Muthu

Rajinikanth Muthu

கொக்கு சைவக் கொக்கு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Theni Kunjarammal
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், தேனீ குஞ்சரம்மாள், பெபி மணி, கங்கா சித்தரசு மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : {கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்} (2)

ஆண் : {மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்} (2)

ஆண் : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

ஆண் : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

குழு : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு
கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது

குழு : ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : பந்தாடும் வயசுப்பையா

குழு : பையா

பெண் : பாட்டி சொல் கேட்டுக்கைய்யா

குழு : கைய்யா

பெண் : தாம்பத்ய வாழ்க்கையிலே

குழு : லே லே லே…

பெண் : சட்டங்கள் இருக்குதைய்யா

குழு : ஐய்யா

பெண் : பெண்டாட்டியோட
ஒவ்வொரு நாளும்

குழு : ஐ லவ் யூ ஐ லவ் யூ
நீ டுவல் டைம்ஸ் சொல்லு

பெண் : நித்தம் நீ ஆறு முற

குழு : முற

பெண் : முத்தங்கள் போட்டுவிடு

குழு : விடு

பெண் : நாளுக்கு மூணு முற

குழு : முற..அஹ..ஹா

பெண் : கட்டிலில் சேர்ந்துவிடு

குழு : விடு

பெண் : நான் சொன்ன கணக்கு
நாள்தோறும் நடந்தா

குழு : பெண்டாட்டி எப்போதும்
உன் காலக் கட்டிக் கெடப்பா.

பெண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு

குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

பெண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு

குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம்

குழு : …………………………………….

ஆண் : வயசான சுந்தரியே

குழு : யே

ஆண் : மன்மதன் மந்திரியே

குழு : யே

ஆண் : தாம்பத்யப் பாடத்திலே

குழு : லே லே லே

ஆண் : பீ எச் டீ முடிச்சவளே

ஆண் : அந்நாளில் நாட்டில்
மாதம் மும்மாரி

குழு : உண்டாச்சு ஒண்ணாச்சு
சுகம் ஒன்றுதான் பேச்சு

ஆண் : இந்நாளில் மனிதனுக்கு

குழு : க்கு

ஆண் : சோத்துக்கு வழியில்லையே

குழு : ஏ யே

ஆண் : ஒக்கார்ந்து காதலிக்க

குழு : யே யே யே

ஆண் : யாருக்கும் பொழுதில்லையே

பெண் : ஊர்க்கதை பேச
நேரங்கள் இருக்கு

குழு : பெண்டாட்டி சேராம
ஒரு வாழ்க்கையும் எதுக்கு

ஆண் : கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு

குழு : வெரதம் முடிச்சிருச்சாம்

ஆண் : மீனு மேலக் கண்ணு
அது ஒத்தக் காலில் நின்னு

குழு : கொத்தித்தான் புடிச்சிருச்சாம் ஆண் மற்றும்

குழு :
பிரம்மச்சாரி யாருமிங்கே
கெடையாது
ஒரு காதல் இல்லாமல்
சுக வாழ்க்கையும் ஏது ஆண் மற்றும்

குழு :
ஆகாயத்தப் பொத்தி
வெக்க முடியாது
உன் கண்ணில் உன் காதல்
அட துள்ளுதே பாரு

குழு : ………………………………………………….

குலுவாலிலே

பாடகர்கள் : Udit Narayan, கே. எஸ். சித்ரா, Kalyani Menon
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகிகள் : கே.எஸ். சித்ரா, கல்யாணி மேனன் பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : குலுவாலிலே
குலுவாலிலே மொட்டு
மலர்ந்தல்லோ

ஆண் : குலுவாலிலே
மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு
துறந்தல்லோ தேன்குடிக்க
ஹே தேன்குடிக்க நேரம்
உண்டல்லோ தேவதைக்கு
வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம்
கொடுத்தல்லோ பூவுக்குள்ள
புயல் அடித்தல்லோ

ஆண் : குலுவாலிலே
மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு
துறந்தல்லோ

பெண் : தேன்குடிக்க
நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம்
வந்தல்லோ

ஆண் : முத்து வந்து
முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல்
அடித்தல்லோ

குழு : ஓமனத் திங்கள்
கீழாமோ நல்ல கோமளத்
தாமரப்பூவோ பூவில் நீரங்ஙய
மதுவோ பரி பூஜெந்து தண்டே
இலாவோ

குழு : ரங்கநாயகி
ரங்கநாயகி ரங்கநாயகி
ரங்கநாயகி

ஆண் : ஹே ரங்கநாயகி
ரங்கநாயகி மச்சான் மனச
பறிச்சாயே

பெண் : உங்க முடி
கலைவதுபோல் என்மனச
நீ கலைச்சாயே

ஆண் : நான் என்ன
கலைக்கிற ஆளா
பொய் சொல்லக்
கூடாதே

பெண் : குலுவாலிலே
மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு
துறந்தல்லோ

ஆண் : தேன்குடிக்க
லவ் லவ் லவ் ஏய்
ஏய் ஏய்

பெண் : தேன்குடிக்க
நேரம் உண்டல்லோ
உண்டல்லோ தேவதைக்கு
வெட்கம் வண்ணலோ
வண்ணலோ முத்து வந்து
முத்தம் கொடுத்தல்லோ
ஐயே பூவுக்குள்ள புயல்
அடித்தல்லோ ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

குழு : மாணிக்க
வீணையாய் மலர்மகள்
வாழ்த்துன்ன மண்ணிலே
மங்கலமாய் ஈமலர்ந்தாட

குழு : என்ன கட்சி
நம்ம கட்சி என்ன
கட்சி நம்ம கட்சி

பெண் : என்ன கட்சி
நம்ம கட்சி நம்ம கட்சி
காமன் கட்சி

ஆண் : கட்சியெல்லாம்
இப்போ நமக்கெதுக்கு
காலத்தின் கையில்
அது இருக்கு

பெண் : கனியட்டும்
காலம் நேரம் உமக்கு
என்னமோ திட்டம்
இருக்கு ஹ்ம்ஹ்ம்

ஆண் : குலுவாலிலே
மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு
துறந்தல்லோ

பெண் : தேன்குடிக்க
நேரம் உண்டல்லோ
உண்டல்லோ தேவதைக்கு
வெட்கம் வண்ணலோ
வண்ணலோ முத்து வந்து
முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

குழு : ஓமனத் திங்கள்
கீழாமோ நல்ல கோமளத்
தாமரப்பூவோ பூவில் நீரங்ஙய
மதுவோ பரி பூஜெந்து தண்டே
இலாவோ

ஒருவன் ஒருவன் முதலாளி

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், Ila Arun, ஏ. ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், இலா அருண் மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹே ஹேஏஏ ஹே ஹே
ஹேஏ ஏ ஹே ஹே ஹே
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ…

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

குழு : சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
ஹான் ஹே ஹே ஹே ஹே
{சைய்ய சைய்யார சைய்யார சைய்ய } ()

ஆண் : மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை
மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை.

ஆண் : மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது

ஆண் : கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்

ஆண் : வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

குழு : …………………………………………..

ஆண் : வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு
வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு

ஆண் : வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா

ஆண் : பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது
மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே

ஆண் : இளமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது

ஆண் : ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆண் : ஹான் ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி

ஆண் : பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு

தில்லானா தில்லானா

பாடகர்கள் : மனோ, சுஜாதா மோகன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : …………………………….

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

ஆண் : { தில்லானா
தில்லானா நீ
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா } (2)
ஹோ மஞ்சக் காட்டு
மைனா என்ன கொஞ்சிக்
கொஞ்சிப் போனா திக்குத்
திக்கு நெஞ்சில் தில்லானா

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான்
கப்பம் கட்ட காமன்
சொன்னானா தில்லானா
தில்லானா

பெண் : நான்
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா

ஆண் : மஞ்சக்
காட்டு மைனா

பெண் : உன்ன
கொஞ்சிக் கொஞ்சிப்
போனா திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ………………..

பெண் : பட்டிக்காட்டு
முத்து நீயோ படிக்காத
மேதை தொட்டுத் தொட்டுப்
பேசத் தானே துடித்தாளே ராதை

ஆண் : கள்ளம்
கபடமில்லை நானோ
அறியாத பேதை
மக்கள் மனம் தானே
எந்தன் வழுக்காத பாதை

பெண் : ஹேய்
கொடுத்தால நான்
வந்தேன் எடுத்தால
வேண்டாமா

ஆண் : அடுத்தாளு
பாராமல் தடுத்தாள
வேண்டாமா

பெண் : முடி கொண்ட
உன் மார்பில் முகம்
சாய்க்க வேண்டாமா

ஆண் : முடி போட்டு
நம் சொந்தம் முடிவாக
வேண்டாமா

பெண் : தடையேதும்
இல்லாமல் தனித்தாள
வேண்டாமா ஆண் &

பெண் : தில்லானா
தில்லானா

பெண் : நான்
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா ஹோ ஆண் &

பெண் : மஞ்சக்
காட்டு மைனா

பெண் : உன்ன
கொஞ்சிக் கொஞ்சிப்
போனா திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா

பெண் : கட்டில் போட்டு
நீ கப்பம் கட்ட காமன்
சொன்னானா

குழு : ……………………….

பெண் : { திக்குத் திக்கு
நெஞ்சில் திக்குத் திக்கு
நெஞ்சில் } (2)

குழு : ……………………….

ஆண் : சிவப்பான
ஆண்கள் இங்கே
சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக்
கண்டு கண் வைத்ததென்ன

பெண் : கடல் வண்ணம்
வானின் வண்ணம்
கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது
உனைக் கண்டேன் நானே

ஆண் : மண்ணோடு
சேராமல் நடக்கின்றேன்
உன்னாலே

பெண் : மருதாணி
பூசாமல் சிவக்கின்றேன்
உன்னாலே

ஆண் : சுட்டுவிழி
கண்டாலே சொக்குதடி
தன்னாலே

பெண் : சிக்குப்பட்ட
எள் போலே நொக்கு
பட்டேன் உன்னாலே

ஆண் : கட்டுத்தறி
காளை நானும்
கட்டுப்பட்டேன்
உன்னாலே

ஆண் : { தில்லானா
தில்லானா நீ
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா } (2)
ஹோ மஞ்சக் காட்டு
மைனா என்ன கொஞ்சிக்
கொஞ்சிப் போனா திக்குத்
திக்கு நெஞ்சில் தில்லானா

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

ஆண் : கண்ணு வெச்சதும்
நீதானா வெடி கண்ணி
வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான்
கப்பம் கட்ட காமன்
சொன்னானா தில்லானா
தில்லானா

பெண் : நான்
தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா

குழு : தில்லானா
தில்லானா தில்லானா

ஆண் : மஞ்சக்
காட்டு மைனா

பெண் : உன்ன
கொஞ்சிக் கொஞ்சிப்
போனா திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ

குழு : தில்லானா
தில்லானா தில்லானா

பெண் : திக்குத் திக்கு
நெஞ்சில் தில்லானா
திக்குத் திக்கு நெஞ்சில்
தில்லானா

குழு : …………………..

விடுகதையா இந்த வாழ்க்கை

பாடகர்கள் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ

ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ

ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
{பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்} (2)

ஆண் : உடம்பில் வழிந்தோடும்
உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
நான் செய்த தீங்கு என்ன

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ

ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்

ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது காலன் விதி
{இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு} (2)

ஆண் : உறவின் மாறாட்டம்
உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
இரண்டும் தீர்வதெப்போ

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ

ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே
ஒதுங்க கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
தொல்லை நேராது தூயவனே

ஆண் : கைகளில் பொன் அள்ளி
நீ கொடுத்தாய்
இன்று கண்களில் கண்ணீர்
ஏன் கொடுத்தாய்

ஆண் : {காவியங்கள் உனைப் பாட
காத்திருக்கும் பொழுது
காவியுடை நீ கொண்டால்
என்னவாகும் மனது} (2)

ஆண் : வாழ்வை நீ தேடி
வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
நாங்கள் போவதெங்கே