Manithan

Rajinikanth Manithan

காளை காளை

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகி : எஸ்.பி. சைலஜா பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திர போஸ்

பெண் : ………………………

பெண் : காளை காளை
கிளாப்ஸ் : …………………

பெண் : முரட்டு காளை
கிளாப்ஸ் : …………………

பெண் : முரட்டு காளை நீ
தானா போக்கிரி ராஜா நீ
தானா பாயும் புலியும் நீ
தானா பயந்து போவது சரி
தானா வாழ்வோமே ஒன்னோடு
ஒன்னா வாலிபம் ஏங்குது
எந்திரி கண்ணா

ஆண் : காளை காளை முரட்டு
காளை முரட்டு காளை நான்
தாண்டி போக்கிரி ராஜா நான்
தாண்டி பாயும் புலியும் நான்
தாண்டி பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

பெண் : உள்காய்ச்சல் ஏறலையா
உன் உள்ளம் மாறலையா
பந்திக்கு அழைத்தேனே
பசி இல்லையா

ஆண் : நெஜமாத்தான்
ஏங்குறியா நீ என்ன
பொம்பளையா ஹோய்
என்னை விட்டா உனக்கேதும்
வழி இல்லையா

பெண் : அட மாமா அழலாமா
நான் தாலி கட்டட்டா

ஆண் : அடி மானே திமிர்
தானே உன் கொட்டம் அடக்கிட
கற்றவன் நானே

பெண் : காளை காளை
முரட்டு காளை

ஆண் : ஆ முரட்டு காளை
நான் தாண்டி போக்கிரி
ராஜா நான் தாண்டி

பெண் : பாயும் புலியும்
நீ தானா பயந்து போவது
சரிதானா

ஆண் : நாடெல்லாம் என்
பேர சொல்லும் நல்லவனுக்கு
நல்லவன் தாண்டி

ஆண் : ஆ ஹா
ஹா ஹா ஹா.

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஆண் : ஆ ஹா

பெண் : ஆ ஹா

ஆண் : ஏ ஹே
ஏ ஹே ஹே

பெண் : பொம்பளைய சேராம
போய் சேர்ந்த ஆளுகளை
கட்டையில தீ கூட
தீண்டாதையா

ஆண் : சேலைக்குள் தெரியாம
சிக்கி விட்ட ஆம்பளைக்கு
சொர்க்கத்தில் இடமேதும்
கிடையாதமோய்

பெண் : கிளிப்போல தோள்
மேலே நான் ஏறி கொள்ளட்டா

ஆண் : என்ன பெண்மை என்ன
மென்மை உன் கற்பினை கண்டதும்
கண்ணகி கெட்டா

பெண் : காளை காளை
என்முரட்டு காளை
முரட்டு காளை நீ
தானா போக்கிரி ராஜா நீ
தானா பாயும் புலியும் நீ
தானா பயந்து போவது சரி
தானா வாழ்வோமே ஒன்னோடு
ஒன்னா வாலிபம் ஏங்குது
எந்திரி கண்ணா

ஆண் : காளை காளை ஆ முரட்டு
காளை முரட்டு ஆ காளை நான்
தாண்டி போக்கிரி ராஜா நான்
தாண்டி பாயும் புலியும் நான்
தாண்டி பயந்து போக மாட்டேன்டி
நாடெல்லாம் என் பேரச் சொல்லும்
நல்லவனுக்கு நல்லவன் தாண்டி

பெண் : காளை காளை

ஆண் : ஏ ஹாஹா

பெண் : முரட்டு காளை

ஆண் : ஏ ஹே ஹே ஹேய்

மனிதன் மனிதன்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : மனிதன் மனிதன்
எவன்தான் மனிதன்
வாழும்போது செத்து
செத்து பிழைப்பவன்
மனிதனா வாழ்ந்தபின்னும்
பேரை நாட்டி நிலைப்பவன்
மனிதனா

ஆண் : பிறருக்காக
கண்ணீரும் பிறருக்காக
செந்நீரும் சிந்தும் மனிதன்
எவனோ அவனே மனிதன்
மனிதன் மனிதன்

ஆண் : அடுத்தவீட்டில்
தீப்பிடிக்க நினைப்பவன்
மனிதனா அந்தநேரம் ஓடி
வந்து அணைப்பவன் மனிதனா

ஆண் : கொடுமைகண்டும்
கண்ணைமூடி கிடப்பவன்
மனிதனா கோபம்கொண்டு
நியாயம்கேட்டு கொதிப்பவன்
மனிதனா

ஆண் : கெடுப்பவன்
மனிதனா எடுப்பவன்
மனிதனா கொடுப்பவன்
எவனடா அவனே மனிதன்
மனிதன் மனிதன்

ஆண் : எவன்தான் மனிதன்
வாழும்போது செத்து
செத்து பிழைப்பவன்
மனிதனா வாழ்ந்தபின்னும்
பேரை நாட்டி நிலைப்பவன்
மனிதனா

ஆண் : பிறருக்காக
கண்ணீரும் பிறருக்காக
செந்நீரும் சிந்தும் மனிதன்
எவனோ அவனே மனிதன்
மனிதன் மனிதன்

ஆண் : ஏழைப்பெண்ணின்
சேலைத்தொட்டு இழுப்பவன்
மனிதனா இரவில்மட்டும்
தாலிகட்ட நினைப்பவன்
மனிதனா

ஆண் : காதல் என்ற
பேரைச்சொல்லி
நடிப்பவன் மனிதனா
நட்பைமட்டும் கரண்சி
நோட்டில் கறப்பவன்
மனிதனா

ஆண் : தன்மானம்
காக்கவும் பெண்மானம்
காக்கவும் துடிப்பவன்
எவனடா அவனே மனிதன்
மனிதன் மனிதன்

ஆண் : எவன்தான் மனிதன்
வாழும்போது செத்து
செத்து பிழைப்பவன்
மனிதனா வாழ்ந்தபின்னும்
பேரை நாட்டி நிலைப்பவன்
மனிதனா

ஆண் : பிறருக்காக
கண்ணீரும் பிறருக்காக
செந்நீரும் சிந்தும் மனிதன்
எவனோ அவனே மனிதன்
மனிதன் மனிதன்

முத்து முத்து பெண்ணே

பாடகர்கள் : வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஆஆ ஹா
ஆ ஹா ஆஆ முத்து
முத்து பெண்ணே முத்தம்
தரும் கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே

பெண் : கட்டு பட்டு
வாழும் கண்மணியே
வாழ்க உள்ளிருந்து
வாழ்த்தும் உள்ளமது
வாழ்க

பெண் : உள்ளிருந்து
வாழ்த்தும் உள்ளமது
வாழ்க

பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே

பெண் : ரத்த பந்தம்
என்னென்ன செய்யும்
கண்டுகொண்டேன்
கண்ணே காலம் கொஞ்சம்
ஆறட்டும் என்று கண்ணீர்
விட்டேன் பெண்ணே

பெண் : காயம் என்ன
காயம் என்று கலங்கி
போனேன் மானே காயம்
அல்ல தியாகம் என்று
தெரிந்து கொண்டேன்
நானே

பெண் : தேனே என்னை
காத்து நின்ற பிம்பம் நீ

பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே

பெண் : மல்லிகையே
மங்கள பூவே மாமா
மாமன்க மாய் வாழ்க
பூவரங்கள் சோர்கின்ற
போதும் தூய மனம் வாழ்க

பெண் : சுவருக்கும்
காத்திருக்கும் உணர
வேண்டும் உண்மை
சத்தியத்தை நம்பி
நின்றால் நடப்பதெல்லாம்
நன்மை

பெண் : நாளை வெற்றி
மாலை வரும் அல்லவா

பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே

பெண் : கட்டு பட்டு
வாழும் கண்மணியே
வாழ்க உள்ளிருந்து
வாழ்த்தும் உள்ளமது
வாழ்க

பெண் : முத்து முத்து
பெண்ணே முத்தம் தரும்
கண்ணே அன்னை
சொல்லும் பாட்டில் அர்த்தம்
உண்டு பொன்னே

வானத்தை பார்த்தேன் (Sad)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Vanitha, Kovai Murali
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகி : வனிதா பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை முரளி இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா

ஆண் : தங்கை என்னும்
தங்கம் இங்கே தீயில்
வேகும் இப்போது கண்கள்
சிந்தும் கண்ணீராலே எந்த
தீயும் அணையாது

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா

ஆண் : நிலைமையை
சொல்ல முடியாது
நிலவுக்கு தற்கொலை
கிடையாது பூவை வைத்த
பாவியே தீயை வைக்கிறான்

ஆண் : நெருப்புக்கு
உண்மை தெரியாது
தெரிந்தால் நெருப்பு
எரியாது உண்மை
வந்து பேசுமா ஊமை
நான் அம்மா

ஆண் : மணநாள்
பார்த்தவன் நானே
பிண நாள் பார்ப்பதும்
நானே மணநாள் பார்த்தவன்
நானே பிண நாள் பார்ப்பதும்
நானே

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா

ஆண் : ஏற்கனவே
அவன் எரித்து விட்டான்
எரித்ததை மறுபடி எரித்து
விட்டான் தர்மம் காக்கும்
தேவனோ தூங்கி போய்
விட்டான்

ஆண் : வாழ்க்கை எது
வென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும்
வசதியில்லை வெந்த
புண்ணில் அல்லவோ
வேலும் பாய்ந்தது

ஆண் : விதியால் வந்ததா
இல்லை சதியால் வந்ததே
தொல்லை விதியால் வந்ததா
இல்லை சதியால் வந்ததே
தொல்லை

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா

ஆண் : தங்கை என்னும்
தங்கம் இங்கே தீயில்
வேகும் இப்போது கண்கள்
சிந்தும் கண்ணீராலே எந்த
தீயும் அணையாது

ஆண் : வானத்தை பார்த்தேன்
பூமியை பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே நான்
பிறந்தது அழுதிட தானா ஏய்
விதியே சரி தானா

வானத்தை பார்த்தேன் (Happy)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : வானத்தை
பார்த்தேன் பூமியை
பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே

ஆண் : வானத்தை
பார்த்தேன் பூமியை
பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன்
உள்ளே அந்த நிம்மதி
இங்கில்லே

ஆண் : உள்ள போன
அத்தனை பேரும்
குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை
பேரும் புத்தன் காந்தி
இல்லீங்க

ஆண் : வானத்தை
பார்த்தேன் பூமியை
பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே

ஆண் : குரங்கிலிருந்து
பிறந்தானா குரங்கை
மனிதன் பெற்றானா
யாரை கேள்வி கேட்பது
டார்வின் இல்லையே

ஆண் : கடவுள் மனிதனை
படைத்தானா கடவுளை
மனிதன் படைத்தானா
ரெண்டு பேரும் இல்லையே
ரொம்ப தொல்லையே

ஆண் : அட நான்
சொல்வது உண்மை
இதை நீ நம்பினால்
நன்மை அட நான்
சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை

ஆண் : வானத்தை
பார்த்தேன் பூமியை
பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன்
உள்ளே அந்த நிம்மதி
இங்கில்லே

ஆண் : சில நாள் இருந்தேன்
கருவறையில் பல நாள்
கிடந்தேன் சிறை அறையில்
அம்மா என்னை ஈன்றது
அமாவாசையாம்

ஆண் : அதனால் பிறந்தது
தொல்லையடா ஆனால்
என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம்
தானடா

ஆண் : ஒரு பூந்தோட்டமா
வாழ்க்கை இல்லை
போராட்டமே வாழ்க்கை
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை
ஹா இல்லை போராட்டமே
வாழ்க்கை

ஆண் : வானத்தை
பார்த்தேன் பூமியை
பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன்
உள்ளே அந்த நிம்மதி
இங்கில்லே

ஆண் : உள்ள போன
அத்தனை பேரும்
குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை
பேரும் புத்தன் காந்தி
இல்லீங்க

ஆண் : வானத்தை
பார்த்தேன் பூமியை
பார்த்தேன் மனுஷனை
இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன்
உள்ளே அந்த நிம்மதி
இங்கில்லே அந்த நிம்மதி
இங்கில்லே

ஏதோ நடக்கிறது

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஹா ஹா ஹா
ஆஆ ஹே ஹே ஹே
ஏய்

ஆண் : ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம் பறக்கிறது

பெண் : ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது
இறக்கை முளைக்கிறது
இதயம் பறக்கிறது

ஆண் : ஏதோ நடக்கிறது

பெண் : இதமாய் இருக்கிறது

ஆண் : மானே இள
மானே வா இன்னொரு
வானம் அமைத்திடுவோம்

பெண் : வானில் சொந்த
வானில் வண்ண விண்மீன்
எல்லாம் பயிரிடுவோம்

ஆண் : நிலவு அந்த
நிலவு விடி விளக்காய்
ஆகாதோ

பெண் : மேகம் வெள்ளி
மேகம் வந்து ஜன்னல்
திரைகள் ஆகுமோ

ஆண் : ஏதோ நடக்கிறது

பெண் : இதமாய் இருக்கிறது

ஆண் : இறக்கை முளைக்கிறது

பெண் : இதயம் பறக்கிறது

ஆண் : ஆதாம் அந்த
ஏவாள் மீண்டும் பிறந்தது
போலே பிறந்து விட்டோம்

பெண் : ஆடை மேல்
ஆடை அது இருக்குது
கண்ணா மறந்து விட்டோம்

ஆண் : தனிமை ரொம்ப
தனிமை இங்கு தண்டங்கள்
ஏதுமில்லை

பெண் : பொறுங்கள் கொஞ்சம்
பொறுங்கள் அங்கு போவது
யார் அது தேவதை

ஆண் : ஏதோ நடக்கிறது
இதமாய் இருக்கிறது

பெண் : இறக்கை முளைக்கிறது
இதயம் பறக்கிறது