Sivappu Sooriyan
தங்கச்சி சிரிச்சாளே
தங்கச்சி சிரிச்சாளே செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக........எதற்காக எனக்காக....
திரும்பும் திசையெல்லாம் தென்றல் போல் ஓடியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே..(2) (தங்கச்சி)
வசந்தம் சிரித்தாலே வண்ணத்தேன் பூ மலரும்
வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும் (தங்கச்சி)
ஒரு கண் அழுதாலே மறு கண் கலங்காதோ
உனக்கோர் துயர் என்றால் எனக்கும் பொருந்தாதோ
நீ வந்த தாய் மடியும் நான் வந்த மடிதானே
இருமலர் பூத்ததவும் ஒரு மரக் கிளைதானே (தங்கச்சி)
அடி முந்தானை
அடி முந்தானை பந்தாட வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே ஆ...ஆ....ஆ...ஆ..
நீதானே சூரப்புலி அட நான்தானே சோடிக்கிளி
பூப்பூத்த ரோஜாச் செடி இதை காப்பாத்த லேசா புடி
காவேரி நீராட்டமா வாடி கஸ்தூரி மானாட்டமா
ஆத்தோர காத்தாட ஆனந்த கூத்தாட
வளைக்கரம் அணைத்திட வரலாமா
அட முந்தானை பந்தாட வந்தாளே சிந்தாமணி
மெதுவா நீ தொட்டதும் சுட்டதய்யா
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
மனசு கைப்பட்டதும் கெட்டதய்யா...
நீ சூடும் பூவாசனை அது
தேடாதோ ஆண் வாசனை
நாள்தோறும் உன் யோசனை
மனம் செய்யாதோ ஆராதனை
போட்டானே பூபாணம்தான்
நானும் பொண்ணான நாளாகத்தான்
தோளோடு தோள் சேர பாலோடு தேன் சேர
துடிக்கிற துடிப்பென்ன தெரியாதா....(அடி)
பாடாத தேவாரம்தான் இவள் வாடாத பூவாரம்தான்
ராசாதி ராசா வந்தான் வந்து ஏறாத பல்லாக்குதான்
நான்தாண்டி நடுராத்திரி உன்னை தாலாட்டும் நீலாம்பரி
காதோரம் நான் பேச கண்ணோரம் நீ பேச
மயக்கமும் கிறக்கமும் தெளியாதா.......(அட)
மிஸ்டர் மிராண்டா
மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா
உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா...
பூலோகம் பூராவும் எல்லாமும் என் ஏரியா
ஆனாலும் நான் வாழும் தேசம் நைஜீரியா
காடு நடுங்கும் சாது மிரண்டால்
நாடு நடுங்கும் நானும் எழுந்தால்
அஞ்சாத நெஞ்சுண்டு கெஞ்சாத கண்ணுண்டு
எங்கேயும் பேருண்டு என்னாட்டம் யாருண்டு பார்.....(மிஸ்டர்)
உன்னைப்போல் யார் சூப்பர் ஸ்டார்
இதழில் நான் டேஸ்ட்டி பார் ?
என்னைப்பார் நீ நேசிப்பாய்
என் கன்னம் உன் விஸ்கி பார்
வில்லாதி வீரா கங்காவின் தீரா..?
எல்லாமும் சேர்ந்து பொல்லாதவன் நீ
மன்னாதிமன்னா என் கண்ணான கண்ணா
உன் பின்னாடி கொத்தாட
கொத்தோடு முத்தாட வா.....(மிஸ்டர்)
அன்பே வா நான் உன் ஜோடி
இங்கேதான் உன் லவ் ஸ்டோரி
பக்கம் வா ஓ......மை டியர்
பெண்ணல்ல நீ ரெட் ப்ளவர்......
நீ பார்க்கும் பார்வை மின்னல்கள் போலே
நேராக பாயும் பெண்பாவை மேலே
என்னோடு உன்னாட்டம் உன்னோடு என்னாட்டம்
வண்டாடும் செண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் வா.......(மிஸ்டர்)
|