Moondru Mugam

Rajinikanth Moondru Mugam

ஆசையுள்ள ரோஷக்கார மாமா

பாடகர்கள் : வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : Muthulingam
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகி : வாணி ஜெய் ராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ…..

பெண் : ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ…..

பெண் : பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ
பூங்காதல் கொடியேற்றமோ

பெண் : பொல்லாத உன் நெஞ்சில் போராட்டமோ
பூங்காதல் கொடியேற்றமோ
இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க ஆஅ ..ஆஅ…
இளவட்டம் நீங்க எதை தேடுறீங்க
பல வட்டம் போடாதீங்க
மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க
மாமாவே வாங்க மனவாட்டம் ஏங்க
மருந்தொன்று தருகிறேன் நான் நான் நான்

பெண் : ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ…..

பெண் : தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு
யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ
வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க
நாள் பார்த்து நான் சொல்லவோ..ஓ…ஓ…ஓ…

பெண் : தேகத்திலே சூடு வந்ததென்ன கூறு
யார் போட்ட மந்திரமோ ஓஹோஹோ
வைத்தியரை பார்க்க பைத்தியத்தை தீர்க்க
நாள் பார்த்து நான் சொல்லவோ..
இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம்
இன்னுமென்ன தாமதம் என்ன இந்த நாடகம்
பார்க்காத காட்சியென்ன பார்த்தாயோ….

பெண் : ஆசையுள்ள ரோஷக்கார மாமா
பூனைப் போல ஏக்கம் கொள்ளலாமா
யாரிடத்தில் மோகம் ஏனோ இந்த வேகம்
கல்யாண நினைவு கொண்டாயோ
கண்மூடி மயங்கி நின்றாயோ…..

தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

பாடகர்கள் : வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா…….

ஆண் : தீவானா

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா………

பெண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்
சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்
துறவறம் என்ன சுகம் தரும் என்றும்
பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம்……

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா…….

ஆண் : தீவானா

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா………

ஆண் : இகம் பரம் சுகமாகலாம்
இதழ் தரும் இனிய மதுவில்
ஜபம் தபம் ம்..இனியேதடி
மனம் தினம் உனது மடியில்

பெண் : இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
இதை விடவா இன்பலோகம்
இதுவல்லவா ராஜ யோகம்
உற்சாகம் உல்லாசம்
உண்டாகும் பெண்ணாலேதான்….

ஆண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

குழு : லலலலலலல

பெண் : சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்

ஆண் : எவெரி படி

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா…….

ஆண் : தீவானா

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா………

ஆண் : ..…………………….

பெண் : ………………………

பெண் : தளர் நடை தடுமாறுதே
தளிர் இடை தழுவ தழுவ
தணல் சுடும் நிலையானதே
விரல் நகம் பதிய பதிய

ஆண் : மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
மனநிலையை மாற்றி வைத்தாய்
புதுக்கனலை ஏற்றி வைத்தாய்
தொட்டாலும் பட்டாலும்
மின்சாரம் பாய்கின்றதே…

பெண் : தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான்

குழு : லலலலலலல

ஆண் : சந்த்ரோதயம் சூர்யோதயம் கண்தான்

குழு : லலலலலலல

பெண் : துறவறம் என்ன சுகம் தரும் என்றும்

ஆண் : பெண்ணோடு கொஞ்சுங்கள்
உண்டாகும் பேரின்பம்……கம்மான்

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா…….

ஆண் : தீவானா

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா………

ஆண் : தீவானா

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா………

ஆண் : தீவானா

குழு : டிஸ்கோ ராமா டிஸ்கோ கிருஷ்ணா
டிஸ்கோ தீவானா………

நான் செய்த குறும்பு

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து

ஆண் : நான் செய்த குறும்பு உண்டாச்சு கரும்பு
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து

ஆண் : பூவில் செய்த உடம்பு அந்த பூவுக்குள்ளே அரும்பு
நாணம் என்ன திரும்பு நான் இரவில் கடிக்கும் எறும்பு

ஆண் : பூவில் செய்த உடம்பு அந்த பூவுக்குள்ளே அரும்பு
நாணம் என்ன திரும்பு நான் இரவில் கடிக்கும் எறும்பு
ரகசியமா வெதவெதச்சேன் மொளைச்சு வந்தாச்சு
தாய் மடியில் பால் குடிக்க விருப்பம் உண்டாச்சு

ஆண் : ரகசியமா வெதவெதச்சேன் மொளைச்சு வந்தாச்சு
தாய் மடியில் பால் குடிக்க விருப்பம் உண்டாச்சு
என் மகன மட்டும் உபசரிச்சா எனக்கு என்னாச்சு ஆ ஆ… ஆ
என் மகன மட்டும் உபசரிச்சா எனக்கு என்னாச்சு

ஆண் : நான் செய்த குறும்பு தாக்ரிடதின தாக்ரிடதின
உண்டாச்சு கரும்பு ஆஹஅஹஆஹா
மாங்கா இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து….

ஆண் : ஏதோ இருக்கிறது அதன் இதயம் என்னுள் துடிக்கிறது
உனக்குள் ஒன்று நெளியும்போது ஆஹாஹா
எனக்குள் ஏனடி சிலிர்க்கிறது
உன் கண்கள் என்னும் ஜன்னல் வழி
கர்ப்பகிரகம் தெரிகிறது…….

ஆண் : பாவை இவள் கூந்தல் பின்னி பூ முடிப்பேன் நானே
நீ நடந்தால் பாதம் நோகும் பூ விரிப்பேன் மானே

ஆண் : பாவை இவள் கூந்தல் பின்னி பூ முடிப்பேன் நானே
நீ நடந்தால் பாதம் நோகும் பூ விரிப்பேன் மானே
நாணங்கள் ஏனிங்கு என் கண்ணே தோள்களில் நீ தூங்கு
தாய்மையில் பாலூட்டு என் அன்பே மார்பினில் தாலாட்டு
ஆரிரோஆராரோ ஆராரோ ஆரிரோஆராரோ….லுலுலாயி
ஆரிரோஆராரோ ஆராரோ ஆரிரோஆராரோ….லுலுலாயி

ஆண் : நான் செய்த குறும்பு ஹாஹாஹா ஹாஹா
உண்டாச்சு கரும்பு ஹே ஹே
நான் தந்த பரிசு அது ரொம்ப புதுசு
கையோடு துள்ளாதோ ரோஜா பந்து….

எத்தனையோ பொட்டப்புள்ள

பாடகர்கள் : எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வைரமுத்து
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : எத்தனையோ பொட்டப்புள்ள
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்
கட்டழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்…
ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

ஆண் : எத்தனையோ பொட்டப்புள்ள
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்
கட்டழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்…
ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

ஆண் : ரவிக்கை பொடவைகள சுமக்கும் பிறவிகள
ரகசிய இடங்களை ரசிப்பதில் நான்தான் கில்லாடி

பெண் : ஹா

ஆண் : அடி அம்மாடி

பெண் : ஹா

ஆண் : இது புரியும் பின்னாடி

பெண் : ஹா வளைச்சு புடிக்கையிலே வாரி எடுக்கையிலே
உடம்பிலே எலும்பிலே நரம்பிலே
ஏதோ மின்சாரம் இப்ப உண்டாச்சு
அதில் வெட்கம் போயாச்சு

ஆண் : நீதான் மாந்தோப்பு ம்ம்ம்
நான்தான் பூங்காத்து

பெண் : ஆஹாஹ்

ஆண் : படிப்பேன் தாலாட்டு தனன்னா
மடிமேல் நான் போட்டு
நீதான் மாந்தோப்பு ம்ம்ம்
நான்தான் பூங்காத்து

பெண் : ஆஹாஹ்

ஆண் : படிப்பேன் தாலாட்டு தனன்னா
மடிமேல் நான் போட்டு

பெண் : கரும்புச் சாரைய்யா குடிச்சு பாரய்யா
நெனச்சா ஊறும் பெண்ணுக்கேனய்யா…
ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

பெண் : எத்தனையோ ஆம்பளைய
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்
உன்னழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்….

பெண் : குருவி குளிக்க ஒரு அருவி இருக்கையிலே
கொதிப்பென்ன தவிப்பென்ன துடிப்பென்ன மாமா
உன்னோடு

ஆண் : ஆஅ …

பெண் : வா என்னோடு

ஆண் : ஆஅ …

பெண் : தேன் கொளத்தில் நீராடு

ஆண் : கனிஞ்ச கனியிருக்க கடிக்க அணிலிருக்க
நெனச்சது கெடச்சது அடிச்சது யோகம்
இந்நேரம் இது பொன்னேரம்
நீ இனிக்கும் பணியாரம்……

பெண் : பாத்தா பதினாறு ம்ம் பொங்கும் பாலாறு
ஒதட்டில் பழச்சாறு தனன்னா உடனே பசியாறு
பாத்தா பதினாறு ஹோ ஹோ பொங்கும் பாலாறு
ஒதட்டில் பழச்சாறு தனன்னா உடனே பசியாறு

ஆண் : எடுக்க நானடி கொடுக்க நீயடி
இரவா பகலா இன்பம் தானடி…….
ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா

பெண் : எத்தனையோ ஆம்பளைய
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்
உன்னழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்….

ஆண் : ஆ …எத்தனையோ பொட்டப்புள்ள
எங்கெங்கேயோ பார்த்தேன்
உன்னப் போல யாருமில்ல
பார்த்தவுடன் வேர்த்தேன்

பெண் : ஆஹா

ஆண் : கட்டழகப் பாத்து பாத்து
கண்ணு ரெண்டும் பூத்தேன்… இருவர் : ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா
ஓஹோ ஆஹா ஹே ஹே ஓஹோ ஆஹா ஆஹா ஹாஹாஹா