன்னாங்க பொய் இல்லேடா..ஆமா
உள்ளவங்க பின்னால வாலாட்டும் கூட்டம்
உங்க கத என் கிட்ட செல்லாது டா
இது தஞ்சாவூரு மேளம்
அத தட்டுங்க கொஞ்சம் கேப்போம்
இந்த கல்யாணத்துல பாரு
நல்ல கிச்சடி சம்பா சோறு
மேலும் கீழும் பார்வை என்ன
முகூர்த்த நேரம் நெருங்கி வருது
டோய் டோய் டோய் டோய்.....அட மாப்பிள்ள
சும்மா மொறைக்காதே மச்சான் சொன்னா கேளு
ஊரார் எல்லோரும் வாராங்க பாரு
வாசலுக்கு வந்து கொஞ்சம் பன்னீர தூவு
பொண்ணு மாப்பிள்ள வந்தாச்சு அங்கே
கட்டி வெச்ச மால அதக் கொண்டாடா இங்கே
அய்யர் எங்கே போனீங்க
வாங்கோன்னா வாங்கோ
ஆடிக்கிட்டே வாரீங்க ஒய்யாரமா
இவன் நாடாளும் ராசா இது நம்ம ஊரு ரோசா
அட வாயார நீங்க வந்து வாழ்த்துங்க வாங்க
மேலும் கீழும் பார்வை என்ன
முகூர்த்த நேரம் நெருங்கி வருது
டோய் டோய் டோய் டோய்.....அட மாப்பிள்ள
சும்மா மொறைக்காதே மச்சான் சொன்னா கேளு
அய்யரே... மந்திரம் சொல்லுங்கோ
மாங்கல்யம் தந்துனானேனா
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே...
த்வம் ஜீவ ஷரதஸ்யதம்...
கெட்டி மேளம் கெட்டி மேளம்.......
அடி கண்ணாத்தா பொன்னாத்தா
அடி கண்ணாத்தா பொன்னாத்தா
என் ஆத்தா செல்லாத்தா எல்லாம்
வாங்கடியோ வாங்கடியோ வாங்கடியோ
அட சின்னையா பொன்னையா
வீட்டுக்குள் என்னையா வெளியே
வாருங்கடோ வாருங்கடோ வாருங்கடோ
ஹையா ஹையா ஹோய்
நான் அப்பன் ஆனேன் டோய்
மாமா எங்கே டோய்
உன் பொண்ணக் கொண்டா டோய்
யான மேல குதிர மேல பையன் வருவான் டோய்
நைனாவாட்டம் ஸ்டைலா நின்னு
விசிலும் அடிப்பான் டோய்
உம் பொண்ணக் கண்டா கண்ணும் அடிப்பான் டோய்
தர பம்பம் பம்பம் ஹையா ஹையா ஹோய்
வான வில்லில் ஒரு தோரணம் கட்டு
இன்ப சேதி சொல்லி வீதி எங்கும்
மேளம் கொட்டாதோ
ஒண்ணா சேர்ந்து நின்னு பாட்டு சொல்லி
தாளம் தட்டாதோ
ஆசை நெஞ்சம் அதில் ஆயிரம் எண்ணம்
அடி ஆடி வெள்ளம் போல வந்து
நீந்தச் சொல்லாதோ
அதில் ஆட்டம் என்ன பாட்டம் என்ன
சேர்ந்து கொள்ளாதோ
தென் மதுர தமிழ்ச் சந்தம்
வாய் திறந்தா வந்து சிந்தும்
அந்தப் பாண்டி முத்துப் போல எம் புள்ள
தர பம்பம் பம்பம்
ஹையா ஹையா ஹோய்
இவ அம்மா ஆனா டோய்
மாமா எங்கே டோய்
உன் பொண்ணக் கொண்டா டோய்
தன்னான தன்னான தன்னான தானா
தன தன்னான தன்னான தன்னான னா
யாரு புள்ள அவன் என்னுட புள்ள
சாங்கு சக்கா சக சங்சக சக்கா
பாடுபடும் தோழருக்கு தோளக் கொடுப்பான்
ஒரு பாதகத்த யாரும் செஞ்சா மோதி மிதிப்பான்
ஏழை என்ன அட எளியவர் என்ன
சாங்கு சக்கா சக சங்சக சக்கா
சம நீதி ஒண்ணே நீதி என்னும்
பாத வகுப்பான்
அவன் நாட்டில் உள்ள மேடு பள்ளம்
யாவும் தகர்ப்பான்
நெஞ்சம் உண்டு வைரம் போலே
பஞ்சம் என்ன இனி மேலே
அதச் சொல்லச் சொல்ல மீச துடிக்கும்
தர பம்பம் பம்பம் ஹையா ஹையா ஹோய்
வெள்ளிக் கிழம தல முழுகி
வெள்ளிக் கிழம தல முழுகி
மல்லிகப் பூவ தலையில் வெச்சேன்
மல்லிகப் பூவ தலையில் வெச்சே
வாசக் கதவ தெறந்து வெச்சேன்
அதப் பாத்து பாத்து விழி பூத்து பூத்து
ஒரு சூடு ஏறி ரொம்ப வேர்த்து போச்சு..(வெள்ளி)
குத்தாலத்துக்குப் போனா போனா ( போனா )
அங்கே கொட்டுது கொட்டுது தண்ணி தண்ணி ( ஓஹோ )
அட கொட்டுற தண்ணிய பாத்தா பாத்தா ( பாத்தா )
உள்ளம் கெட்டது கெட்டது ஒன்ன எண்ணி
அடி குத்தாலக்கடி கும்மா கும்மா
ஒன்ன விட்டால் எப்படி சும்மா சும்மா
அட ஒன்ன நெனச்சே மஞ்சக் குளிச்சேன்
ஊசி முனையா மேனி எளச்சேன்..அடடா
அந்திப் பகலா சிந்து படிச்சேன்
தன்னந்தனியா கண்ணு முழிச்சேன்
அடி நீயும் நானும் ஒண்ணாச் சேர......(வெள்ளி)
அங்காளம்மன் தேரு தேரு ( ஜோரு )
இத ஓட்டுறவன் தான் யாரு யாரு ( யாரு )
இந்த சிங்காரத்துல ஊரு ஊரு ( ஊரு )
கண்ணு சொக்கிட நிக்குது பாரு பாரு
அடி குத்தாலக்கடி கும்மா கும்மா
ஒன்ன விட்டால் எப்படி சும்மா சும்மா
அட எட்ட இருந்தா என்ன நடக்கும்
இந்த ஒடம்பு இன்னும் கொதிக்கும்...அடடா
சின்னப் பிள்ளையா சொல்லிக் கொடுக்க
கிட்ட நெருங்கு கட்டி அணைக்க
அடி நீயும் நானும் ஒண்ணாச் சேர......(வெள்ளி)
|