Ninaithale Inikkum 1979 Film

Rajinikanth Ninaithale Inikkum 1979 Film

ஆனந்த தாண்டவமோ

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆனந்த தாண்டவமோ
ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்
ஆனந்த தாண்டவமோ
ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல
போங்கடா போங்க
ஹா ஏதாச்சும் தெரியனும்னா
போடுங்க நீங்க

பெண் : கடல் கடைவோம் அமுதெடுப்போம்
தேவர்களே எங்கே போனீங்க
அழகைக் கண்டால் சிறை எடுப்போம்
அசுரர்களே எங்கே போனீங்க

பெண் : திருநாள் வகனை பலநாள் ரகளை
ஹேய் ராதா ரமணா கோவிந்தா
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா

பெண் : ஆனந்த தாண்டவமோ
ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்

பெண் : வானத்திலே ஏணி வச்சு
வானவில்லை வளைச்சு வைச்சேன்
வீணைக்குள்ளே மூட்டிய தீ
ராகங்களை ஒளிச்சு வைச்சேன்

பெண் : படிச்சா கீதை
குடிச்சா போதை
ஹேய் ராதா ரமணா கோவிந்தா
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா

பெண் : ஆனந்த தாண்டவமோ
ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல
போங்கடா போங்க
ஹா ஏதாச்சும் தெரியனும்னா
போடுங்க நீங்க

பெண் : மலையாவில் தலையை வைத்து
இந்தியாவில் காலை வைப்போம்
இரண்டையுமே இணைக்கும்படி
உறவாலே பாலம் வைப்போமா

பெண் : மனசு பெரிசு உலகம் சிறிசு
ஹேய் ராதா ரமணா கோவிந்தா
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா
ஹரே ஹரே
ஹரே ஹரே ராமா ஹரே ஹரே கிருஷ்ணா

பெண் : ஆனந்த தாண்டவமோ
ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்
எனக்கு மட்டும் புதியதல்ல
போங்கடா போங்க
ஹா ஏதாச்சும் தெரியனும்னா
போடுங்க நீங்க

பாரதி கண்ணம்மா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ்

ஆண் : ஆ ஆ ஆஹ் ஆஹா ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ல லா லா

ஆண் : பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பெண் : பாரதி கண்ணய்யா
நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னைய்யா
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

பெண் : ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது
இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆண் : நிலா காலங்களில் சோலைகளில் ஆடும்
சுகம் கோடி
நிலா காலங்களில் சோலைகளில் ஆடும்
சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம்
இன்னும் பல கோடி
பலவகை நறுமணம் தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பெண் : பாரதி கண்ணய்யா
நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா

ஆண் : அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா

பெண் : விழாக் காலங்களில் கோவில் சிலை
பாடும் உரை பாடும்
விழாக் காலங்களில் கோவில் சிலை
பாடும் உரை பாடும்
காலை வரை காமன் கனை
பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும்
இடையிடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா
ஆயினும் என்னய்யா ஆயிரம் சொல்லய்யா

ஆண் : அலைமோதும்படி ஓடும் நதி
நெஞ்சம் இள நெஞ்சம்
அலைமோதும்படி ஓடும் நதி
நெஞ்சம் இள நெஞ்சம்
ஆசை வலை தேடும் சுகம்
மஞ்சம் மலர் மஞ்சம்
முதன்முதல் பயம் வரும்
வரவர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா

பெண் : பாரதி கண்ணய்யா
நீயே சின்னைய்யா
கேள் இதை பொன்னையா

ஆண் : அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்

பெண் : அதிசய மலர்முகம்
தினசரி பலரகம்

இனிமை நிறைந்த உலகம்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்

பெண் : ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்

பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே
அட மன்னாதி மன்னன்மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே

பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்

குழு : ……………………………..

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும்…ஆ…ஆ…
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரணும் ஏ…ஏ…

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ
உனக்கா சொல்லித் தரணும்…ஹோ ஹோ ஓ ஓ
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்
இனி யார் சொந்தம் வரணும்

ஆண் : இடை தங்கம் நடை வைரம்
இதழ் பவழம் நகை முத்து
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா …ஆ…ஆ…

பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள்
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்

குழு : ……………………….

ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்

குழு : ………………………….

பெண் : ……………………………

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
மூணும் மூணும் பொண்ணுங்க ஆ…ஆ…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க..ஆ.ஆ…அ ஹே ஹே

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்
மூணும் மூணும் பொண்ணுங்க …
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு
மூணுக்கும் நாலரை கண்ணுங்க..

ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை…..
ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம்
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்

குழு : ………………………..

பெண் : ஆஹா இனிமை நிறைந்த உலகம் இருக்கு..
இதிலே உனக்கு கவலை எதுக்கு.. லவ்லி பர்ட்ஸ்
புது இளமை இருக்கு, வயதும் இருக்கு
காலம் இருக்கு, கண்ணீர் எதுக்கு..ஜாலி பர்ட்ஸ்

காத்திருந்தேன்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : What a waiting what a waiting
Lovely birds tell my darling
You are watching
You are watching
Love is but a game of waiting

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சை கிளி சாட்சி சொல்லு
நாத்து வச்சு காத்திருந்தா
நெல்லு கூட வெளைஞ்சிருக்கு
காக்க வச்சு கன்னி வந்தா
காதல் உண்டா கேட்டு சொல்லு

ஆண் : ஹ்ம்ம்ம்……
What a waiting what a waiting
Lovely birds tell my darling
You are watching
You are watching
Love is but a game of waiting

குழு : ரு……ரு……ரு…..ரு…..ரு….ரு….
பபபப பப ருருருருரு விசில் : ………………………………..

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
காதல் மனம் நோகும் வரை
பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
பச்சை கிளி சாட்சி சொல்லு

நம்ம ஊரு சிங்காரி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

ஆண் : ஹாஹா நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹா ஹா ஹா ஹாங்

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹே ஹே ஏ ஏ ஹே

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா
எப்போதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பாக்காமல் ரோஜா
ஏமாந்து போனாளே லேசா
நான் நாளு வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடு கட்டி
மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ சம்போ

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பபபபபப பபபப

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ராப்பா பாப்பா பாப்பா

நிழல் கண்டவன்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக் காணத் தேடுகின்றான்

ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

ஆண் : என்றும் தொடர்ந்து போவதுதான்
இனிய காதல் விதியாகும்
என்றும் தொடர்ந்து போவதுதான்
இனிய காதல் விதியாகும்
வெல்க இளமை வெல்க
வாழ்க காதல் வாழ்க

ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தைக் காணத் தேடுகின்றான்

ஆண் : நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலைத் தொடர்ந்து ஓடுகின்றான்

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ

பாடகர்கள் : M. S. Viswanathan
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சார் கூட்டம் ரகள பண்றாங்க
புரோகிராம ஆரம்பிங்க சார்

ஆண் : பாத்ரூம்ல இருக்கார்

ஆண் : அரை மணி நேரமா அதையே
சொல்லிட்டுருக்கிங்களே சார்

ஆண் : அரை மணி நேரமா
பாத்ரூம்லயே இருக்கார் சார்

ஆண் : அங்கிருந்தாவது பாட சொல்லுங்க

ஆண் : சிவ‌ ச‌ம்போ

ஆண் : ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ஆண் : ம‌னிதா உன் ஜென்ம‌த்தில்
எந்நாளும் ந‌ன் நாளாம்
ம‌றுநாளை எண்ணாதே
இந்நாளே பொன் நாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே
ப‌ல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு
எந்நாளும் பதினாறு….ஊ…..

ஆண் : ……………………………..

ஆண் : ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ஆண் : அப்பாவும் தாத்தாவும்
வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌
எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க‌ள்
த‌ப்பாக‌ நினைக்காதே
எப்பாதை போனாலும்
இன்ப‌த்தைத் த‌ள்ளாதே…..ஏ…ஏ….

ஆண் : க‌ல்லை நீ தின்றாலும்
செறிக்கின்ற‌ நாளின்று
கால‌ங்க‌ள் போனாலே
தின்னாதே என்பார்க‌ள்

ஆண் : ஆ…..ம‌துவுண்டு பெண்ணுண்டு
சோறுண்டு
சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே
சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு

ஆண் : ……………………………….

ஆண் : ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

ஆண் : ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ‌ ச‌ம்போ
ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
சிவ‌ ச‌ம்போ

சயோனாரா…….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சயோனாரா…….
சயோனாரா வேஷம் கலைந்தது
பாவையின் நாடகம் முடிந்தது
சிங்கபூரா ராகம் மறந்தது
காவியம் பாதியில் நின்றது

ஆண் : சயோனாரா வேஷம் கலைந்தது
பாவையின் நாடகம் முடிந்தது
சிங்கபூரா ராகம் மறந்தது
காவியம் பாதியில் நின்றது

ஆண் : ஆகாயத்தில் ஆரம்பம்
இதயத்தில் இன்று பூகம்பம்
ஆகாயத்தில் ஆரம்பம்
இதயத்தில் இன்று பூகம்பம்
ஆகாயத்தில் ஆரம்பம்
இதயத்தில் இன்று பூகம்பம்

ஆண் : சயோனாரா…….
சயோனாரா வேஷம் கலைந்தது
பாவையின் நாடகம் முடிந்தது
சிங்கபூரா ராகம் மறந்தது
காவியம் பாதியில் நின்றது

தட்டி கேட்க ஆளில்லேன்னா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தட்டி கேட்க ஆளில்லேன்னா
தம்பி சண்டை பிரசண்டன்
ஹோ ஓ ஓ
தட்டி கேட்க ஆளில்லேன்னா
தம்பி சண்டை பிரசண்டன்

ஆண் : ……………………………….

ஆண் : உடம்பெல்லாம் படக் படக்
உடம்பெல்லாம் படக் படக்
ததீகனத்தோம் தீம்தனதோம்
இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்
உ…..இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்

ஆண் : உடம்பெல்லாம் படக் படக்
உடம்பெல்லாம் படக் படக்
ததீகனத்தோம் தீம்தனதோம்
இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்
உ…..இது ஆர்கெஸ்ட்ரா ப்ரோக்ராம்

ஆண் : தலை வலிச்சா வாலுக்கு மருந்தா
தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா
தலை வலிச்சா வாலுக்கு மருந்தா
தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா
தலை வலிச்சா வாலுக்கு மருந்தா
தலை செஞ்ச தப்புக்கு காலுக்கு விலங்கா

யாதும் ஊரே

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் வசனம் : எக்ஸ்குயூஸ் மீ குடிச்சிட்டு
பேசுறேன்னு நினைக்காத
கல்யாணம் மட்டும் பண்ணிக்காத
எக்ஸ்குயூஸ் மீ குடிச்சிட்டு
பேசுறேன்னு நினைக்காத
கல்யாணம் மட்டும் பண்ணிக்காத
எக்ஸ்குயூஸ் மீ

ஆண் : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்

பெண் : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்

ஆண் : நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை

பெண் : நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை

ஆண் : இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ இருவர் : இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்

குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : ஏரிக்கரையில் ஜோடிப்பறவை
எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள்
அதிலே உலகம் ஆரம்பம்

பெண் : சீனத் தலைகள் மலையக மான்கள்
இந்து கிளிகள் நடமாட்டம்
சேர்ந்தே வாழும் வாழ்க்கை இதுதான்
சிரிக்கும் ஆயிரம் மலராட்டம் இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா……

பெண் : யாதும் ஊரே யாவரும் கேளீர்

ஆண் : அன்பே எங்கள் உலக தத்துவம்

பெண் : ஆடல் கலைகள் பாடும் இசைகள்
அதிலே என்ன பேதங்கள்
காதல் கடலில் நீந்தும் சுவர்கள்
அதிலே என்ன வாதங்கள்

ஆண் : எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்
எல்லாம் அழகிய மாதங்கள்
என்றும் ஆடிய சுகமாய் வாழ
எல்லா மக்களும் வாருங்கள் இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா……

பெண் : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்

குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பெண் : சிட்டுப்போல செவ்வந்திப் பூவே
திருமகள் உன்னுடன் உறவாடி

ஆண் : எட்டு திசையும் செல்வேன் இன்று
பிள்ளை போலே விளையாடி இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா…… அனைவரும் : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ

You are like a fountain

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : Kanmani Subbu
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : You are like a fountain
You are feel so uncertain
You are like a fountain
You are feel so uncertain

குழு : ………………………………….

ஆண் : பல வண்ண கோலம் சுகமே
விரைகின்ற வேகம் அழகே
பல வண்ண கோலம் சுகமே
விரைகின்ற வேகம் அழகே
பார்க்கும் போதே விழிகள் பாவம்

ஆண் : You are like a fountain
You are feel so uncertain

ஆண் : மண்ணில் தோன்றும் வாழ்க்கை
மின்னல் ஓவியம் ஓவியம்

குழு : ……………………………………