Garjanai

Rajinikanth Enkeyo Ketta Kural

வருவாய் அன்பே

திரைப்படம் : கர்ஜனை[cite: 2]
பாடகர்கள் : T.K.S.கலைவாணன், எஸ்.ஜானகி[cite: 2]
இசையமைப்பாளர் : இளையராஜா[cite: 2]
பாடலாசிரியர் : பஞ்சு அருணாச்சலம்[cite: 2]
ஆண் : வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே
பெண் : வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே

ஆண் : காத்தாடும் பூவே செங்கனியாடும் கொடியே என் தோளோடு நீயாட நானாடவா...
பெண் : வருவாய் அன்பே தருவாய் ஒன்று செவ்வாய் முத்தம் ரசிப்போமே

பெண் : மாலை இளம் வெயில் சோலை இளம் தென்றல் காதல் எனும் தேர் ஒன்றில் நாம் இன்று போவோம்
ஆண் : மாலை இளம் வெயில் சோலை இளம் தென்றல் காதல் எனும் தேர் ஒன்றில் நாம் இன்று போவோம்
பெண் : புதுமை கொஞ்சும் இளமை இன்பம்
ஆண் : புதுமை கொஞ்சும் இளமை இன்பம்

பெண் : கண்ணில் தெரிந்தது வானம் நெஞ்சில் மலர்ந்தது மோகம்
ஆண் : ஊஞ்சலில் ஆடிட நானுனை கூடிட நாயகி அருகினில் வா....

என்ன சுகமான உலகம்

திரைப்படம் : கர்ஜனை[cite: 2]
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், உமா ரமணன்[cite: 2]
இசையமைப்பாளர் : இளையராஜா[cite: 2]
பெண் : ல ல ல லா ல ல லா... ல ல ல லா ல ல லா...
ஆண் : ல ல ல லா ல ல லா... ல ல ல லா ல ல லா...

பெண் : என்ன சுகமான உலகம் ஓ... என்ன சுகமான பருவம்
ஆண் : என்ன சுகமான உலகம் ஓ... என்ன சுகமான பருவம்

பெண் : ஆனந்தம் ஓ ஒய்... ஆரம்பம் ஓ ஓ
ஆண் : நாளென்ன ஓ ஒய்... பொழுது என்ன ஓ ஒய்
என்ன சுகமான உலகம் ஓ... என்ன சுகமான பருவம்

ஆண் : பூவிரி உதடுகள் பேசிடும் வார்த்தையில் போதை வருகிறது
பொங்கிடும் காவேரி கொள்ளிடத்தோடு சங்கமம் ஆகிறது

பெண் : மைவிழியும் இரு தேகங்களும் மங்களமோ இரு சங்குகளும்
சாந்தி சாந்தி என்றே சொல்லி பாடும் பாடல் ஒன்றல்ல

பெண் : கட்டியனைப்பவர் சேர்வதற்கு என்றே கட்டில் என்றார்கள்
கட்டிலின் மேலே பாடம் படிப்பதை காதல் என்றார்கள்

ஆண் : கூடலிலே சிறு கூடலிலே கூடுகிறார் ஒரு பாடலிலே
காலம் எங்கே போனால் என்ன காதல் தானே சொர்க்கங்கள்

ஒரு ஊரில் ஒரு மஹராணி

திரைப்படம் : கர்ஜனை
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாசக் கலையில் கலைவாணி
ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாசக் கலையில் கலைவாணி
சிலைக் கோவில் மலர் போலே
நல்ல சிங்கார வடிவம் அவள் மேனி
ஒரு ஊரில் ஒரு மஹராணி
அவள் உல்லாசக் கலையில் கலைவாணி

ஆண் : அலை போலே சுகம் பரிமாறும்
அவள் அங்கங்கள் யாவும் இசை பாடும்
அந்தாதி பாடி அம்மானை ஆடி
என்னோடு நடமாடும்
செவ்வாயில் அமுதானாள் செந்தூர கலையானாள்
சில்லென்ற காற்றில் கையோடு சேர்த்தேன்
செவ்வாழைக் கனியானாள் ஹோய்..

ஆண் : சுவை என்பேன் மணிச்சுடர் என்பேன்
பிறர் சொல்லாத உவமை அவள் என்பேன்
தொட்டாலும் கையில் கட்டான வண்ணம்
ஒட்டாமல் போகாது
பாடாத புது ராகம் எதிர் பாராத மழைமேகம்
வண்டாடும் கன்னி கொண்டாட வந்தாள்
வாழ்நாளில் புது யோகம் ஹோய்..